Wednesday, May 13, 2020

வீடுகளில் துளசிச் செடிகளை எப்படி வளர்க்க வேண்டும் ? HOW TO GROW THULASI HERB AS INDOOR PLANT ?








வீடுகளில் துளசிச் செடிகளை எப்படி வளர்க்க வேண்டும் ?

HOW TO GROW THULASI HERB AS INDOOR PLANT ?


எனக்கு அப்போ சரியா 22 வயசு இருக்கும், வருஷம் 1972, பரங்கிபேட்டையில் எனக்கு விவசாய அதிகாரி வேலை, சிதம்பரம் ஆணிக்காரன் தெருவில் அப்போது தங்கி இருந்தேன், அது ஒரு அக்ராஹாரம், அங்கு இருந்த எல்லா வீட்டிலும் தோட்டத்திலும் துளசி மாடம் இருக்கும், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் அடங்கலுமாய் காலையில் எழுந்து குளிச்சிட்டு ஈரத்துணி ஓட்டிய உடம்போடு வந்து துளசி மாடத்தை சுற்றிவந்து மந்திரம் ஜெபித்தபடி நீர் விட்டு கழுவி, மாடத்தில் மஞ்சள் தடவி சிவப்பு பொட்டுவச்சி, அகலில் எண்ணைவிட்டு, திரியை அழித்துப்பிழிந்து, தீப்பொருத்தி, எரியும் ஜோதியை தொட்டுகும்பிட்டு மந்திரம் முடித்த பிறகுதான் மத்தமத்த வேலைகள் செய்வார்கள், இண்ணைக்கும் நினைச்சுப்பாத்தா  இப்பவும் என் நாசிகளில்  துளசி வாசம் வீசும், சமீபத்தில் அங்கு ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன், அங்கு துளசி மாடம் கிரேனைட்டில் இருந்தது, மாடத்தில் இரண்டு துளசிச்செடிகள், ஒன்று ஸ்ரீதுளசி இன்னொன்று கிருஷ்ணதுளசி, ஆனால் அந்த துளசிவாசம் இல்லை.

 ப்படி துளசி மாடம் வீடுகளில் வைத்தால், பேய் பிசாசு பில்லி சூனியம் எல்லாம் வீட்டுக்குள்ள வராது, அறிவியல் ரீதியாவும் சொல்லுவாங்க, துளசி மணம் எந்த கிருமிகளையும் வீட்டுக்குள்ள அண்டவிடாது, நோய்நொடி வராது மாசு வராது.

தாஜ்மஹால் உலக அதிசயம், சலவைக்கல்லில் கட்டினது ஒரு கணவன் தன் மனைவிக்காக கட்டிய மிகவும் பிரம்மாண்டமான கனவு மாளிகை,  முழுக்க முழுக்க சலவைக்கற்களால் கட்டினது, தாஜ்மஹால் உத்தரப்பிரதேசத்தில் ஆக்ராவில் இருக்கு, இப்ப அங்கே ஏகப்பட்ட ஷூ ஃபேக்டரிங்க வந்தாச்சு,ங்கிருந்து  ஒருவிதமான நச்சுவாயு அந்த வெள்ளைதாஜ்மகால் சுவர்களை காவிநிறமா மாத்திகிட்டு இருந்தது, அந்த நச்சுவாயு தாஜ்மஹாலின் அழகை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுகிட்டு இருந்தது, அதைத் தடுக்கும் வேலையை இப்போ துளசிச் செடிகள்தான் அற்புதமா செஞ்சிட்டு இருக்கு, மறுபடியும் தாஜ்மகால் சுவர்கள் பளபளக்குது, அதுக்காக தாஜ்மகாலை சுற்றி 10 லட்சம் துளசிச் செடியை நட்டு இருக்கறதா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு செய்தியைப் படிச்சேன்.


