சீமை கருவை
ஒரு தொழில் மரமாக
மாறும் அதிசயம்
– பகுதி 2
SEEMAI KARUVAI AN INDUSTRIAL TREE - PART 2
சீமைகருவை நெற்றுக்களின் மாவினை, குமட்டிக்காய் பிண்ணாக்கு
, கொத்தவரங்காய் பிசின், எள் பிண்ணாக்கு, கோதுமை தவிடு, மக்காச்சோளம் ஆகியவற்றை சேர்த்து வெற்றிகரமாக ஒரு அடர் தீவனத்தை
தயாரித்து பயன்படுத்தப்பட்டது. மலிவாக தயாரிக்கப்பட்ட அந்த அடர் தீவனத்தை விவசாயிகள் விரும்பி
வாங்கி பயன் படுத்தினார்கள்.
கொத்தவரங்காய்க்கு இணையாக சீமை கருவை நெற்றுகளில் கீழ்க்கண்டவாறு சத்துக்கள்
அடங்கியுள்ளது. புரதச்சத்தும் மாவுச்சத்தும் ஏறத்தாழ
சீமக்கருவை கொட்டைகளில் சம்மாய் உள்ளது. இவை தவிர தாது உப்புக்களும்
அடங்கியுள்ளன.
சீமக்கருவை
கொட்டைகளில்
உள்ள சத்துக்கள்
ஈதர் எக்ஸ்ட்ராக்ட்
– 8.3 %
கச்சாப்புரதம்
– 44 %
மொத்த மாவுச்த்துக்கள் – 44.9 %
சீமைக்கருவை
விதைகளில்
தயாரிக்கும் காப்பி
இன்னும் சில
நாட்களில் சீமைக்கருவேல் விதையில் தயாரிக்கப்பட்ட காப்பி வரப்போகிறது. அதற்கு ஜூலி காபி என்ற பெயர்கூட வைத்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச
நாட்களில் கிராமத்து தாய்மார்கள் ஜூலி காபி பொடி தயார் செய்துவிடுவார்கள்.
சீமைக்கருவை
நெற்றுக்களில்
தயாரிக்கும் பழரசம்
கோக் பெப்சி ஃபேன்ட்டா மாதிரி குளிர் பானங்கள் வரப்போகின்றது.தெ அமெரிக்க நாடுகளில் பல
ஆண்டுகளாக சீமைக்கருவை பழரசத்தை பருகி வருகிறார்கள்.
சீமைக்கருவை
பிசின்களில்
தயாரிக்கும் மிட்டாய்கள்
மரங்களின் பிசின்கள் பல ஆண்டுகளாக மிட்டாய் தொழிற்சாலைகள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள்,
அச்சுத்தொழில், உணவு தொழிற்சாலைகள் என பலவகைகளிலும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பிசினை அரபிக்கம் அல்லது கம் அரபிக்
என்றும் சொல்லுகிறார்கள். குறிப்பாக வேலமரங்களிலிருந்து எடுக்கும்
பிசினை அரபிக் கம் என்று சொல்லுகிறார்கள். தொழிற்சாலை ரீதியில்
சொல்வதென்றால் பலவகையான மரங்களிலிருந்து எடுக்கும் பிசின்களின் கலவைதான் இந்த அரபிக்
கம். ஆக அரபிக் கம் என்பது சீமைக்கருவை பிசினும் கலந்ததுதான்.
சீமைக்கருவை பிசினும் கலந்து செய்த மிட்டாய்களை ஜூலி மிட்டாய் என்று அழைக்கிறார்கள்.
இந்த மரப்பிசினை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி
வருகிறார்கள்.
சீமைக்கருவை
இந்தியாவின்
தலை சிறந்த
விறகுமரம்
இந்தியாவின் வறண்ட பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு 75 சதவீத குடும்பங்களில் இன்னும் கூட சமைக்க சீமைக்கருவை விறகைத்தான் பயன்படுத்துகிறார்கள். ரோஸ்வுட்டுக்கு சமமான தரம் உடையது. இந்த மரங்களின்
உலரும் அளவு 4.17 சதம் மட்டுமே. இது ஓக், மேப்பிள், மற்றும் வால்நட் மரங்களை விட
மிகவும் குறைவு. இவற்றின் சுருங்கும் அளவு 14 முதல் 16 சதம் மட்டுமே. மரச்சாமான்கள்
தயாரிக்க அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் அதை பற்றி
விழிப்புணர்வு நமக்கு இல்லை என்பதுதான். பல நாடுகளில் அதிக அளவில் இதனைப்
பயன்படுத்துகிறார்கள். காகிதம் தயாரிக்கலாம். இந்த மரத்தில் மரக்குழம்பு
தயார்செய்து, எழுதவும் அச்சகத்தில் பயன்படுத்தும் காகிதங்களும் தயாரிக்கலாம். நெசவுத் தொழிற்சாலைக்கு உதவும் வகையில் இழைகள் என்று சொல்லக்கூடிய நூல்களை தயாரிக்கலாம்.
