Saturday, February 8, 2020

SINGAPORE CHERRY A BIODIVERSITY TREE


TREES OF OTHER 
COUNTRIES
GROWN IN INDIA

இந்தியாவில் 
நாம் வளர்க்கும்
அயல்நாட்டு மரங்கள்




சிங்கப்பூர்செர்ரி பல்லுயிர் வாழ்வாதார  மரம்

 

SINGAPORE CHERRY A BIODIVERSITYTREE

 

A MEXICAN TREE

இதுநாள்வரை இந்த மரத்தடியில் காலையில் காப்பியும் மாலையில் தேநீரும் குடிப்பேன். ஆனால் இலைகளிலேயே தேநீர் தயாரிக்கலாம் என்பது தெரியாமல் போயிற்று.

சி.செ. இலைத் தேநீர் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். சக்கரை அளவைக் குறைக்கும். நான் 10 வருஷமாய் டயபெடிக் 2 மாதமாய் ஹார்ட் பேஷண்ட். இனி டெய்லிடெய்லி சிங்கப்பூர்செர்ரி தேநீர்தான்.
முதிர்கன்னிகள் மற்றும் முதிர் இளைஞர்களுக்கு ஒரு டிப்ஸ் ! ஒரு வேளைக்கு 9 முதல் 12 பழங்கள் சாப்பிடுங்கள்.; கவுட் தொடர்பான வலிகள் காணாமல் போகும். கவுட் என்றால் கீல்வாதம். முக்கியமாக மூட்டுப்பிடிப்பு மற்றும் மூட்டுவலியை உள்ளடக்கியதுதான்  கீல்வாதம்.


சிங்கப்பூர்செர்ரிSINGAPORE CHERRYA TREE OF MEXICO



நினைத்தாலே
இனிக்கும் மாதிரி,
பார்த்தாலே
பரவசப்படுத்தும் மரம்.


நான் காலையில் எழுந்தவுடன் வெளியில் வந்தால் கண்ணில்படும் முதல் மரம். இந்த மரத்தின் அடியில் நண்பர்களுடன் உட்கார்ந்து தேனீர் குடிக்கப் பிடிக்கும். அமுதக்கரைசல் தயாரிக்க, பஞ்சகவ்யம் தயாரிக்க செயல்விளக்கம் கொடுக்க எனக்குப் பிடித்தமான இடம் இந்த செர்ரி மரத்தடிதான்.

கொஞ்சம் அணில்கள்,
கொஞ்சம் குருவிகள்,
எப்போதும் இங்குகொட்டம் அடிக்கும்.


கொஞ்சம் அணில்கள், தேன்சிட்டுக்கள், வண்ணாத்திக் குருவிகள், எப்போதும் இந்த மரத்தில் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும். குயில்கள், கருவாட்டுவாலி டேகை, கிளி போன்ற உயர் ஜாதிக் குருவிகள் எப்போதாவது ஒரு முறை வந்துபோவதுண்டு. வண்ணாத்திக் குருவிகள் அதன் சின்ன வாயில் முழுசாய் பழங்களை சிரமப்பட்டு விழுங்கும் காட்சி ஆச்சரியமாய் இருக்கும். பகல் பன்னிரண்டு மணி நேரமும் ஆண்பெண் அணில்கள் ஓடிப்பிடித்து ஓரியாடுவது மட்டும் டிவி சீரியல் மாதிரி தொடரும்.


அண்ணாந்துப் பார்த்தால்
கிளைகளால்  பின்னிய
மரக்குடை போல தோன்றும்.


 

மரத்தின் அடியில் உட்கார்ந்து அண்ணாந்துப் பார்த்தால் சிறுசிறு கிளைகளால்  பின்னிய மரக்குடை போல தோன்றும். நிழல்தர அருமையான மரம். நான் எனது பயிற்சி வகுப்புகளைக்கூட இந்த மரத்தடியில் நடத்துவதுண்டு. ஆனால் அதில் ஒரு சிக்கல் உண்டு. பயிற்சிக்கு வருபவர்கள் நான் சொல்லுவதைவிட இந்த மரத்தை வேடிக்கை பார்ப்பதுதான் அதிகம் இருக்கும்.

