பீநட்பட்டர்
தொழிலின் கதை
TAMILNADU PEANUT |
THE STORY OF
PEANUT BUTTER
INDUSTRY
இப்போதாவது இந்த ஆய்வை தொடங்கினோமே என்று இருந்தது இந்த செய்திகளை
எல்லாம் சேகரித்தபோது. எங்கோ இருந்து நம் நாட்டிற்கு வந்து உற்பத்தியில் பெரிய சாதனையை செய்திருக்கும்
நிலக்கடலையை பாராட்டுவதா ? அதனை செய்து முடித்திருக்கும் விவசாயிகளை பாராட்டுவதா ? நிலக்கடலையில் நாம் சாதிக்க நிறைய பாக்கி இருக்கிறது. நிறைய தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நாம் விழித்துக்கொள்ள
வேண்டும். இந்த கட்டுரையில் பீநட்பட்டர் எனும் நிலக்கடலை வெண்ணை
பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பீநட்பட்டர் தயாரிப்பை
முதலில் கண்டுபிடித்தவர் மார்சில்லஸ்
ஜில்மோர் எட்சன்
1884 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மார்சில்லஸ் ஜில்மோர் எட்சன் (MARCILLUS JILMOR EDSON)என்பவர்தான் பீநட்பட்டர் கண்டுபிடிப்புக்காக பேட்டன்ட் வாங்கினார். அவர்தான் முதன்முதலாக
அதற்கான தயாரிப்பு
உரிமம் பெற்றவர் மார்சில்லஸ்
ஜில்மோர் எட்சன்தான். எட்சன் கண்டுபிடித்த பீநட்பட்டரைத்தான்
இன்று அமெரிக்காவில் 94 சதவிகித மக்கள் சாப்பிடுகிறார்கள். எட்சனின் தயாரிப்பு வழிமுறையை 1895
இல் டாக்டர் ஜான் ஹார்வி கெல்லாக் (DR. JOHN HARVEY KELLOCK) என்பவர் ஒன்று இரண்டு என படிப்படியாக வடிவமைத்தார். அதன் பிறகு 1903 ஆம் ஆண்டு பீநட்பட்டர் தயாரிக்க ஏற்ற இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்தார் டாக்டர். அம்புரோஸ் ஸ்டாப் (DR. AMBUROS STRAUB)என்பவர். மிசவுரியைச் சேர்ந்தவர் இவர் 1903
ஆம் ஆண்டு இந்த பீநட்பட்டர் இயந்திரத்திற்கு
பேடண்ட் வாங்கினார்.
பீநட்பட்டர் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்
1. ஒன்று உடல் எடையை குறைக்கிறது
2. ஊட்டச்சத்துக்கள் அதிகம் தருகிறது.
3. இதில் இருப்பது நல்ல கொழுப்பு
4. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பரமரிக்கிறது.
5.அதிகமான புரதம் அளிக்கிறது.
6. இதயத்திற்குப் பாதுகாப்பானது.
7. நினைவாற்றலை
மேம்படுத்துகிறது
8. புற்றுநோய் மற்றும் பித்தப்பை கற்கள்
வராமல் தடுக்கிறது.
9. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் போதுமான அளவு தருகிறது.
10. நீண்ட ஆயுளை
தருகிறது.
பீநட்பட்டரில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன ?
பீநட்பட்டரில்,
அதிகம் இருப்பவை வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் புரதம். ஒரு ஸ்பூன் அதாவது 34 கிராம் பீநட்பட்டரில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
1. கலோரி 188
2. புரதம் – 7.7 கிராம்
4. சேச்சுரேட்டட்
ஃபேட் 2.4 கிராம்
7. கால்சியம் 14 மில்லிகிராம்
9. மக்னீசியம் 51 மில்லிகிராம்
இந்த
ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின்கள் டி, இ மற்றும் கே ஆகியவையும் உள்ளன. இவை தயாரிப்பு பிராண்டுகளுக்கு ஏற்றவாறு வித்தியாசப்படும்.
பீநட்பட்டர் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா ?
நிலக்கடலை பற்றி
வேடிக்கையான ஒரு பழமொழி உண்டு. ‘மல்லாட்டை
கொழுப்பு மாமியாரை எழுப்பு’ என்பதுதான் அந்த பழமொழி.
அதன் அர்த்தம் நமக்கு வேண்டாம். அதில் கொழுப்பு அதிகம் என்பதை சொல்லும் பழமொழி அது. இதை டாக்டர்கள் பலமுறை
சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால்
சமீபகாலமாக அதில் இருப்பது நல்ல கொழுப்புதான். கெட்ட கொழுப்பு குறைவுதான் என்கிறது ஆராய்ச்சி. அதனால் தினமும் சாப்பிடுவதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்
சாப்பிடலாம். ஒரே வரியில் சொல்வதானால் அது கொலஸ்ட்ராலை அதிகரிக்காது.
