Wednesday, May 27, 2020

கும்பை என்னும் பாரிஜாதம் கொரோனாவுக்கு உதவுமா ? KUMBAI ALIAS PAARIJAATHAM – DOES IT CONTROL CORONA ?





கும்பை என்னும் பாரிஜாதம்
கொரோனாவுக்கு உதவுமா ?

KUMBAI ALIAS PAARIJAATHAM –
DOES IT CONTROL CORONA ?

ஒரு ராஜகுமாரி சூரியன்மீது காதல்கொள்ள, சூரியன் அவளை நிராகரிக்க, அதனால் அவள் தற்கொலை செய்துகொள்ள, அவள் அஸ்தியிலிருந்து உருவான மரம்தான் பவளமல்லி எனும் பாரிஜாதம், ஆனால் இந்த கும்பையும் பாரிஜாதம் என்று பதிவு செய்துள்ளார்கள், உண்மையான பாரிஜாதம் எது ? தெரிந்தால் சொல்லுங்க ! கட்டுரையை படிங்க ! வேறு ஏதாச்சும் கதை இருந்தால் சொல்லுங்க !


பொதுப்பெயர் : கார்டீனியா, கேப்ஜேஸ்மின் (GARDENIA, CAPE JASMINE)
தாவரவியல் பெயர்: கார்டீனியா ஜேஸ்மினாய்டஸ் (GARDENIA JASMINOIDES)
தாவரக்குடும்பம் : ரூபியேசியே (RUBIACEAE)


பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)

  1. மணிப்புரி :கபோக்ளி (KABOKLI)
  2. இந்தி : கந்த்ராஜ் (GANDHARAJ)
  3. கன்னடம்: சுவசான்மல்லி (SUVASANMALLI)
  4. நேப்பாளி : இந்திரா கமல்(INDRA KAMAL)
  5. தெலுங்கு: தெள்ளமங்கா (THELLAMANGA)
  6. பெங்காலி: கந்தராஜ்(GANDHARAJ)
  7. தாயகம் இந்தியா, சீனா, ஜப்பான்.


பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

  • இந்தியா
  • பங்களாதேஷ்
  • மியான்மர்
  • ஜப்பான்
  • தைவான்
  • கொரியா
  • வியட்நாம்
  • ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவிற்கு அறிமுகமானவர் பூபயிர்.
  • பதினெட்டாம் நூற்றாண்டில் தான் இது ஐரோப்பாவில் அறிமுகமானது.

ன்கள்: (USES)

  • அற்புதமான வாசனை மிக்க பூக்கள்
  • பெண்கள் விரும்பி சூடுவது.
  • இதன் பழங்கள் உடல் சூட்டை தணிக்கும்.
  • பலகாலமாக பாட்டி வைத்தியத்தில் பயன்படுவது.
  • பறித்த  பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
  • பழச்சாறு தயாரித்து அருந்தலாம்
  • பழங்களிலிருந்து மஞ்சள் சாயம் எடுக்கலாம்.

மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)

  1. சீனர்களின்  பாரம்பரிய மருத்துவத்துக்கு உதவுவது.
  2. இதன் பழங்களை நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

  1. படபடப்பு
  2. சிறுநீரகத்தொற்று
  3. ரத்தப்போக்கு
  4. புற்றுநோய்
  5. மலச்சிக்கல்
  6. நீரழிவு
  7. காய்ச்சல்
  8. பித்தப்பை சம்பந்தமான நோய்கள்
  9. மிகையான கொலஸ்ட்ரால்

இது கொரோனாவுக்கு உதவுமா ?

இதில் உள்ள ரசாயனங்கள் வைரஸ் நோய்களின் தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்கிறார்கள். இது இன்சுலின் எதிர்ப்பை (INSULIN RESISTANCE) தடுக்கும். ‘குளுக்கோஸ் டாலரன்ஸ்எனும் குளுக்கோஸ் ஏற்காமையையும் (GLUCOSE TOLERANCE) சரி செய்யும். மேலும் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது. இதனால் ஈரலை பாதுகாப்பதுடன் உடலில் வைரஸ் நோய்கலுக்கான  எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்கிறார்கள்.

மரங்களின் இயல்பு (DESCRIPTION)

  • அழகான பூ மரம்.
  • வீட்டு தோட்டத்திற்கு ஏற்றது.
  • க்ரீம் நிறத்தில் பூக்கள் பூக்கும்.
  • மரங்கள் 6 முதல் 8 அடி உயரம் வளரும்.
  • இலைகள் கண்ணாடி போல பளபளக்கும்.
  • தொட்டால் தோல் போல் மெத்தன இருக்கும்.
  • பிப்ரவரி மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கும்.
  • ஜூன் ஜூலை மாதம் வரை தொடர்ந்து பூக்கும்.
  • பூக்கள் சங்கு போல் வெண்மையாக இருக்கும்.
  • பூக்கள் பெரிய இதழ்களை உடையவை.
  • பல அடுக்குடைய ரோஜா போல இருக்கும்.
  • பழங்கள் சிறியதாக ஓவல் வடிவமாக் இருக்கும்.
  • இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.
  • தடிமனாக முரட்டு இலைகளாக இருக்கும்.
  • இலைகளின் மேற்புறம் மெழுகு பூசியது போல இருக்கும்.
  • பழங்கள் சிறியதாக வடிவமாக இருக்கும்
  • இதன் பட்டைகள் சாம்பல் நிறமானது.
  • கரும்பச்சை நிறமாகவும் இருக்கும்.

தல மரமாக உள்ள கோவில்கள் 

  • கொரடாச்சேரி சிவன் கோவில், திருவாரூர் மாவட்டம்.
  • திருப்பாச்சேத்தி சிவன் கோவில், சிவகங்கை மாவட்டம்.


வளர்ப்பு முறை: (PROPAGATION)

  1. தோட்டங்களில் வளர்க்கலாம்.
  2. வரப்புகளில் அல்லது வேலிகளில் நடலாம்.
  3. முழுசாய் சூரிய ஒளி தேவை.
  4. சுமாரான நிலைத் தாங்கும்.
  5. அதிக நீர் தாங்காது.
  6. கிளைக்குச்சிகளத் தயாரித்து நடலாம்.
  7. நல்ல வடிகால் வசதி வேண்டும்.
  8. நிலம் அமிலத்தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
  9. பாசன நீர் கடின தன்மை உடையதாக இருக்கக் கூடாது.
  10. அப்படி இருந்தால் அந்த தண்ணீருடன் எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சேர்த்து அதனுடைய கார அமில தன்மையை குறைக்க வேண்டும்.

கொசுறு

கேப் ஜாஸ்மின் என்று ஏன் வைத்தார்கள் பெயர் ? கேப் என்றால்   நன்னம்பிக்கை முனை. அதற்கு  சொந்தமானது இந்த ஜாஸ்மின் என்று நம்பியதால் ‘கேப் ஜாஸ்மின்என்று நாமகரணம் சூட்டிவிட்டர்கள்.
 
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான்
போன்: +91 8526195370

888888888888888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...