Sunday, May 31, 2020

கஸ்தூரி வேலம் எனும் வாசனை வேலமரம் - KASTHURI VELAM SWEET FRAGRANT TREE





கஸ்தூரி வேலம் எனும் வாசனை வேலமரம்
KASTHURI VELAM SWEET FRAGRANT TREE

  • பொதுப்பெயர் :பெர்பியும்டு வாட்டில், ஸ்வீட் அகேசியா, அயன்வுட், ஹனிபால், நீடில்புஷ், ஃப்ராக்ரண்ட் அகேசியா (PERFUMED WATTLE,SWEET ACACIA, IRON WOOD, HONEY BALL, NEEDLE BUSH, FRAGRANT ACACIA)
  • தாவரவியல் பெயர்: அகேசியா  ஃபெர்னீசியானா (ACACIA FERNESIANA)
  • தாவரக்குடும்பம் : மைமோசியேசி (MIMOSACEAE)
  • தாயகம்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா

பிறமொழிப்பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES)

  • வேறு தமிழ் பெயர்கள்: வாடைவள்ளி
  • மலையாளம் : கஸ்தூரி வேலம் (KASTHURI VELAM)
  • கன்னடம்: கரி கஸ்தூரி (KARI KASTHURI)
  • தெலுங்கு:கஸ்தூரி தும்மா (KASTHURI THUMMA)
  • பெங்காலி:பிலாட்டி பா பாலா (BILATI BA BALA)
  • இந்தி: துரகந்த் காய்ர் (BILATI BA BALA)

பரவியிருக்கும் இடங்கள் (DISTRIBUTION)
இந்தியா

  1. வெப்ப மண்டல அமெரிக்கா
  2. கரீபியன்
  3. கயானா
  4. தென் அமெரிக்கா
  5. ஆஸ்திரேலியா
  6. ஆப்பிரிக்கா
  7. ஐரோப்பா
  8. ஆசியா
  9. வட அமெரிக்கா
  10. மிடில் ஈஸ்ட்
  11. பிலிப்பைன்ஸ்

ன்கள்: (USES)

1.    பூக்களிலிருந்து தயாரிக்கும் வாசனைப் பொருட்களுக்கு கேசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
2.   இதிலிருந்தும் காங்கிரீட் என்னும் வாசனைப் பொருள் தயாரிக்கிறார்கள்.
3.   ரோஜாப்பூ போல இதுவும்  கட்பிளவர்ஸ் தருகிறது.
4.    பூவுடன் கூடிய ஒரு நீளமான கிளையுடன் வெட்டி விற்பதுதான் கட் பிளவர்ஸ்.
5.    கேசி கட் பிளவர்ஸ் உலகம் முழுவதும் பிரபலமானவை.
6.    ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு இதன் விதைகள் உணவாகிறது.
7.    முளைவிட்ட விதைகளை காய்கறிபோல சமைத்து சாப்பிடுகிறார்கள்.
8.    பல நாடுகளில் இதனை தீவனமாகப் பயன் படுத்துகிறார்கள்.
9.    மிக அதிகமான தேனீக்களை கவரும் மரங்களில்  கஸ்தூரி வேல மரமும் ஒன்று.
10.  இந்தியாவில் இதன் வேர் மற்றும் நெற்றுக்களில் எடுக்கும் பிசின் அரபிக்கம்’  என்னும் சர்வதேச பிசினுக்கு இணையானது.
11. உலகம் முழுக்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அழகிய மரம்.
12.  எகிப்து இஸ்ரேல் ஜாவா ஆகிய இடங்களில் அழகு மரமாக நடுகிறார்கள். இந்தியா ஈரான் மத்திய தரைக்கடல் நாடுகளில் வேலிகளிலும் காற்றுத்தடுப்பு  வரிசைகளிலும் அதிகம் நடுகிறார்கள்.
13.  கருவேல மரத்தைப் போலவே கப்பல் கட்ட, பண்ணை கருவிகள் கருவிகள், கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்ய, மேஜை நாற்காலி போன்றவை செய்ய பயன்படுகிறது.
14.  இந்தியாவில் அதிகமாக பயன்படுவது இந்த மரத்தின் குச்சிகள் தான், பல் துலக் பயன்படுத்துகிறோம்.
15.   அமெரிக்காவில் இந்த மரத்தை அதிகம் விறகாக உபயோகிக்கிறார்கள். 
16.  பூக்களின் வாசனை பொருட்கள் தயாரிக்கலாம்
17.  பிசின் மற்றும் பட்டை களில் இருக்கும் டேனின் மூலம் தோல் பதனிடலாம்.
18.  விதைகள் பறவைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கு உணவாகிறது.
19.  இலைகள், பட்டைகள், வேர்கள் ஆகியவற்றை  பாரம்பரிய மருந்துகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.


மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)

உலகம் முழுக்க இதனை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.மரத்தின் இலைகள், வேர், பட்டை, பூ, காய்கனி அத்தனையும் மருந்தாக பயன்படும். கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.
4.    
உலகம் முழுக்க இதனை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
மரத்தின் இலைகள், வேர், பட்டை, பூ, காய்கனி அத்தனையும் மருந்தாக பயன்படும்.

கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்.

  1. மலேரியா
  2. தோல் நோய்கள்
  3. இருமல்
  4. ஈறுகளில் ரத்தக் கசிவு
  5. குமட்ல்
  6. குடலிறக்கம்
  7. வெள்ளைப்படுதல்
  8. காயம் மற்றும் புண்கள்
  9. தொழுநோய்
  10. மேக வெட்டை
  11. சிறுநீர்ப்பை நோய்கள்
  12. வயிற்று உபாதைகள்
  13. தலைவலி

    
மரங்களின் இயல்பு (DESCRIPTION)

  • மரங்கள் 10 மீட்டர் உயரம் வளரும்.
  • சிம்புகளில் நிறைய முட்கள் இருக்கும்.
  • பூக்களும் இலைக்கணுக்களில் தோன்றும்.
  • இரண்டு அல்லது மூன்று பூக்கள் பூக்கும்.
  • பூக்கள் கவர்ச்சிகரமான மஞ்சள் நிறமானவை.
  • 2 மில்லிமீட்டர் குறுக்களவு உடையவை.  
  • நெற்றுக்கள் 5 சென்டி மீட்டர் நீளமானவை.
  • ஒவ்வொரு நெற்றிலும் இருபது விதைகள் இருக்கும்.
  • செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும்.
  • அக்டோபர் மாத்திலிருந்து காய்க்கும்.
  • பசுமை மாறாத குறுமரம்.
  • ஒவ்வொரு ணுவிலும் ஒரு ஜோடி கூர்மையான முட்கள் இருக்கும். (வேல மரத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அது போல இருக்கும்.)

தல மரமாக உள்ள கோயில்கள் (TEMPLES WITH THIS STHALAVRISHAM )
Ø  நாகர்கோவில் நாகராஜர் சிவன் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்

வளர்ப்பு முறை: (PROPAGATION
1.    கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 900 மீட்டர் உயரம் வரை  வளரும். விதைகளின் முளைப்புத்திறன் 60 முதல் 70 சதம் இருக்கும்.
2.    மரங்கள் நாலரை மீட்டர் உயரம் வளரும்.
3.    இந்தியாவில் எல்லா பகுதியிலும் வளரக் கூடியவை.
4.    இதற்கு இந்தியா சொந்த நாடு போல ஆகிவிட்டது.
5.    பூக்கள் இளமஞ்சள் நிறமாக இருக்கும்.
6.    நாசிக்குப் பிடித்தமான வாசனையுடன் இருக்கும்.
7.    நெற்றுக்கள்  ஐந்து முதல் ஏழரை சென்டிமீட்டர் நீளமாக இருக்கும்.
8.    இளங்காவி நிறமாக இருக்கும்.
9.    இதன் விதைகள் ஒருகிலோ பாக்கெட்டில் விற்பனையாகிறது.
10.  உங்கள் விதை தேவைக்கு இண்டியாமார்ட்’ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
11.  வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் தற்போது மரவிதை விற்பனையில் இறங்கியுள்ளன.

