இஸ்ரேல், மூர்த்தி சிறுசு கீர்த்தி
பெருசு
ISRAEL SMALL IN STATURE GREAT IN NATURE
இஸ்ரேல் தேசம் உருவானது
இரண்டாம் உலகப்போருக்குப்பின்னால் 1947 ம் ஆண்டு பிப்ரவரி
14 ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை இரண்டாகப்பிரித்தது,
ஒன்றை யூதர்களுக்கு தந்தது, அதுதான் இஸ்ரேல்,
பூர்வீகமாக அரேபியர்கள் வாழும் பகுதி பாலஸ்தீன் என்றே அழைக்கப்படும்
என்றும் அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.
இஸ்ரேல் நாட்டின் அமைவிடம்
இஸ்ரேல் ஆசியாவில் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு
சிறிய நாடு, யூதர்கள் அதிகம் வசிக்கும் நாடு, மத்தியதரைக் கடலின்
கரையோரத்தில் அமைந்துள்ளது, லெபானான், சிரியா,
ஜோர்டான், மற்றும் எகிப்து ஆகியவை சுற்றிலும் அமைந்துள்ள
நாடுகள், அதுமட்டுமல்ல ஐரோப்பா, ஆசியா,
ஆஃப்ரிகா ஆகிய மூன்று கண்டங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இஸ்ரேல்.
பூகோள அமைப்பு
மிகச்சிறிய நாடு என்று பார்த்தோம், நீளவாக்கில் 470
கிலோமீட்டரும், அகலவாக்கில் 135 கிலோமீட்டரும் இருக்கும் அளவுக்கு இத்தினியோண்டு நாடு, ஆனால் பல்வேறு பூகோள அமைப்பை உடையது, காடுகளை உடைய உயர்ந்த
மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள், மலைகளையுடைய
பாலைவனங்கள், கடலோர சமவெளிகள், ஜோர்டான்
பள்ளத்தாக்கு, டெட்சீ என்றழைக்கப்படும் உப்புநீர்ஏரி,
உலகின் மிகவும் தாழ்வான பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது, இஸ்ரேலின்
நிலப்பகுதியில் பாதிக்கு மேற்பட்ட பகுதி பாலைவனம்.
பருவநிலை
வெயில்
வெப்பம் அனல்காற்று வறட்சி இவைதான் பொதுவான பருவநிலை,
நவம்பர் முதல் ஏப்ரல் வரையானது மழைக்காலம், தென்
பகுதியில் ஒர் ஆண்டின் சராசரி மழை அளவு 50 முதல் 70 செ.மீ. மட்டுமே, வடக்கு பகுதியில் கிடைக்கும் மழை
2.5 செ.மீ. மட்டுமே,
மழையுடன் எப்போதாவது பனியும் பெய்யும், ஜோர்டான்
பள்ளத்தாக்கின் கோடையும்
குளிர்காலமும் யாரையும் கவரும்.
தாவரங்கள் மற்றும் பிராணிகள்
இங்கு சுமார்
200 வகை பறவைகளும், 200 வகை பாலூட்டிகளும்,
2600 வகையான தாவரங்களும், இவற்றை பாதுகாக்க பரமரிக்க
என 150 சரணாலயங்களும், 65 தேசிய பூங்காக்களும்
சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைத்திருக்கிறார்கள்.
மக்கள் தொகை
இங்கு வசிப்பவர்களில் சுமார் 75 சதவிகிதம் யூத இனத்தவர், மீதமுள்ளோர் இதரர், இதரர் என்றால் அவர்கள் பெரும்பாலும்
அரேபிய முஸ்லிம்கள், யூதர்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தினர் நகரங்களிலும் வசிக்கிறார்கள், ஐந்து சதவிகித
யூத மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள், இஸ்ரேலில் கிராமங்களை
கிபுட்ஸ் என்றும் மோஷாவ் என்றும் சொல்லுகிறார்கள்.
இஸ்ரேலின் முக்கிய நகரங்கள்
ஜெருசலேம்,
டெல்அவிவ், ஹைஃபா, பேர்ஷேவா
ஆகியவை இஸ்ரேலின் முக்கிய நகரங்கள்.
