Friday, April 24, 2020

ஆட்டோவில் ஏறிய பேய் - சிறுகதை AUTOVIL EARIYA PEI - SHORT STORY


ஞானசூரியன் கதைகள்

(ராத்திரி 12 மணி வாக்கில் ஆட்டோவில் ஒரு பேய் தற்செயலாய் ஏற ஆட்டோகாரருக்கு என்ன ஆச்சு பேய்க்கு என்ன ஆச்சு என்பதுதான் கதை. அநேகமாய் இது ஆனந்தவிகடனில் பிரசுரமான கதை

ஆட்டோவில் ஏறிய பேய் - சிறுகதை

AUTOVIL EARIYA PEI - SHORT STORY

      மதுரை தல்லாகுளம்; கருப்பண்ணசாமி கோவிலுக்குப் பின்புறம் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல் ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு> ராத்திரி சவாரிக்காக எதிர்பார்த்திருந்த வேளையில் ஆட்டோ டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

      பேய் என்பது உண்மையிலேயே இருக்கா? ஆம் என்றால் அது டவுன்லயும் இருக்கா

      நல்லவேளை சந்தேகம் தீர்த்து வைக்க அங்கே பெருசு இருந்தது. அதுவும் ஆட்டோ டிரைவர்தான்

      'பெருசு. போனவாரம் தத்தனேரி சுடுகாட்டுக்;கு பக்கத்துல ஒரு ரிஸ்;காக்காரன் (ரிக்க்ஷா) செத்துப் போனானே தெரியுமா?"

      'ஆமா மாரடைப்புன்னு சொன்னாங்க" ஆனந்தன்.

      'மாரடைப்பாவது மண்ணாங்கட்டியாவது. நாப்பது வருசமா மருதையில கொட்டை போட்டவன். அதே எடத்துல இதுவரைக்கும் எத்தனை பேரு செத்திருக்கான்னு சொல்லட்டுமா...?; ஒருத்தன் உடாத எல்லோருமே வாயாலயும் மூக்காலயும் ரத்தம் கக்கித்தான் செத்திருக்கானுக"  

      அந்த நேரம் ஆந்தை ஒன்று தாறுமாறாக இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்து போனது

'எனக்குத் தெரிஞ்சி இருவது வருசமா அங்க ஒரு முனீஸ்வரன் இருக்குது பெரிசு."

      பெரிசு கடாமார்க்கையும் ஆனந்தன் கவர்னரையும் கொளுத்தி இழுக்க அங்கு சிறுசாய் புகை மண்டலம் கிளம்பியது.

      'அப்போ முனீஸ்வரனெல்லாம் நீ பார்த்திருக்கியா?" 

      'என்னதுபார்த்திருக்கியாவா? உன்னமாதிரி நான் எளவட்டமா இருந்தப்போ தத்தனேரி சுடுகாட்டுக்கு பக்கத்துலதான் எனக்கு ஜாகையேசுடுகாட்டு வழியிலதான் வண்டியை போட்டு;ட்டு வண்டியிலேயே உக்காந்து சுருட்டு குடிச்சிகிட்டு இருப்பேன். அப்போ ரிஸ்காதான் இழுத்துக்கிட்டிருந்தேன். ராத்திரியில சுடுகாட்டுக்கு வந்து"


    வந்து?" 


    வந்து இப்படி உன்ன மாதிரி பக்கத்துல வந்து நிக்கும் நான் சுருட்டை குடிச்சிக்கிட்டேயிருப்பேன். சவாரி வருமான்னு கேக்கும்அதுக்கும் நான் பேசாம இருப்பேன்.. கொஞ்ச நேரம் நின்னுபாத்துட்டு போயிடும்

   ''அதுசரி அது  உன்னை ஒண்ணும் பண்ணாதா?"

   கையில் சுருட்டு இருக்குல்ல பேய் நெருப்புக்கிட்ட வராதுல்ல..." 