தாவரவியல் பெயர்: ஓசிமம் சேங்க்டம் (OCIMUM SANCTUM)
பொதுபெயர்: பேசில் (BASIL)
தாவரக்குடும்பம்: லேமியேசியே (LAMIACEAE)


மூலிகையாக துளசியின்  பயன்கள்:

கீழ்க்கண்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது

v  ஜலதோஷம்
v  சளி
v  ஜுரம்
v  தும்மல்
v  இருமல்
v  ஆஸ்துமா
v  ரத்தக்கொதிப்பு
v  ரத்த அழுத்தம்
v  மாரடைப்பு
v  கீல்வாதம்
v  மூட்டுவலி
v  மூட்டுவீக்கம்
v  வயிறு சம்மந்தமான பிரச்சினைகள்

எதிர்ப்பு சக்தி தரும்

உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக்கி
வைரஸ் நோய் கிருமிகள் தடுப்பி

கொரோனா கஷாயம்

துளசிஇலை, ஓமவள்ளிதழை, நிலவேம்பு இலை மூன்றையும் சம பங்காய் எடுத்து, போதுமான தண்ணீரில் போட்டு ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூளும் சேர்த்து, கொதிக்கவைத்து பாதியாக சுண்ட வைத்து, இறக்கி ஆற விட்டு, பெரியவர்களுக்கு 30 மில்லி சிறுவர்சிறுமிகளுக்கு 15 மில்லி குடித்து வந்தால்,  கொரோனா கிட்டே வராதாம், நான் இப்போது இதனை குடித்துக்கொண்டிருக்கிறேன், இது ஒரு வாட்ஸ்அப் சிகிச்சை முறை.


துளசிச் செடியை எங்கு வளர்க்கலாம்  ?

v  துளசி மாடம்
v  வாசலின் இருபுறமும்
v  ஜன்னலின் வெளிப்புறம்
v  வீட்டின் பின்புறம்
v  மொட்டை மாடி
v  அப்பார்ட்மெண்ட்டுகள்


 துளசிச் செடிக்கு என்ன வேண்டும் ?

v  நல்ல சூரிய வெளிச்சம்.
v  ட்டமான மண்.
v  வடிகால் வசதியுள்ள மண்.
v  தட்டுப்பாடு இல்லாத கவனிப்பு.
v  தேவைப்படும் நீர்


துளசிக்கு தட்பவெப்பநிலை

v  வெப்பமண்டலப் பிரதேசங்கள்.
v  மிதவெப்ப மண்டலப் பகுதிகள்.
v  பனி கொட்டும் குளிர் பிரதேசங்கள் ஆகாது.

துளசி என்றால் என்ன ?

v  கோவில் பிரசாதம்.
v  வீட்டில் வணங்கும் தெய்வீக செடி.
v  நோய் கிருமிகளை தடுக்கும் ஏற்பாடு.
v  காத்து கருப்பு அண்டாது.
v  புத்துணர்ச்சி ஊட்டும்.
v  நறுமணம் கொண்டது.
v  பல்லாண்டு செடி.


துளசியின் வகைகள்

v  ஸ்ரீதுளசி இது பச்சை இருக்கும்.
v  கிருஷ்ணதுளசி இது ஊதா நிறத்தில் இருக்கும்.

பயிர் பெருக்க முறைகள்

v  செடிகளின் நுனித்தண்டினை நட்டு புதிய கன்றுகளை உற்பத்தி செய்யுங்கள்.
v  வளர்ந்த செடிகளில் இந்த நுனித்தண்டுகளை வெட்டி எடுங்கள்.
v  அதற்கு கூர்மையான கத்தியை பயன்படுத்துங்கள்.
v  இதனை அக்டோபர் நவம்பர் மாதங்களில் செய்யுங்கள்.
v  நுனித்தண்டில் 8 முதல் 10 ணுக்கள் விட்டு கத்தரியுங்கள்.
v  நுனித்தண்டின் நீளம் 10 முதல் 15 செ.மீ. நீளம் இருக்கணும்.
v  அதில் நான்கு () ஆறு இலைகள் மட்டும் இருக்கணும்.
v  இந்தத் தண்டுகளை பாலித்தீன் பைகளில் நடவு செய்யுங்கள். உயிர்தண்ணீர் ஊற்றுங்கள்.
v  பாலித்தீன் பைகளில் அதிக நீர் தேங்கக்கூடாது.
v  4 முதல் 6 வாரங்களில் வேர் பிடிக்கும்.
v  இப்போது புதிய செடிகளை எடுத்து வேறு பைகளில் நடலாம். தோட்டம் இருந்தால் தோட்டத்தில் நடலாம்.
v  செடிக்கு செடியும் வரிசைக்கு வரிசையும் 40 சென்டிமீட்டர் இடைவெளிவிட்டு நடலாம்

