கஸ்தூரி வேலம் எனும் வாசனை வேலமரம்
KASTHURI
VELAM SWEET FRAGRANT TREE
- பொதுப்பெயர் :பெர்பியும்டு வாட்டில், ஸ்வீட் அகேசியா, அயன்வுட், ஹனிபால், நீடில்புஷ், ஃப்ராக்ரண்ட் அகேசியா (PERFUMED WATTLE,SWEET ACACIA, IRON WOOD, HONEY BALL, NEEDLE BUSH, FRAGRANT ACACIA)
- தாவரவியல் பெயர்: அகேசியா ஃபெர்னீசியானா (ACACIA FERNESIANA)
- தாவரக்குடும்பம் : மைமோசியேசி (MIMOSACEAE)
- தாயகம்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா
பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
- வேறு தமிழ் பெயர்கள்: வாடைவள்ளி
- மலையாளம் : கஸ்தூரி வேலம் (KASTHURI VELAM)
- கன்னடம்: கரி கஸ்தூரி (KARI KASTHURI)
- தெலுங்கு:கஸ்தூரி தும்மா (KASTHURI THUMMA)
- பெங்காலி:பிலாட்டி பா பாலா (BILATI BA BALA)
- இந்தி: துரகந்த் காய்ர் (BILATI BA BALA)
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
இந்தியா
- வெப்ப மண்டல அமெரிக்கா
- கரீபியன்
- கயானா
- தென் அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- ஆப்பிரிக்கா
- ஐரோப்பா
- ஆசியா
- வட அமெரிக்கா
- மிடில் ஈஸ்ட்
- பிலிப்பைன்ஸ்
பயன்கள்: (USES)
1.
பூக்களிலிருந்து தயாரிக்கும் வாசனைப் பொருட்களுக்கு கேசி என்று பெயர்
வைத்திருக்கிறார்கள்.
2.
இதிலிருந்தும் காங்கிரீட் என்னும் வாசனைப் பொருள் தயாரிக்கிறார்கள்.
3.
ரோஜாப்பூ போல இதுவும் கட்பிளவர்ஸ் தருகிறது.
4.
பூவுடன் கூடிய ஒரு நீளமான கிளையுடன் வெட்டி விற்பதுதான் கட்
பிளவர்ஸ்.
5.
கேசி கட் பிளவர்ஸ் உலகம் முழுவதும் பிரபலமானவை.
6.
ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு இதன் விதைகள் உணவாகிறது.
7.
முளைவிட்ட விதைகளை காய்கறிபோல சமைத்து சாப்பிடுகிறார்கள்.
8.
பல நாடுகளில் இதனை தீவனமாகப் பயன் படுத்துகிறார்கள்.
9.
மிக அதிகமான தேனீக்களை கவரும் மரங்களில் கஸ்தூரி வேல மரமும் ஒன்று.
10.
இந்தியாவில் இதன் வேர் மற்றும் நெற்றுக்களில் எடுக்கும் பிசின் ‘அரபிக்கம்’ என்னும்
சர்வதேச பிசினுக்கு இணையானது.
11.
உலகம் முழுக்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அழகிய மரம்.
12.
எகிப்து இஸ்ரேல் ஜாவா ஆகிய இடங்களில் அழகு மரமாக நடுகிறார்கள். இந்தியா ஈரான் மத்திய தரைக்கடல் நாடுகளில் வேலிகளிலும் காற்றுத்தடுப்பு
வரிசைகளிலும் அதிகம் நடுகிறார்கள்.
13.
கருவேல மரத்தைப் போலவே கப்பல் கட்ட, பண்ணை கருவிகள்
கருவிகள், கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்ய, மேஜை நாற்காலி
போன்றவை செய்ய பயன்படுகிறது.
14.
இந்தியாவில் அதிகமாக பயன்படுவது இந்த மரத்தின் குச்சிகள் தான், பல் துலக்க பயன்படுத்துகிறோம்.
15.
அமெரிக்காவில் இந்த மரத்தை அதிகம் விறகாக உபயோகிக்கிறார்கள்.
16.
பூக்களின் வாசனை பொருட்கள் தயாரிக்கலாம்
17.
