எட்டிப்பார்க்கிறதுஇந்தியாவிற்குள்கோவிட் 19 கொரோனா வைரஸ்
CORONAVIRUS
COVID 19
PEEPS INTO INDIA
கொரோனாவைரஸ்’சில் கோவிட் 19 ல் இரண்டு வகை
வைரஸ் கிருமிகள்
கண்டுபிடிப்பு
கோவிட்
19 வைரஸ்’ல் இரண்டு வகை கிருமிகள் இருக்கின்றன. ஒன்று அதில் தீவிரம் அதிகமானது. இன்னொன்று
கொஞ்சம் சாதுவானது. தீவிரமானது 70 சத பாதிப்பை உண்டாக்கும். சாதுவான 30
சத பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். இதுபற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.
ஆனால் பொதுவாக கோவிட் 19 ன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்கிறார்கள். முக்கியமாக சீனாவில் ஏற்படும் சாவு எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் இதர நாடுகளில் பாதிப்பு
அதிகரித்து வருகிறது. இந்த சமயம் இன்னும் கூடுதலாக கோவிட்
19 பற்றி கூடுதலான தகவல்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
கோவிட்
19 வைரஸ்’ல் தாக்கிய பின்னால்
நம் உடலில் ஏற்படும்
அறிகுறிகள்
கோவிட்
19 வைரஸ்’ன் அதிகபட்சமான
இன்குபேஷன் பீரியட் (INCUBATION PERIOD) 15 நாட்கள். அதாவது கோவில் 19 வைரஸ் உடலில் புகுந்தபின்
அறிகுறிகளை வெளிக்காட்ட 5 முதல் 7 நாட்கள் ஆகும். அதற்கு பிறகு தனது கைவரிசையை காட்ட ஆரம்பிக்கும்.
நஷ்ட்த்தில் ஒரு லாபம் பார்க்க திட்டமிடும் சீன அரசு
கோவில் 19
னால், சீனாவில் மொத்தமாக் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,270 பேர். இறந்தோரின் எண்ணிக்கை 2981. இ து மார்ச் 3ம் தேதி வரையான சீன அரசின் புள்ளிவிவரம். கோவிட் 19 தொடர்பான மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய உற்பத்தி
நிறுவனங்களை முடுக்கி விட்டுள்ளது
சீன அரசு. இனி
இதர நாடுகளுக்கும் இந்த மருத்துவ பாதுகாப்பு சாதனங்களின் தேவை அதிகம் இருக்கும். ஏற்றுமதியில் ஒரு கை பார்க்கலாம் என்று கணக்கு போடுகிறது சீனா என்கிறார்கள்.
இந்தியாவிற்குள்ளும்
எட்டிப்பார்க்கிறது கோவிட் 19
வைரஸ் நோய்
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு
பேருக்கு கோவிட் 19 வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் இத்தாலி நாட்டுக்கு போய் வந்தவர்கள். முதல்கட்ட பரிசோதனைதான் இவர்களுக்கு முடிந்துள்ளது. பூனா பரிசோதனை நிலையம் இரண்டாம் கட்ட சோதனையில் இதனை உறுதி செய்ய வேண்டும். அதுவரை அவர்கள்
கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் பாசிட்டிவ் என்று 29 பேர் இதுவரை
உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். யுனைடெட் அராப் எமிரேட்ஸ்’ல் ஒரு இந்தியர் கோவிட் 19 வைரஸ்’ஸால் முதன்முதலாக பாதிக்கப்பட்டுள்ளார். அதையும் சேர்த்தால் இந்தியாவின் மொத்த
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயரும்.
உலக அளவில் கோவிட்
19 வைரஸ் இதுவரை 3400 பேரை கொன்றுள்ளது. இதுவரை 90
நாடுகளில் பரவியுள்ளது. மெயின்லேண்ட் சீனாவில் மட்டும் ஏறத்தாழ 3000
பேர் இறந்துள்ளார்கள். இந்த 90
நாடுகளிலும் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சம் பேருக்கும்மேல்.
‘இந்தியா, கோவிட் 19 குறித்து பயப்பட வேண்டாம்’ என்று
அறிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் உயரதிகாரி டாக்டர் ரோட்ரிகோ ஆப்ரின். இந்தியாவில்
பாதிக்கப்பட்டவர் அனைவருமே வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்பதை கவனிக்கவேண்டும் என்கிறார் அவர்.
ஒரு கண்ணில்
வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பா ?
