Monday, May 18, 2020

எறுழம் அரிதான மருத்துவ மரம் ERUZHAM RARE MEDICINAL TREE





எறுழம் அரிதான மருத்துவ மரம்
ERUZHAM RARE MEDICINAL TREE

வேறு தமிழ் பெயர்: வேலக்காய்
பொதுப்பெயர்: பயர் பிளேம் புஷ், ரெட் பெல் புஷ் (FIRE FLAME BUSH, RED BELL BUSH)
தாவரவியல் பெயர்: வுட்ஃபோர்டியா ஃபுரூடிகோசா (WOODFORDIA FRUTICOSA).

தாவரக்குடும்பம்: லித்ரேசியே (LYTHRACEAE)

பிறமொழிப்பெயர்கள்:

  • தெலுங்கு: ஜார்கி செரிங்கி
  • கன்னடம்: தமரா புஷ்பி
  • மலையாளம்: தத்திரி புஷ்பி
  • இந்தி: தவாய்
  • சமஸ்கிருதம்: பார்வதி

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகள் 

இதன் பூக்கள் குளிர் காலத்தில் பூக்கும், இதன் தண்டும் இலைகளும் நோய் தீர்க்கும் மருத்துவ பண்புகளைக் கொண்டது, இது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பசுமை மாறா காடுகளில் இருக்கும் ஒரு மரவகை என்கிறது தமிழ் இலக்கியம்.
 
பெருமழையை எதிர் நோக்கும் இந்த பூக்கள் நீல மணிகள் போல பூத்திருக்கும் அடர்ந்த புதர்களாய் இருக்கும், இவை மழை முடிந்ததும் இதன் பூக்கள் வெண்மையாக மாறி விடும் என்கிறது தமிழ் இலக்கியம் நற்றிணையின்  பாடல் ஒன்று.
 
வருமழைக்கு  எதிரிய மணிநிற இரும்புதல்
நரைநிறம் படுத்த நல் இணர்ந்து எறுழ்வீ ‘
(நற்றிணை 302 – 4-5)
நூறு பூக்களைத் தனது ஒரே பாடலில் பாடிய கபிலர் தனது பாடலில் எரிபுரை எறுழம் என்று ஏற்றிப் பாடுகிறார்.


பரவி இருக்கும் இடம் (DISTRIBUTION):

  • இந்தியாவின், வடகிழக்கு மாநிலங்கள்
  • தெற்கு கொங்கணம்
  • கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகள்
  • இமய மலையின் தாழ்வான பகுதிகள்
  • மடகாஸ்கர்
  • பாகிஸ்தான்
  • இலங்கை
  • உலகம் முழுக்க பரவலாக

மருத்துவப் பயன்கள் (MEDICINAL USES)

பழங்குடி மக்களின் பிரபலமான மூலிகை
மிகுதியாக தேவைப்படும் அருகிவரும் மூலிகைச்செடி
ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியமான மூலிகை

பலவிதமான நோய்களை குணப்படுத்தும்

  • கருத்தரிப்பு
  • மாதவிடாய் சீரின்மை
  • வயிற்றுப்போக்கு
  • சீதக்கழிச்சல்
  • இருமல், கபம், காசம்
  • சிறுநீர்க்கல், நீர்க்கட்டு
  • நீரிழிவு
  • புற்றுநோய்
  • மஞ்சள் காமாலை
  • மூலம்
  • மேகவெட்டை

சில முக்கிய மருத்துவ  குங்கள் 

  • பூ கசாயம் கருவாய் மற்றும் மலப்புழையின் தசைத் தளர்வை நீக்கும்.
  • பூக்களும் வேர்களும் முடக்கு வாதத்தை குணப்படுத்தும்.
  • முதுகுத்தண்டு மற்றும் விலாஎலும்பு முறிவை சரி செய்யும்.
  • வாய் மற்றும் கால் கோமாரி நோயை குணப்படுத்தும், இது மனிதர்களையும் பிராணிகளையும் தாக்கக் கூடிய ஒரு நோய், இது கொரோனா மாதிரியான சூனாட்டிக் நோய் (ZOONATIC DISEASE).
  • இதன் பூக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்
  • இதன் பூக்கள் இலைகள் பழங்கள் பிசின், வேர் ஆகியவை அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.


மரங்களின் இயல்பு (PROPERTIES):  

குறுமரம்.
5 மீட்டர் உயரம் வளரும்.
 
பூக்கள்

மிளகாய்ப் பழ சிவப்பு பூக்கள்
 ஒரு கொத்தில் 2 முதல் 16 பூக்கள்
வாயகன்ற ஊதுகுழல் மாதிரியான வடிவத்தில்
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வண்டி வண்டியாய் பூக்கும்
காய்கள் / கனிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை காய்க்கும்.

விதைகள்: 

மிகச்சிறியவை நுண்ணிய விதைகள்
ஏராளமான எண்ணீக்கையில் இருக்கும்
ண்ட பகுதிகளில், தரிசு நிலங்களில் மானாவாரியாக முளைத்து கிடக்கும்.

எறுழம் தல மரமாக உள்ள கோயில்கள்

  • சித்தாமூர் சிவன் கோயில், திருவாரூர் மாவட்டம்.
  • திருச்செங்காட்டங்குடி சிவன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
  • திருமலை சிவன் கோயில், சிவகங்கை மாவட்டம்
  • நாகமங்கலம் சிவன் கோவில், பெரம்பலூர் மாவட்டம்

வளர்ப்பு முறை (PROPAGATION):

  • விதை முளைப்புத் தன்மை மிகக்குறைவு.
  • 0.5 முதல் ஒரு சதம் வரை.
  • கிளைத் துண்டுகளை நடவு செய்வது சிறப்பு.
  • இதன் சாகுபடியை ஊக்குவிக்கிறார்கள்.
  • தமிழகத்தில் இதனை லாபகரமாகப் பயிரிடலாம்.

எழுதியவர்; ஞான சூரிய பகவான்  

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...