Friday, March 6, 2020

கொரோனாவைரஸை கட்டுப்படுத்தும் 10 வழிமுறைகள் TOP TEN ACTIONS TO CONTROL COVID 19 VIRUS






கொரோனாவைரஸை 

கட்டுப்படுத்தும் 

10 வழிமுறைகள் 


TOP TEN ACTIONS

TO CONTROL

COVID 19 VIRUS  





2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்நோய்  இந்தியா உட்பட ஏறத்தாழ 90 நாடுகளுக்கு இது வரை பரவி உள்ளது என தெரிகிறது. இவற்றில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஈரான், கத்தார் அயர்லாந்து, தென்கொரியா, இத்தாலி ஆகியவை முக்கியமான நாடுகள். இந்தியாவில் 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 
அரியானா மாநிலத்தில்
கூர்கான் நகரில்
கொரோனா வைரஸ்

கூர்கான் நகரில் உள்ள பே டிஎம்’ (PAYTM) அலுவலக பணியாளர் ஒருவருக்கு ஒருவர் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூர்கான் நகரம் புது தில்லிக்கு அருகில் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பேடிஎம் அலுவலகம் இரண்டு கட்டாய விடுமுறை அறிவித்து பணியாளர்களை எல்லாம் வீட்டுக்கு  னுப்பியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த பணியாளர்கள் இத்தாலி சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேடிஎம் கம்பெனி, நொய்டாவில் 5 அலுவலகங்களையும் கூர்கானில்  ஒன்றையும் வைத்துள்ளது.


டெல்லி, ஹைதராபாத்தில் 
கொரோனா வைரஸ் 
நோய்த்தொற்று உறுதி 
செய்யப்பட்டுள்ளது.


அண்மையில் டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் இரண்டுபேர் கொரோனாவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. இதுதவிர ஜெய்ப்பூர் நகரில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே இத்தாலி சென்று திரும்பியவர்கள். இத்தாலி மற்றும் தென்கொரியாவில் கொரோனவைரஸ் நோய் மிக மோசமாக பரவி வருவதாக செய்திகள் வருகின்றன.

கேரள மாநிலத்தில்
கொரோனாவால்
பாதிக்கப்பட்ட மூவர்
சிகிச்சையில் குணம்
அடைந்துள்ளார்கள்.


சில வாரங்களுக்கு முன்பாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என மூவர் கேரளாவில் உறுதி செய்யப்பட்டநர். அந்த மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் ஆச்சரியப்படும் வகையில் குணம் அடைந்து உள்ளார்கள்.  அவர்கள் மூவரும் சீனாவில் கல்வி பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமாகியுள்ள சிங்கப்பூர் ஓவியரின்
கொரோனாவைரஸ் கார்ட்டூங்கள்


சிங்கப்பூர் ஓவியர் ஒருவர் கொரோனாவைரஸ் பற்றி வரைந்துள்ள கார்ட்டூன்கள் பிரபலமாகியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒரு கார்ட்டூனிஸ்ட் தனது கார்டூன் படங்களால் வைரஸ் தடுப்பு செய்திகளை பரப்பி வருகிறார். சிங்கப்பூர் ஓவியர் வி மேன் கோவ் (WEI MAN KOV)வரைந்த இந்த  கார்ட்டூன் படங்கள் கொரோனாவைரஸைவிட வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.


இந்த இன்ஸ்டாகிராம் கார்ட்டூன் படங்கள் மூலம் வைரஸ் எப்படி பரவுகிறது ? அதனை பரவாமல் தடுக்க என்ன செய்யலாம் ? நோய் வந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் ? என்பது பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லி உள்ளார் இவர். அவர் சொல்லி உள்ள கருத்துக்களை இங்கு தொகுத்து அளித்துள்ளேன்.

1 . அடிக்கடி தும்மல் இருமல் போடுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தும்மல் அல்லது  இருமல் யாரிடமிருந்து வந்தாலும் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்களிடம்  பாதுகாப்பாக இருங்கள். முக்கியமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் தும்மும்போது அல்லது இருமும்போதும் தெறித்துவிழும் எச்சில், தும்மல், இதரவகை திரவம் எதுவாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானவர்களின்  மூக்கு, வாய், கண்கள், மற்றும் வாய் மூலமாக உள்ளே செல்லுகிறது. அதன் மூலம்தான் இந்த கொரோனாவைரஸ் ஆரோக்கியமானவர்களின் உடலில் நுழைந்து இந்த நோயை ஏற்படுத்துகிறது.


