‘விடத்தலை
என்னும் மருத்துவ மரம் - பகுதி 2
VIDATHTHALAI A MEDICINAL TREE - part 2
ஒரு இளம்பெண் வீதியில் எண்ணெய் விற்றுக்கொண்டு போகிறாள், எதிரே வருகிறான் அந்த நாட்டு அரசன், அவனும் இளைஞன், அவன் அவளிடம் ஒரு
விடுகதையை வேடிக்கையாக கூறுகிறான், அவளும்
சளைத்தவளில்லை பதிலுக்கு அவளும் ராஜாவுக்கு ஒரு விடுகதை போட்டு மிரட்டுகிறாள், அந்த விடுகதைகள்
இரண்டும் என்ன என்று தெரிந்து கொள்ள கட்டுரையை
படியுங்கள், காரணம் அந்த இரண்டு விடுகதைகளும் எனது கட்டுரையோடு
தொடர்புடையவை.
அரசன் விடுத்த விடுகதை இதுதான்,
‘எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த
எண்ணெய் வாணியப் பெண்ணே
எள்ளிலே சிறியஇலை என்ன இலை ?
வாணியப்பெண் அரசனுக்கு விடுத்த விடுகதை.
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
பூலோகம் ஆளும் ராசாவே
பூவிலே ஐந்துவிதமான பூ
என்ன பூ ?
இரண்டுக்கும் விடை ; 1. விடத்தேர் இலை 2. விடத்தேர்
பூ
விடத்தேர் மரத்தின் பூக்கள் முதலில் பச்சை நிறமாக அரும்பி, பின் மஞ்சளாக குங்கும நிறமாக, பின்
இளம் குங்கும நிறமாக கடைசியில் வெள்ளை நிறமாக மாறுவதால்
அதனை என ஐந்து விதமான
பூ என்றாள் அந்த வாணியப்பெண்.
‘விடத்தலை
என்னும் மருத்துவ மரம்’
வேறு தமிழ் பெயர்கள்:
- ஆனைத்தேர்
- வரித்துலா
- வெடுத்தலாம்
- வீரத்தரு
- விடத்தேரை
- பொதுப்பெயர் : சிக்கிள் பாபுல் ஆஷி பாபுல் (SICKLE BUSH ASHY BABOOL)
- தாவரவியல் பெயர்: டைக்ரோஸ்டேகிஸ் சினெரியா (DICHROSTACHYS CINEREA)
- தாவரக்குடும்பம் : மைமொசியேசி (MIMOSACEAE)
பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)
- மலையாளம் : வியரவிருக்க்ஷம் (VIRAVRIKSHAM)
- சமஸ்கிருதம்: வீரத்தரு (VIRATHARU)
- கன்னடம்: எடத்தாரி (EDATARI)
- தெலுங்கு: வேலுதுரு சேட்டு(VELUTURUCHETTU)
- இந்தி: கேரி (KHERI)
தாயகம்: இந்தியா, தெற்கு ஆசியா, ஆப்ரிக்கா, வடக்கு
ஆஸ்திரேலியா.
பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
- இந்தியா
- இலங்கை
- வடமேற்கு
- மத்திய
- தென்னிந்தியா
- ஆப்பிரிக்கா
- ஆஸ்திரேலியா
பயன்கள்: (USES)
- அடுப்புக்கு நல்ல விறகாகும்
- நோய்களுக்கு உரிய மருந்தாகும்
- கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாகும்
மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)
குணப்படுத்தும் நோய்கள் (CURING
DISEASES)
- வயிற்றுப்போக்கு
- செரியாமை
- வயிறு சம்பந்தமான உபாதைகள்
- யானைக்கால்
- உடலுறுப்பு வீக்கம் மற்றும் வலி
- வெள்ளைப்படுதல்
- மாதவிடாயின் மிகையான ரத்தப் பெருக்கு
மரங்களின் இயல்பு (DESCRIPTION)
- பெருஞ்செடி.
- அல்லது சிறுமரம்.
- அதிகபட்சம் ஆறு மீட்டர் உயரம் வளரும்.
- கவர்ச்சிகரமான பூக்களையுடையவை.
- பூக்கள் பாட்டில் பிரஷ் வடிவத்தில் இருக்கும்.
- பூவில் ஒரு பாதி ஊதா நிறத்திலும் மீதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
- ஏப்ரல் முதல் ஜூலை வரை பூக்கும்.
- ஆண்டு முழுவதும் காய்க்கும்.
- பூக்கள் நான்கு சென்டிமீட்டர் நீளம் இருக்கும்.
- நீண்டு மெலிந்த கனிகள்.
- ஒவ்வொறு கனியிலும் நான்கு முதல் ஆறு விதைகள் இருக்கும்.
விரும்பி வளரும் இடங்கள்.
- கடற்கரைகள்
- சமவெளிகள்
- புதர்க் காடுகள்
- வளமற்ற பூமி
- தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )
- குச்சனூர் சனீஸ்வரன் கோவில் சிவன் கோவில் தேனி மாவட்டம்
வளர்ப்பு முறை:
(PROPAGATION)
- வளர்ந்த ஒரு மரம் ஒரு ஆண்டில் பத்துலட்சம் விதைகளை உற்பத்தி செய்யும்.
- கனிகள் கனிந்தவுடன் விதைகளை சேகரிக்க வேண்டும்.
- புதிய கனிகளில் உடன் விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.
- ஒரு கிலோவுக்கு 39 ஆயிரம் முதல் 67,000 விதைகள் வரை இருக்கும்.
- 10 ஆண்டுகள் முளைப்புத்திறன் நீடிக்கும்.
- சேகரித்த ஒரு வாரத்திற்குள் விதைத்தால் 75 சதம் வரை முளைப்புத்திறன் இருக்கும்.
- புது விதைகள் நான்கு முதல் ஏழு நாட்களில் முளைக்கும்.
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான்
Photographs: Kayaththaru, Down South of Tamilnadu, India
FOR FURTHER READING:
1.www.inithal.blogspot.com / 2013 - vidather
2. www.books.google.in/ propagation of Dichrotostachys cinera 1. Handbook of Botswana Acacias By Jonathan Timberlake 2. Acacia Handbook - Growing and Managing Acacias in South Central Africa 3. Medicinal Plants of India 4. Plant Gum Exudates of the World By Amos Nussino
3. Koyil Thalangalum Thalaththavarangaum By Ira.Panchavarnam
Photographs: Kayaththaru, Down South of Tamilnadu, India
FOR FURTHER READING:
1.www.inithal.blogspot.com / 2013 - vidather
2. www.books.google.in/ propagation of Dichrotostachys cinera 1. Handbook of Botswana Acacias By Jonathan Timberlake 2. Acacia Handbook - Growing and Managing Acacias in South Central Africa 3. Medicinal Plants of India 4. Plant Gum Exudates of the World By Amos Nussino
3. Koyil Thalangalum Thalaththavarangaum By Ira.Panchavarnam
No comments:
Post a Comment