Tuesday, March 3, 2020

சீமைகருவையின் 10 நவீன உணவு வகைகள் - SEEMAKARUVAI AND ITS TOP TEN RECEIPES





சீமைகருவையின்  

10 நவீன உணவு வகைகள்

SEEMAKARUVAI 

AND ITS 

TOP TEN RECEIPES


சீமைகருவை, ஒரு முள்மரம், ஒருகளை மரம், நிலத்தடி நீரை அதிக அளவில் குடித்துவிடும், இப்படி பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதோடு, ஒரு நீதிமன்றம் கூட அதனை  குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டித்தது. அப்படிப்பட்ட சீமைகருவை நவீன உணவாக மாறியுள்ளது என்பதை சொல்லுவதுதான் இந்த கட்டுரை. புத்திசாலி மனிதர்கள் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிவிடுகிறர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் சீமைகருவை.

சீமை கருவையின் தாயகம் வட அமெரிக்கா என்பது நமக்கு தெரியும். அதிலும் குறிப்பாக ஆண்டஸ் என்ற மலைப்பகுதியை தன்னுடைய சொந்த இடமாகக் கொண்டது. ஆண்டஸ் என்பது வட அமெரிக்கா தென் அமெரிக்கா வரை ஏழு நாடுகளை உள்ளடக்கியது. அவை வெனிசுலா கொலம்பியா ஈக்குவேடர்,  பெரு, பொலிவியா,  சைல்  மற்றும் அர்ஜென்டினா. இந்த பகுதிகளை தான் ஆண்டஸ் பகுதி அல்லது ஆண்டஸ் மலைத்தொடர் பகுதி என்று சொல்லுகிறார்கள்.

சீமை கருவை பழங்குடி மக்களின் வாழ்வாதாரம்
SEEMAKARUVAI  WHOLESOME LIVELIHOOD OF NATIVES


இந்த மலைத்தொடருக்கு இடைப்பட்ட பகுதிகள் எல்லாமே மணற்பாங்கான பாலை நிலம் அல்லது பாலைவனப் பகுதி என்று சொல்லலாம். இந்த பாலைவனப் பகுதி வட அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் தொடங்கி தென்அமெரிக்கா வரை நீளுகிறது.   இந்த பகுதியின்  அமெரிக்கப் பழங்குடி மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக விழங்கியது இந்த சீமைக் கருவை தான். இதிலிருந்து தான் அவர்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், வாழ்விடங்கள், ஆயுதங்கள்,  மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் என எல்லாமே கிடைத்தது.

அதனால்தான் தன் இந்த சீமைக் கருவை என்பது இந்த அமெரிக்க பழங்குடி மக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது என்று இன்றும்கூட சொல்லுகிறார்கள். சீமை கருவை நெற்றுக்களை சேகரித்து உலர வைத்து அவற்றை மாவாக்கி உணவாக இன்றும்கூட மெஸ்கைட் மீல் (MESQUITE MEAL) என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறார்கள்.



சீமை கருவை மாவு புரதம் நிறைந்தது
SEEMAKARUVAI  PODS ENRICHED WITH NUTRITION


இந்த மெஸ்கைட் மீல் என்று சொல்லுகின்ற சீமைக்கருவேல் மாவில் 13 முதல் 17 சதவிகிதம் வரை புரதச் சத்து இருக்கிறது. இந்த மாவில் அதிகமான லைசின் என்று சொல்லக்கூடிய சத்துப்பொருள் இருப்பதால் இதை சுலபமாக மற்ற தானிய உணவுகளுடன் சேர்க்க முடியும் என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக குறைவான அமினோ அமிலங்கள் இருக்கக்கூடிய தானியம் மாவுகளை இந்த சீமை கருவை மாவுடன் எளிதாக சேர்க்கலாம் அல்லது கக்கலாம்.


இந்த சீமைக் கருவை நெற்றுக்களிலிடருந்து   தயார் செய்யும் மாவில் 13 முதல் 17 சதவீதம் வரை புரதச்சத்து ருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். புரதச்சத்து தவிர கால்சியம், மக்னீசியம், மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. இதன் விதைகள் அல்லது கொட்டைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் புரதச் சத்து அடங்கியுள்ளது.


சீமை கருவை நவீன உணவு வடிவங்களில் தயாராகிறது
SEEMAKARUVAI  IS GETTING MODERN FOOD FORMATS


ஒரு காலத்தில் இந்த சீமைக் கருவை மாவு அடிப்படையான ஒரு உணவுப் பொருளாக இருந்தது. குறிப்பாக இந்த பழங்குடி மக்கள் அந்த காலத்தில் இந்த சீமைக் கருவை நெற்றுகளை சேகரித்து அவற்றை கல் எந்திரங்களில் மாவாக்கி பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நவீன எந்திரங்களின் அதை மாவாக்கி மெஸ்கைட் மீல் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பல்வேறு வகையான நவீன வடிவங்களில் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக சூப்பு,  கிரேவீஸ்,  சாசஸ், சோடிஸ், இறைச்சி அல்லது காய்கறிகளோடு  சேர்த்து தயாரிக்கும் இதர உணவுப்பண்டங்கள்,  டெசெர்ட்ஸ், புட்டிங்க்ஸ், ஐஸ்கிரீம் இப்படி பல வகையான உணவுப் பொருட்களையும்  இந்த மெஸ்கைட் மீல் மாவினை பயன்படுத்தி தயாரிக்கிகிறார்கள்.


