Tuesday, February 4, 2020

டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம் - TRAVELLER’S PALM DIFFERENTLY BEAUTIFUL TREE






டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம் 


TRAVELLER’S  PALM - 

  DIFFERENTLY BEAUTIFUL TREE

RAVENALA MADAGAS CARIENSIS

A TREE OF MADAGASCAR

தாவரவியல் பெயர்: ராவிநலா மடகாங்கரியன்சிஸ் (RAVENALA MADAGAS CARIENSIS)தாவரக்குடும்பம் பெயர்: ஸ்டெர்லிட்சியேசி (STRE LITZIACEAE)

தாயகம்: மடகாஸ்கர் பொதுப் பெயர்கள்: டிராவலர்ஸ் பாம் (TRAVELLER’S PALM)

பெரும்பாலும் பொது இடங்களில் வளர்க்கப்படும் அழகு மரம்.  இதனை அழகு மரம் என்பதை விட அலங்கார மரம் என்று சொல்லலாம்.  முதல் முறையாகப் பார்ப்பவர்கள் நின்று பார்த்துவிட்டு பேகும் அளவுக்கு விந்தியாசமான அழகு மரம்.

டிராவலர்ஸ் பாம் என்றாலும் இது பனை மரம் அல்ல

TRAVELLERS' PALMIS NOT A PALM TREE 

பெயரில் கூட ஒரு வித்தியாசம் உண்டு.  விசிறிப்பனை என்றும் ஆங்கிலத்தில் டிராவலர்ஸ் பாம் என்றாலும் இது பனை மரம் அல்ல.  பனை மரம் என்றால், இது அரிகேசி தாவரக்குடும்பத்தைச் சேர்ந்ததாத இருக்கும்.

விசிறிவாழை என்பதால் இது வாழையும் அல்ல

VISIRI VAAZHAI ISNOT A BANANA TREE 

இதன் இலைகள் வாழைபோல இருப்பதால் தமிழில் இதனை விசிறிவாழை என்றே சொல்லுகிறார்கள்.  ஆனால் இது உண்மையில் இது வாழை இனத்தையும் சேர்ந்ததல்ல.  வாழை என்றால் இது மூசேசி (MUSACEAE) குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கும்.  அதனால் இது வாழையும் அல்ல.

விசிறிவாழை நீலவிதை உள்ள  அரிதான மரம் 

VISIRIVAAZHAI HASBLUE SEEDS

இதன் பூக்கள் பார்க்க பசுமையாக இருக்கும்.  ஆனால் இதன் விதைகள் கவர்ச்சிகரமான நில நிறத்தில் பளிச் சென்று இருக்கும்.  இயற்கையாக வேறு எந்தத் தாவரத்தின் விதையும் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்காது என்கிறார்கள்.  அதனால் நீலவிதை உள்ள ஒரே மரம் இந்த விசிறிவாழை மரம்தான் என்று சொல்ல்லாமா ?

விசிறிவாழை இலைகள் மிக நீளமான காம்புகளை உடையவை  VISIRIVAAZHAI LEAVES HAVEVERY LONG PETIOLES

இந்த மரங்கள் வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வளரும்.  மடகாஸ்கரில் 100 அடி வரைக்கூடிய ஒரு மரம் உள்ளது.  வரிசையாக, உயரமாக, விசிறிபோல நிற்கும் மிக நீளமான இலைக்காம்புகளில் இதன் இலைகளும் நீளமாக வாழை இலைபோல இருக்கும்.  இதன் இலைக்காம்புகள் அதிகபட்சமாக 36 அடிவரை இருக்கும்.  அநேகமாக 36 அடி இலைகாம்புகளை உள்ள மரம், உலகில் வேறு எந்த மரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

விசிறிவாழை மரங்கள் 23 அடி உயரம்வரை வளரும்.

VISIRIVAAZHAI LEAVES HAVEVERY LONG PETIOLES

பேர்ட் அம்ப் பேரடைஸ் (BIRD OF PARADISE) என்ற பிரபலமான அழகுச் செடியும் இதே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரங்கள் 23 அடி உயரம் வரை வளரும் மிக அழகான மரம்.

WWW.FLOWERS OF INDIA.NET – TRAVELLERS PALM




TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...