Sunday, April 19, 2020

வெளிர் சிகப்பு கொன்றை ஒரு அழகு மரம் VELIR SIGAPPU KONRAI BURMESE PINK BEAUTY



 
THANKS GOOGLE
வெளிர் சிகப்பு கொன்றை
ஒரு அழகு மரம்

VELIR SIGAPPU KONRAI
BURMESE PINK BEAUTY

வெளிர் சிகப்பு கொன்றை பர்மாவின் வறட்சியான பகுதிக்கு சொந்தமான மரம், பர்மாவிலிருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிகவும் அழகான மரம், சாலைகள், பூங்காக்கள், மற்றும் தோட்டங்களில் நடவு செய்யலாம், அடர்த்தியான ஊதா நிறத்தில் பூக்கத்தொடங்கும் இந்தப்பூக்கள் இளம் சிவப்பு நிறத்திற்கு மாறி இறுதியாக முழுமையான வெண்மையான பூக்களாக மாறிவிடும், அதனால் தொலைவிலிருந்து பார்க்கும்போது இந்த மூன்று நிறங்களின் கலவையாகத் தோன்றும், பிரதானமாக அழகு மரமாக இருந்தாலும், இதர பொதுவான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.   


1. மரத்தின் தமிழ்ப் பெயர் :- வெளிர் சிவப்புக் கொன்றை
2. தாவரவியல் பெயர்  :-    கேசியா ரெனிஜெரா (CASSIA RENIGERA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :- (BURMESE PINK CASSIA)
4. தாவரக்குடும்பம்  :-  சிசால்பினியேசி (CAESALPINEACEAE)
5. மரத்தின் வகை  :-  அலங்கார அழகுமரம் 

6. மரத்தின் பயன்கள்  :-

  1. தழை: விளை நிலங்களுக்கு தழை உரமாகும்  
    இலைகளைத்  தரும் மரம்.  
  2. பச்சைஇலைகளின் இடுக்குகளிலெல்லாம்  வெளிர்சிவப்பு
    நிறத்தில் பளிச்சென்று வெளிர்சிவப்பு பூக்களை மரம்
    முழுவதும் பூத்துக் குலுங்கும் வீட்டு முகப்பிற்கும்
    தோட்டத்திற்கும் சாலை ஓரங்களுக்கும் சுற்றுப்புறத்திற்கும் 
    அழகூட்டும் அலங்கார அழகு மரம்.
  3. பூக்கள்: மார்ச்-ஏப்ரல் மாதத் தேனீக்களுக்கு வெளிர்சிவப்பு
    வண்ண  மலர்க்கோப்பைகளில் தேன் தரும்; பூக்களைத் 
    தரும் மரம்.
  4. பட்டை: டேனின் நிறைந்து தோல் பதனிட பட்டை தரும்
    .
  5. மரம்: உரல்கள் உலக்கைகள் கம்பங்கள்தூண்கள், 
    பந்தல் கால்கள் மாட்டு வண்டி சாமான்கள் ஆகியவற்றைச்
    செய்ய மரம் தரும் மரம்.
  6. காகிதம் தயாரிக்க மரக்கூழ்    தரும்.  
  7. இலைகள் கிளைகள் மரம் ஆகியவற்றை. அடுப்பெரிக்க
    விறகாக தரும்;; மரம்.
  8. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து தூசியினை வடிகட்டி      
    காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

7.சிறப்பு செய்திகள் :--
    1. இதன் பூக்கள் பறவைகளை, பட்டாம்பூச்சிகளை, மற்றும் தேனீக்களை அதிக அளவில் கவரும்.  

    2. கடும் வறட்சியிலும் வாடிடாமல் இருக்கும் இடமெல்லாம்
      வெளிர் சிவப்பு வண்ணப் பூக்களை சொரிந்து சுற்றுப்
      புறத்தை அழகூட்டும்.
                 
    3. இலை கிளை மரம் என  அடுப்பெரிக்க விறகு
      தரும் மரம்.

    4. காகிதக் குழம்பு தரும் மரம்.

    5. தழைத்து வளர்ந்து வீசும் காற்றைத் தடுத்து
      தூசியினை வடிகட்டும் மரம்.
8. மரத்தின் தாயகம்  :--   பர்மா, மலேசியா மற்றும் இந்தோனேசியா
9. ஏற்ற மண்  :--   மணல்சாரி வறண்ட மண்.
10. நடவுப் பொருள் :-- விதை /   நாற்று   /  வேர்க்குச்சி

11. மரத்தின் உயரம்  :--    6  மீட்டர். 



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...