கோவிட் 19 வைரஸ்நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில்
பல
நாடுகளும் தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டினருக்கு தடை செய்ய விசாக்களை ரத்து செய்துள்ளார்கள். சீனா தென் கொரியா ஜப்பான் ஈரான் ஆகிய நாடுகளின் விசாக்களை ரத்து
செய்துள்ள இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விசாக்களைமட்டும்
ரத்து செய்யவில்லை. இந்த நாடுகளிலும் கோவிட் 19 வைரஸ்
வேகமாக பரவி வருகிறது. அதனால்தான் பிற நாடுகள், ஒரு கண்ணில்
வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது நியாயமா என்று இந்தியாவை கேட்கின்றன. கோவிட் 19 உகான் நகரில் முதன்முதலாக தாக்கத் தொடங்கியது 2019ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி. ஆனால் சீனா
அதனை ஜனவரி முதல் வாரம் தான் அறிவித்தது.
கொரோனா வைரஸ் மூன்று முக்கிய நோய்களை நமக்கு அறிமுகம்
செய்துள்ளது. அவை சார்ஸ் கொரோனா வைரஸ், எம் இ ஆர் எஸ் கொரோனா வைரஸ்
மற்றும் கோவிட் 19. கொரோனா வைரஸ். இவற்றுள் கோவிட் 19 வைரஸால்
ஏற்பட்ட சாவுஎண்ணிக்கை குறைவுதான் என்கிறார்கள். இதனால் 0.7 சதம் முதல் 3.4 சதம் மட்டுமே ஏற்படும் என்று சொல்லுகிறார்கள்.
இந்தியாவில்
கேரளாவில்
பத்தனாம்திட்டம்
நகரத்தில்
ஏற்பட்ட
முதல் பாதிப்பு
இந்தியாவில் முதல் கொரோனா
பாதிப்பு கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா என்ற நகரத்தில் ஏற்பட்டது. இங்கு ஐந்து நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு
சென்று வந்தவர்கள். இவர்கள் பத்தனம்திட்டா நகரைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில்
காஞ்சிபுரம்
நகரத்தில்
ஏற்பட்ட
முதல் பாதிப்பு
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் கோவிட் 19 வைரஸால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 45 வயதுடைய இவர் ஓமனில் இருந்து காஞ்சிபுரத்திற்கு திரும்பியவர். தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்த்து இந்தியாவில் கோவிட் 19 வைரஸால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில்
மிக அதிகமாக
பரவி வரும் கொரோனாவைரஸ் நோய்
சீனா
ஈரானுக்கு அடுத்த்தாக இத்தாலியில் கொரோன அதிகமாக பரவியிருக்கிறது.
இதுவரை கொரோனாவுக்கு பாதிப்புக்கு ஆளானார்களின் எண்ணிக்கை 2500
ஆக இருந்தது 5,700
பேர் ஆக அதிகரித்துள்ளது 36 ஆக இருந்த சாவு எண்ணிக்கை 23 ஆக
அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
பிரான்ஸ் நாட்டில்
கவலை தரும்
வகையில் பரவும்
கொரோனா வைரஸ்
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட சாவு எண்ணிக்கை வெறும் மூன்றாக இருந்தது ஒரேவாரத்தில் 949 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொரோனா வைரஸ் நோயினால் பாதிப்படைந்துள்ளனர். 16 ஸ்பெயின் நாட்டில் 470
பேர் பாதிப்படைய 10 பேர் மரணமடைந்துள்ளார்கள். அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்
89 ஐ தாண்ட அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில் இதன் பாதிப்பு சனிக்கிழமை
(01.03.2020) வரை 100 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த
அமெரிக்காவில் நோய் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட்
19 வைரஸ்நோய்நமக்கு வராமல்
இருக்க
என்ன செய்ய
வேண்டும் ?
1. கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுங்கள்.
2. யாரையும் சந்திக்கும்போது 6 அடி தொலைவில் நின்று
பேசுங்கள்.
3.எதற்கும்
பாதுகாப்பாக முகத்தில் பாதுகாப்பு கவசம் அணிந்து கொள்ளுங்கள்.
4. ஜன நெருக்கடி மிகுந்த இடங்களுக்கு
செல்வதை தவிருங்கள்.
5. கூடுமானவரை விமான பயணங்கள் மற்றும் சுற்றுலா பயணங்களை தவிருங்கள்.
6. கொரோனாவைரஸ், கோவிட் 19 நோய்பற்றி, இந்நோய் பரவும் விதம்,
நோயின் அறிகுறிகள், நோய் தடுப்பு
முறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
8. கோவிட்வைரஸ் கோவிட்
19 நோயின் அறிகுறிகள், மூக்கு
ஒழுகுதல் (RUNNY NOSE), வறட்டு இருமல் (DRY
COUGH), காய்ச்சல் (FEVER) மூச்சு
விடுதலில் சிரமம்(DIFFICULT BREATHING).
No comments:
Post a Comment