பயோமாஸ் என்னும்
பசுமைப் பொருள்
வெயில் மழை
வறட்சி எதையும் பார்க்காமல் ஏகப்பட்ட பசுமை பொருளை உற்பத்தி செய்வதில் பலே
கில்லாடி சீமைகருவேல். வெட்டிக்கூட பார் மறுபடியும் துளிர்த்தெழுவேன்
என்று
வீர வசனம் பேசும் மரம் சீமைக் கருவை. வறண்ட பிரதேசங்களில் வளரும் மரங்கள் அனைத்தையும் பயோமாஸ் உற்பத்தி செய்யும் அளவின் அடிப்படையில் வரிசையாக நிற்க வையுங்கள். அதில் முதலில்
நிற்கும் தகுதி உடையது
வேலிக்கருவைதான்.
சீமைக்கருவை
ஒரு பஞ்ச்ம்தாங்கி
மரம்
2012ஆம் ஆண்டு இந்தியா முழுக்க வறண்ட பகுதிகளை எல்லாம் வறட்சி வாட்டி வதைத்த்து. அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தது சீமைக்கருவைதான் என குறிப்பிடுகிறார் ஜேசி திவாகர் அவர்கள். பரந்த நிலப்பரப்பில் தொகுப்புகளாக தென் படும் இடங்களில் எல்லாம்
இந்த மரங்களை பயன்படுத்தி மின்சாரம் எடுக்கலாம். பிசின் உற்பத்தி இந்தியாவில் உற்பத்தி அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது இந்த மரங்கள்தான். குஜராத் மாநிலம்
பிசின் உற்பத்தியில் இந்தியாவில் முக்கிய
பங்கு வகிக்கிறது. இங்கு தயாராகும் பிசின் உற்பத்தியில் 80%
சீமைகருவேல் மரங்கள் இருந்து சேகரிப்பது தான்.
சீமைக்கருவை
ஒரு மூலிகை
மரமும்கூட
இதன் மரத்துண்டுகள் மற்றும் பட்டைகளில்
இருந்து எடுக்கப்படும் சாற்றினை காயங்களை குணப்படுத்த பயன்படுத்தலாம். கண் உபாதைகளை நீக்க இதன் பிசின் ஏற்றது. இதன் மரத்தில்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இதன் பெயர் மெஸ்கிட்டால். வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவு, மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் ஏற்படும்
நோய்களை குணப்படுத்தும் சக்தி சீமைக்கருவைக்குஉள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில்
பாலுணர்வு தூண்டியாக, சளித்தொல்லை நீக்கியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். தேநீரில் கலந்து இதை சாப்பிடுவதால்
ஜீரணத்தை மேம்படுத்துகிறது. தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது.
சீமைக்கருவேல்
சேமிக்கும் கார்பனை
கணக்கிடவேண்டும்
சீமைக்கருவேல் சேமிக்கும் கார்பன் எவ்வளவு
என்று கணக்கிடவேண்டும். வறண்ட பகுதிகளில் வளரும் இந்த மரங்கள் கணிசமானளவு கார்பனை தனது
மரங்களில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. பொதுவாக
வறண்ட பகுதிகளில் மரங்கள் சேமிக்கப்படும்
கார்பனின் அளவு மிகவும் குறைவு. இனி வறண்ட பிரதேசங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் கார்பன்
சேமிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார் திவாரி அவர்கள்.
சீமைக்கருவேல்
பிரச்சினை நிலங்களை
சீர் செய்கிறது
உப்பு நிறைந்த
பிரச்சனையான மண் கண்டங்களைகூட, அவற்றில் உதிரும் சீமைக்கருவையின்
இலைகள் அங்ககச் சத்தினை அதிகரித்து அவற்றை
சீர்திருத்துகின்றன. சோடியம் உப்புள்ள மண் கண்டத்தை பயிர்கள் சாகுபடி செய்யும் பண்புள்ள நிலமாக மாற்றி
விடும். சீர்திருத்திகள் இல்லாமலேயே உப்பு நிலங்களை மாற்றும் மகிமை உடையன சீமைகருவேல் மரங்கள்.
சீமைக்கருவேல்
பாலைவனங்கள்
பெருகுவதைத் தடுக்கிறது
பாலைவனம் ஆவ
என்பது சர்வதேச பிரச்சனை. இதற்குக் கைகண்ட மருந்து சீமைக்கருவேல். சீமைகருவேல்
மற்றும் இதே வகையைச் சேர்ந்த இன்னொரு மரத்தையும் சேர்த்து காற்றுத்தடுப்பானாக பயன்படுத்தப்பட்ட்து. இவை காற்றின் வேகத்தை கணிசமாக குறைத்தன. மண் அரிப்பையும் தடுத்தன. நீர் ஆவியாவதை தடுத்தன. காற்றின் வேகத்தில் 36 சதவீதம் வரை சீமைக்கருவைமரங்கள் கட்டுப்படுத்துகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சீமைக்கருவேல் மரங்களால் அமைக்கப்படும் காற்று தடுப்பான்களால் பலநாடுகளில் பாலைவன்ங்கள்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பல்தொழில் பெருக்கும்
புதிய தொழிசாலை மரம்,
தேன்,
சப்பாத்தி மாவு, ஜாம்ஜெல்லி, காப்பித்தூள், மிட்டாய்கள், மருந்து
மாத்திரைகள், காகிதங்கள் அட்டைகள், மின்சாரம்,
பிசின், இப்படி பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு கச்சாப்பொருட்களை மலிவாக தருவதற்கு
தயார் நான் தயார் என்கிறது சீமைக்கருவை.
.
எழுதியவர் : தே. ஞான சூரிய பகவான்
No comments:
Post a Comment