Saturday, April 25, 2020

இன்னொருநான் - சிறுகதை INNORU NAAN - SHORTSTORY









ஞானசூரியன் கதைகள் 




(இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  இருக்கும், ஒரு  வடிவத்தில் அமைந்த வித்தியாசமான கதை இது, ஒரு மனிதனும் அவன் மனசாட்சியும் சேர்ந்து இரண்டு பாத்திரங்களாய்  காதலை வேறு கோணத்தில் அலசி ஆராயும் கதை)

இன்னொருநான் - சிறுகதை 
INNORU NAAN - SHORTSTORY

           ப்;ளீஸ்  எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்…”
      எங்கிட்ட இருந்தாநாந்தான் உன் மனசு மறந்துட்டியா ? "
              அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இந்த ஒலகத்துல நான் ஒனக்கு மட்டுந்தான் ஓப்பன்.
      சரி என்னா விஷயம்?
      என்னால அவள மறக்க முடியல "
      நெனைச்சேன் இப்படி ஏதாவது ஒளருவேன்னு "
        எருதோட வருத்தம் காக்கைக்கு தெரியாது "
      நீ எருதும் இல்ல நான் காக்கையும் இல்ல…” எவ்ளோ விஷயத்துல இந்த சராசரி ஒலகத்துலருந்து வெலகிநின்ற ஒன்னப் போயி இது பிடிச்சது ரொம்ப துரதிஷ்டந்தான்.
      ஆமா அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி ரத்தமும் சீழும் வடியற பச்சப்புண்ணா இருக்கறப்பக்கூட அதோட வலி தெரியல இப்போ தழும்பு மட்டுந்தா இருக்கு  ஆனா வலி இப்பொத்தான் அதிகமா இருக்கு.  காரணந்தான். எனக்குப் புரியல…”
      எனக்குப் புரியுதே…”
        என்ன புரியுது? "
     