உடம்பில் அதிக
சர்க்கரை இருப்பவர்களுக்கு பீநட்பட்டர் சரிப்படுமா
?
சர்க்கரை அளவை இது பராமரிக்க உதவும். குப்பென்று பிளட்சுகர் எகிறாது. இயற்கையாக லோ கிளைசீமிக் இன்டெக்ஸ்
(LOW GLYCEMIC INDEX) என்ற உணவு
வகையைச் சேர்ந்தது. அதனால் பீநட்பட்டர் சக்கரை
இருப்பவர்களுக்கு பாதுகாப்பானதுதான். பயப்பட
வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். லோ கிளைசீமிக் என்றால் மெதுவாக சக்கரையை சேர்க்கும் உணவு
என்ற அர்த்தம். அப்படி மெல்ல செரித்தால் மெதுவாகத்தான் சர்க்கரையை ரத்தத்தில் சேர்க்கும். நிலக்கடலையின் லோ கிளைசீமிக் இன்டெக்ஸ் 14 மட்டுமே. இது மிகவும்
குறைவு என்கிறார்கள்.
நிலக்கடலையில்
இருக்கும் மக்னீசியம் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக இருக்குமா ?
உடம்பில் அதிக சக்கரை வைத்திருப்பவர்கள் டைப்டூ டயபடீஸ் (TYPE 2
DIABETES)ஆக இருப்பார்கள். அவர்களுக்கு
பெரும்பாலும் மக்னீசியம் குறைபாடு இருக்கும். அவர்களுக்கு நிலக்கடலை உணவு மக்னீசியம் கொடுத்து உதவும். மேலும் நிலையில் கணிசமாக இருக்கும்
நார்ச்சத்து டைப்டூ சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும்
பாதுகாப்பானது.
பல்இல்லாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதா
இந்த பீநட்பட்டர் ?
நிலக்கடலை சாப்பிட
விரும்பும் பல்லில்லாத வயதானவர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டதுதான் பீநட்பட்டர் என்கிறார்கள். காரணம்
பீநட்பட்டரை விற்பனை செய்தவர் டாக்டர் ஜான் ஹார்வி கெல்லாக். அவர் என்ன சொல்லி இதனை விற்பனை செய்தார் தெரியுமா ? நீங்கள் பல்லில்லாதவரா ? வயோதிகரா ? உடல் நலம் சரியில்லாதவரா
? உங்களுக்காக தயாரிக்கப்படுவது தான் இந்த பீநட்பட்டர். இன்றே வாங்குங்கள்
பீநட்பட்டர் என்று சொல்லி வியாபாரம் பார்த்தார். ஆனால் இன்று பல்இருப்பவர் இல்லாதவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரும்
சாப்பிடுகிறார்கள் பீநட் பட்டர்.
பீநட்பட்டர் தயார் செய்த முதல் கம்பெனி
அமெரிக்காவில் முதலில் பீநட்பீட்டர் தயார்செய்த
கம்பெனி ‘பீட்டர் பேன்
பீநட்பட்டர்’ என்பது. அந்த பீநட்பீட்டர் பிராண்டின்
பெயர் ஸ்கிப்பி (SKIPPY). ஸ்கிப்பி தனது உற்பத்தியை தொடங்கியது 1932 ம்ஆண்டு.
நிலக்கடலை
அதிகம் உற்பத்தி செய்யும் மூன்றாவது நாடு அமெரிக்கா
நிலக்கடலை உற்பத்தியில் முதல் இரண்டு இடத்தை பிடிப்பது சீனா மற்றும் இந்தியா. மூன்றாவது இட்த்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்கா உற்பத்தி செய்யும் நிலக்கடலையில் பாதி அளவை பீநட்பட்டர் தயாரிக்க
பயன்படுத்துகிறது. 540 நிலக்கடலை கொட்டைகளில் 12 அவுன்ஸ் பீநட்பட்டர் செய்யலாம். ஒவ்வொரு அமெரிக்கரும் ஓராண்டில் 3 பவுண்ட் பீநட்பட்டர் சாப்பிடுகிறார்கள்.
பீநட்பட்டர் இப்படித்தான் இருக்கவேண்டும்
பீநட்பட்டர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு
சட்டபூர்வமாக வரையறுத்து தந்துள்ளது அமெரிக்க அரசு. அந்த சட்டப் பிரகாரம் என்றால் அதில் 90
சத நிலக்கடலை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாச்சும்
கடலையை போட்டுவிட்டு ஒப்பேத்தக்கூடாது. பீநட்பட்டர் என்றால்
அது பீநட்பட்டராகவே இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment