Tuesday, May 19, 2020

கஸ்தூரி அரளி ஒரு மூலிகை மரம் - KASTHURI ARALI HERBAL TREE






கஸ்தூரி அரளி ஒரு மூலிகை மரம் 
KASTHURI ARALI HERBAL TREE

வேறு தமிழ் பெயர்கள்: மஞ்சள் அரளி, குவளைகொட்டை செடி
பொதுபெயர் : எல்லோ ஒலியாண்டர் (YELLOW OLEANDER)
தாவரவியல் பெயர்: கேஸ்லபெலா தெவீஷியா (CASLABELA THEVETIA)
தாவரக்குடும்பம் : அப்போசயனேசியே (APOCYANACEAE)

பிற மொழிப்பெயர்கள் (OTHER LANGUAGE NAMES)

மலையாளம்
இந்தி : பீலி கேனர் (PEELI KANER)
மணிப்பூரி : உட்டோங்லி (UTONGLEI)
பெங்காலி : கோல்காபூல் (KOLKAPHUL)

கஸ்தூரி அரளிக்கு  ஸ்பானிஷ் மொழியில் கேஸ்காம்பெல் என்று பெயர், கேஸ்காம்பெல் என்றால் ரேட்டில் ஸ்நேக் என்று அர்த்தம், ரேட்டில் ஸ்நேக் என்றால் தமிழில் கண்ணாடி விரியன், பொதுவாக விரியன் பாம்புகள் நல்லபாம்புவைவிட 20 மடங்கு விஷம் அதிகம் உள்ளவை, அதனால்தான் விதி முடிந்தவர்களை விரியன் கடிக்கும் என்று ஒரு பழமொழி தமிழில் வைத்திருக்கிறார்கள், கிராமங்களில் ஒரு காலத்தில் கஸ்தூரி அரளியின் விதைகளை  அரைத்துக்குடித்து தற்கொலை செய்து கொள்ளுவார்கள், ஆனால் தென்னாற்காடு மாவட்டத்தில் இதனை ‘மஞ்சரளி’ அல்லது  குவளை என்று சொல்லுவார்கள், ஆக கஸ்தூரி அரளியும் கண்ணாடி விரியனும் ஒன்று.

 பரவி இருக்கும் இடம்

பீகார்
டெல்லி
குஜராத்
மத்திய பிரதேசம்
வெஸ்ட் பெங்கால்
ராஜஸ்தான்
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்

பயன்கள் 

  • பன்னிரண்டு கோயில்களில் தலமரமாக உள்ளது.
  • அழகுச் செடியாக வளர்க்கலாம்
  • மருந்துகளாக பயன்படுத்தலாம்.
  • இதன் பழங்கள் நச்சுத் தன்மை உடையவை.
  • ஆனால் கூட சில பறவைகள் வந்து சாப்பிடுகின்றன.  
  • வை சன்பர்ட்ஸ், ஆசிய குயில்கள்,  புல்புல் பறவைகள், மைனா பறவைகள்.
  • இந்த பழங்களின் நச்சு இவற்றை பாதிப்பதில்லை.

மரங்களின் இயல்பு:
 
வெப்பமண்டல சிறுமரம்
பசுமைமாறா மரம் 
  • சிறு மரம் 10 முதல் 20 அடி உயரம் இருக்கும்
  • இலைகள் 10 அங்குல நிலம் கூட இருக்கும்
  • பெரும்பாலான மண் வகைகளிலும் நன்றாக வளரும்
  • பெரும்பாலும் கிராமங்களில் ஓடை கரைகளில்
  • இயற்கையாக வளர்ந்திருக்கும்.
  • இலைகள் :  கூர்மையான நுனி,  கரும் பச்சை நிறம்,  அகலம் குறைந்த நீளமான நாக்குகள் போல அலையும்.
  • செடிகள் வளர வளர பசுமையான தண்டுகள் வெள்ளி நிறம் கலந்த சாம்பல் நிறமாக மாறும்.
  • பூக்கள் கோடையில் பூக்கும், கிளை நுனி கொத்துக்களாக குறைவான எண்ணிக்கையில்  மஞ்சள் நிறத்தில் பூக்கும்.
  • கனிகள் ஆழமான சிவப்பும் கருப்பும் ஆக 2 முதல் 4 விதைகளுடன் இருக்கும்.
 
