நீலமலைக்கு வண்ணம் கூட்டும் குறிஞ்சி
KURINJI GIVES COLOR TO BLUE MOUNTAINS
நீலகிரி, நீலமலை இரண்டிற்கும் பெயர்க்காரணமாக
இருப்பது இந்த
நீலக்குறிஞ்சிதான், இவை பூப்பதை 1938 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வருகிறார்கள், இதுவரை 2018 ஆம் ஆண்டு வரை 16 முறை பூத்துள்ளது. இனி அடுத்து 2030ம் ஆண்டு 17-வது முறையாக பூக்க வேண்டும், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு வகையும் உண்டு, இதன் தாவரவியல் பெயர் ஸ்ட்ரொபிலாந்தஸ் கஸ்பிடேட்டஸ்
(STROBILANTHES CUSPIDATUS)
பளியர்கள் எனும் பழங்குடி மக்கள்
பளியர்கள் இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள், அவர்கள் குறிஞ்சி பூப்பதை வைத்துத்தான் அவர்களின் வயதை கணக்கிடுகிறார்கள். ஒருவர் பிறந்த பிறகு குறிஞ்சி
மூன்று முறை பூத்தால் குறைந்தது அவருடைய வயது 36. நான்குமுறை
பூத்திருந்தால் அவர் வயது குறைந்தது நார்பத்தியெட்டு,
பொதுப்பெயர்: குறிஞ்சி, நீலகுறிஞ்சி (KURINJI,
NEELAKKURINJI) :
தாவரவியல் பெயர்: ஸ்ட்ரொபிலாந்தஸ்
குந்தியானா (STROBILANTHES KUNTHIANA)
தாவரக்குடும்பம் : அகாந்தேசியே
(ACANTHACEAE)
பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
மலையாளம் : (KARIM KURINJI)
இந்தி: கர்வி
(KARVI)
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION);
கிழக்கு தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலை.
கேரளாவில் ஆனைமலை மற்றும் அகலிமலை.
கர்நாடகாவில் சந்துருமலை.
கேரளாவில் 32 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள
குறிஞ்சி மலர்
சரணாலயம்.
பயன்கள்: (USES)
மருத்துவ பயன்கள் (MEDICINAL
USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING
DISEASES)
நரம்பு மண்டலம்
தொடர்பான பிரச்சனைகள்
சயாட்டிகா
நாளங்கள் வீக்கம்
அடைதல்
முடக்குவாதம்
லும்பாகோ
காய்ச்சல்
தோல் சம்பந்தமான
நோய்கள்
தோல்
நிறமி பற்றாக்குறை
இருமல்
பிராங்கைட்டிஸ்
தொழு
நோய்
(தண்டுவடத்தில் ஏற்படும் வலி சயாட்டிகா. லும்பாகொ
என்றால் தண்டுவடத்தின் கீழ்
பகுதியில் ஏற்படும் வலி, லோ பேக் பெயின்)
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீட்டர் உயரமுடைய பகுதிகளில் வரும்.
30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும்.
உலகம் முழுவதும் குறிஞ்சியில் இருநூற்றி ஐம்பது வகைகள் உள்ளன. இந்தியாவில் இருப்பவை மட்டும் 46 வகைகள்.
இவற்றில் நீலக்குறிஞ்சி மட்டும் 12 ஆண்டுகளுக்கு ஒரு
முறை பூக்கும்.
தல மரமாக உள்ள கோயில் (TEMPLE
WITH THIS STHALAVRISHAM )
கொடைக்கானல் கலவரமாக உள்ள கோவில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர்
திண்டுக்கல் மாவட்டம்.
மரங்களின் இயல்பு
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீட்டர் உயரமுடைய பகுதிகளில் வளரும்.
காடுகளில் மரங்கள்
அதிகம் இல்லாத பகுதிகளில் வளரும்
8 முதல் 10 அடி உயரம் வளரும்.
உலகம் முழுவதும் குறிஞ்சியில் இருநூற்றி ஐம்பது வகைகள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 46 வகைகள் உள்ளன.
இவை அனைத்தும் ஒரு சீராக பூக்காது.
நீலகுறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.
ஏழு ஆண்டுகளில் பூக்கும் குறிஞ்சியும்
இருக்கிறதாம்,
பூக்கும் பருவத்தில் மலையில் பார்க்கும் இடமெல்லாம் குறிஞ்சியின்
நீலப்பாய் நீண்டு கிடக்குமாம்.
வளர்ப்பு முறை: (PROPAGATION)
இந்த செடிகள் 12 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை பூத்துவிட்டு இறந்து
போகின்றன.
அவை இறக்கும்போது ஏராளமான விதைகளை மலை முழுக்க விதைத்துவிட்டுப்
போகின்றன.
அடுத்தத் தலைமுறைச் செடிகள் 12 ஆண்டுகள் காத்திருக்கின்றன, மீண்டும் பூத்து நம்மை பரவசப்படுத்த.
கொசுறு:
இதைத் தேடும்போது இன்னொரு தகவலும்
கிடைத்தது, நீலக்குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை பூக்கும், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மூங்கில்
இருப்பதாக நான் படித்திருக்கிறேன், நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
பூக்கும் தாவரம் ஒன்றும் இருக்கிறதாம், அது ஒரு வகையான கற்றாழை, அதன் தாவரவியல் பெயர் அகேவ்
ஒகாஹுய் (AGAVE OCAHUI),
இந்த ‘சென்டினரி கற்றாழை’ 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்குமாம், இது சிகாகோவில்
உள்ள ‘ஏரிட் கிரீன் ஹவுஸ்’ல் உள்ளது இந்த
கற்றாழைச்செடி, இதுபற்றி விவரமாக இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.
எழுதியவர்: தே.ஞான சூரிய
பகவான்
போன்: +91 8526195370
No comments:
Post a Comment