வெள்ளை கடம்பு
மீனாட்சியம்மன்
ஸ்தலவிருக்க்ஷம்
VELLAI KADAMBA MEENAKSHI
AMMAN TEMPLE TREE
கடம்ப மரத்திற்கென ஒரு சரித்திரம் உண்டு, பழைய மதுரையின் பெயர் கடம்பவனம், காரணம் அந்த சமயம் அங்கு கடம்ப மரங்கள் வனமாக இருந்ததுதான் காரணம், அதனால்தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும்
1. மரத்தின் தமிழ்ப் பெயர் :- வெள்ளைக் கடம்பு
2. தாவரவியல் பெயர்
:- நியோலமர்க்கியா கடம்பா (NEOLOMARCKIA CADAMBA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :- கடம்பு (KADAMBU)
4. தாவரக்குடும்பம்
:- ரூபியேசி (RUBIACEAE)
5. மரத்தின்
வகை :- சதுப்புநில
காட்டுமரம்
6. மரத்தின் பயன்கள்
:--
1. தழை விளைநிலங்களுக்கு
தழைஉரங்களைத் தரும் மரம்
2. பட்டை, டேனின் நிறைந்து
தோல்பதனிட பட்டை தரும் மரம்
3. மரம், தீப்பெட்டிகள், தீக்குச்சிகள், பென்சில், காகிதம் செய்யவும்
மரம்
தரும் வெள்ளைக் கடம்பு மரம்.
4. வீடுகளுக்கு மேல்தளம்
பலகைகள் செய்ய, மரம் தரும் கடம்பு மரம்.
5. தோனிகள், பெட்டிகள் செய்யவும், நன்கு உரித்து
ஒட்டுப் பலகைகள் செய்ய, ஏற்றது.
6. காகிதம் தயாரிக்க
' மரக்குழம்பு "
செய்ய மரம் தரும் வெள்ளைக்கடம்பு மரம்.
7. இலை, கிளை, மரம், அடுப்பெரிக்க விறகாக
தரும் மரம்.
8. வீசும் காற்றின்
வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
7. சிறப்பு செய்திகள் :--
1. தெற்கே மதுரை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கடம்ப வனத்தில்
கோயில்
கொண்டவர் என்றும், வடக்கே மதுராவில் கடம்ப
வனத்தில்
கோயில் கொண்டார் ஸ்ரீகிருஷ்ணனும் ராதையும்
என்றும்
சிறப்பு பெற்றது கடம்ப மரம்.
2. எழுதிட காகிதம் தரும்
3. எரித்திட
தீப்பெட்டியும், தீக்குச்சியும் தரும்.
4. ஒட்டுப்பலகை
தரும்.
5. அடுப்பெரிக்க விறகு
தரும் இலைகள்,கிளைகள், மரம்
8. மரத்தின் தாயகம்
:-- இந்தியா
9. ஏற்ற மண்
:-- ஈர செழிப்புள்ள சதுப்புநில மண்.
10. நடவுப் பொருள் :-- விதை / நாற்று / வேர்க்குச்சி.
11. மரத்தின் உயரம்
:-- 10 -- 20 மீட்டர்.
12. தலவிருட்சமாக இருக்கும் கோவில்கள்
1. பரமக்குடி முத்தால பரமேஸ்வரன்
2. மதுரை மீனாட்சியம்மன்
3. உவரி சுயம்புனாதர்
4. குளித்தலை, கடம்பவனேஸ்வரர்
5. கீழப்பூங்குடி, பிரம்மபுறீஸ்வரர்
6. சிம்மக்கல் சொக்கனாதர்
7. பாப்பாக்கோயில், கடம்பவனநாதர்
8. மதுரை, சுந்தரேஸ்வரர்
9. மானூர், பெரியவுடையார்
10. உடையாபட்டி, ஞானஸ்கந்தர்
11. பச்சமலை, சும்ப்ரமணியசாமி
12. அழகர்கோயில், வைகுந்தநாதர்
நன்றி: 'கோயில் தலங்களும் தலத்தாவரங்களும்' - இரா.பஞ்சவர்ணம்
No comments:
Post a Comment