Sunday, April 19, 2020

யூகலிப்டஸ் காகித உற்பத்திக்கு உதவும் தைலமரம் EUCALYPTUS WANTED TREE FOR PAPER PRODUCTION




யூகலிப்டஸ் காகித
உற்பத்திக்கு உதவும்
தைலமரம்

EUCALYPTUS
WANTED TREE FOR
PAPER PRODUCTION

நல்லது செய்யும் மனிதர்களுக்குத்தான் பெரும்பாலும் அவப்பெயர்தான் வரும், அதுதான் உலக இயல்பு, அப்படி மனித குலத்திற்கு நிறைய நனமைகளை தொடர்ந்து செய்தாலும் கெட்ட பெயர் எடுக்கும் மரங்களில் முன்னணியில் இருப்பது ஒன்று யூகலிப்டஸ் என்னும் தைலமரம் இன்னொன்று சீமைக்கருவை, சில இடங்களில் அல்லது நாடுகளில் நல்லது செய்யும் மரங்களை களை மரங்கள் என்ற பட்டியலில் கொண்டுவருவதுண்டு, ஒவ்வொரு மனிதரிடமும் நல்லதும் கெட்டதும் கலந்திருப்பது போலத்தான் மரங்களும், யூகாலிப்டஸ் வேகமாக வளரும், மரசாகுபடிக்கு ஏற்ற, நான்கு ஆண்டுகளில் வருமானம் தரும் நான்கு மரங்களில் இதுவும் ஒன்று, காகித உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகம் நம்பியிருப்பது இதைத்தான்,  

1. மரத்தின் தமிழ்ப் பெயர் :--  யூகாலிப்டஸ்   மைசூர் கம் 

2. தாவரவியல் பெயர்  :--   யூகலிப்டஸ் டெரிட்டிக்காரனிஸ் (EUCALYPTUS TERETECORNIS)

3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :--  மைசூர் கம் (MYSORE GUM)

4. தாவரக்குடும்பம்  :--  மிர்டேசி (MYRTACEAE)

5. மரத்தின் வகை  :--  வாணிப மரம்  

6. மரத்தின் பயன்கள்  :--

  1. தழை, நீலகிரித் தைலம் தரும்  இலைகளைத்  தரும் மரம். 
  
 2. தழை,  பச்சையும அடிப்புறம் வெண்மையும் சேர்ந்த நிறத்தில், மைசூர்கம் இலைகள் செறிந்து, சந்தன மஞ்சள் நிற மரத்தை போர்த்தி நின்று, வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.
 
3. பூக்கள், வசந்தகாலத் தேனீக்களுக்கு, தேன் கொடுக்கும் பூக்களை , பூத்துக்  கொடுக்கும் மரம். 

  4. மரம், கம்பங்கள், முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள், தூண்கள் செய்ய, மேஜை , நாற்காலி, சோபா செட்டுக்கள், பார்ட்டிகிள் போர்டு , பைபர் போர்டு ஆகியவற்றை, தயாரிக்க உதவும் மரம் தரும் மரம்.
 
  5. மரம் , காகிதம் தயாரிக்க மரக்கூழ் செய்ய மரம் தரும் மரம். 
 
  6. 4,800 கலோரி வெப்பத்திறன் கொண்ட இலைகள், கிளைகள், மரம், ஆகியவற்றை. அடுப்பெரிக்க விறகு தரும் மரம்.

  7. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி       காற்றை தூய்மைப்படுத்தும்  மரம்.

7.சிறப்பு செய்திகள் :--

    1. நீலகிரித்தைலம் தரும் மரம்.       
    2. நீலகிரி மலையின் குளிரை எரிக்க விறகு தரும் மரம்.
    3. காகிதக் குழம்பு தரும் மரம்.
    4. கட்டுமானப் பணிகளுக்கு மரம் தரும்.
    5. உயர்ந்து வளர்ந்து ,வீசும் காற்றைத் தடுத்து
      தூசியினை வடிகட்டும் மரம்.

8. மரத்தின் தாயகம்  :-- ஆஸ்திரேலியா 

9. ஏற்ற மண்  :--   மணல்சாரி வறண்ட மண்.

10. நடவுப் பொருள் :-- விதை /  நாற்று / வேர்க்குச்சி

11. மரத்தின் உயரம்  :--   10 -- 20  மீட்டர். 

 



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...