Wednesday, March 25, 2020

கொரோனாவைக்கண்டு பயப்பட வேண்டாம் கைசுத்தம் பேணுங்கள் ! DO NOT GET SCARED OF CORONA












கொரோனாவைக்கண்டு


பயப்பட வேண்டாம் 
கைசுத்தம்  பேணுங்கள் !

DO NOT GET SCARED OF CORONA
ADOPT HAND HYGEINE &
SOCIAL DISTANCING

 இதை செய்யுங்க 
கொரோனா வராது !

செய்யாதீர்கள் எதையும் 
அடிக்கடி சோப்பிட்டு 
கழுவாத  அழுக்கு 
கைகளால் 

தும்பாதீர்கள்  
இரும்பாதீர்கள் 
கைக்குட்டை மூடாத
வெற்று வாயினால்

தொடாதீர்கள்
மூக்கு வாய் கண்களை 
முடிந்த அளவு 
முயன்று பாருங்கள் 

பேசாதீர் யாரிடமும் 
மூன்றடி இடம் விட்டு 
நிற்காமல் 
முடியும் எல்லாம்
கேளுங்கள் 

கொரோனா வராது 
வந்தாலும் நிற்காது 
வரலாறாகும் இது
பாருங்கள் ! 

DO THE FIVE

WASH HANDS FREQUENTLY
COUGH IN TISSUES
DO NOT TOUCH EYES NOSE & MOUTH
KEEP SPACE DISTANCE
STAY AT HOME


பாதிக்கப்பட்டோர் கணக்கில் 
பாதிக்கப்படாத ஒருவர்கூட 
இருக்கலாம்


உலகம் முழுக்க கோவிட்  19 னால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 23 ஆயிரத்து 142 பேர்.


இந்த பாதிக்கப்பட்டோர் கணக்கில் பாதிக்கப்படாதோர்கூட இருக்கலாம். நோயின் அறிகுறிகளை வைத்து சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கலாம். 

இந்த நான்கு லட்சத்தில் உலகம் முழுக்க இறந்தோரின் எண்ணிக்கை இன்று வரை 18 ஆயிரத்து 96 தான். இது கிட்டத்தட்ட 195 நாடுகளில் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இதை கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. 

இந்த புள்ளி விவரங்களை பார்த்துவிட்டு நாம் பயப்படுவதை விட்டுவிட்டு மருத்துவர்கள் சொல்லும் எச்சரிக்கைகளை, தடுப்பு நடவடிக்கைகளை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவும் வேகத்தை இது தடுக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.


தும்மினாலோ இருமினாலோ  
பயப்படவேண்டாம்


தும்மினாலோ இருமினாலோ அது கொரோனா  என்று பயப்படவேண்டாம். மனிதர்களுக்கு சாதாரணமாக வரும் இருமல் தும்மல் வந்தால்கூட  கோவிட்  19 என்று பயப்படுகிறார்கள்.  

நிறைய பேர்,  சாதாரண ஜலதோஷம் வந்து இருப்பவர்கள்கூட  தனக்கு கோரோனா  வைரஸ் இருக்குமோ  என்று நினைக்கிறார்கள். அது தவறு. 

மருத்துவ நிபுணர்கள் சொல்லுகிறபடி தும்மும்போது அல்லது இருமும் போதும் கைக்குட்டை அல்லது ஏதாச்சும் துணி அல்லது டிஷ்யூ வைத்து கண், மூக்கு, வாய் இவற்றை மூடிக்கொள்ளுங்கள். .

இந்தியா முழுக்க தடை உத்தரவு  உள்ளது.வீட்டைவிட்டு வெளியே செல்லுவதை தவிருங்கள். வெளியூரிலிருந்து விருந்தினர்களை வரவழைக்காதீர்கள். கொரோனா போன பின்னால் கூப்பிடலாம்.

யாரிடம் பேசினாலும் மரியாதைக்குரிய இடைவெளியாக மூன்றடி தள்ளி நின்று பேசுங்கள்.

சாதாரண தும்மல் இருமலைக்கண்டு கொரோனா என்று பயப்பட வேண்டாம்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை முன்னதாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...