Saturday, March 14, 2020

துளசிக்கு நன்றி இப்படிக்கு ஷாஜஹான் மும்தாஜ் மற்றும் தாஜ்மகால் - THULASI PROTECTS TAJMAHAL FROM POLLUTION













'துளசிக்கு நன்றி'
அன்புடன்
ஷாஜஹான் 
மும்தாஜ் 
மற்றும் தாஜ்மகால்

THULASI PROTECTS
TAJMAHAL
FROM POLLUTION

எங்கள் காதல் சின்னத்தை தொழிற்சாலைப் புகையிலிருந்து பாதுகாத்துவரும் துளசி-ஆக்சிஜன் பாதுகாப்பு வளையத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்” - ஷாஜகான் - மும்தாஜ்.

எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் மிஸ்டர் நியுஸ். அவர் வந்தால் ஒரு நியுசோடுதான் வருவார். அது போல ஒரு வித்தியாசமான செய்தியுடன் வந்தார். 

நேற்று பேப்பர்ல ஒரு செய்திப் பார்த்தேன் சார். தாஜ்மகாலை பாதுகாக்க துளசிச்செடி நட்டு வச்சிருக்காங்களாம். துளசி எப்படி தாஜ்மகாலை பாதுகாக்கும் ?”

அதுபற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை அவருக்கு தொகுத்து சென்னேன்.
தாஜ்மகாலுக்கு சுற்றிலும் உள்ள தொழிற்சாலைகள் நிறைய இருக்கு. இந்த தொழிற்சாலை புகை காற்றோட கலந்திருக்கு. இந்த புகைதான் அழகான   வெள்ளைநிற தாஜ்மகாலை கொஞ்சம் கொஞ்சமா காவி நிறமா மாத்திகிட்டு இருக்குன்னு ஒரு செய்தியை ஏற்கனவே படிச்சியிருக்கேன்…” என்றேன்.

பொதுவாக காற்றில் இருக்கும் விஷவாயுக்கள வடிக்கும் சக்தி மரங்களுக்கு இருக்குன்னு நானும் படிச்சியிருக்கேன்..ஆனா துளசிச்செடிகள் இதைத்தடுக்குமா ?” என்றார் அந்த நண்பர்.

நான் அவரிடம் துளசிச்செடிகள் பற்றி சொன்ன செய்திகளை தொகுத்துச் சொன்னால் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

பகலில் மரங்கள் கார்பென்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. இரவில் அதே காரியத்தை மாற்றி செய்கின்றன. ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பென்டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. அதனால்தான் ராத்திரி நேரத்தில்  மரத்தடியில் படுக்கக் கூடாதென்பார்கள்.

ஆனால் துளசி 20 மணிநேரம் ஆக்ஸிஜன் தருகிறது. 4 மணிநேரம் ஓசோன் தருகிறது. ஓசோன் என்பது ஆக்சிஜனின் 3 மடங்கு ஸ்ட்ராங் டோஸ் என்பது உங்களுக்குத் தெரியும். ஆக துளசி இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். 

பல லட்சக்கணக்கில் நட்டிருக்கும் துளசிச்செடிகளால் தாஜ்மகாலை சுற்றி ஒரு ஆக்சிஜனால் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ஆக்சிஜன் பாதுகாப்பு வளையம்தான் தாஜ்மகலை பாதுகாக்கும் வேலை பார்க்கிறதுஎன்று நான் சொன்னதும்,

வீட்டுலகூட நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருக்குன்னு சொல்றாங்க ? வீட்டுக்கு ஒரு துளசிச்செடி நட்டுவச்சா நம்மைச்சுற்றி ஆக்சிஜன் பாதுகாப்பு வளையம் போடலாம்ல..?” என்ற ஒரு உபயோகமான கேள்வியைக் கேட்டார்.

நீங்க சொல்றது வாஸ்தவம்தான்நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட கெட்ட வாயுக்கள் கலந்திருக்கு. இதன் மூலம் பல நோய்கள் வரலாம்கார்பன் மோனாக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு, சல்பர்டை ஆக்ஸைடு, பென்சீன் இப்படி பல மோசமான வாயுக்கள் கலந்திருக்கலாம்இந்த நச்சு வாயுக்களை எல்லாம் வடிகட்டுது துளசி. வடிகட்டி சுத்தமான காற்றை நமக்கு சுவாசிக்கத் தருது..” 

இந்தியாவில் இன்னும்கூட நிறைய வீடுகளில் துளசிமாடம் இருக்கு. இந்த துளசிமாடமே  ஆக்சிஜன் பாதுகாப்பு வளையம் கான்செப்ட்தான். 
துளசிமாடம் நடுநாயகமாக வீட்டுக்குள்ளயே இருக்கும். சில வீடுகளில் கொல்லைப்புறத்தில் இருக்கும். பெண்கள் விடியற்காலையில் குளித்து முடித்ததும்  ஈரப்புடவையுடன் துளசிமாடத்தை சுற்றி வந்து வணங்குவார்கள்.

துளசிமாடம் வைப்பதும் துளசியை வணங்குவதும் ஆன்மிகக் காரணங்கள்  பல சொல்லுவார்கள். துளசிச்செடி காற்றை சுத்தம் செய்யும் இயற்கைக் கருவி. 


2 comments:

Muralidharan Ramarao said...

Tulsi is an avatar of Mahalakshmi.We have a few pots of Tulasi plants at home We use Tulasi leaves for puja daily.The Tulasi Madam which is called Brindavanam is considered as temple

Gnanasuriabahavan Devaraj said...

Dear Mr. Murali, Thanks for your additional information, every family should have at-least one Brindavan/ Thulasi Plant in their home. Tulsi is also an avatar of Oxygen.

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...