ஜெருசலேம் இஸ்ரேலின் தலை நகரம்
ஜெருசலேம் இன்றைய இஸ்ரேலின் தலை நகரம், மிகப்பெரிய நகரமும்கூட,
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிங்டேவிட்’ன் தலை நகராக இருந்தது, நவீன இஸ்ரேலின் தலைநகராக
1909 ம் ஆண்டு முதல் செயல்பட்டது, ஆனால் இன்று அது இஸ்ரேலின் தொழிற்சாலைகள்,
வியாபார நிறுவனங்கள், நிதி நிறுவன்ங்கள் மற்றும்
கலாச்சார அமைப்புகளின் இருப்பிடமாக உள்ளது.
ஹைஃபா முக்கியமான துறைமுகம்
ஹைஃபா பாரம்பரியமான கடற்கரை நகரம், மத்திய தரைக்கடல் பகுதியின்
முக்கியமான துறைமுகம், வியாபாரம் மற்றும் தொழிற்சாலகள் நிறைந்த
பகுதி, நான்காவது முக்கிய நகரம்.
பேர்ஷேபா தென் பகுதிக்கான நிர்வாக நகரம்
‘பேர்ஷேபா’, பைபிளில் சொல்லப்பட்ட நகரம், இன்று தென்பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரம், இங்குதான்
இஸ்ரேலின் தென் பகுதிக்கான நிர்வாகம் தொடர்பான சேவைகள், பொருளாதாரம்,
சுகாதாரம், கல்வி, கலாச்சாரம்
ஆகியவை தொடர்பானவை இடம்பெற்றுள்ளன.
நெகேவ் பாலைவனம்
நெகேவ் பாலைவனம் இஸ்ரேலின் தென் பகுதியில் அமைந்துள்ளது, நெகேவ் என்றால்
‘ஹிப்ரு’ மொழியில் வறண்டபகுதி என்று பொருள்,
தெற்கு என்ற அர்த்தத்திலும் நெகேவ் என்ற சொல்லை பைபிள் பயன்படுத்தியுள்ளது, இதில் சரிபாதி முழுமையான பாலைவனமாகவும்,
மீதமுள்ள பகுதி நடுத்தரமான பாலைவனமாகவும் உள்ளது, இங்கு மேம்படுத்தப்பட்ட நகரங்கள் எல்லாம்கூட உள்ளன, பாலைவனங்கள்
குறித்த ஆராய்ச்சி நிலயங்களும், இவற்றை பாடங்களாக நடத்தும் பள்ளிக்கூடங்களும்
இங்கு உள்ளன, சுமார் 55 சதவிகித இஸ்ரேலின்
நிலப்பரப்பை நெகேவ் ஆக்கிரமித்துள்ளது, இதன் மொத்தப் பரப்பு
13000 சதுர கிலோமீட்டர்.
விவசாய சமூகத்தினரை உள்ளடக்கிய ஒரு இஸ்ரேலிய கிராமத்திற்கு கிபுட்ஸ்
என்கிறார்கள், இது போன்ற கிபுட்ஸ்களை 1909 ம் ஆண்டில் முதன் முதலாக
தொடங்கினார்கள், 2010 ம் ஆண்டு கணக்குப்படி இஸ்ரேலில்
210 கிபுட்ஸ்கள் இருந்தது.
நெகேவ்வின் வடக்குப் பகுதியில் ஆண்டு சராசரி மழையாக 300 மில்லி மழை கிடைக்கிறது,
இங்கு உள்ள மண் ஓரளவு வளமானதாக உள்ளது, மேற்குப்பகுதியில்
300 மில்லி மழை கிடைக்கிறது, இங்கு உள்ள மண் மணல்சாரியாக
அமைந்துள்ளது, இங்கு உள்ள மணல் மேடுகள் 30 மீட்டர் உயரம்வரைகூட இருக்கும்.
நெகேவ்வின் மத்திய பகுதியில்
ஆண்டு சராசரி மழையாக 200 மில்லி கிடைக்கும், இந்த மண் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட பிடித்து வைத்துகொள்ளாது, இங்கு இருக்கும் மண்ணை லோவெஸ் (LOESS) என்கிறார்கள்,
இங்கு ஓடு நீரும் மண்ணரிப்பும் அதிகமாக இருக்கும், 2010 ம் ஆண்டின் கணக்குப்படி இங்கு வசிப்பவர்கள் 6 லட்சத்து
30 ஆயிரம் பேர், இவர்களில் 75 சதத்தினர் யூதர்கள், மீதம் இருப்பவர்கள் பிடாயின்
(BEDOUIN NOMADIC ARAB TRIBES) இனத்தவர், ஒரு காலத்தில்
இவர்கள் நாடோடிகளாக மேய்ப்பர்களாக வாழ்ந்தவர்கள், இவர்களை இஸ்ரேலிய அரசு ஏழு இடங்களில் குடியமர்த்தியுள்ளது, இப்போது அவர்கள் தங்களை ‘நெகேவ் அராப்ஸ்’ என்று சொல்லிக் கொள்ளுகிறார்களாம்.
