கொடைத்தோண்டி ஒரு அழகு மரம்
KODAITHTHONDI AN ORNAMENTAL TREE
பொதுப்பெயர்: புத்தா
கோகநட் (BUDDHA COCONUT)
தாவரவியல் பெயர்: டெரிகோட்டா எலேட்டா (PTERYGOTA ALATA)
வேறு தமிழ் பெயர்கள்: கொடைத்தோண்டி, கொழுக்கட்டைமரம் (KODAITHONDI, KOZHUKKATTAI MARAM)
தாயகம்: இந்தியா
மழைக்காடுகளின் ராட்சச மரம், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைக்கு சொனந்தமானது, அடிமரம் அனியாயத்திற்கு பருத்து இருக்கும், இலைகள் அகலமானவை படுத்துத் தூங்கலாம் போல இருக்கும், மூலிகையாக நோய்களை குணப்படுத்தும், பட்டைகளில் மர்ச்சாமான்கள் செய்யலாம், பட்டைகளில் நார் உறிக்கலாம், விதைகளை சாப்பிடலாம்.
பிற மொழிப் பெயர்கள்
- மலையாளம்: பொரிலா (PORILA)
- கன்னடம்: கொலுகிடா (KOLUGIDA)
- பெங்காலி: டுலா (TULA)
- அஸ்ஸாம்: டுலா (TULA)
- தமிழ்: கொடைத்தோண்டி (KODAITHONDI)
பயன்கள்:
- விதைககள் சாப்பிடலாம்.
- பட்டைகள்: நார் உறிக்கலாம்,
- மரங்கள்: ஒட்டுப்பலகைகள், பெட்டிகள், தீப்பெட்டிகள், தீக்குச்சிகள செய்யலாம்.
- சாலை ஓரங்களில் அழகு மரமாக நடலாம்.
மருத்துவ மரங்கள்:
கீழ்கண்ட நோய்களை குணப்படுத்தும் சக்தி இந்த மரத்தில்
உள்ளது.
1. பெரும்பாடு
2. ரத்தக்கழிச்சல்
3. சீதக்கழிச்சல்
4. எலும்புறுக்கி நோய்
பரவியிருக்கும் இடங்கள்:
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- கிழக்கு இமயமலை
மரங்களின் இயல்பு
- உயரம் 45 மீட்டர் வளரும்.
- வளர்ந்த மரத்தின் சுற்றளவு மூன்று மீட்டர்.
- உதை சுவருடன் கூடிய அடிமரம் உடையது.
- இலைகள், நீண்டு அகன்று பெரியதாக இருக்கும்
- பூக்கள், ஆண் பெண் பூக்கள் தனித்தனி, மஞ்சள் நிறப்பூக்கள்,
- விதைகள், பெரிய இறக்கை உள்ளவை, ஐந்து செ.மீ. நீளமானவை,
- தட்டையானவை, ஒரு காயில் 40 விதைகள் வரை இருக்கும்,
- விதைகளில் 35 சதவீத எண்ணெய் உள்ளது.
- ஈரத் செழிப்பான சூழலில் நன்கு வளரும்.
மரம் வளர்ப்பு முறை
விதைகளை பிரித்து எடுத்தவுடன் விதைக்கலாம்
நாற்றுக்களை நடலாம்
நாற்றுக் குச்சிகளாக நடலாம்.
இந்த மரத்தின் இரண்டு இலைகள் ஒரே மாதிரியாய் இருக்காதாம். ஆதனால் இதற்கு பைத்தியக்கார மரம் (MAD TREE) என்ற பெயர் உண்டு. வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் இதனை ரசகுல்லா மரம் என்று இனிக்க இனிக்க அழைக்கிறார்கள்
No comments:
Post a Comment