Thursday, March 5, 2020

இந்தியாவின் கூடுதலான வெப்பத்திலும் ஈரப்பதத்திலும் கொரோனா வைரஸ் தாக்குப்பிடிக்காது. - COVID 19 CANNOT BEAR HIGH TEMPERATURE













இந்தியாவின்  கூடுதலான வெப்பத்திலும் ஈரப்பதத்திலும்  கொரோனா வைரஸ் தாக்குப்பிடிக்காது.   -  COVID 19  CANNOT BEAR HIGH  TEMPERATURE  & HUMIDITY



கொரோனாவைரஸ் அப்டேட் கோவிட் 19 -  05.03.20

CORONAVIRUS COVID 19UPDATE 05.03.20


இந்தியாவின் 

கூடுதலான வெப்பத்திலும்

ஈரப்பதத்திலும் 

கொரோனா வைரஸ்

தாக்குப்பிடிக்காது.
 


CORONA VIRUS

CANNOT TOLERATE

INDIA’S HIGH

TEMPERATURE 

& HUMIDITY

 

இந்தியாவின் தட்பவெப்பநிலை, கரோனா வைரஸ் பரவ சாதகமாக இருக்காது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஹார்ட் கேர்  பவுண்டேஷன் ஆப் இந்தியாவின் தலைவர் கே கே அகர்வால் அவர்கள் இந்த கருத்தை வலியுறுத்துகிறார். அவர் சொல்லுகின்ற காரணங்கள் நம்புபடியாக இருக்கிறது. அதனால் தான் எபோலா, எல்லோ ஃபீவர்,  சார்ஸ் கொரோனா வைரஸ், மெர்ஸ் கொரோனா வைரஸ், ஆகிய நோய்களின் பாதிப்பு இந்தியாவில் அதிகம் ஏற்படவில்லை என்கிறார் அகர்வால்.  வெப்பம் மற்றும் ஈரப்பதம் (TEMPERATURE & HUMIDITY) குறைவாக இருக்கும் நாடுகளில் இந்த வைரஸ்களின் பாதிப்பு அதிகமிருக்கும். அதற்கு உதாரணமாக நாடுகள் ஜப்பான் மற்றும் தென்கொரியா. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டுமே அதிகம் அதாவது வெப்பமும் அதிகம். ஈரப்பதமும் அதிகம். அதனால் இந்தியாவில் இந்த வைரஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கருதுகிறார்கள் சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்கள். இவை எல்லாம் இந்தியாவுக்கு கொரோனா வராது என்பதற்கு சாதகமான அம்சங்கள்.


கொரோனா வைரஸ்
இந்தியாவையும் தாக்கும்
வாய்ப்பு அதிகம் உள்ளது.


கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கும் வாய்ப்பு எப்படி அதிகம் உள்ளது என்று பார்க்கலாம். அதற்கும் அடிப்படையாக மூன்று காரணங்களை சொல்லுகிறார்கள்.

முதல்  சாதகமான அம்சம்,  இங்கு இருக்கும் மக்கள் தொகை அதிகம். இந்தியாவின் மக்கள் தொகை பல நாடுகளை ஒப்பிடும்போது மிக அதிகம் என்பது நமக்கு தெரியும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவில் வசிப்போர் எண்ணிக்கை 420 பேர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்த நெருக்கமான மக்கள்தொகை மிக வேகமாக நோய் பரவ வாய்ப்பாக இருக்கும்.

இரண்டாவது சாதகமான அம்சம், இந்தியாவில் உள்ள உள்நாட்டு குடிப்பெயர்ச்சி (INLAND MIGRATION). இந்தியாவில்  இது மிகவும் அதிகம். இந்த உள் நாட்டில் நடக்கும் குடிப்பெயர்ச்சி 45 கோடி இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகம். இப்படிப்பட்ட குடிப்பெயர்ச்சி அதிகம் இருந்தால் கொரோனா மாதிரியான நோய்கள் சுலபமாக பரவும். இதனை கட்டுப்படுத்துவதும் கடினம்.