எனக்குத் தெரிந்து நர்சரிக்காரர்கள்தான் இதனை முதன் முதலில் பயன்படுத்தினார்கள். வரிசையாக இந்த மரங்களை நட்டுவிட்டு பாக்கெட் செடிகளை அடுக்கிவிடுகிறார்கள். எனக்கு நர்சரிகளில்தான் இந்த மரம் அறிமுகம் ஆனது.

பழங்களில்
ஜாம் தயாரிக்கலாம்இலைகளில்
தேநீர் தயாரிக்கலாம்


இதன் இலைகளை தொட்டுப் பாருங்கள். வெலவெட் துணி மாதிரி இருக்கும். இலைகளில் மெல்லிய ரோமம் போர்த்தியபடி இருக்கும். மல்லிகை மாதிரி வெள்ளை நிறத்தில் ஆனால் சின்னசின்னப்பூக்கள்; பழங்கள் சின்ன சைஸ் சிவப்பு கோலிக் குண்டுகள் மாதிரி இருக்கும். எங்கள் தோட்டத்து வேலியில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் காலையில் தேனீக்கள் அதிகம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதற்கு அடுத்தபடி மொய்த்துக் கொண்டிருப்பது பள்ளிக் குழந்தைகள்.

இநதப் பழங்களை நெய்ப்பழம் என்கிறார்கள். சாப்பிட்டுப் பார்த்தால் பழத்தில் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு டேஸ்ட். பழங்களில் ஜாம் தயாரிக்கிறார்கள். இலைகளில் தேநீர் தயாரிக்கிறார்கள்.

பழங்களை சாப்பிடுவதால்
ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
கட்டுப்படுத்தும்.


இதன் இலை, பூ, பழம், பட்டை, மரம், வேர் என்று எல்லா பகுதிகளிலும் வழிவழியாய் மருந்து தயார் செய்து சாப்பிடுகிறார்கள். தலைவலி, குடற்புண், கைகால் வீக்கம், சுவாசம் சம்மந்தமான உபாதைகள், வயிற்றுப்போக்கு,  ஆண்களின் புராஸ்ட்ரேட் சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைகள், தசைப்பிடிப்பு மற்றும் வலிப்பு எல்லாவற்றிற்கும் மருந்து தருகிறது.

பழங்களை சாப்பிடுவதால்  ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். புற்றுநோய் வராமல் தடுக்கும். இந்தப் பழங்களில் வைட்டமின் சிஅதிகம் இருக்கிறது. தசை, எலும்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு உடலுக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.;
இதன் இலைகளில் தேநீர் தயாரித்து குடிப்பதாலும் இந்த பலன் கிடைக்கிறது என்பது ஆச்சரியமான செய்தி. இது ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. ஏஞ்சியோகிராம், ஏஞ்சியோபிளாஷ்ட், ஸ்டெண்ட், பலூன் எதுவும் வேண்டாம் என்கிறார்கள்.

சிங்கப்பூர்செர்ரி உயிர்களுக்கு
றங்க இடமும்
உண்ண பழமும்  குடிக்க தேனும்கொடுக்கும் மரம்.
 SINGAPORE CHERRY
A BIODIVERSITY
FRIENDLY TREE



ஆற்றங்கரைகளில் இந்த மரங்களை நடுகிறோம். இந்த மரங்கள் உதிர்க்கும் பழங்கள் மீன்களுக்கு உணவாகின்றன.  அந்த பகுதியில் மீன் உற்பத்தி அதிகரிக்கிறது..என்கிறார்கள் பிரேசில் நாட்டு மீனவர்கள். ஏறத்தாழ 60 வகையான பறவைகள், பிராணிகளுக்கு உறைய இடமும் உண்ண பழமும், தேனும் தந்து உதவும் மரம் என்கிறார்கள் ஒயில்ட் லைப்அறிஞர்கள். இது ஒரு பயோடைவர்சிட்டி (BIODIVERSITY FRIENDLY) மரம். 

மரச்சாமான்கள் செய்ய, இதர மரவேலைகள் செய்ய, எரிபொருளாக, கயிறு திரிக்க, நிழல் மரமாக, அழகு மரமாக, பல்லுயிர் பெருக்கும் பயனுள்ள சகலகலா மரவகை இந்த சிங்கப்பூர் செர்ரி.