விதைகள் எங்கு கிடைக்கும் ?

  • மரவிதைகள் கூட ஆன் லைனில் கிடைக்கின்றன.
  • இதன் விதைகள் ஆன்லனில் விற்பனைக்கு கிடைக்கிறது.
  • ஒரு கிலோ பாக்கெட்டில் விற்பனையாகிறது.
  • உங்கள் விதைத் தேவைக்கு ‘இந்தியாமார்ட்’ ஐ தொடர்பு கொள்ளலாம்.
  • www.indiamart.com / Acacia fernisiana

FOR FUTHER READING
www.uses.plantnet.org / Acacia fernisiana
www.indiamart.com.org / Acacia fernisiana
www.en.wikipedia.com / Acacia fernisiana

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், போன்: +91 8526195370  

Saturday, May 30, 2020

வெட்டுக்கிளி ரொம்ப கெட்டகிளி SERATONIN MAKES GRASSHOPPERS ARROGANT






வெட்டுக்கிளி ரொம்ப கெட்டகிளி
SERATONIN MAKES GRASSHOPPERS ARROGANT

1955 இல் வைரஸ்பற்றி அறிவியலின் எட்டாவது கவலை என்று எழுதினார் சுஜாதா அவர்கள், இப்போது இந்தியா கொரோனா லாக்டவுனில் இருக்கும்போது, வெட்டுக்கிளிகள் ஒன்பதாவது கவலையாகியுள்ளது, இப்போது அந்த கவலை ராஜஸ்தான் குஜராத் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா வழியாக  சுற்றியபடி தமிழ்நாட்டுக்கும்  வரும் என்கிறார்கள் சிலர், வராது என்கிறார்கள் சிலர். புல்லைக்கூட கடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி நம் தோட்டத்தில்   உட்கார்ந்திருக்கும் வெட்டுக்கிளியும் சர்வதேச அளவில் வேட்டை நடத்தும் லோகஸ்ட்டும் ஒன்றா வேறுவேறா ? அதுதான் இந்த கட்டுரை சொல்லும் சேதி !

வெட்டுக்கிளிகள் தத்திதத்தி செல்லுவதால் அவை தத்துக்கிளிகள்,  வசிக்கும் சூழலில் இருக்கும் பயிர்கள் மற்றும் தவரங்களின்  பூக்கள் காய்கள் கனிகள் என்று எல்லாவற்றையும் வெட்டிவெட்டி  சாப்பிடுவதால் அவை வெட்டுக்கிளிகள்

நாம் தோட்டத்தில், வயலில், செடியில், கொடியில், மரத்தில், இப்படி வெட்டுக்கிளிகள் பச்சை, மஞ்சள், காவி, சாம்பல் என பல நிறங்களில் பார்க்கிறோம், அந்த சாதுவான வெட்டுக்கிளிகளும் லோகஸ்ட் ன்பதும் ஒன்றா வேறுவேறா என்பது நிறையபேரின் சந்தேகம்.

இப்படி நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் தாண்டிவரும் வெட்டுக்கிளிகளை பாலைவன வெட்டுக்கிளிகள் என்று சொல்கிறார்கள், இவை கூட்டம் கூட்டமாகத்தான் தன் படையெடுப்பு தொடங்கும். இதனை ஆங்கிலத்தில் சுவார்ம்என்று சொல்லுகிறார்கள்,

இவை கூட்டம் கூட்டமாக நாளொன்றுக்கு நூறு முதல் நூத்தியம்பது கிலோமீட்டர் வரை பறந்து சென்று பயிர்களையும், பார்க்கும் தாவரங்களையும் சுத்தமாய் தின்று தீர்த்துவிடும்.


எட்டாயிரம் வகை வெட்டுக்கிளிகள்

1920 ஆம் ஆண்டு வாக்கில்தான் கிராசாப்பர் என்பதும் லோகஸ்ட் என்பதும் வேறு வேறு அல்ல என்று கண்டுபிடித்தார்கள். அவை இரண்டும் ஒன்றுதான், வெட்டுக்கிளிகள்தான் லோகஸ்ட்டாக மாறுகின்றன.

உலகில் மொத்தம், 8000 கை வெட்டுக்கிளிகள் இருக்கின்றன, இதில் பன்னிரண்டு வகைகள் மட்டுமே இப்படி விசுவரூபம் எடுத்து விவகாரம் செய்யும்லோகஸ்ட்டாக மாறுகின்றன, இப்போது பிரச்சினை செய்யும் பாலைவன வெட்டுக்கிளியின் அறிவியல் பெயர் சிஸ்டோசெர்கா கிரிகேரியா (SCHISTOCERCA GREGARIA).

வெட்டுக்கிளிகளில் முட்டைப்பருவம் 65 நாட்கள், பறக்க முடியா குஞ்சுப் பருவம் 24 முதல் 95 நாட்கள், அதன்பிறகு இரண்டு முதல் இரண்டரை மாதங்கள் பறக்கும் வெட்டுக்கிளியாய் பவனி வரும்.

லோகஸ்ட் ஆராய்ச்சி நிலையம்

லோகஸ்ட் எப்போது வரும் ? எப்படி வரும் ? அதன் அளவு எப்படி இருக்கும் ? எப்படி அதை கட்டுப்படுத்த முடியும் ? என்பதை கண்டுபிடித்து  சொல் ஒரு ஆராய்ச்சி நிலையம் ராஜஸ்தானில் ஜோத்பூரில் இருக்கிறது.

இந்த லோகஸ்ட்டுகளிடம் இதை சாப்பிடாதே, அதை சாப்பிடு என்றெல்லாம் சொல்லமுடியாது, பயிர்கள் மற்றும் தாவரங்களில் இலை மொட்டு பூ பிஞ்சு காய் கனிகள் விதைகள் பட்டைகள் என்று எதையும் விட்டு விடாமல் மொட்டை அடித்து விடும்.
 
சராசரியாக ஒரு சுவார்ம் வெட்டுகிளிகள் எவ்வளவு சாப்பிடும் ? ஒரு நாளில் பத்து யானைங்க, இருவத்தியஞ்சு ஒட்டகம், இரண்டாயிரத்து ஐனூறு மனுஷங்க சேர்ந்து எவ்வளவு சாப்பிடுவார்களோ அவ்வளவு சாப்பிடுமாம், ஒரு வெட்டுக்கிளி கூட்டம்.


வெட்டுகிளியின் மூளையில் சுரக்கும் செரடோனின்

எது எப்படி இருந்தாலும் வெட்டுக்கிளிகள் கெட்டகிளிகளாக எப்படி மாறுகின்றன என்று பார்ப்போம், அறிவியல் ரீதியான சில சமாசாரங்களை நாம் பார்க்கலாம்,ட்சியான சூழல் வந்தால் போதும் ஒவ்வொரு வெட்டுக்கிளியின் காதிலும் ஒரு செய்தி வந்து ஒலிக்கும்.
 
வெட்டுக்கிளியே வெட்டுக்கிளியே, இனி தனித்து இருக்காதே, கூட்டத்தில் சேரு, படையாக மாறு, பயிர்களை தாவரங்களை சாப்பிடு, பச்சையாக பார்த்த்தை எல்லாம்  சாப்பிடு, திரை கடலோடியும் தீவிரமாய் சாப்பிடு
சாதுவாக இருக்கும் வெட்டுக்கிளிகளின் மூளையில் இந்த செய்தியைச் சொல்லுவது செரடோனின் (SERATONIN) என்னும் ரசாயனம், நேற்றுவரை சாதுவாக இருந்த வெட்டுக்கிளிகள் முரட்டுத்தனமான லோகஸ்ட் ஆக மாறுவதற்கு காரணம் இந்த  செரடோனின் என்ற ரசாயனம் என்கிறது அறிவியல்.

அப்போதுதான் வெட்டுக்கிளிகள் கூட்டுக் குடும்பம் தொடங்கும், இதுதான் கிரிகேரியஸ் பேஸ் (GREGARIOUS PHASE). புல்லில் தனித்தனியாக உட்கார்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளின்  வாழ்க்கைதான் சாலிட்டரி பேஸ் (SOLITARY PHASE) என்பது

சிலர் தனியாக இருக்கும்போது தங்கமாய் இருப்பார்கள், ஆனால் பத்திருபது சேர்ந்தால் படு பாதகம் செய்ய அஞ்சமாட்டார்கள், அது போலத்தான் செரடோனின் ஹார்மோன்சேருவதற்கு முன் வெட்டுக்கிளி, சுரந்தபின் லோகஸ்ட்

செரடோனின் மனிதர்கள் மூளையிலும் இருக்கும், பிராணிகளின் மூளையிலும் இருக்கும், இந்த செரடோனின்தான் மனிதர்கள் மற்றும் பிறாணிகளின்   குணநலன்களை தீர்மானிப்பது. வெட்டுக்கிளிகளின் மூளையில் இருப்பதைப்போல மூன்றுமடங்கு லோகஸ்ட்களின் மூளைகளில் செரடோனின் அதிகம் இருக்குமாம். வெட்டுக்கிளிகளை கெட்ட கிளிகளாக மாற்றுவது இந்த செரடோனின்தான்.

செரடோனின் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் ?

  1. உடலில் முரட்டுத்தனத்தை ஏற்படுத்துகிறது.
  2. உடல் உறுப்புகளின் அளவு அதிகரிக்கிறது.
  3. உடலின் நிறம் மாறுகிறது.
  4. நீண்ட தொலைவு பறக்கும் சக்தி பெறுகிறது.
  5. கூட்டமாக வசிக்கும் மனமாற்றம் பெறுகிறது.
  6. சாப்பிடும் அளவு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

ட்சிக்கு பின்னால் வரும் மழைதான் ப்படி வெட்டுக்கிளிகளின் உடலில் இந்த செரடோனின் சுரக்க வழி செய்கிறது என்கிறார்கள். சுவார்ம் என்னும் கூட்டமாக உருவாக காரணமாக இருப்பது இந்த செரடோனின்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


சுவார்ம் என்றால் எவ்வளவு ?

1897 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுத்து இருக்காங்க, ‘சுவார்ம்ன்னா எவ்வளவுன்னு, அது ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர மைல் பரப்பு  இருந்ததாம், இந்த கணக்கு பிரகாரம் ஒரு சுவார்ம் தமிழ்நாட்டை அரை நாளில் மேய்ந்துவிடும்.டெல்லியை மேய அரைநாள்கூட ஆகாது. இது ஒரு பெரியசுவார்ம்என்று நினைக்கிறேன்.
 
ஆனால் லோக்கஸ்ட் அட்டாக் என்பது நமக்கு புதிதல்ல, 1812 ம் ஆண்டிலிருந்து  தொடர்கதைதான், ஆனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ராஜஸ்தானில் பிள்ளயார்சுழி போட்டுள்ளது, ஒருமுறை இந்த வெட்டுக்கிளி சும்மா வந்துட்டு பொனாலே இரண்டுகோடி ரூபாய்  இழப்பு ஏற்படுமாம்

இது நாள் வரை ராஜஸ்தானை மட்டும் குறிவைத்த லோகஸ்ட்டுகள் தாக்குதல் தற்போது குஜராத் மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா வரை நீண்டுள்ளது, அடுத்து ஒரு எட்டு வைத்தால் தமிழ்நாடுதான் என்கிறார்கள்.

