குருந்து எனும் கூனிஎலுமிச்சை ஒரு கோயில் மரம்
KURUNTHU
ALIAS KOONI ELUMICHAI A TEMPLE TREE
பொதுப்பெயர் : நேடிவ்
கும்குவாட், டெஸ்ர்ட் லெமன், ஒயில்ட் லைம்,
பாம்பே அட்லாண்டியா (NATIVE KUMQUAT, DESERT LEMON, WILD LEMON,
BOMBAY ATLANDIA)
தாவரவியல் பெயர்: அட்லாண்டியா
ரெசிமோசா (ATLANTIA RACEMOSA)
தாவரக்குடும்பம் : ரூட்டேசியே
(RURACEAE)
மலையாளம் : காட்டு
நாரகம், மாலநாரகம் (KATTU
NARAGAM, MALA NARAGAM,)
தமிழ்: காட்டு
நாரகம், நாய்வெல்லா, குரங்கா (KATTU
NARAGAM, NAIVELLA, KURANGA),
கன்னடம்: மாகட்
லிம்பு (MAKAD
LIMBU)
தெலுங்கு: அடவி நிம்மா (ADAVI
NIMMA)
குருந்து மரம் பயினி வானி பல் இணர்க்
குரவம் என்று கபிலர் தனது பாடலில் குருந்து மரம் பற்றி
பாடியிருக்கிறார்.
குருந்து மரம்
தனித்தும் கோங்கு, மராஅம், மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும் சுரத்திலும், பொழில்களிலும் வளரும், இளவேனிற் காலத்தில் அரவின் பற்களை யொத்த
அரும்பின்றி மலரும் மலர் நறுமணம் உடையது, இதன் நிழலில் இறைவன் தனக்கு காட்சி தருகிறான் என்கிறார்
மாணிக்கவாசகர்.
நிகண்டுகள், இதனை புனை எலுமிச்சை, கோட்டை, குடிலம், கோபிதாரம் என
பல பெயர் சொல்லுகிறது,
இந்த மரம் கோவலன் கொல்லை குறும்புனத்தில் வளரும், இதன் அடிமரம் குட்டையானது,
குவிந்த இணரையுடையது, வெள்ளிய பூக்களை உடையது என்று
குறுந்த மரம் பற்றி பாடுகிறார் இளம்தச்சனார் என்னும் புலவர்.
|
|
பரவியிருக்கும் இடம் (DISTRIBITION)
இந்தியாவின் தென்பகுதி
ஸ்ரீலங்கா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி
பயன்கள் (USES)
:
பழங்கள் ஊறுகாய் போடலாம்.
ஜூஸ் போடலாம்
எலிமிச்சை போல பயன்படுத்தலாம்
மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த
நிறைய கைவைத்தியங்களில் பயன்படுத்துகிறார்கள்.
குணப்படுத்தும் நோய்கள்
இருமல்
கபம்
கைச்சல்
சுவாச நோய்கள்
கண்நோய்
சிறுநீர்க்கல்
நீரிழிவு
தொழுநோய்
வலி நிவாரணி
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
சிறிய முள் மரம்
6 மீட்டர் உயரம் வரை
வளரும்
அதிகமாக இளம் மரங்களில் முட்கள் இருக்கும்
பூக்கள், வெள்ளை நிறம், மெல்லிய வாசம் வீசும்
1 சென்டி மீட்டர் அளவுள்ள சிறிய விதைகள்
டிசம்பர் மாதத்தில் பூத்துக் காய்க்கும்
பழங்கள் சிறிய கோலிகுண்டுகள் போல இருக்கும்.
பசுமை மாறாத மரங்கள்
குருந்துமரம் தல மரமாக உள்ள கோயில்கள்
1. ஆவுடையார் கோவில் – சிவன்கோயில்
– புதுக்கோட்டை மாவட்டம்
2. தண்டலச்சேரி - சிவன்கோயில்
– திருவருர் மாவட்டம்
3. திருஅன்னியூர் - சிவன்கோயில்
– நாகப்பட்டினம் மாவட்டம்
4. திருச்சி சிவன்கோயில் - சிவன்கோயில்
– திருச்சி மாவட்டம்
5. திருப்புனவாசல் சிவன்கோயில் – புதுக்கோட்டை மாவட்டம்
6. ஸ்ரீமுஷ்ணம் விஷ்ணுகோயில் - கடலூர் மாவட்டம்
வளர்ப்பு முறை: (PROPAGATION)
விதைகள் சீக்கிரம் முளைப்புத் தன்மை இழக்கும்
புதிய விதைகளை விதைக்கவேண்டும்
நேரடி விதைப்பு ஏற்றது
நல்ல மண் கண்டத்தில் மட்டும் நன்கு வளரும்
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான்
No comments:
Post a Comment