 விதைமூலம் கன்றுகள்

v  விதைகள் விதைக்க இடத்தை தயார் செய்யுங்கள்.
v  நன்கு உழுங்கள் அல்லது கொத்துங்கள்.
v  தொழுஉரம் குப்பைஉரம் அல்லது மண்புழுஉரம் போடுங்கள்.
v  மண்ணில் கல் ஓடுகள் கண்ணாடி துண்டுகள் இவை இல்லாமல் தயார் செய்யுங்கள்.
v  மண்ணை 40 சென்டி மீட்டர் ஆழத்திற்கு தயாரிக்க வேண்டும்.
v  மேட்டுப்பாத்தியாக ஏற்பாடு செய்வது நல்லது.
v  விதைகள் நுண்ணியதாக இருக்கும்.
v  ஒரு பங்கு விதையுடன் நான்கு பங்கு மணல் சேர்த்து விதைக்கவேண்டும்.
v  சீராக தண்ணீர் தெளித்து விடுங்கள்.
v  விதைத்த பிறகு ஒரு சதுர மீட்டருக்கு ஒன்றரை கிலோ தொழுவுரம் என்ற அளவில் குப்பை உரம் அல்லது மண்புழு உரம் சேர்க்கவேண்டும்.
v  கூடுமானவரை ரசாயன உரம் போடுவதை தவிருங்கள்.
v  மண்புழு உரம் அல்லது இதர இயற்கை உரங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
v  7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை உரம் இடலாம்.
v  மழைபெய்த அடுத்த நாளும் கண்டிப்பாக உரமிட வேண்டும்.

தண்ணீர் கொடுப்பது எப்படி ?

v  வளர்ச்சிப் பருவத்தில் வாரம் இரண்டு முறை தண்ணீர் தர வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை தந்தால் போதுமானது.
v  கோடையில் உலரவிடாமல் தரவேண்டும்.
v  மழைகாலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
v  கூடுதல் நீரை வடித்துவிட வேண்டும்

துளசி மாடம் எங்கு வைக்கலாம் ?

v  வடகிழக்கு திசையில் வைக்கணும்.
v  வேறு திசைகளில் வைக்கக்கூடாது
v  துளசிமாடம் வைக்கும் இடம்சுத்தமாக இருக்கவேண்டும்.
v  மொட்டை மாடியில் கூட வைக்கலாம்.
v  ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.
v  துளசி மாடத்தில் அகல் விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து வணங்கலாம்.
v  காம்பவுண்ட் சுவரின் மீது வைக்க்க்கூடாது.
v  பச்சை அல்லது கருந்துளசி வைக்கலாம்.
v  காலை அல்லது மாலையில் துளசி மாட்த்தை வணங்கலாம்.
v  காலையில் 6 மணிக்கு முன்னும் மாலையில் 6 மணிக்கு பிறகும் துளசி மாடத்தில் வணங்கலாம்.

துளசி மாடத்தில் நடவு செய்யும் முறை

v  துளசி மாடம் ஒன்றினை வாங்கிக்கொள்ளுங்கள்.
v  மண்பானை செய்பவர்களிடம் விற்பனைக்குக் கிடைக்கும்.
v  துளசி மாடத்தின் அடியில் நீர் வடிக்கும் துவாரம் இருக்கிறதா என்று பாருங்கள்.
v  துளசிமாடம் அமைக்க பெரிய மேடை அமைக்க வேண்டாம்.
v  துளசி மாடத்தின் உள்ளே தொட்டிச்செடி மண் கலவையை முக்கால் பாகம் நிரப்பவும்.
v  மண்ணின் நடுப்பகுதியில் இரண்டு துளசிச் செடிகளை நடவு செய்யுங்கள்.
v  நட்டபின்னர் உயிர் தண்ணீர் ஊற்றவும்.
v  துளசி மாடத்தில்  அகல்விளக்கு வைத்து வணங்கவும்.
v  ஆரம்பத்தில் வாரம் இரு முறை தண்ணீர் ஊற்றவும்.
v  அதன் பின்னர் வாரம் இரு முறை தண்ணீர் ஊற்றவும்.

குறிப்பு:

1. ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய விரும்புவோருக்கு வேறு தனியாக ஒரு பதிவில் செல்லுகிறேன்.

எழுதியவர்: தே. ஞான சூரிய பகவான் 





.




  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...