இஸ்ரேலில் தண்ணீர் பிரச்சினைக்கு எதிரான போர்
விவசாயத்தின் தேவை குறைந்துள்ளது
விவசாயத்துக்கு
55 சதமும் வீட்டு உபயோகத்திற்கு 38 சதமும் தொழிற்சாலைக்கு
8 சதவிகித நீரையும் பயன்படுத்துகிறார்கள், பத்து
ஆண்டுகளுக்கு முன்னால் விவசாயத்துக்கு பயன்படுத்திய தண்ணீரைவிட 9.4 சதம் குறைவாக உபயோகப்படுத்துகிறார்கள், இதற்கு முக்கிய
காரணம் சொட்டுநீர்ப்பாசனம், இஸ்ரேலில் ஒரு குடும்பம் பயன்படுத்தும்
தண்ணீர் 100 முதல் 235 லிட்டர்,
இது 95 சதம் அதிகரித்துள்ளது, தொழிற்சாலைகளின் தேவை 4.3 சதம் அதிகரித்துள்ளது என்கிறார்கள்.
https://www.kkl-jnf.org/water-for-israel/israel-fourth-aquifer/#{878E0534-462E-4D91-B780-3F78021A18A5} / Keren Kayemeth LeIsrael Jewish National Fund
விவசாயத்தில் இஸ்ரேல் நிகழ்த்தியிருக்கும் சாதனை
விவசாயத்தில் இஸ்ரேல் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்பது
நீர்பிரச்சினையை வெற்றிகொன்டிருப்பதுதான், இதனை அவர்கள் நீர்பிரச்சினைக்கு
எதிரான போர் என்று வருணிக்கிறார்கள், இவர்களின் விவசாய
வருமானம் 2.4 ஜிஎன்பி, இவர்கள் செய்யும்
விவசாய ஏற்றுமதி 2 சதம், அவர்களின் 93
சத உணவுத்தேவையை அவர்களே உற்பத்தி செய்கிறார்கள்.
சீ ஆஃப் கலிலி என்னும் கின்னெரெத் ஏரி
இதனை சீ ஆஃப் கலிலி, லேக் கலிலி,
லேக் டைபெரியாஸ், கின்னரெத் என பல பெயர்கள்
உண்டு, இங்கிருந்துதான் 800 அடி
உயரத்திற்கு எடுத்து சென்று விவசாயத்துக்கு பயன்படுத்துகிறது, இஸ்ரேலின் 10 சத குடினீர் தெவையை கின்னெரெத் ஏரி
நிறைவு செய்கிறது, இஸ்ரேல், இந்த
ஏரியின் சுற்றளவு சுமார் 55 கி.மீ.,
நீளம் 21 கி.மீ, அகலம் 13 கி.மீ, இதன் பரப்பளவு 166.7 சதுர கிலோமீட்டர், இதன் ஆழம் 43 மீட்டர். கடல்
மட்டத்திலிருந்து அதிக அளவு கீழே இருப்பதில் இரண்டாவது ஏரி இது, முதலாவது ஏரி ‘டெட்சீ’ என்பது நமக்கு தெரியும், ஆனால் டெட்சீ யில் இருப்பது உப்பு நீர், கின்னெரெத்
ஏரியில் இருப்பது நல்ல தண்ணீர், இந்த ஏரிபற்றிய குறிப்புகள்
பைபிளிலும் யூதர்களின் வேத புத்தகத்திலும் நிறைய பார்க்கலாம், கின்னெரெத் ஏரிக்கு நிலத்தடி ஊற்றின் மூலமும் ஜோர்டான் ஆற்றின் மூலமும்
தண்ணீர் கிடைக்கிறது, ஆனால் பெரும்பகுதி தண்ணீர் ஜோர்டான்
ஆற்றின் மூலமாகவே கிடைக்கிறது, இந்த சீ ஆஃப்கலிலியில்தான்
கிறிஸ்து ஏசு தண்ணீரின்மீது நடந்து அதிசயம் நிகழ்த்தினார், இதன்
அருகில் இருக்கும் ஒரு மலையில்தான் கிறிஸ்து ஏசு மலைப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
https://en.wikipedia.org/wiki/Sea_of_Galilee#Water_use / Sea of Galilee
நான்கு நாடுகளில் ஒடும் ஜோர்டான் ஆறு
ஜோர்டான் நதி நான்கு நாடுகளில் ஒடுகிறது, அவை ஜோர்டான், இஸ்ரேல், தென்மேற்கு
சிரியா, மத்திய கிழக்கு பகுதியைச்சேர்ந்த நதி என்றும் இதநை
சொல்ல்லாம், மவுன்ட் ஹெர்மான், மற்றும்
கொலன்ஹைட்ஸ் ஆகிய மலைப்பகுதிகளில் உற்பத்தி ஆகிறது, பின்னர் 261
கிலோமீட்டர் ஓடி டெட்சீ என்ற இடத்தில் சங்கமம் ஆகிறது, இதன் மேற்கு கரையில்தான் அமைந்துள்ளது இஸ்ரேல், இந்த
நதியில்தான் ஜான் தி பாப்டிஸ்ட் என்பவர்
கிறிஸ்து ஏசுவுக்கு ஞானஸ்தானம் செய்து வைத்தார்.
