Sunday, April 19, 2020

கல் அத்தி தமிழ்நாட்டின் கோயில் மரம் - KAL ATHI – TEMPLE TREE OF TAMILNADU


GSB FOTOS



கல் அத்தி தமிழ்நாட்டின் கோயில் மரம்

KAL ATHI – TEMPLE TREE OF TAMILNADU


இதே மரத்தை கல் ஆலம் என்றும் கல் இச்சி என்றும் கல் இத்தி என்றும் சொல்லுகிறார்கள் எழுதுகிறார்கள், ஆந்திராவில் இதனை ஆனைத்தீவன மரம் என்றும் சொல்லுகிறார்கள், இந்த மரத்தின் கிளைகளை யானைகள் விரும்பு சாப்பிடும் என்று தமிழ் இலக்கியம் தொடர்பான புத்தகத்தில் படித்த்தாக எனக்கு ஞாபகம், எது எப்படியோ ஆலமரம், அரசமரம் அத்திமரம் எல்லாமே அத்தி குடும்பத்தை சேர்ந்தவைதான், கல் அத்தி ஒரு கோயில்மரம், மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள், மூன்றாவதாக நல்ல தீவன மரமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது, இலை பூ, காய் அனைத்திலும் அத்தி மரத்தின் பொதுவான பண்புகளை இதில் பார்க்க முடியும், பிற மரங்களின் மீது விழுந்து முளைப்பதும் இதன் ஒட்டுண்ணிப் பண்பும் முக்கியமானது, தமிழ்நாட்டில் குறிப்பாக பனைமரங்களில் வளர்ந்திருக்கும் இந்த கல் அத்தி மரங்களை பார்க்கலாம்.   


1. பலமொழிப் பெயர்கள் :

1.1. தமிழ்: கல்அத்தி (KAL ATHI)
1.2. தெலுங்கு: கல்அத்தி (KAL ATHI)
1.3. கன்னடா: காடு அத்தி (KAADU ATHI)

2. தாவரவியல் பெயர் : ஃபைக்ஸ் மொல்லிஸ் (FICUS MOLLIS)

3. பொதுப்பெயர்: சாஃப்ட் ஃபிக் (SOFT FIG)
4. தாவரக்குடும்பம் : மோரேசியே (MORACEAE)

5. மரத்தின் வகை : 12  மீட்டர் உயரம் வரை வளரும், பெரும்பாலும் பிற மரங்களின் மீது ஒட்டுண்ணியாக அல்லது பழைய கட்டிடங்களின் சுவர்களின் வெடிப்புகளில் அல்லது இடுக்குகளில் முளைக்கும், குறைவான அளவே விழுதுகளை விடும்,  சர்வசாதாரணமாக பாறைகளின்மீது மலையடிவாரங்களில் முளைத்திருக்கும்.

6. தாயகம்: இந்தியா
7. பரவி உள்ள இடங்கள்: தெற்கு ஆசியா, தென்னிந்தியா, மற்றும் ஸ்ரீலங்கா

8. பயன்கள் :
தழை : மருந்துக்காக   பயன்படுகிறது

பட்டை :  மருந்துக்காக   பயன்படுகிறது

மரம் : மரம் வெண்மையாக இருக்கும், அதிகம் எதற்கும்
பயன்படுத்துவதில்லை

பூக்கள்: ஒருவகை ஆண்பூக்கள், இரண்டாவது நீளமான சூலகமுடைய பெண்பூக்கள், மூன்றாவது, குட்டையான சூலகமுடைய பெண்பூக்கள், இப்படி மூன்றுவகை பூக்கள் அந்த காய்க்குள் இருக்கும், பெண்குளவிகள் குட்டையான சூலகமுடைய பெண்பூக்களில் முட்டையிடும், அதே சமயம் அவை நீளமான சூலகமுடைய பெண்பூக்களின் மகரந்த செர்க்கைக்கு உதவும், அதன் பிறகு முட்டைகளிலிருந்து  இறக்கைகள் இல்லா ஆண்குளவிகள் வெளிவந்து, பின்னால் வெளிவரும் பெண் குளவிகளை கருவுறச்செய்யும், அத்துடன் ஈரக்கை முளைத்த பெண்குளவிகள் காய்களிலிருந்து வெளியேற் உதவியாக அந்தகாய்களில் சிறுசிறு ஓட்டைகளைப்போடும், இப்போது சிறகு முளைத்த பெண் குளவிகள் அங்கிருக்கும் மகரந்தத்தூளை சேகரித்தபடி காய்களிலிருந்து வெளியேறும், வெளியேறிய பெண்குளவிகள் புதிய ஆலம்பூக்களைத் தேடிச்சென்று மகரந்தசேர்க்கைக்கு உதவும். அத்தி மற்றும் ஆலங்காய்களில் இப்படித்தான் மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது, இவற்றில் காய்கள் என்பவைதான் பூக்களின் கொலுமண்டபம்.

9. மருந்தாகக் கட்டுப் படுத்தும் நோய்கள்:
9.1. காயம், வெட்டு காயங்கள்

10. மருத்துவப் பண்புகள்:
10.1. இதன் பட்டையை அரைத்து கூழாக்கி தடவ காயங்கள் குணமாகும்
10..2. இலைகளை அரைத்து கூழாக்கி தடவ கட்டிகள் குணமாகும்

11. பரவி உள்ள இடங்கள் : மகாராஷ்ட்ராவின் கொங்கன் பகுதிகள், கர்னாடகாவில் மைசூர், வடக்கு கேனரா, கேரளாவில் பாலக்காடு, இடுக்கி, மற்றும் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும்.

12. வெப்ப மண்டல பகுதிக்கு உரிய மரம்.
13. பயிர்ப்பரவல்: பறவைகளின் மூலம்
14. ஸ்தல விருட்சமாக உள்ள கோயில்கள்
1. திருக்கூடலையாற்றூர், சிவன் கோயில்
2. திருநின்றவூர், சிவன் கோயில்
3. திருப்பரங்குன்றம், சிவன் கோயில் மற்றும் முருகன் கோயில்


FOR FURTHER READING
www.tropical.theferns.info / Useful Tropical Plants / Ficus mollis
Koyil Thalangalum Thalaththavarangalum By.R. Panchavarnam


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...