தலமரமாக உள்ள கோயில்கள் 

  1. கம்பம் சாமுண்டிபுரம் அம்மன் கோயில், தேனி மாவட்டம்.
  2. ஒட்டக்குடி சிவன் கோயில், திருவாரூர் மாவட்டம்.
  3. காஞ்சிபுரம் சிவன் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.
  4. குழிக்கரை சிவன் கோவில், திருவாரூர் மாவட்டம்.
  5. புத்தூர் சிவன் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்.
  6. செய்யூர் சிவன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம்.
  7. திருகண்டலம் சிவன் கோயில், திருவள்ளூர் மாவட்டம்.
  8. திருக்கரவீரம் சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்.
  9. திருநெடுங்குளம் சிவன் கோயில், திருச்சி மாவட்டம்.
  10. திருவிடைவாசல் சிவன் கோவில், திருவாரூர் மாவட்டம்.
  11. குமரகிரி முருகன் கோவில், சேலம் மாவட்டம்.
  12. திருவக்கரை விஷ்ணு கோயில், விழுப்புரம் மாவட்டம்.

மஞ்சள் அரளி வளர்ப்பு முறை 

1. குச்சிகளை வெட்டி நட்டு புதிய கன்றுகளை உருவாக்கலாம் 
2. 4 முதல் 6 அங்குல நிளத்திற்கு குச்சிகள் வேண்டும். 
3. முற்றிய  அல்லது பிஞ்சு கிளைகள் கூடாது. 
4. குச்சிகள்  வளையலாம்  உடையக் கூடாது. 
5. வளையவில்லை என்றால்  முற்றியவை 
6. உடைந்தால் அவை இளம் குச்சிகள்.  
7. குச்சிகளை எடுப்பதற்கு முதல் நாள் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
8.குச்சிகளை வெட்டி எடுத்து அதன் மேல் நுனியில் ஒன்றிரண்டு இலைகளை விட்டு கீழே இருக்கும் இலைகளை அப்புறப்படுத்துங்கள்.
9. குச்சிகளை தொட்டிகளில் நட்டு நீரூற்றி அதனை பாலித்தீன் பையில் மூடி கட்டி வைக்க வேண்டும். 
10. இது ஒரு மினி கிரீன்ஹவுஸ் போல செயல்படும். 
11. ஒரே  தொட்டியில் பல குச்சிகளை நடலாம். 
12. அந்த தொட்டியை வெளிப்புறம் நிழலான இடத்தில் வைக்கவும். 
13. .3 அல்லது 4 வாரங்களில் வேர் பிடிக்கும். 
14. குறைந்தபட்சம் 2 முதல் 3 அங்குலம் வேர்கள் வளர்ந்து இருந்தால் அதனை நடவுக்கு எடுத்துக்கொள்ளலாம். 
15. குச்சிகளை எடுத்து சோதித்துப் பார்க்கலாம், பின்னர் மீண்டும் அதனை அதே தொட்டிகள் அதே இடத்தில் நட்டு வைக்கலாம். 
16.குச்சிகளை நடும்போது 'ரூட்டிங் ஹார்மோன்' ல் தோய்த்து நடலாம்.
17. தேனை ரூட்டிங் ஹார்மோன்'னாக பயன்படுத்தலாம் 
18. இது சீக்கிரமாக வேர்பிடிக்க உதவும். 


எழுதியவர் 
தே. ஞான சூரிய பகவான் 
போன்: + 91 8526195370


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...