ஜோர்டான்
ஆறு சங்கமம் ஆகும் டெட்சீ என்னும் ஏரி
ஜோர்டான்
ஆறு கடைசியாக சங்கம்ம் ஆகும் இடம் டெட்சீ என்னும் ஏரி, இது
கடல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்தில் இருக்கும் உப்புநீர் ஏரி, பாக்டீரியாவைத்தவிர வேறு எந்த உயிரினங்களும் இதில் உயிர் வாழாது, ஜோர்டன் நதியிலிருந்து வரும் மீன்கள்கூட ஓரிறு மணிகளிலேயே உயிரிழந்து
போகுமாம், இந்த ஆற்றின் கரையோரங்களில்கூட ஹேலோஃபைட்ஸ் என்று
சொல்லப்படும் தாவரங்கள் மட்டுமே உயிர் வாழும்.
நீர் சம்மந்தமான நவீன தொழில் நுட்பங்கள்
கிளவுட்
சீடிங் (CLOUD SEEDING), கழிவு நீரை சுத்தம்
செய்து மாசு நீக்குதல்,
கடல் நீரை சுத்திகரித்தல் ஆகியவை நீர் பிரச்சினையை தீர்க்க அவர்கள் கடைபிடிக்கும்
நவீன தொழில்நுட்ப உத்திகள்
இஸ்ரேலின் நீர் ஆதாரங்கள்
இஸ்ரேலுக்கு கிடைக்கும் மொத்த நீரில் மூன்றில் இரண்டு பங்கு
நிலத்தடி நீராகக் கிடைக்கிறது,
மலைகளின் மூலமாக கிடைப்பது, கடற்புற சமவெளி மூலமாகக்
கிடைப்பது, ‘கின்னெரெட்’ போன்ற ஏரிகள் மூலம்
கிடைப்பது, ஆற்று நீர், வெள்ள நீர்,
நீர்தேக்கங்கள், இவை எல்லாமே இயற்கையாக கிடைக்கும்
நீர்.
இது போக கழிவு நீரை சுத்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் நீர், நீர்தேக்கங்களில் சேகரம்
ஆகும் வெள்ள நீர் மற்றும் கடல் நீரை சுத்திகரிப்பதால் கிடைக்கும் தண்ணீர், மேலும்
இவர்கள் பயன்படுத்தும் சொட்டுநீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள், இப்படி இஸ்ரேலியர்களின் புத்திசாலித்தனத்தின்
மூலமாக இரன்டாவது வகையில் கிடைக்கும் நீரின் மூலமாகத்தான் இவர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கிறார்கள்.
தமிழில்
ஒரு பழமொழி சொல்லுவாங்க, குண்டு சட்டியில் குதிரைஓட்டுவது என்று, அதுதான் என் நினைவுக்கு
வருகிறது, ஆனால் திறமையாக ஓட்டுகிறார்கள், இத்தினியோண்டு நாடு, இத்தினியோண்டு இயற்கை
வளங்கள், ஆனால் உலக நாடுகளுக்கே வழிகாடும் நிலையில் இஸ்ரேல், மூர்த்தி சிறுசு ! கீர்த்தி
பெருசு !
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான்
No comments:
Post a Comment