Wednesday, March 11, 2020

மாட்டுப்பாலுக்கு பதிலாக நிலக்கடலைப் பாலை பயன்படுத்தலாம். GROUNDNUT MILK IN PLACE OF DAIRY MILK




மாட்டுப்பாலுக்கு பதிலாக
நிலக்கடலைப் பாலைபயன்படுத்தலாம்.

GROUNDNUT MILK IN PLACE OF DAIRY MILK


லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிக்கை ஒன்று,  இரண்டு முறைகளில் நிலக்கடலை பால் தயாரிக்கும் வழிமுறையை விளக்குகிறது. ஒன்று பிளெயின் மில்க் (PLAIN MILK) இன்னொன்று சாக்லெட் ஃபிளேரில் தயாரிக்கப்படும் நிலக்கடலைப்பால். 

நிலக்கடலைப்பால் தயாரிக்க என்னென்ன தேவை என்று பார்க்கலாம். வடிகட்டிய தண்ணீர், நிலக்கடலை கொட்டைகள், கரும்புசர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கொக்கோ,  கொஞ்சம் இயற்கை நிறமிகள், கொஞ்சம் உப்பு இவற்றை எல்லாம் பயன்படுத்திதான் இந்த நிலக்கடலை பாலை தயார் செய்கிறார்கள்.

நோ பிரிசர்வேடிவ்,  நோ எமல்சிஃபையர்ஸ், நோ திக்கனெர்ஸ். 31  நிலக்கடலை கொட்டைகள் இருந்தால் ஒரு கப் நிலக்கடலைப்பால் தயார் செய்யலாம் என்கிறது நேஷனல் பீநட் போர்ட் (NATIONAL PEANUT BOARD).

நிலக்கடலை பாலின்
சுவை எப்படி இருக்கும் ?
 

மொத்தத்தில் அல்மாண்ட்பால் என்னும் பாதாம்பால் மாதிரியே இருக்கும். ஆனால் லேசாக கொஞ்சம் நிலக்கடலை வாசம் வரும். பசும் பாலுக்கு பதிலாக கண்டிப்பாக இதனை பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் வைட்டமின்கள், தாது உப்புகள், புரோட்டீன் அவ்வளவையும் சேர்த்து நிலக்கடலைப் பால் தயார் செய்கிறார்கள். அதனால் தான் இதனை சத்துப்பற்றாக்குறை உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் பயன்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1900 ஆண்டுகளுக்கு முன்னால்தான் மாட்டுப்பாலுக்குப் பதிலாக ஒரு செயற்கைப்பால் கண்டுபிடிக்க முயற்சிசெய்தார்கள். அதன் விளைவாகத்தான் பாதாம்பால், சோயாபால், அரிசிப்பால், எல்லாம் பிரபலமாயின.

பால் என்றால் இரண்டு வகைகளைக் குறிப்பிடலாம். ன்று டயரி மில்க் என்று சொல்லப்படும் மாட்டுப்பால், இரண்டாவது  இயற்கையான தாவரவகை பால்கள். இவற்றில் முக்கியமாக நிலக்கடலைப் பால், சோயா மொச்சைப்பால், அல்மாண்ட்பால் எனப்படும் பாதாம் பால், தேங்காய் பால் எல்லாம் அறிமுகம் ஆனது. எந்தப் பாலையும் டயரிமில்குக்கு மாற்றாக  தயாரிக்கப்படவில்லை. ஆனால் நிலக்கடலைப்பாலை அதற்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் தயார்செய்ய  முயற்சி செய்தார் ஜார்ஜ் வாஷிங்க்டன் கார்வர். அவர்தான் முதன் முதலாக நிலக்கடலைபால் தயாரித்தார். அதுமட்டுமல்ல அவர் நிலக்கடலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்தார்.

ல்மாண்ட்மில்க் எனப்படும்
பாதாம்பால் மற்றும்
ஓட்ஸ்பால்


அல்மாண்ட் என்பதும் பாதாம் என்பதும் ஒன்றுதான். பாதாம் கொட்டைகளை நீர்விட்டு அரைத்து வடிகட்டினால்துதான் பாதாம்பால். பாதாம் பாலில் சேச்சுரேட்டட் ஃபேட் மற்றும் கலோரி குறைவாக இருக்கும்.  பாதாம் பாலுக்கு பதிலாக ஓட்ஸ் பாலை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.  அத்துடன் வைட்டமின்கள், தாது உப்புகள், ஆகியவற்றை சேர்த்து ஓட்ஸ் பால் தயார் செய்கிறார்கள். மாட்டுப்பாலைப் போலவே ஓட்ஸ் பாலிலும் காபி மற்றும் தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். ஆனால் ஓட்ஸ் பாலைவிட பாதாம் மற்றும் சோயாபால் பிரலமானவை.

