Monday, March 30, 2020

இருதயநோய் சர்க்கரைநோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியோர் கவனமாக இருக்க வேண்டும். - SENIOR CITIZENS MUST BE VIGILANT









CORONA VIRUS - இது கொரோனா காலம்

இருதயநோய்
சர்க்கரைநோய்

பாதிக்கப்பட்டவர்கள்
 
மற்றும் முதியோர்

கவனமாக இருக்க வேண்டும்.

SENIOR CITIZENS 

MUST BE

VIGILANT


சீனாவில் செய்த ஆராய்ச்சியில் 
கோவிட் 19 வயதானவர்களை 
அதிகம் தாக்குகிறது என்று 
கண்டுபிடித்திருக்கிறார்கள். 

அவர்களிடையேதான் சாவு எண்ணிக்கை 
அதிகமாக இருந்தது என்றும் 
கண்டுபிடித்து இருக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக இதய நோய், 
சர்க்கரை நோய், நுரையீரல் 
மற்றும் சுவாச சம்பந்தமான 
நோய் மற்றும் ரத்த அழுத்தம் 
உள்ளவர்களில் சுலபமாக இந்த 
நோய் தாக்குகிறது. அதனால் 
வயோதிகர்கள் கூடுதல் 
கவனத்துடன் இருக்கவேண்டும். 

கடுமையாக பாதிக்கப்படும் 
முதியோருக்கு ஏற்படும் 
முக்கியமான அறிகுறிகள் 
மூன்று அவை சளி, இருமல், 
காய்ச்சல் மற்றும் நிமோனியா 
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 
பெரும்பாலும் மரணம் 
அடைந்ததாகச் சொல்கிறார்கள். 

இது 72 ஆயிரத்து 314  
பேர்களிடையே சீனாவில் 
மேற்கொண்ட ஆராய்ச்சியில்  
இது கண்டுபிடிக்கப்பட்டது.
 
கோவில் 19 நோயின் 
அறிகுறிகள் எத்தனை 
நாட்களுக்கு நீடிக்கும் ?

கோவில் 19 நோயின் அறிகுறிகள் 
எத்தனை நாளுக்கு நீடிக்கின்றன 
என்று ஒரு ஆய்வு கொரோனாவால் 
பாதிக்கப்பட்ட  55 ஆயிரத்து  924  
 நபர்களிடையே செய்யப்பட்டது.  

அந்த ஆராய்ச்சி முடிவுகள் 
 ன்ன என்று பார்க்கலாம். 

லேசான பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு 
மட்டுமே நீடித்தது. 

கடுமையான பாதிப்பு என்பது 
மூன்று முதல் ஆறு வாரங்கள் நீடித்தது. 

கடுமையான பாதிப்பு ஏற்பட எடுத்துக்கொண்ட 
கால அவகாசம் ஒரு வாரம் மட்டுமே. 

கோவில் 19 பாதிப்பு ஏற்பட்டு மரணம் 
அடைந்ததற்கு எடுத்துக்கொண்ட 
கால அவகாசம் 2 முதல் 8 வாரங்கள்.

மருத்துவ நிபுணர்கள்
நோய்த்தொற்று எற்படாமல் 
இருக்க கீழ்கண்டவற்றை 
கடைபிடியுங்கள் என்று 
பரிந்துரை செய்கிறார்கள்.

1. அடிக்கொரு தபா சோப்புபோட்டு 20 செகண்டுக்கு கை கழுவுங்க.
2. மூக்கை முகத்தை கைகுட்டையினால மூடிகிட்டு தும்முங்க இருமுங்க
3. மூணு அடி இடைவேளிவிட்டு நிண்ணு பேசுங்க
4. நூத்தி நாப்பத்தி நாலு போகிற வரைக்கும் நீங்க வீட்டைவிட்டு வெளியெ போகாதிங்க.
5. தனித்திருங்க

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...