சரி இதனை கட்டுப்படுத்த என்னதான் வழி ?
காய்ந்த மிளகாய் மிளாறுகள்

தயவுசெஞ்சி இயற்கை பூச்கிக்கொல்லி மருந்து ‘’பயொபெஸ்டிசைட் தெளியுங்க, அதுதான் பாதுகாப்பு,  நச்சு இல்லாதது என்று சொல்லுகிறது, உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FOOD AND AGRICULTURAL ORGANIZATION). 

இந்த பயொபெஸ்டிசைட் (BIO PESTICIDE) ஒரு வகையான பூசணம், வேகமாக வேலை பார்க்காது, மூன்று நான்கு நாள் ஆகும். ஆப்ரிக்க நாடுகளில் இதனை பயன்படுத்தி உள்ளார்கள், ஆனால் பெரும்பரப்பில் பயன்படுத்தும் அளவுக்கு இதனை உற்பத்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு பாரம்பரிய லோகஸ்ட் கட்டுப்பாட்டு முறை ஒன்றும் வாட்ஸ்அப்பில் சுற்றி வருகிறது, காய்ந்த மிளகாய் மிளாறுகளை கட்டுகட்டாக கட்டி வயல் வரப்புகளில் அடுக்கி வைப்பது, அல்லது எரித்து புகை போடுவது, மிளகாய்த்தூளை கரைத்து தெளிப்பது, இப்படி பலமுறைகளை சிபாரிசு செய்கிறது, ஆனால் பெரும்பரப்பில் செய்ய இதெல்லாம் பயன்படுமா, இப்படி கேள்வி எழுப்புகிறார்கள் விஷயம் தெரிந்த சில விவசாயிகள். 
     
அரசாங்கங்கள் ரசாயன பூச்சிக்கொல்லிகளைத்தான் தேடிப்போகும், மருந்து கம்பெனிகளும் மருந்து தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள், ஆனால் அது மிகவும் ஆபத்தானது, அது அந்த பகுதியின் ஆறுகள் ஏரிகள், குளம் குட்டைகள், டைகள் மண் நிலம், இப்படி எல்லாவற்றையும்  மாசாக்கிவிடும்.
 
இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் விஷம் பல ஆண்டுகள் வரை இந்த இயற்கை வளங்களில் நீடித்து அது அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

அமெரிக்காவை தாக்கிய லொகஸ்ட்கள்

1874 ஆம் ஆண்டு சுமார் 120 மில்லியன் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரவலாக இருந்தது என்று சொல்கிறார்கள்.
 
1722 வாக்கில் லோக்கஸ்ட் தாக்குதல் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலும்,  மெயின்ல் 1743 மற்றும் 1756 ம் ஆண்டுகளிலும், 1797 – 98 ல் வெர்மாண்டிலும் 1828, 1838, 1846, 1855, ஆகிய ஆண்டுகளிலும் வேறுபல இடங்களிலும் லோகஸ்ட் பயிர்களை சூரையாடின.  

1874 ல் அயோவா, மினிசோட்டா, மிசவுரி, டெக்சாஸ், கொலராடோ மற்றும் வியோமிங்கும் பாதிக்கப்பட்டன, அத்துடன் கனெக்டிகட் டெலோனோ, மெயின்,  மேரிலேண்ட்,  மாசாசுசெட்ஸ்,  நியூஹாம்ப்ஷயர், நியூஜெர்ஸி, பென்சில்வேனியா, ரோட்அய்லண்ட்ரெட்  மற்றும் வெர்மாண்ட் ஆகிய  பகுதிகளும் பாதிப்படைந்த.
 
1875 ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் 1800 மைல் நீளத்துக்கு இருந்தது, இதன் பரப்பு ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர மைல்.

இந்த நேரத்தில் சிலர் இதனை தயாரித்து வேண்டுமென்றே அனுப்புகிறார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

தே,ஞானசூரிய பகவான், போன்: +91 8526195370
88888888888888888888888888888888

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...