WONDER TREES OF THE WORLD - உலகின் அதிசய மரங்கள்
டிராகன் பிளட் ட்ரீ
கேனரி தீவுகளின்
அதிசயம் - பகுதி 2
DRAGON BLOOD
TREE OF
CANARY ISLANDS
- PART 2
டிராகன்பிளட் மர விதைகள் விற்பனைக்கு
கிடைக்கும்
டிராகன்பிளட் பற்றிய கட்டுரை எழுதியதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. காரணம் வெளி
உலகுக்குத் தெரியாத ஒரு மரம். அதன் இருப்பிடமான சொகோத்ரா தீவும் தெரியாத இடம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த
மரத்தின் 10 விதைகள் 22 டாலருக்கு கிடைக்கும் என்று அமேசானில் படித்ததும் எனக்கு தலை சுற்றியது. அது மட்டுமல்ல டிராகன்பிளட் மரத்தின் எண்ணெய், சென்ட், ஜெபமாலை, அகர்பத்தி, சாம்பிராணி, சோப்பு, பெண்கள்
அணியும் பலவிதமான ஆபரணங்கள், எல்லாம் அமேசானில் தயாராக இருக்கின்றனவாம். இந்த படம் போட்ட டீஷர்ட் கூட ரெடியாம். பணம்தான் வேண்டும். அதுவும் டாலரில்.
கேனரி ஐலண்டில்கூட இருக்கும் ட்ராகன் பிளட்மரங்கள்
சொகோத்ரா தீவில் மட்டும் தான் இந்த மரம்
இருக்கிறது என்று நான் நினைத்தேன். ஆனால் இன்னும் பல இடங்களிலும் இந்த மரங்கள் இருக்கின்றன என்று
தெரிகிறது. இந்த மரங்களின் தாவிரவியல் பெயர் டிரசீனா டிராகோ (DRACENA
DRACO) கேனரி ஐலண்ட் ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் இருக்கின்றன. இந்த கேனரி ஐலண்ட் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தது.
இந்த தீவினை முதன்முதலாக பார்வையிட்ட
ரோமானியர்கள் இதனை இன்சுலா கேனரி என்றுதான் அழைத்தார்கள். இன்சுலாகேனரி என்றால் லத்தீன்
மொழியில் ஐலண்ட் ஆஃப் டாக்ஸ் என்று அர்த்தம்.
அதாவது நாய்கள் இருக்கும் தீவு. இங்கு இருக்கும் நாய்கள் எல்லாம் மெகா
சைஸ். பார்க்க கன்றுக்குட்டி மாதிரி இருக்குமாம்.
கேனரி தீவுகளுக்கு சொந்தமான
அட்லாண்டிக்கேனரி
பறவை
கேனரி தீவுகளுக்கு சொந்தமாக அந்த பெயரிலேயே ஒரு பறவை உண்டு. அதன் பெயரும் கேனரி. பார்க்க நம்மூர் தவிட்டுக் குருவி மாதிரி இருக்கும். அதன் புகைப்படத்தை பார்த்தேன்.
தவிட்டுக்குருவியை அரைத்த மஞ்சளை கரைத்த
நீரில் முக்கி எடுத்த மாதிரி ஏறத்தாழ அதே
அளவில் இருக்கும். கேனரி தீவுகள் அட்லாண்டிக் ஓஷனில் இருப்பதால் இதனை அட்லாண்டிக் கேனரிபேர்ட் என்று சொல்லுகிறார்கள். அதனால் கேனரி
தீவின் பெயருக்கும் இந்த குருவிக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.
பத்துப்பதினைந்து ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும்
இளம்மரங்கள் தனி மரமாய் வளர்ந்து 10 முதல் 15 ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். பிறகு கிளைவிட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கிளையும் இரண்டாக பிரிந்து வளரும். அதனால் தான் இதனை ஆங்கிலத்தில் டை காட்டமஸ் பிரன்ச்சின்ங் (DICHOTAMOUS
BRANCHING)என்று சொல்லுகிறார்கள்.
அந்த கிளைகள் மறுபடியும் 10 முதல் 15 ஆண்டுகள் வளர்ந்து மறுபடியும் கிளைக்கும். நன்கு வளர்ந்த மரங்கள் ஒரு குடைபோல தோன்றும்.
சொகோத்ரா ஏமன் நாட்டின் ஒரு தீவு
சொகோத்ரா அரேபியக் கடலில் ஏமன் நாட்டில் உள்ள
ஒரு தீவு. இங்கு உள்ள மரத்தின் தாவரவியல் பெயர் டிரசீனா சின்னபாரி (DRACENA CINNABARI)என்பதாகும்.