   சரி. அது பேய்தான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?

   அதுக்கு காலை கவனிக்கனும் காலு மண்ணுல பாவி நிக்காது…”

      பாக்கறதுக்கு எப்படி பயங்கரமா இருக்குமோ

  அதான் இல்ல என்னை மாதிரியும்வரும் உன்னை மாதிரியும் வரும்.

              பக்கத்தில் ஜெயராஜ் தியேட்டரில் படம் விட்டிருக்க வேண்டும். ஓரிருவர் இவர்களைக் கடந்து சென்றனர்

      ஆனந்தனுக்கு வயிற்றுக்குள் பயம் பந்தாய் சுருண்டு எழும்பியது  பல்வேறுவிதமான பேய்களைப் பற்றியும் ஆனந்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர் சொல்ல ஆரம்பித்தபோது. ஒரு சவாரி வந்தது

      பெரிசு 'எங்கப் போகணுங்க?  "

      சவாரி 'எஸ். எஸ். காலனிக்கு…”

      'முப்பது ரூவா ஆகும்:…”  பெரிசு.

      சொல்லி முடிப்பதற்குள் அவர் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார்.

      'இந்தக் குளிர்ல என்னால முடியாது.நீ  போயிட்டு வாடா" என்றது பெரிசு.

      பெரிசுக்கு பதிலாக ஆனந்தன் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தான்

      ஆட்டோ அமெரிக்கன் காலேஜைத் தாண்டுவதற்கு முன்னால் ஆனந்தனுக்கு ஒரு சந்தேகம்.    
                                                
      இந்த ஆள் ஆட்டோவினுள் ஏறிய பின்னரும்  முகம் தெரியாமல் முக்காடு போட்டிருக்க வேண்டிய அவசியம்..?

      ஏட்டுமுழ வேஷ்டியை கால்; தெரியாமல் தழைய தழைய கட்ட வேண்டிய அவசியம்? எதாவது ஒரு காரணம் சொல்லி எங்காவது நிறுத்த முடியுமா ? யோசித்தான்.

நல்லவேளை. கோரிபாளையத்தில் ஒரு டீக்கடை திறந்திருந்தது. சடன் பிரேக் போட்டான். ஆட்டோ டீக்கடைக்கு முன்னால் பகுமானமாய் நின்றது. ஆனந்தன் விசுக்கென்று ஆட்டோவிலிருந்து இற்கினான். நிம்மதி. ' ரெண்டு டீ " சொல்லிவிட்டு கடை பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.

      நல்லவேளை ஆட்டோவை வெளிச்சத்தில் நிறுத்தியிருந்தான். புத்திசாலித்தனம். பெரிசு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இதுவும் வெள்ளைப்  போர்வைதான் போர்த்தியிருந்தது. பாதங்களை  கவனித்தான். தெரியவில்லை.

      அது இப்போது ஆட்டோவுக்குள்ளேயே நகர்ந்து வெளிச்சத்திலிருந்து இருட்டிற்குப் போனது. அதிர்ச்சி   

 அண்ணாச்சி.டீ கடைக்காரர் டம்ளர்களை நீட்டினார். ஆனந்தன் இரண்டு டீ டம்ளர்களையும் வாங்கிக் கொண்டு அருகாமையில் போனான்

      இந்தாங்க .. டீ சாப்பிடுங்க.  முக்காடுக்கு.

      முக்காட்டுக்குள்ளிருந்து ஒற்றையாய் ஒரே ஒரு கை மட்டும் வெளியே வந்து .. சைகை காட்டியது  வேண்டாமாம். மீண்டும் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டது

      பல் கிட்டும்; குளிரிலும் ஆனந்தனுக்கு வியர்த்தது. ஓன்றன் பின் ஒன்றாக இரண்டு டீயையும் குடித்து இன்னும் அதிகமாக வியர்த்துக் கொட்டினான். மார்புக்கூட்டுக்குள் இதயம் வேகமாய் படபடத்தது.