சிங்கப்பூர் செர்ரி மரத்தின்
பலமொழிப் பெயர்கள்

SINGAPORE CHERRY –
VERNACULAR NAMES


தமிழ்: சிங்கப்பூர் செர்ரி, கசகசா பழ மரம், சக்கரைப்பழ மரம் (SINGAPORE CHERRY)
கன்னடா: கசகசா ஹன்னினா மரா (GASA GASA HANNINA MARA)
ஸ்பேனிஷ்: செரிசா, மெமிசோ, நிகுவா, பொலைனோ, கேப்புலின் பிளான்கோ, சிட்டட்டோ, பசிட்டோ (CEREZA, MEMISO, NIGUA, BOLAINO, CAPULIN  BLANCO, CHITATO, PASITO)
ஸ்வீடிஷ்: பனாமாபார் (PANAMABAR)
தாய்: டாக்காப் பராங் (TAKHOP FARONG)
வியட்நாமிஸ்: ட்ரங் கா (TRUNG CA)
போர்ச்சுகீஸ்: கலாபுரா, பவோ டி செடா (CALABURA, PAO DE SEDA)
தாவரவியல் பெயர்: மியூட்டிஞ்சியா கலாபுரா (MUTINGIA CALABURA)
தாவரக்குடும்பம் பெயர்;: மியூட்டிஞ்சியேசி (MUTINGIACEAE)


தாயகம்: நியோ டிராபிக்ஸ், மெக்சிகோ, மற்றும் பொலிவியா ஆகிய மண்ணுக்கு சொந்தமானது, சிங்கப்பூர்செர்றி மரம். 


ஆயினும் இது பரவியுள்ள நாடுகள், இந்தியா, கரிபியன், இந்தோனேசியா, தென்அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சைனா, கியுபா, ஹெயிட்டி மற்றும் டொமினிக் ரிபப்ளிக்.
நியோ டிராபிக்ஸ் என்பது மெக்ஸிகொ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் சில பகுதிகளைக் குறிக்கும்.

கன்றுகளை
உற்பத்தி செய்வதும்,
 நட்டு வளர்ப்பதும்
சுலபம்.
 SINGAPORE CHERRY SAYS
YES TO ANY PROPAGATIONMETHODS




இந்த மரத்தின் கன்றுகளை உற்பத்தி செய்வதும், நட்டு வளர்ப்பதும் சுலபம். கிளைகளை வெட்டி நடலாம். கன்றுகளை வளர்த்து நடலாம். விதைகளை சுலமாய் முளைக்க வைக்கலாம். விதைகளை ஈரமான காகிதம் அல்லது துணியின் மீது வைத்து வெண்மையான வெளிச்சத்தில் வைத்தால் நன்கு முளைக்கும். சராசரியாக 100க்கு 40 விதைகள் முளைக்கும்.


சி.செ. இலைத் தேநீர்
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
சக்கரை அளவைக் குறைக்கும் SINGAPORE CHERRY LEAF TEA
BRINGS DOWNSUGAR AND CHOLESTROL GRAPH



முதிர்கன்னிகள் மற்றும் முதிர் இளைஞர்களுக்கு ஒரு டிப்ஸ் ! ஒரு வேளைக்கு 9 முதல் 12 பழங்கள் சாப்பிடுங்கள்.; கவுட் தொடர்பான வலிகள் காணாமல் போகும். கவுட் என்றால் கீல்வாதம். முக்கியமாக மூட்டுப்பிடிப்பு மற்றும் மூட்டுவலியை உள்ளடக்கியதுதான்  கீல்வாதம்.


இதுநாள்வரை இந்த மரத்தடியில் காலையில் காப்பியும் மாலையில் தேநீரும் குடிப்பேன். ஆனால் இலைகளிலேயே தேநீர் தயாரிக்கலாம் என்பது தெரியாமல் போயிற்று. சி.செ. இலைத் தேநீர் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். சக்கரை அளவைக் குறைக்கும். நான் 10 வருஷமாய் டயபெடிக் 2 மாதமாய் ஹார்ட் பேஷண்ட். இனி டெய்லிடெய்லி சிங்கப்பூர்செர்ரி தேநீர்தான்.