மூன்றாவது அம்சம், இந்தியாவின் பெருநகரங்களை, யாரும் உள்ளே வெளியே போகாதமாதிரி அடைத்து விடுவது கடினம். சீனாவில் உகான் நகரில் இந்த கொரோனா வந்ததும் அந்த மாநிலத்தை உள்ளே வெளியே யாரும் செல்லாதவாறு அடைத்துவிட்டார்கள். இதனை அவர்கள்  லாக்டவுன் (LOCK TOWN) என்று இப்போது அழைக்கிறார்கள். அதுபோல இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களை அல்லது பெரிய நகரங்களை இந்த மாதிரி லாக்டவுன் என்று சொல்லும்படியாக அடைத்துவிட முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் நமது நகரங்களில் அதாவது பெருநகரங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது சாதகமான அம்சம், கொரோனா மாதிரி ஒரு கொடூரமான வைரஸ் கோரத்தாண்டவம் புரிந்தால் அதனை சமாளிக்கும் அளவுக்கு நமது சுகாதாரத் துறையின் கட்டமைப்பு அவ்வளவு உறுதியானது அல்ல.  இந்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி 23 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 15 பேர் இத்தாலி நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் சென்று வந்தோம் என்கிறது அந்தச் செய்தி.


கொரோனா
வைரஸ் நோயால்
அமெரிக்காவில்
ஏற்பட்ட உயிரிழப்பு


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயால் ஏற்பட்ட சாவு எண்ணிக்கை 10  ஆக இருந்தது. அதில் இப்போது புதியதாக கலிபோர்னியா மாநிலத்தில் ஒருவர் இந்த நோய்க்கு பலியாக  மொத்த  சாவு எண்ணிக்கை  11 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனாபற்றிய பீதி அதிகரித்துள்ளது.



அலுவலகங்களில்
பணி செய்பவர்கள்
வீட்டிலிருந்தபடி செய்யலாம்.


பல்வேறு அலுவலகங்களில் பணி செய்பவர்கள் இயன்றவரை வீட்டிலிருந்து செய்யலாம் என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்  இதுபோல சுலபமாக செய்ய முடியும் என்கிறார்கள். அமேசான் உட்பட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்கும்படியாக உத்தரவிட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ்
கொரோனா வைரஸ்
தடுப்புக்கு நிதி உதவி

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்பது மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களின் தொண்டு நிறுவனம். அந்த நிறுவனம்  தற்போது கூடுதலாக 5 மில்லியன் டாலர் தொகையை கொரோனா டுப்பு நடவடிக்கைக்காக நிதி உதவியாக அளித்துள்ளது.

பள்ளி மாணவன் ஒருவன்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
வலைத்தளம் தொடங்கி உள்ளான்.

அமெரிக்காவில் சியாட்டல் என்ற இடத்தில் உள்ளது அமேசான் ஆன்லைன் கம்பெனியின் தலைமை இடம். இங்கு உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் கொரோனாவைரஸ் குறித்த தகவல் மற்றும் விழிப்புணர்வு அளிப்பதற்காக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளான். முழு நேரமாக இந்த பணியை செய்து வரும் அந்த மாணவனை அகில உலகமும் பாராட்டுகிறது. அவில் சிப்மேன் என்பது அந்த மாணவனின் பெயர்.


அமேசான் பணியாளர்
கொரோனாவால்  
பாதிக்கப்பட்டுள்ளார்


சியேட்டலில் இருக்கும் அமேசான் ஆன்லைன் கம்பெனியில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலக அளவில் சுமார் 94 ஆயிரம் பேர் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அதில் இறந்தோரின்  எண்ணிக்கை 3222 ஆக உயர்ந்துள்ளது.

REFERENCES:

1. www.cbsnews.com/ Corona Virus Updates; U.S. Death Tolls Rises To 11 With California’s First Death.

2. www.geekwire.com/ High Scholl Student Near Seattle Builds Website To Serve As A Loading Place For Corona Virus Information

3. www.economictimes.com/ India May Have An Innate, National Defence Against Corona Virus, After All




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...