     அப்போ உன்னோட வலியெல்லாம் வேற படிச்சி பட்டம் வாங்குறது உன்னோட மகத்தான வலி கல்லூரி ராஜபாட்டையில நீயும் ஒரு ஓரமா நம்பிக்கையோட நடந்தே பெரிய எதிர்காலம் ஒனக்கு காத்துக் கெடக்கற மாதிரி…”
          ஆமா அப்போ. நெனைச்சேன். "
               அப்போ உன்னோட தகுதிக்கும்  அது ரொம்ப ஒசத்தி.
      ஆமா. "
       அப்பல்லாம் காலேஜ்ஹாஸ்டல்ல சோத்துக்குக் கூட ஒன்னால பணங்கட்ட முடியாது.
       ஆமா " 
                அடிக்கடி . மெஸ்ஸவிட்டு வெளிய தொரத்திடுவாங்க
       ………………”
       பலநேரம் வெறும் பச்சத்தண்ணியே ஆகாரமா இருக்கும்
     ……………….
       ஓனக்கு மறந்து போச்சோ என்னமோ அப்போ நீ டிகிரி கடைசி வருஷம். அப்போகூட நீ ஹாஸ்டல்மெஸ்ல இல்ல அண்ணக்கிதான் கடைசிபரிட்சை. பரிட்சை எழுதும்போது நீ மூர்ச்சை ஆயிட்டே. தண்ணி தெளிச்சி எழுப்பி உட்காரவெச்சி காபி கொடுத்தப்போ குடிச்சிட்டு பரிட்சை எழுதின. கண்ணுமுழிச்சிப் படிச்சதால களச்சிப் போனதா எல்லோரும் பேசிக்கிட்டாங்க ரண்டுநாளு பட்டினின்னு ஒனக்கும் எனக்கும்தான் தெரியும்.
     அதுக்கும் இதுக்கும் என்னா சம்மந்தம்?
         சம்மந்தமே அதுக்கும் இதுக்கும்தா அப்போ ஒனக்கு காதல் காத தூரம் இப்போ கண்ணச்சுத்தி அது கண்ணாமுச்சி ஆடுது.
      ' நீஎன்ன சொல்ற?  "
      'புரியல?  ஃபோர் டிஜிட் சாலரி டெரிகாட்டன் சட்டை பேண்ட்டு. ஒதட்டுல பில்டர்கிங்ஸ் தூங்கிக் கனவுகாண வசதி.  வசதியான கட்டில். தூங்காம கனவுகான ஜன்னல்> கம்பி வழியா வானம். கடல். நட்சத்திரம். அசைபோடறதுக்கு ஏதாவது வேணாம்?  ஆனா.. ஒனக்கு ஒண்ணே ஒண்ணுமட்டும் புரிஞ்சாப் போதும்."
      'என்னது?"
      'நல்லா கவனிச்சுக்க. ஒன்னமாதிரி மிடில்கிளாஸ்காரனுக்கும்> அதுக்கு கீழ்கிளாஸ்காரனுக்கும் லவ் பண்றதுக்கு அதப்பத்தி நெனச்சி நெனச்சி சாகறதுக்கு இதுக்கெல்லாம் யோக்யதையே இல்ல…”
      'நான் ஒத்துக்க மாட்டேன் இதுல கிளாஸ் கேஸ்ட் இதுக்கெல்லாம் எடமே இல்ல…”
      'அத்ரிபாச்சா கொழுக்கட்ட அப்படி வா வெளிய.காதல்ன்னா என்னா? "
      காதல்ன்னா என்னா சொல்றது? எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்…”
      'அதான் என்னாங்கறேன்?
      'ஒரு ஆணும் பெண்ணும் நேசிக்கிறது "
         'அன்பு செலுத்தறது. "
      'அப்படின்னா? "
      'காதலிக்கறது"
      'அதாவது நேசிக்கறதுஅன்பு செலுத்தறது  காதலிக்கறது எல்லாம் ஒண்ணுதா  இல்லையா?
      'ஆமா…”
              ''அப்படின்னா ஒருத்தரை ஒருத்தர் அதிகபட்சமா புரிஞ்சிக்கறதுதான் காதல் இல்லையா? "
      'இல்லை  ஆமா  அப்படித்தான்…”
      ஒருத்தரை ஒருத்தர் அதிகபட்சமா எதுக்காக புரிஞ்சிக்கணும்?
      'அப்பிடியில்லேன்னா  எப்பிடி லைஃப்பாட்னரா ஆகமுடியும்?
         'அப்போ லைஃப் பாட்னரா ஆகறதுக்குத்தான் காதல்  இல்லையா?" 
      'ஆமா.
         'அதாவது கல்யாணம் பண்ணிக்கறதுக்கு..."
             ''ஆமா..?"
      'கல்யாணம் பண்ணிக்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும்.
      'ஆமா..
      'அப்போ கல்யாணம் பண்ணிக்க காதல் பண்ணணும்.?"
      'புரிஞ்சிக்கறதுங்கற அர்த்ததத்துல .  ஆமா…”
      'காதல் பண்ணாம கல்யாணம் பண்ணிக்க கூடாதா..?
      'அப்பிடியும் பண்ணிக்கலாம்"
              ''அப்படீன்னா?"
      'அப்பிடீயும் பண்ணிக்கறாங்கன்னு அர்த்தம்... ?"
      'சரி எதுக்கு கல்யாணம் பண்ணிக்னணும்..?"
     'இது என்ன கேள்வி? இயற்கையோட விதி.
      'கல்யாணம் இயற்கையோட விதியா? "
      'இல்ல  வம்சவிருத்தி…”
      'அப்போ வம்ச விருத்திக்குத்தான் கல்யாணமா?
      'ஆமா…”
      'கல்யாணத்துக்குத்தான் காதல் இல்லையா?
      'ஆமா.
      'காதல் ஒருத்தரை ஒருத்தர்  புரிஞ்சிக்கறதுக்கு இல்லையா?
      'ஆமா.
      'அப்பொ காதல்ங்கறது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கறதும் கல்யாணம் பண்ணிக்கறதும் வம்சவிருத்திக்குந்தா இல்லையா?"
      'இல்ல இல்ல. நான் அப்பிடிச் சொல்லல. காதல்ங்கறது வேற  ஒருத்தரை ஒருத்தர் புர்pஞ்சிக்கறதுங்கறது வேற. வம்ச விருத்திங்கறது வேற எல்லாம் வேற வேற தனித்தனி ஆனால் காதல்ங்கறது புனிதமானது நான் அவளை  உயிருக்கு உயி;ரா  நேசிச்சேன் "
