Sunday, April 19, 2020

வெள்ளைப்பூதலி தொழிற்சாலைகளுக்கு கச்சாப்பொருட்கள் வழங்கும் மரம் VELLAIPOOTHALI INDUSTRIAL TREE






வெள்ளைப்பூதலி தொழிற்சாலைகளுக்கு
கச்சாப்பொருட்கள் வழங்கும் மரம்

VELLAIPOOTHALI NDUSTRIAL TREE
வெள்ளைப்பூதலிக்கு செந்தணக்கு என்ற பெயரும் உண்டு, இதன் பிசினுக்கு ‘கராயா பிசின்’ என்ற பெயருண்டு, இதனை இந்திய ‘டிரகாகாந்த்’ என்றும் சொல்லுவார்கள், ‘டிரகாகாந்த்’ என்பது ஐஸ்கிரீம் தயாரிப்பில் பயன்படுத்தும் ஒரு வகை உயர்தர பிசின், இந்த டிரகாகாந்த்துக்கு பதிலாக இதனை பயன்படுத்துவதாக சொல்லுகிறார்கள், இந்த பிசினை வார்னீஷ் மற்றும் பெயிண்ட், மருந்து மாத்திரை செய்தல், மிட்டாய், இதர உணவு தயாரிப்பு மற்றும் அழகு சாதனங்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள், வெள்ளைப்பூதலியைப் போல பிசின் தரக்கூடிய பல இந்திய மரங்கள் இருக்கின்றன, ஆனால்கூட இந்தியாவில் இருக்கும் பெயிண்ட் கம்பெனிகள் தங்கள்  தேவைக்கு வேண்டிய கச்சா பிசினை வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்வதாக சொல்லுகிறார்கள், இந்தியா, இந்தோசைனா மர்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது இந்த கராயாபிசின். 

1. மரத்தின் தமிழ்ப் பெயர் :--   வெள்ளைப்  பூதலி

2. தாவரவியல் பெயர்  :--  ஸ்டெர்குலியா யூரென்ஸ் (STERCULIA URENS)



3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :-- இண்டியன் டிரகாகாந்த் (INDIAN TRAGAGAANTH)



4. தாவரக்குடும்பம்  :--  ஸ்டெர்கூலியேசி (STERCULIACEAE)

5. மரத்தின்  வகை  :--   வாணிப  மரம்

6. மரத்தின் பயன்கள்  :--

 1. தழை:  விளைநிலங்களுக்கு தழைஉரங்களைத் தரும் மரம்

 2. பட்டை: டேனின் நிறைந்து தோல்பதனிட பட்டை தரும் மரம்

 3. விதையிலிருந்து  எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு
   தயாரிக்க உதவும்.

 4. பிசின்: 'காரயா " என்று வழங்கப்படும். பெயிண்ட் வார்னிஷ் 
   தயாரிக்க உதவும் பிசின் தரும் மரம்.

 5. இலை, கிளை, மரம், அடுப்பெரிக்க விறகாக தரும் மரம்.
 6. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து தூசியினை வடிகட்டி
   காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

 7. பொம்மைகள், இசைக் கருவிகள், பேக்கிங் பெட்டிகள்>
   தோனிகள்,  பீப்பாய்கள், ஆகியவை செய்ய
   மரம் தரும் பூதலி மரம்.

 8. மலிவான பென்சில்களும், சிலேட்டு சட்டங்களும் செய்ய  
    மரம் தரும்.

 9. நன்கு இழைத்து பாலிஷ் செய்யும் சிற்ப வேலைகளுக்கும்>
    மேஜை, நாற்காலி, கட்டில் செய்வதற்கும் மரம் தரும் மரம். 
  
 10. காகிதம்  தயாரிக்க  ' மரக்குழம்பு " செய்ய
    மரம் தரும் பூதலி மரம்.

7. சிறப்பு செய்திகள் :--

 1. மிகச்சிறந்த 'கராயா " பிசின்தரும் வெள்ளைப்  பூதலிமரம்.

 2. இன்று பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தயாரிப்பில்முதலிடம்
   பெறும் பிசின்  'கராயா " பிசின் ஆகும்.

 3. காகிதம் தயாரிக்க 'மரக்கூழ்" தரும் பூதலி மரம்.

 4. விதை எண்ணெய் சோப்பு தயாரிக்க உதவும்.

 5. அடுப்பெரிக்க விறகு தரும் இலைகள், கிளைகள், மரம்.

8. மரத்தின் தாயகம்  :--  ராஜஸ்தான்  --  இந்தியா.

9. ஏற்ற மண்  :-- வண்டல்மண்.

10. நடவுப் பொருள் :--   விதை /  நாற்று /  வேர்க்குச்சி.

11. மரத்தின் உயரம்  :-- 10 -- 20  மீட்டர்.

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...