Sunday, March 15, 2020

தோல்தொழிற்சாலைகளும் அவற்றால் ஏற்படும் மாசும் - AIR POLLUTION CAUSED BY TANNERIES

















செடிகளுக்காக
கிள்ளிக் கொடுத்தால் போதும்,
டாக்டருக்காக அள்ளிக்
கொடுக்க வேண்டாம்

தோல்தொழிற்சாலைகளும்அவற்றால் ஏற்படும் மாசும் 


AIR POLLUTIONCAUSED BY TANNERIES


வாணியம்பாடியில் லெதர் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரிடம் ஒரிஜினல் லெதர்பொருட்களை கடைகளில் எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டேன். அதற்கு அவர்  சொன்னார், ஒரிஜினல் லெதரை எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லட்டுமா ..? என்றார்.  சரி  என்றேன். அப்போது அவர் சொன்னார்.   ஜினைன்  லெதர்  என்ற லேபிள் ஒட்டி வருகிறதா என்று பாருங்கள்.  அப்படி ஒரு லேபிள் ஒட்டியிருந்தால் அது டூப்ளிகெட் என்றார் சிரித்தபடி.

ஆயிரம் கிலோ தோலை பதப்படுத்தினால் தோராயமாக 200 கிலோ லெதர்தான் கிடைக்கும். மீதம் உள்ள 800 கிலோவும் கழிவுதான். அது திரவ மற்றும் திடக்கழிவாக இருக்கும். அந்தக்கழிவில் முக்கியமாக இருப்பது குரோமியம்தான். குரோமியம் ஹெவிமெட்டல். அதனை கார்சினோஜெனிக் (CARCINOGENIC) என்கிறார்கள். அப்படி என்றால் அது கேன்சரை உருவாக்கக்கூடியது என்று அர்த்தம்.

முதல்  உலகப்போருக்கு பின்னால்தான் இந்தியாவில் நவீன தோல் தொழிற்கூடங்களுக்கு பிள்ளையார்சுழி  போடப்பட்டது.  1915 ல் 25 தொழிற்கூடங்களாக தொடங்கி 28 ஆண்டுகளுக்குப் பிறகு  1941 ல் 114 ஆக உயர்ந்தது.  இன்று உலகின் 13 சத தோல் உற்பத்தி இந்தியாவுக்கு சொந்தமானது. மேலும் இந்தியாவின் 5 வது மிகப்பெரிய தொழில் இது. இந்தியாவின் 40 சதத் தோல்கூடங்கள் தமிழகத்தில்தான் உள்ளன.


உத்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஆகிய 5 மாநிலங்களில், 1000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் (1980) 80 மில்லியன் மாட்டுத்தோல்கள் 17.8 மில்லியன் எருமைத்தோல்கள், 74.5 மில்லியன் வெள்ளாட்டுத்தோல்கள், 31.7 மில்லியன் செம்மறி ஆட்டுத்தோல்கள், இந்தியாவில் ப்ராசஸ் செய்யப்படுகிறது.

அதிக மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளில் ஒன்று தோல் தொழிற்சாலை. நிலம், நீர், சுற்றுச்சூழல், மற்றும் காற்று ஆகியவை அனைத்தையும் மாசுபடுத்தக்கூடியவை தோல் தொழிற்சாலைகள்.

தமிழ்நாட்டில் தோல் தொழிலைப் பொறுத்தவரை  தலைமை தாங்குவது  வேலூர் மாவட்டம்தான். அடுத்த நிலையில் அதிகமான தொழிலகங்களை கொண்டுள்ளவை செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள். அதற்கு அடுத்த நிலையில்  இருப்பது கோயம்புத்தூர் மாவட்டம். இவை தவிர, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, ராமநாதபுரம், தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களிலும், சிறிய எண்ணிக்கையில், தோல் தொழிற்சாலைகள் உள்ளன.

திண்டுக்கல்லில் உள்ள தொழிற்சாலைகள், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலிருந்தும் மகாராஷ்ட்டிரா ஆந்திரப் பிரதேசம், கேரளா , ஹரியானா, பஞசாப் , டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்தும், தங்களுக்கு தேவையான கச்சா தோல்களை (SKYDES & SKINS) வரவழைத்து ப்ராசஸ் (PROCESS)செய்கின்றன.

திண்டுக்கல் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் உள்ள தோல் தொழிற்சாலைகள் ஆற்றங்கரைகளிலேயே அமைந்துள்ளன. திண்டுக்கல்லில் உள்ள தொழிற்கூடங்கள் அனைத்தும் 60 முதல் 80 வருட  வயதுடையவை.