2. யாரிடமும் கொஞ்சம் தொலைவாக நின்று பேசுங்கள். சிலர் பேச ஆரம்பித்தால் அவர்கள் குற்றால அருவியைக்கூட தோற்கடித்துவிடுவார்கள். அவர் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலில்  நாம் நனைந்துவிடுவோம். அப்படிப்பட்டவர்களிடம் ஒரு பாதுகாப்பான தூரத்தில் நின்று பேசவேண்டும். அல்லது பேசுவதைக்கூட தவிர்த்து விடலாம்.


3. நாம் எப்போதும் முகத்தில் மாஸ்க் அணிந்தால் கொரோனா நம்மைத் தொற்றாது. நாம் வெளீயில் செல்லும்போது அல்லது யாரையாவது சந்திக்கும்போது நமது முகத்தில் மாஸ்க் அணிந்துகொள்ளலாம். அவர்களுக்கு நம்முடைய செலவிலாவது ஒரு ‘மாஸ்க்’ வாங்கி  வாய் மற்றும் மூக்கை மூடி விடலாம். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டால் நம்மிடமிருந்து பிறருக்கும் பிறரிடமிருந்து நமக்கும் பரவாது.

3. கொரோன வைரஸ் கிருமிகள் 24 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும். கொரோனா வைரஸ் கிருமிகள் 24 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும். வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போது, தும்மும்போது தெறித்து விழும் எச்சில், சளி போன்றவை நாம் பயன்படுத்தும் பொருட்களின் மீது விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த பொருட்களின் மீது இந்த வைரஸ் கிருமிகள் 24 மணி நேரம் வரை நோய் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உயிர்ப்புடன் இருக்கும். அந்த 24 மணி நேரத்திற்குள் அந்த பொருட்களை யார் தொட்டாலும் அவர்களுக்கு இந்த நோய் ஏற்படும்.

4. சிலர் யாரை பார்த்தாலும் கை கொடுப்பார்கள். சிலர் அந்த கையை பிடித்துக்கொண்டே பலமணி நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். நாம் சந்திப்பவர்களில் யாருக்கு கொரோனா இருக்கும்  யாருக்கு இருக்காது என்று தெரியாது. அதனால் எங்கு சென்றாலும் எல்லோரும் கை கொடுத்துக் கொண்டே அலையக்கூடாது.

5. அடுத்தவரிடம் பேசும்போது குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இதனால் பேசும்போது தும்மல் இருமல் போட்டாலும் பிரச்சனை இருக்காது.

6. ஜன நெருக்கடி மிகுந்த இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள். கடைத்தெருக்கள், சந்தைகள், விடுதிகள், சினிமாக்கொட்டகைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ரயில், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற ஜனசந்தடிமிக்க இடங்களைத் தவிர்ப்பது நல்லது. காரணம் கூட்டத்தில் யார் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.

7. பிரயாணங்கள் மற்றும் சுற்றுலா பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் எப்போதும் பயணங்களிலேயே இருப்பார்கள். சிலர் அடிக்கடி அயல்நாடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். சிலர் அடிக்கடி டில்லி, ஆக்ரா, காசி ராமேஸ்வரம், என்று சுற்றிக்கொண்டிருப்பார்கள். குறிப்பாக விமானப்பயணங்களை தவிர்க்க வேண்டும். இன்று உலகத்தில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருப்பதற்குக் முக்கியக் காரணமே விமானப் பயணங்கள்தான்.

8. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. என்னென்ன பொருட்கள் மூலமாக இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்து கொள்ளலாம். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும், பேனா, பென்சில், மவுஸ், லேப்டாப், தேனீர் கோப்பைகள், டம்ளர்கள், இப்படி பலவகை பொருட்களை இதில் பட்டியல் போடலாம். கூடுமானவரை பிறர் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது பாதுகாப்பனது.

9. அடிக்கொரு தடவை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கொரோனவைரஸ் கிருமிகள் கைகளில் படும்போது, அந்த கைகளால் கண் மூக்கு வாய் ஆகியவற்றை தொட்டால் நோய்த்தோற்று ஏற்படும். சிலருக்கு சில பழக்கங்கள் இருக்கும். சிலர் எப்போதும் நகத்தை கடித்துக்கொண்டு இருப்பார்கள். சிலர் எப்போதும் மூக்கை நோண்டிக்கொண்டு இருப்பார்கள். ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது  கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறக்காமல் சோப்பு போட்டு கழுவ வேண்டும். அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவுவதை நாம் ஒரு பழக்கமாகவே கொள்ளலாம்.
10. ஒரு வேண்டுகோள், அனைவருக்கும் இந்த செய்திகளை எல்லோருக்கும் சொல்லுங்கள், பகிருங்கள்.

NOTE: PLEASE DOWNLOAD THIS ARTICLE AND SHARE IT TO YOUR FRIENDS, RELATIVES AND KNOWN PEOPLE.


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...