Tuesday, May 12, 2020

இஸ்ரேலியர்கள் உருவாக்கிய காடுகள் FOREST CREATED IN ISRAEL BY KKL- JNF





இஸ்ரேலியர்கள்

உருவாக்கிய காடுகள்


FOREST CREATED IN 

ISRAEL

BY KKL- JNF
 

கேகேஎல் - ஜேஎன்எஃப் மூலம் செய்யப்பட்ட செயற்கைக் காடுகளும் பராமரிப்பும்

யூதர்கள் சர்வதேச நிதியம்

கேகேஎல்- ஜேஎன்எஃப் (KKL-JNF), இது யூத மக்களுக்கான சர்வதேச அளவிலான ஒரு நிதியம், 1901 ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது, ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த அமைப்பு யூதர்களுக்கான சமூக மேம்பாட்டுக்காக சேவை செய்கிறது, உலகிலேயே ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்காக செயல்படும் அமைப்பு வேறு எதுவும் இல்லை

காடுகள் மேம்பாட்டிற்கான நோக்கங்கள்

நிலப்பரப்பை, மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ப்பின் மூலம் மேம்படுத்துதல், மரங்கள் அடர்ந்த சோலைகளில் பொது மக்களுக்கு விடுமுறை மற்றும் ஓய்வு நாட்களை மகிழ்ச்சியுடன்  கழிப்பதற்கான மையங்களை உருவாக்குதல்,  வனங்களை, சிற்றோடைகளை  நகரக்கழிவுகளிலிருந்து பாதுகாத்தல், மற்றும் பலப்படுத்துதல், பொது மக்களை மரம் நடுவதில் விருப்பத்துடன் ஈடுபடச்செய்தல், மரங்கள் மூலம் கிடைக்கும் காய்கள், கனிகள், இதர பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துதல், உள்ளூர் மரங்கள் மற்றும் தாவர வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு கேகேஎல்ஜேஎன்எஃப் தனது வன மேம்பாட்டுத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

காடுகள் உருவாக்கமும் பராமரிப்பும்

கேகேஎல்- ஜேஎன்எஃப் அமைப்பு இதுவரை இந்த மக்களுக்காக 240 மில்லியன்  மரங்களை நட்டுள்ளது, அது மட்டுமின்றி ஒரு லட்சம் ஏக்கர் இயற்கையான காடுகளை பரமரித்து வருகிறது, மத்திய தரைக்கடல் கிழக்கு பகுதியில் மிகப்பெரியதாக உள்ள செயற்கைக்காட்டினை உருவாக்கி உள்ளது  இந்த கேகேஎல்- ஜேஎன்எஃப் அமைப்புதான்

காடுகளில் சுற்றுலா மையங்கள்

இந்த செயற்கைக்காடுகளில் 1000 சுற்றுலா மையங்களை உருவாக்கி உள்ளார்கள், இந்த மையங்களுக்கு பல லட்சம் பயணிகள் தினம் தினம் வந்து போகிறார்கள், யூத இன மக்களின்  பாரம்பரியமான கலச்சாரத்தையும், அந்த நாட்டின் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதுதான் கேகேஎல் - ஜேஎன்எஃப்ன் முக்கிய குறிக்கோள்

காடுகளுக்கு ஊடாக சாலைகள்

இந்த செயற்கை காடுகளை பொதுமக்கள் பார்வையிடவும், அவற்றிற்கான தேவையை அவசியத்தை அவற்றை பாதுகாப்பதற்கான தங்கள் பொறுப்பினை உணரவும் வழி செய்ய, 7000 கி.மீ. நீளத்திற்கு சாலைகளை அமைத்துள்ளார்கள்.

எழுதியவர் : தி.ஞான சூரிய பகவான் 


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...