இந்தியாவின் ப்ராசஸ் செய்யப்பட்ட தோல் உற்பத்தியில்(FINISHED  LEATHER  PRODUCTS) 60 சதம் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவின் தோல் ஏற்றுமதியில்  தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 45 சதம். தமிழகத்தில் மட்டும் சுமார் 750  டேனரிஸ் உள்ளன. நாள் ஒன்றுக்கு 500 முதல், 1000  டன் தோல் ப்ராசஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் தோல் உற்பத்தியில் ஓராண்டின் மொத்த மதிப்பு 10,000 கோடி ரூபாய்.

தோல் தொழிற்சாலைகளின் கழிவில் ஆவியாக வெளியேறும் அம்மோனியா மற்றும் சல்பைட் சேர்ந்திருப்பதால், அவற்றால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப்பகுதி காற்றில் மிகுதியாக கரைந்திருக்கும்.

பி.எம். கலிலூர் ரஹிமானின்  கருத்துப்படி 100 சதவீத தொழிலகங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் அவ்வளவும்  சுத்திகரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தோல்பொருட்கள் உற்பத்தி செய்யும் 495 யூனிட்டுக்கள், ஷூக்கள் , ஷூக்களின் மேல் பகுதி , லெதர் கார்மெண்ட்ஸ்,  மேலும் பலவகை தோல் பொருட்களை தயரிக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச தரத்திற்கு  சவால் விடுபவை.

மாடுகள் போன்ற பெரிய பிராணிகளின் தோல்களை ஆங்கிலத்தில்   ஹைட்  (HYDE) என்றும் வெள்ளாடு, போன்ற சிறிய பிராணிகளின் தோல்களை  ஸ்கின் என்றும் சொல்கிறார்கள்.  ஆங்கிலத்தில் பேலட் (PALET)என்று குறிப்பிடப்படுவது ரோமம் நீக்காத தோல் அல்லது பதனிடுவதற்குத் தயாராக இருக்கும் உரிக்கப்பட்ட தோல் என்று பெயர்.  செருப்புக்கள், ஷூக்கள், ஹேண்ட் பேக், லெதர் கார்மெண்ட்ஸ், உற்பத்தி செய்வதை பேக்டரி என்றும்  கம்பெனி என்றும்  சொல்லுகிறார்கள்.  ஆனால் டேன்னிங் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு தோல் பதனிடும் அலகு  (TANNERY UNITS) என்று பெயர்.

லெதர் என்றால் என்ன ..?

பதனிடப்பட்ட தோல்தான் லெதர். உரிக்கப்பட்ட தோலை பதனீடு செய்த தோலாக மாற்றும் தொழிற்கூடங்கள்தான் டேனரிஸ்கள். பதனிடப்பட்ட தோலில் மூன்று வகைகள் உள்ளன. ரோமத்துக்கு நெருக்கமாக இருக்கும் மெல்லியதோலை பிரித்து எடுத்தால் அதன்பெயர்  டாப் கிரெய்ன் லெதர் (TOP GRAIN LEATHER). அதற்கு அடியில் இருக்கும் பகுதியை தனியாக பிரித்து எடுத்தால்  அதற்கு  ஸ்பிலிட் லெதர் (SPILIT LEATHER)  என்று பெயர்.

டாப் கிரெய்ன் மற்றும்  ஸ்பிலிட் லெதர்  இரண்டையும் பிரிக்காமல் இருந்தால் அதன்  பெயர்   ஃபுல் கிரெய்ன் லெதர் (FULL GRAIN LEATHER) .  தரத்தில்; ஃபுல் கிரெய்ன் லெதர் தான் நம்பர் ஒன்.  டாப் கிரெய்ன் நம்பர் டூ.   ஸ்பிலிட் லெதர் என்பது  கடைசி கிரேட்.

சில ஹைட்களின் மேற்புறம்  பூச்சிகளால் தாக்கப்பட்டு இருக்கும்.  காயத்தினால் உண்டான வடுக்கள் இருக்கும். பார்க்க கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருக்கும்.  அவை கண்களை உருத்தாதவாறு  தேய்த்தோ அல்லது புடைத்தெழுமாறு எம்பாஸ் (EMBOSS) செய்தோ மறைத்து விடுவர். அதனை  டாப் கிரெய்ன் லெதர் என்று கூறுவர்.

கடைகளில் வைத்திருக்கும்  பொருட்கள் உண்மையிலேயே லெதரா ..?  செயற்கையானதா ..?  இதை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது. இதில் முன் பரிச்சயம் இல்லாதவர்களால் இதனை கண்டிப்பாய் கண்டுபிடிக்க முடியாது.

