Monday, May 25, 2020

செருந்தி கோயில் தோட்டங்களுக்கு ஏற்ற மரம் CHERUNTHI SUITABLE FOR TEMPLE GARDENS





செருந்தி கோயில் தோட்டங்களுக்கு ஏற்ற மரம்
CHERUNTHI SUITABLE FOR TEMPLE GARDENS




எங்க கோவில்ல ஒரு தோட்டம் போடலாம்னு இருக்கோம், ஒரு பத்திருவது மரங்களை சொல்லுங்க சார், அப்படின்னு ஒருத்தர் தொலைபேசியில் என்னிடம் கேட்டார்,  அவர் ஒரு தொழில்நுட்ப பொறியாளர், நான் அவரிடம் ரெண்டு நாள் டைம் கொடுங்க, அப்படின்னு சொல்லிட்டு போனை வச்சுட்டேன், இப்ப அந்த மாதிரி கோவில்ல தோட்டம் போடறவுங்களுக்காக ஒரு பெரியபுராண பாடலை நான் சிபாரிசு செய்கிறேன், இந்த பாட்டுல பத்தொன்பது தாவரங்கள் இருக்கு, அதுல ‘செருந்தி’ யும் இருக்கு.

வன்னிகொன்றை வழை சண்பகம் ஆரம்
மலர்ப்ப லாசொடு செருந்திமங் தாரம்
கன்னி காரம்கு வம்கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்
துன்னு சாதிமரு மாலதி மவ்வல்
துதைந்த நந்திகரவீரம் மிடைந்த
பன்ம வாய்ப்புனித நந்த வனங்கள்
பணிந்து சென்றனன் மணம் கமழ் தாரான்
(பெரியபுராணம்தடுத்தாட்கொண்ட புராணம் - 167)

இந்த பாடலில் செருந்தி உட்பட பத்தொன்பது மரங்கள் மற்றும் தாவரங்கள் சொல்லப்பட்டுள்ளது, அந்த பட்டியலை இந்த கட்டுரையின் இறுதில் தந்துள்ளேன்.
888888888888888888888888888


வேறு தமிழ் பெயர்கள்

  • கல்குருவி
  • சிலந்தி

பொதுப்பெயர்

  • மிக்கி மவுஸ் பிளாண்ட்,
  • கொல்டன் சம்பக்,
  • ராம்தான் சம்பக்
  • (MICKY MOUSE PLANT, GOLDEN CHAMPAK, RAMDHAN CHAMPAK)


தாவரவியல் பெயர்: ஓச்னா ஸ்குவாரோசா (OCHNA SQUARROSA)
தாவரக்குடும்பம் : (OCHACEAE)


பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)

  • இந்தி : ராம்தான் சம்பா (RAMDHAN CHAMPA)
  • கன்னடம்:ராம்தானா சம்பகா (RAMATANA CHAMPAKA)
  • தெலுங்கு: சுனாரி (SUNARI)

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

  • பங்களாதேஷில் சிட்டகாங்.
  • வடகிழக்கு இந்திய மாநிலங்கள்.
  • ஆப்பிரிக்கா
  • மடகாஸ்கர் மஸ்காரின் தீவுகள்
  • ஆசியா பழங்கால வெப்பமண்டல பகுதிகள் (ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பா.
  • தமிழ்நாட்டில் பரவி இருக்கும் இடங்கள்
  • இந்தியாவில் பரவி இருக்கும் இடங்கள்
  • தமிழ்நாடு
  • உத்தர பிரதேசம்
  • பிஹார்
  • வெஸ்ட்பெங்கால்
  • திரிபுரா
  • மத்தியபிரதேசம்
  • கேரளா
  • ஆந்திரப்பிரதேசம்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • அஸ்ஸாம்
  • ஒரிசா
  • மேகாலயா
  • அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  • ஸ்ரீலங்கா
  • பங்களாதேஷ்
  • மியான்மர்
  • நேபாளம்-
  • ச்னா போட்டாபிட்டா (OCHNA JABOTABITA)என்னும் வகை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் ஒரு வகை செருந்தி மரம்.

ன்கள்: (USES)

  • வயல் வரப்புகளில் நடலாம்.
  • உயிர் வேலிக்கு ஏற்றது.
  • ராக்கார்டனில் (கல்லாங்கரடு தோட்டத்தில்) வைக்கலாம்.
  • காட்டுச் செடி தோட்டத்திற்கு ஏற்றது.
  • கடலோர மணலில் அமைக்கும் தோட்டத்தில் அழகுச் செடியாக நடலாம்.

மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING DISEASES)

  1. பங்களாதேஷ் நாட்டின் மிக முக்கியமான மூலிகை மரம்.
  2. பட்டைகள் வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.
  3. இலைகள் மாதவிடாயை சீர்செய்யும்.
  4. சேறல் என்னும் பழங்குடி மக்கள் இதன் வேரை பாம்பு கடியை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்
  5. ஆயுர்வேத மருத்துவத்தில் கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு இதில் மருந்து தயார் செய்கிறார்கள்.
  6. மாதவிடாய் பிரச்சனை.
  7. ஆஸ்துமா 


மரங்களின் இயல்பு (DESCRIPTION)

  1. ஒரு குறுமரம் அல்லது பெருஞ்செடி.
  2. பூ பூத்தால் காண இரவல் கண் வேண்டும்.
  3. பூக்கள் மஞ்சள் குளித்தமாதிரி இருக்கும்.
  4. அதிரடி வாசனையுள்ள பூக்கள். 
  5. இலையின் ஓரங்கள் அரிவாள் வாய் போல தோன்றும்.
  6. காய்கள் 6 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.
  7. பசுமையாக இருக்கும்.
  8. பழுத்து முதிர்ந்தால் கருப்பாக மாறும்.
  9. விதைகள் சுலபமாக முளைக்கும்.
  10. செடிகள் தாமதமாக வளரும்.
  11. விதைகள் கவர்ச்சிகரமானவை
  12. விதைமூடிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  13. பூவின் புறஇதழ்கள்தான் விதைகளுக்கு மூடியாக இருக்கும்.
  14. இந்த விதை மூடிகள்தான்பார்க்க மிக்கி மவுஸ் மாதிரி தோன்றும்.
  15. இதை வைத்துதான் இந்த மரங்களுக்கு மிக்கி மவுஸ் என்று பெயர் வைத்தார்கள்.
  16. விதைகள் பசுமையாகவும் முதிர்ந்தும் கருப்பாகவும் மாறிவிடும்.

தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )

திருப்பயத்தங்குடி முக்தீஸ்வரர் சிவன் ஆலயம், திருவாரூர் மாவட்டம்


வளர்ப்பு முறை: (PROPAGATION)

  1. விதைகளை சேகரித்து விதைக்கலாம்.
  2. மண்ணில் நல்ல வடிகால் வசதி வேண்டும்.
  3. அங்ககச் சத்து அதிகம் இருந்தால் இதற்கு மிகவும் பிடிக்கும்.
  4. நல்ல சூரியவெளிச்சம் வேண்டும்.
  5. சுமாரான நிழலை தாங்கும்
  6. சுமாரான வறட்சியையும்  தாங்கும்,
  7. பழங்களை அறுவடை செய்தபின் கவாத்து செய்யலாம்.

தமிழ் இலக்கியத்தில் செருந்தி

  • செருந்தி என்பதை நெட்டிகோரைஎன்று பட்டினப்பாலை சொல்லுகிறது. அதனை ஒரு புல் என்பது போல  அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.
  • பெண்கள் பறித்து வைத்து விளையாடும் பூக்கள் என்று 99 பூக்களை பட்டியல் போடுகிறது குறிஞ்சிப்பாட்டு.
  • அற்புதமான பாடலைப் பாடியவர் கபிலர் என்னும் பெரும்புலவர்.
  • பல சங்கநூல்கள் செருந்திபற்றிய கீழ்கண்டவாறு  பல செய்திகளை தந்துள்ளன.
  • செருந்தி மரங்கள் நீர்நிலை கரைகளில் வளரும்.
  • கடலோரங்களில் மணல் மேடுகளில் கூட வளரும்.
  • பூவின் இதழ்கள் சூரிய கதிர்கள் பொன்னிறமாய் பிரகாசிக்கும்.
  • பெண்கள் தனித்தும் தொடுத்தும் தலையில் அணிவர்.
  • ஆண்கள் மாலையாக்கி மார்பில் அணிவர்.
  • ஆண்பெண் என இருபாலரையும் மயக்கும் பூ என சங்கைலக்கியங்கள் மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப் படை, பட்டினப்பாலை, கலித்தொகை அகநானூறு, புறநானூறு, அத்தனையும் செருந்தியின் பெருமைபற்றி பேசுகின்றன.
8888888888888888888888888

ந்த பெரிய புராணப்பாடல் பரிந்துரை செய்யும் மரங்களின் பட்டியல்.

  1. வன்னி
  2. கொன்றை
  3. சுரபுண்ணை
  4. செண்பகம்
  5. சந்தனம்
  6. அரசு
  7. செருந்தி
  8. கோங்கு
  9. புன்னை
  10. முல்லைக்கொடி
  11. மந்தாரை
  12. வில்வம்
  13. மருக்கொழுந்து
  14. ஊசிமுல்லை
  15. மல்லிகை
  16. நந்தியாவட்டை
  17. அரளி
  18. மேலே இருக்கும் 19 துடன் இருபதாவது தாவரமாக  நான் சேர்க்க விரும்புவது, துளசி.

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான்
போன்: +91 8526195370

 
88888888888888888888888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...