      'ஆமா காத்திகை மாசத்து நாயா அவ பின்னால அலஞ்சி அலஞ்சி நேசிச்ச அவ உன்ன திரும்பிப் பார்த்தாளா? அதாவது அவ உன்ன லவ் பண்ணாளா?  அப்படியிருந்திருந்தா ஒரு சின்ன விஷயம் உங்க பிரிவுக்கு காரணமாகி இருக்க முடியாது…”
      'சின்ன விஷயமில்ல   அப்போ நான் சூழ்நிலைக்கு கைதியாயிட்டேன். தற்காலிகமா ஊமையாயிட்டேன்"
      'ஆமா மறுபடியும் நீ வாயை தொறக்கறவரைக்கும் அவளுக்கு பொறுமை இல்ல. . எந்த விஷயம் உன்ன இப்போ அணு அணுவா சித்தரவதை செய்யறதா நெனைக்கறயோ அதுக்காக செல விஷயங்கள ஒன்னால விட்டுக் கொடுக்க முடியல இப்படி ஒரு யோக்யதை இல்லாத லவ்வுக்காக இப்போ நீ வருத்தப்படறதுல அர்த்தமே இல்ல"
      'அப்போ இதெல்லாம் எனக்கு யோக்யதை இல்லேன்னு நெனைக்கறியா?
      'ஓனக்கு யோக்யதை இருக்குன்னு நான் சொல்லி என்ன நடக்கப் போவுது? அவளுக்கு இப்போ மூணு கொழந்திங்கஅப்போ நீ உன்ன  ஒரு தடவைக்கூட வெளிப்படுத்திக்கினதே கிடையாது வெளிப்படுத்திக்க விரும்பல அப்போ ஒனக்கு பெரிய இமேஜ் இருக்கறதா நெனச்சே அந்த அது இந்த வெளிப்படுத்தலால கெட்டுப் போயிடுமோன்னு செத்து செத்து பொழைச்சே…”
      'வெளிப்படுத்திக்கக் கூடாதுங்கறது என்னோட நோக்கம் கெடையாது.  காலம் வரும்ன்னு காத்துக்கிட்டிருந்தேன்.
      'ஒரு கையாலாகாதவன் சொல்ல வேண்டியது இது…”
         '……………….
      'அப்போ அந்த விஷயத்துல ஒரு தீர்மானமான முடிவுக்கு நீ வரல்ல.  அதுக்கு காரணம் அதுக்கு ஒனக்கு யோக்யதை இல்லேன்னு நெனைச்சிக்கிட்டிருந்தெ.
              ''………………”
      'அந்த யோக்யதை வந்ததா நெனைக்கறதுக்குள்ள விஷயம் தலைகீழா மாறிப் போச்சி…”
              'அதுக்காக என்னை என்ன பண்ணச் சொல்ற இப்போ?
      'அதுக்கு ஒண்ணும் பண்ணச் சொல்லல இனிமே காதல் கீதல்ன்னு ஒளராதெ அது ஒரு கலப்படமில்லாத பித்தலாட்டம் அதுக்கு அர்த்தமே இல்ல…”
      '……………”
      'மரத்துல துணி சுத்தி வச்சாக்கூட சுத்தி வர்ற ஷாஜஹானுங்கள ஒனக்குத் தெரியாது? "
      '…………….
      'சதை ருசியில அலஞ்சிட்டு அப்பொறம் பணத்தோட வர்ற இன்னொரு சதைக்கு தாலிகட்ற ஷாஜஹானுங்கள ஒனக்குத் தெரியாது?  எல்லாமே புனிதமான காதல்தான்…”
      'நீ சொல்ற மாதிரியெல்லாம் நான் இல்ல…”
      'இருக்கலாம் ஆனா வாய்ப்பு கெடைக்காததால யோக்யனா இருக்கறவனப்பத்தியோ இல்ல இதெல்லாம் பண்றதுக்கு தைரியமில்லாதவனப் பத்தியோ  எனக்கு அபிப்பிராயம் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல…”
      'நீ என்னப்பத்தி என்ன சொன்னாலும் அவ அப்பிடி என்ன சுலபமா நிராகரிச்சுட்டு--- எவனோ ஒருத்தனுக்கு எப்பிடி கழுத்த நீட்ட முடிஞ்சது? அதுதான் எனக்குப் புரியல…”
      'ஆனா அவளுக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கு'
      'என்னது?"
      'காதல்ங்கறது வேற கல்யாணம்ங்கறது வேற ... வம்சம்விருத்தி ங்கறது வேற எல்லாம் வேற வேற தனித்தனின்னு. 
             '' ………………"
      'அவ அம்மா அப்பா வளத்த பூம்பூம்மாடுஇப்பிடி இருக்கறதும் ஒரு விதத்துல சவுரியம்தான்…”
      'நான் இப்பிடி காலம்பூரா கஷ்டப்படறதுக்கா?
      'ஆமா.. அப்பிடி இல்லேன்னா அவ கழுத்துல மூணு முடிச்சி விழறதுக்கு முன்னாடி வயித்துல விழுந்திருக்கும்…”
      'ஓன்னோட வார்த்தைங்க எனக்கு காதுல திராவகத்தை ஊத்தறமாதிரி இருக்கு…”
      உண்மைய பச்சையா சொன்னா அப்பிடித்தான் இருக்கும்"
      '………………”
      'நீ எதை எப்பிடிச் சொன்னாலும் என்னோட காதல் புனிதமானது…”
              '……………….
               'அவளுக்கு வேணாம்னா இன்னக்கி கல்யாணமாகி இருக்கலாம்  கொழந்திங்க இருக்கலாம் அது வேற விஷயம்"
                ''……………….
                அவ இன்னக்கி வேற ஓருத்தனோட மனைவியா இருக்கலாம்நாளைக்கு நான் வேற ஒருத்தியோட கணவனா இருக்கலாம் அது வேற விஷயம் ஆனா என்னோட காதல் புனிதமானது அதை உன்னால மறுக்க முடியாது…”
'நாந்தான் உன் மனசு அதை மறுக்க முடியுமா....?"
'ஆமென்.;....."
     
                   






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...