வாழ்க்கையில் கூட  உண்மை எது..?  போலி எது என்று கண்டுபிடிப்பது சுலபமான காரியம் அல்ல.  ஸ்பிலிட் லெதர்  டாப் கிரெய்ன் அல்லது ஃபுல் கிரெயன்  லெதரைவிட மலிவானது. மற்றும் ஸ்பிலிட் லெதரிலும்  மாசி மரு  எதுவும் இருக்காது. சூப்பர் லெதர் என்று சொல்லும்படி அட்டகாசமாக இருக்கும். 

ஒப்பனையும் அலங்காரமும் செய்தால்  டாப் கிரெய்ன் மற்றும் ஃபுல்கிரெய்ன் லெதர்ஐக்கூட ஓரங்கட்டிவிடும். ஸ்பிலிட் லெதர்.  பாலியூரித்தேன் கோட்டிங் அத்துடன் பிளேட்டிங் மற்றும் செயற்கையான குறியிடுதல் போன்றவற்றால் ஸபிலிட்லெதரின் முகத்தையே  முற்றிலுமாக மாற்றிவிட முடியும்.  டாப்லெதர் கிரெய்ன் வைத்து பிசினெஸ்  செய்ய விரும்பினால், கூடுதலான பைசாவை முதலீடாக கொட்டித் தீரவேண்டும்.

ஸ்பிலிட் லெதருக்கும் மலிவான லெதர் ஒன்று உண்டு . அதன் பெயர் பேண்டட் லெதர் (BANDED LEATHER).  பேண்டட் லெதர் என்னவென்று புரிந்துக் கொள்ள  முதலில் பார்ட்டிகிள் போர்ட்டை (PARTICLE BOARD) புரிந்துக் கொள்ள வேண்டும்.  மரவேலைகளில் வேஸ்ட் ஆக விழும் துண்டு துக்காணி இவற்றையெல்லாம் தண்ணீரும் பசையும் சேர்த்து தயாரிக்கப் படுபவைதான் பார்ட்டிகிள் போர்ட்.

இப்போது உங்களுக்கும் புரியும். பாண்ட் லெதர் என்பது லெதர் இண்டஸ்ட்ரீஸ்ன்  பார்ட்டிகிள் போர்ட். பைபிள்,  குர்ஆன், பகவத்கீதை  போன்றவற்றிற்கும், காஸ்ட்லியான டயரிகளுக்கும் அட்டைபோடுவது, போட்டோ ஆல்பம் செய்ய,  இவை  எல்லாவற்றிற்கும், உகந்தது பேண்டட்லெதர். சுருக்கமாக சொல்லப்போனால் பாண்டட்லெதர் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை.

கொஞ்சநேரம்  காற்று மாசுபட்டு,  அதனை பழுதுபார்க்கும்  செடிகொடிகள்  பற்றி மறந்து விட்டோம். ஆரியக் கூத்தாடினாலும்  காரியத்தில் கண்ணிருக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது ?

தோல்தொழிற்சாலை உள்ள நகரங்களில் காற்றுமாசு அதிகம் இருக்கும். அதிலும் வீட்டுக்குள் கட்டிடத்திற்குள் இருக்கும் மாசுக்களின் அடர்த்தி இன்னும் அதிகம். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கீழ்கண்ட 11 செடிகளில் ஏதாவது ஒன்றையோ அதற்கு மேற்பட்ட செடிகளையொ வீட்டின் உள்ளேயும் வளர்க்கலாம். வெளியேயும் வளர்க்கலாம். 100 சதுர அடிக்கு 1 செடி போதும்.

அரிகாபாம், மணிபிளாண்ட், ஸ்பைடர்பிளாண்ட், பர்பிள் வாஃபிள்பிளாண்ட், பேம்புபாம், வேரிகேட்டட் வேக்ஸ் பிளாண்ட், லில்லி டர்ஃப், பாஸ்ட்டன்ஃபெர்ன், ட்வார்ஃப் டேட்பாம், மாத் ஆர்கிட்ஸ், பார்பெர்ட்டன் டெய்சி (ARECA PALM, MONEY PLANT, SPIDER PLANT, PURPLE WAFFLE PLANT, BAMBOO PALM, LILY TURF, BASTON FERNWARF DATE PALM, MOTH ORCHIDS, BARBERTON DAISY)

செடிகளுக்காக கிள்ளிக் கொடுத்தால் போதும், டாக்டருக்காக அள்ளிக் கொடுக்க வேண்டாம்.


1 comment:

Muralidharan Ramarao said...

மரமே மருந்து.

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...