ஆரஞ்சு நிற
பழங்கள் தரும்
இந்த மரத்தின் பூக்கள் வெள்ளை அல்லது பச்சை நிறமாக பூக்கும். மனத்தை மயக்கும் நறுமணம் வீசும். பூக்கள் நீளநீளமான கொத்துக்களாக பூக்கும். இதில் பிஞ்சு காய்கள் தோன்றிப் பச்சை மஞ்சள் சிவப்பு கருப்பு என்ற
நிறத்தில் பழங்கள் கனியும். ஒவ்வொரு பழத்திலும் மூன்று விதைகள் இருக்கும். சிறு பிராணிகள் மற்றும் பறவைகள் இதன்
விதைகளை சுவைத்த பின்னர்
பல இடங்களிலும் தனது கழிவுகள் மூலமாக பரப்புகின்றன.
வார்னிஷ்
தயாரிக்க உதவும்
பதினெட்டாம்
நூற்றாண்டு வாக்கில் வயலின்
செய்பவர்கள் இத்தாலியில் இந்த மரத்தின் பாலை வார்னிஷாக இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். மரச் சாமான்களுக்கு கவர்ச்சி கூட்ட வார்னீஷ் அடிப்பார்கள். வார்னீஷ் அடித்தால் மரங்கள் பளபளப்பாக இருக்கும். மரங்களில் இருக்கும் சிறு சிறு ஓட்டை உடைசல் ஆகியவை தெரியாமல் மறைந்து போகும். கரையான் மரத்தில்
வாய்வைக்க பயப்படும். மெடிட்டரேனியன் பகுதிகளில் மரங்களின் பால் மற்றும் பிசின்களைத்தான் வார்னிஷாக அதிகம் பயன்படுத்தினார்கள்.
ஆதிகாலத்தில் வார்னிஷ் தயாரித்த முறை
ஏதாவது ஒரு
மரத்தின் பிசின் அல்லது பாலுடன் மரத்தின் சாறு மற்றும் அத்துடன் ஏதாவது ஒரு கரைப்பான் சேர்த்து கரைத்தால் அதுதான் வார்னிஷ்.
அப்படித்தான் டிராகன் பிளட் மரத்தின் சிவப்பு நிற பாலில் வார்னிஷ் செய்தார்கள்.
இந்தியா சீனா ஜப்பான் ஆகிய நாடுகளில் இப்படி வார்னிஷ் பயன்படுத்தும் பழக்கம் ஆதி காலத்திலேயே இருந்து வந்துள்ளது.
கற்றாழை போலத்
தென்படும் இலைகள்
இதன் இலைகள்
கற்றாழை இலைகள் போல நீள நீளமாக இருக்கும். இவை குறைந்தது நான்கு ஆண்டுகள்
மரத்தில் இருக்கும். பின்னர் அவை உதிர்ந்து விழும். இலைகள் மரத்தின் உச்சி பகுதியில்
தோன்றும்.
பல நோய்களை
குணப்படுத்த பயன்படுத்தினார்கள்
இந்த மரத்தின்
பிசின் அல்லது பாலை பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தினார்கள். அதிலும் கிரேக்கர்கள்
ரோமானியர்கள் மற்றும் அரேபியர்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். மந்திர
தந்திரம், பில்லி சூனியம், மாந்திரீகம் மனோவசியம், தகரத்தை தங்கமாக்கும் மாயாஜாலம் போன்றவற்றை செய்யக் கூட கை
கொடுத்தது இந்த டிராகன் பிளட்
ட்ரீ.
TO READ FURTHER MORE
1.
பாட்டில் மரம் – ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND
– Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
2.
மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய
மரம் - MONKEY PUZZLE -
TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
3.
டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான
அழகுமரம் - TRAVELLER’S PALM
- IS A DIFFERENTLY BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
4.
செக்கோயா உலகின்
உயரமான மரம் - KING SEQUOIA WORLDS' TALLEST TREE Date of Posting:
17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
5.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE PET TREE OF ROOSEVELT - Date of Posting:
08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
6.
மரூலா மரம் - ஆப்ரிக்காவின் சிறுதொழில் மரம் - MARULA - ENTREPRENEUR FRIENDLY AFRICAN TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
7.
பேவோபாப் - கல்லறையாகக்கூட பயன்பட்ட மரம் BAO BAB - ONCE USED CEMETRY - Date of Posting:
07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
8.
டிராகன் பிளட் ட்ரீ - சாக்ரடிஸ் பயன்படுத்திய மருத்துவ மரம் - DRAGON BLOOD RARE HERB USED BY
SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
9.
கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு
பாத்திரம் தரும் மரம் CALABASH - BLESS BOWELS TO SAINTS - Date of Posting:
29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
10.
முருங்கை - பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம் MURUNGAI - GOOD FOR MAL- NUTRITIONED BABIES - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
11.
வேப்ப மரம் கிராமத்து
மருந்து கடை - VEPPA MARAM
- VILLAGE PHARMACY OF THE
WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
12.
பாலைவன மக்களின் வாழ்வாதாரம் - VANNI
LIVELIHOOD TREE OF DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017
- https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
13.
அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம் SENCHANTHANAM ONLY CAN BLOCK
ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html
No comments:
Post a Comment