சீமைகருவை பழங்குடிகளின் ஆரோக்கியமான  உணவு
SEEMAKARUVAI  SAFE FOOD OF AMERICAN NATIVES


அமெரிக்க பழங்குடி மக்களுக்கு இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை அவர்களுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்று தெரியாது.  பாலைவனத்திலிருந்து இயற்கையாக கிடைத்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட வரை எங்களுக்கு சர்க்கரை நோய் என்றால் என்னவென்று தெரியாது. அதேபோல் உடல் பருமனால் என்று எங்களுக்கு  தெரியாது. இப்போது நாங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதற்கு பிறகுதான் இந்த நோய்கள் எல்லாம் எங்களுக்கு வந்திருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.


மெஸ்கைட் மீல் என்று சொல்லப்படும் இந்த இந்த சீமக்கருவையிலிருந்து தயாரிக்கும் உணவுப் பொருட்களில் சாப்பிடும்போது அது ஜீரணமாக அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறது. கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு மணி நேரம் ஆகும். அதனால் பிளட் சுகர் என்று சொல்லப்படும் ரத்த சர்க்கரை அதிகமாக சேர்வதில்லை என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.



சீமைகருவை விறகை சிபாரிசு செய்யும் பேக்யார்ட் கிரில்லிங் குருஜீக்கள்SEEMAKARUVAI  FIREWOOD RECOMMENDED BY BACKYARD GRILLING GURUJIS



இந்த பழங்குடி மக்கள் மாமிச உணவு வகைகளை சமைக்கும்போது இந்த சீமைக்கருவை கட்டைகளைப் பயன்படுத்தினால் அந்த உணவின் சுவையே தனியாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.  சமீபகாலமாக கிரில்லிங் என்று சொல்லக்கூடிய ஒரு சமையல் வகை மிகவும் பிரபலமாக உள்ளது. கிரில்லிங்  என்பது வேறு ஒன்றுமில்லை, நேரடியாக நெருப்பில் வேக வைப்பது, குறிப்பாக இறைச்சி அல்லது மாமிச வகைகளை இப்படி கிரில்லிங்  முறையில் தயார் செய்வது மிகவும் பிரபலமாக உள்ளது.  

கிரில்லிங் உணவு தயாரிப்பதில் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை ‘பேக்யார்ட் கிரில்லிங் குருஜி’ (BACKYARD GRILLING GURUJI)என்று சொல்லுகிறார்கள். இந்த கிரில்லிங் உணவு வகைகளை சமயலறைகளீல் தயாரிப்பதில்லை. வீட்டின் பின்புறத்தில் இந்த கிரில்லிங் செய்ய தனியான இடங்களை ஒதுக்குவது மேலை நாடுகளின் சமீபத்திய வழக்கமாக உள்ளது. அதனால்தான் அவர்கள் பேக்யார்ட் கிரில்லிங் குருஜி ஆகிவிட்டார்கள். இந்த குருஜீக்கள் கிரில்லிங் செய்ய இந்த மெஸ்கைட் மர விறகுகளைத்தான் சிபாரிசு செய்கிறார்கள்.

சீமைக்கருவை மாவில் தயாரிக்கும் 10 உணவு வகைகள்TOP TEN MODERN FOOD ITEMS OF SEEMAKARUVAI (MESQUITE MEAL)



இந்த சீமைக்கருவை மாவை (MESQUITE MEAL) பயன்படுத்தி என்னென்ன உணவு வகைகளை தயாரிக்கிரார்கள் என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பட்டியலை பாருங்கள்.

   1.                மெஸ்கைட் கார்ன் பிரட் (MESQUITE CORN BREAD)
   மெஸ்கைட் ஓட் மீல் கூக்கிஸ் (MESQUITE OAT MEAL COOKIES)
   மெஸ்கைட் பேன் கேக்ஸ் (MESQUITE CORN PANCAKES)   மெஸ்கைட் பநானா பிரட் (MESQUITE BANANA BREAD)
   மெஸ்கைட் சூச்சினி பிரட் (MESQUITE  ZUCCHINI BREAD)
  மெஸ்கைட் ஆப்பிள் நட் மஃபின்ஸ் (MESQUITE  APPLE NUT MUFFINS )
 மெஸ்கைட் ஓட் மீல் ரெயின் கூக்கிஸ் (MESQUITE  OAT MEAL RAISIN     COOKIES )மெஸ்கைட் ஹாட் மில்க் (MESQUITE  HOT MILK )க்ளூட்டன் ஃப்ரீ மெஸ்கைட் பேன் கேக்ஸ் (GLUTTEN FREE MESQUITE  PANCAKES )
 மெஸ்கைட் ஃபுரூட் கேக் (MESQUITE FRUIT CAKE )


சீமை கருவை மரத்திலிருந்தே இத்தனை உணவுப்பொருட்களை
தயாரிக்கும்போது நமது ,மரவகைகளில் எவ்வளவு தொழில் வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றன ? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். எனக்கு மேலும் யோசிக்க எழுத திட்டமிட உபயோகமாக இருக்கும்.

தே.ஞானசூரிய பகவான், போன்: +91 8526195370, இமெயில்: gsbahavan@gmail.com


FOR FURTHER READINGON THE RELATED TOPICS


1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html

4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html

5. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

6. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html











No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...