பிசின் மற்றும் பட்டை களில் இருக்கும் டேனின் மூலம் தோல் பதனிடலாம்.
18.
விதைகள் பறவைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கு உணவாகிறது.
19.
இலைகள், பட்டைகள், வேர்கள்
ஆகியவற்றை பாரம்பரிய
மருந்துகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ பயன்கள் (MEDICINAL
USES)
4.
உலகம் முழுக்க இதனை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
மரத்தின் இலைகள், வேர், பட்டை, பூ, காய்கனி அத்தனையும் மருந்தாக பயன்படும்.
கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.
- மலேரியா
- தோல் நோய்கள்
- இருமல்
- ஈறுகளில் ரத்தக் கசிவு
- குமட்டல்
- குடலிறக்கம்
- வெள்ளைப்படுதல்
- காயம் மற்றும் புண்கள்
- தொழுநோய்
- மேக வெட்டை
- சிறுநீர்ப்பை நோய்கள்
- வயிற்று உபாதைகள்
- தலைவலி
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
- மரங்கள் 10 மீட்டர் உயரம் வளரும்.
- சிம்புகளில் நிறைய முட்கள் இருக்கும்.
- பூக்களும் இலைக்கணுக்களில் தோன்றும்.
- இரண்டு அல்லது மூன்று பூக்கள் பூக்கும்.
- பூக்கள் கவர்ச்சிகரமான மஞ்சள் நிறமானவை.
- 2 மில்லிமீட்டர் குறுக்களவு உடையவை.
- நெற்றுக்கள் 5 சென்டி மீட்டர் நீளமானவை.
- ஒவ்வொரு நெற்றிலும் இருபது விதைகள் இருக்கும்.
- செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும்.
- அக்டோபர் மாத்திலிருந்து காய்க்கும்.
- பசுமை மாறாத குறுமரம்.
- ஒவ்வொரு கணுவிலும் ஒரு ஜோடி கூர்மையான முட்கள் இருக்கும். (வேல மரத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அது போல இருக்கும்.)
தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES
WITH THIS STHALAVRISHAM )
Ø
நாகர்கோவில் நாகராஜர் சிவன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
வளர்ப்பு முறை: (PROPAGATION
1.
கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 900 மீட்டர் உயரம் வரை வளரும். விதைகளின்
முளைப்புத்திறன்
60 முதல் 70 சதம் இருக்கும்.
2.
மரங்கள் நாலரை மீட்டர் உயரம் வளரும்.
3.
இந்தியாவில் எல்லா பகுதியிலும் வளரக் கூடியவை.
4.
இதற்கு இந்தியா சொந்த நாடு போல ஆகிவிட்டது.
5.
பூக்கள் இளமஞ்சள் நிறமாக இருக்கும்.
6.
நாசிக்குப் பிடித்தமான வாசனையுடன் இருக்கும்.
7.
நெற்றுக்கள் ஐந்து முதல்
ஏழரை சென்டிமீட்டர்
நீளமாக இருக்கும்.
8.
இளங்காவி நிறமாக இருக்கும்.
9.
இதன் விதைகள் ஒருகிலோ பாக்கெட்டில் விற்பனையாகிறது.
10.
உங்கள் விதை தேவைக்கு இண்டியாமார்ட்’ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
11.
வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் தற்போது மரவிதை
விற்பனையில் இறங்கியுள்ளன.
விதைகள் எங்கு கிடைக்கும் ?
- மரவிதைகள் கூட ஆன் லைனில் கிடைக்கின்றன.
- இதன் விதைகள் ஆன்லனில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- ஒரு கிலோ பாக்கெட்டில் விற்பனையாகிறது.
- உங்கள் விதைத் தேவைக்கு ‘இந்தியாமார்ட்’ ஐ தொடர்பு கொள்ளலாம்.
- www.indiamart.com / Acacia fernisiana
FOR FUTHER READING
www.uses.plantnet.org / Acacia
fernisiana
www.indiamart.com.org / Acacia
fernisiana
www.en.wikipedia.com / Acacia fernisiana
எழுதியவர்: தே.ஞான சூரிய
பகவான், போன்: +91 8526195370
No comments:
Post a Comment