சோயப்பால் மற்றும்
அரிசிப்பால்


சோயாப்பாலை ஏறத்தாழ  தரமான மாட்டுபாலைப் போலவே உபயோகப்படுத்துகிறார்கள். மாட்டு பாலை போலவே சோயா பாலில் அதே அளவு புரோட்டீன் அடங்கியுள்ளது. வைட்டமின் டி வைட்டமின் பி வைட்டமின் பி12 போன்றவையும் சோயாபாலில் உள்ளன. இதனை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, மற்றும் மலேசியா.

அரிசிப்பாலில் கொஞ்சம் இனிப்பு அதிகம். அதனால் இதனை அடுமனை தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதிலும் நமக்கு தேவையான சத்துக்கள் வைட்டமின்கள் இவற்றை சேர்த்துக்கொள்ள முடியும். சிவப்பரிசியை பயன்படுத்தி அரிசிப்பால் தயாரிக்கலாம். அத்துடன் வாசனைக்கு வேனிலா, புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்.

தாவர வகைப்பால்கள்
தயாரிக்க சட்டம் உள்ளது.


யூ எஸ் ஏவில், டயரிமில்க் என்றால் அதில் தாவர வகைப்பாட்டியல் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதற்கு சட்டம் உள்ளது. அது போல தாவர வகைகளில் 30 சதம் பால்பவுடர் சேர்க்கவேண்டும். மீதம் உள்ள 70% தாவர வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

லாக்டோஸ் ஓவ்வாமை
என்றால் உங்களுக்கு
தெரியுமா ?


பால் மற்றும் பால் பொருட்களில் லேக்டோஸ் இருந்தால் லாக்டோஸ் ஓவ்வாமை இருப்பவர்களுக்கு ஆகாது. அதாவது அதனை ஆங்கிலத்தில் லாக்டோஸ் இன்ட்டாலரன்ஸ் (LLACTOSE INTOLERESENCE)) என்கிறார்கள். இந்த லாக்டாஸ் இன்ட்டாலரன்ஸ் இருப்பவர்கள் இந்த டைரிமில்க் அதில் செய்த இதர பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாக லேக்டோஸ் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள்.

நாம் ஏன்
நிலக்கடலைபற்றி
பேசுகிறோம் ?


நாம் ஏன் நிலக்கடலை பற்றி பேசுகிறோம் என்றால் சர்வதேச அளவில் நிலக்கடலையை உற்பத்தி செய்வதற்கு என்று இந்தியாவிற்கு ஒரு பெயர் இருக்கிறது. அதாவது உலக அளவில் நிலக்கடலையை இரண்டாவதாக அதிகமான அளவில் உற்பத்தி செய்வது இந்தியாதான். அதாவது  சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் இருக்கிறோம் நாம். அதனால் நிலக்கடலை சார்புடைய பலதொழில்களை செய்வது நமக்கு வந்து நமக்கு வாய்ப்பாக இருக்கும். தமிழில் நிலக்கடலையின் பெயர் சீட்டு கிழிச்சான்கொட்டை. ஒரு காலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்து கிடைத்த லாபத்தில் வாங்கிய கடனை விவசாயிகள் திருப்பி அடைத்தார்கள். கடனை திருப்பிக்கொடுத்த பின்னர் அந்த கடன் பத்திரத்தை  வாங்கி கிழித்துப்போட்டார்களாம். அதனால்தான் அது சீட்டு கிழிச்சான்கொட்டை ஆனது.

அது தவிர அதற்கு மணிலாக் கோட்டை என்ற பெயரும் உண்டு. அது மருவி மல்லாட்டை என்றும் மல்லாக்கொட்டை என்றும்கூட ஆனது. ஆங்கிலத்தில் கிரவுண்ட்நட்’ என்றும் சொல்கிறார்கள். மேலைநாடுகளில் அதிகமாக இதனை பீ நட்’ என்றும் அழைக்கிறார்கள்.

நிறைவுரை


இந்த கட்டுரையில் புதிய தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கான ஐடியாக்கள் கிடைத்திருக்கும். இந்த கட்டுரையின் நோக்கமும் அதுதான். நமது வேளாண்மை விளைபொருட்களை மதிப்புகூட்டுதல் செய்வது மூலம் நிச்சயமாக நாம் ஒரு தொழில் முனைவராக மாற முடியும். இந்த கட்டுரை உங்களுக்கு பயன் தருவதாக இருந்தால் அன்புகூர்ந்து எனக்கு சொல்லுங்கள். எனது மின்ன்ஞ்சல்: gsbahavan@gmail.com, போன்: +91 8526195370.



1 comment:

Pradeep Rj said...

Significant incorporation in the kinds of agro-based industry is cotton or a rundown of agro-based items. It is, truth be told, the biggest composed modem industry in India. Truth be told, 16% of modern capital and 20% of mechanical work (15 million) is associated with the cotton business. Commute Vakilsearch site to know how to start a agriculture business in india

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...