            மீண்டும் முக்காட்டுக்குள்ளிருந்து ஒருகை வெளியே வந்து     அசைந்தது.  இவன் சீக்கிரம் வர வேண்டுமாம்

      ஆனந்தனுக்கு மூளை வேகமாய் வேலை செய்தது. பெரிசு சொன்னது ஞாபகம் வந்தது.

      ஒரு காளிமார்க் சுருட்டை வாங்கி கொளுத்தி உதட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோவினுள் ஏறி உட்கார்ந்தான்.

     டீக்கடை வெளிச்சத்தைப் பின்னால் தள்ளியபடி மைப்பூச்சாய் இருந்த இருட்டுக்குள் விரைந்து தேவர் சிலைக்கு அருகாமையில் ஆட்டோ வந்தபோது ஆனந்தன் தோளில் ஜில்லென்று ஒரு கை பதிய அவன் பிரேக்கில் கால்வைத்து திரும்பிப் பார்த்தபோது உதட்டிலிருந்து சுருட்டு தவறி கீழேவிழ முக்காடு சைகை செய்தது. வலது பக்கம் திரும்ப வேண்டுமாம்.

      ஆட்டோ செல்லூரைத் தாண்டிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் போய் சேரக்கூடிய இடம் தத்தனேறி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து  பிணம் எரியும் சுடுகாட்டுப் பிரதேசம். பெரிசுக்கு அறிமுகமான முனீஸ்வரனின் எல்லை. சொரேர்.

      அடிவயிற்றில் பனிப்பந்து ஒன்று மேலெ கிளம்பி மிதந்தது. மீண்டும் மீண்டும் ஒருமுறை குப்பென்று வியர்க்க பின்னால் அது இன்னும் முக்காட்டுக்குள். சட்டென்று ஆட்டோ கிரீPச் என்ற  சப்தத்துடன் நின்றது.

      கால்கள் இரண்டும் பிடறியில் இடிபட பக்கத்து சந்தில் ஆட்டோ நின்ற இடத்திலிருந்து அரை பர்லாங் கடந்து ஓடிக் கொணடிருந்தான் ஆனந்தன்.

      அது மெல்ல முக்காட்டுடன் ஆட்டோவிலிருந்து இறங்கி முக்காட்டை நீக்கிவிட்டு சுற்றிலும் பார்த்தது. பால்காரர் ஒருத்தர் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தார்.

      அட பால்காரர்; ராஜா. 'என்னப்பா இந்த நேரத்துல?  இங்கு என்ன செய்யறே....  பால்காரர். இன்னக்கி கடையில கணக்குப் பாத்தது. நேரமாயிடுச்சி. வீட்டுக்குத்தான் போகலாமுன்னு பொறப்பட்டேன். உன்னோட ஞாபகம் வந்தது. சரின்னு உன்னையும் அப்படியே பாக்கலாம்ன்னு பார்த்தா. இந்த ஆட்டோக்காரன் டீ  குடிக்கிறேன்  காப்பி குடிக்கிறேன்னு நேரத்தை வளத்திட்டான். அப்பொறம் என்னாச்சுன்னு தெரியல. இங்க கொண்டாந்து நிறுத்தினான்.  அது எங்க போனான்னு தெரியல
 
      ஒண்ணும் சொல்றதுக்கே இல்ல   காலம் கெட்டு கெடக்கு வா டீ .   சாப்டுட்டு பஸ்சுல போபஸ் வர்ர நேரமாச்சு வா

              முக்காடு தப்பு தப்பு.  பால்ராஜ்'ம்  பால்காரரும் டீ க்கடை நோக்கி நடந்தார்கள்..

      ஆனந்தன் ரொம்ப தூரம் ஓடியிருப்பான். பாவம்.
       
                             

               




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...