TREES OF OTHER COUNTRIES
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. சிங்கப்பூர்செர்ரி  பல்லுயிர்  வாழ்வாதார   மரம் -      SINGAPORE  CHERRY  A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html

2. மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html

3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html

4. ரபில்ட்டு  பேன்  பாம்  அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம்  RUFFLED  FAN PALM   ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html

5. பொகைன்வில்லா -  அலங்கார மரம் -  BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html


6. சிலோன் செர்ரி    மேஜை நாற்காலி மரம்  - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html

7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன்  ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST  PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html

8. சைனிஸ்  பிரிஞ்சி  மரம் -  நேர்த்தியான  பூமரம்   -    FRINGE TREE -RAVING BEAUTY  OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html

9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு  மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html

10. ஜப்பானிய மேப்பிள் -  இலையழகு மரம்   JAPANESE MAPPLE - DECORATIVE  FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html

11. சூபாபுல் - தீவன  மரங்களின்  ராஜா  - SUBABUL  - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html

12. மல்பெரி -  விரியன் விஷத்தை  முறிக்கும்  பட்டு மரம்  MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html

13. பாட்டில்பனை -  கியூபா நாட்டின் அலங்கார மரம் -  BOTTLE PALM - CUBAN ORNAMENT  TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html


14. பேரீச்சம் -   ஈராக் நாட்டின்   வணிக மரம்    DATE PALM - A BUSINESS  TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html

15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html

16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் -  JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html


17. மாதுளை- ஈரான்  நாட்டு பிரபலமான  பழ மரம்  -  POME GRANATE -   FRUIT TREE OF  IRAN  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html

18. ஆப்ரிக்க  ட்யூலிப் ட்ரீ -  அழகிய பூமரம்    AFRICAN TULIP -  BEAUTIFUL FLOWERING TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html

19. திவிதிவி   தோல் பதனிட உதவும்   மெக்சிகோ நாட்டு   மரம்  -   DIVI DIVI   TREE TANNERY OF  MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html

20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின்  காய்கறி மரம்  -  BREAD FRUIT -  A  VEGETABLE TREE  – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html

21. பேவோபாப் ட்ரீ -   ஆப்ரிக்காவின்   பலநோக்கு மரம்     BAO BAB -   MULTIUSE   TREE OF   AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html

22. துரியன் குழந்தை  பாக்யம் தரும்  பழமரம் - DURIAN  FERTILITY  FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html

23. டிராகன் பிளட் ட்ரீ -  சோகோத்ரா தீவின்   மருத்துவ மரம்  -   DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA  – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html

24. பீமா என்னும்   திசுவளர்ப்பு  ராட்சச    மூங்கில் ரகம்  -   BEEMA -  HIGH BIOMASS  BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html

25. மேய்டன்   ஹேர் ட்ரி -  அபூர்வ   மூலிகை   மரம்   - MAIDEN HAIR TREE CHINESE HERB  – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html

26. அம்ப்ரல்லா தார்ன் -  இஸ்ரேலியரின்  தெய்வீக மரம் -  UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html

27. கிளைரிசிடியா - பல பயன்தரும்  மெக்சிகோ நாட்டு  மரம்          -                             GLYRICIDIA    MULTIUSE    MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html

28. பாட்டில் பிரஷ்  ஆஸ்திரேலிய  அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN  BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html

29. பாட்மின்டன் பால்  -   அழகூட்டும்   அலங்கார மரம்    BATMINTON BALL TREE OF     MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html

30. டெசெர்ட்  டேட் ட்ரீ - பாலைவன  மூலிகை மரம்    DESERT DATE  -    AFRICAN MEDICINAL  TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html

31. சோழவேங்கை -        புனிதமான சீனமரம்   -  BISHOPWOOD -  SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html

32. கலா பேஷ்  ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம்   CALABASH  -  WONDER TREE  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html
33. தெபுபுயா -   சாலைகளை    அலங்கரிக்கும்   அழகு மரம்    TEBUBUYA - AVENUE  BEAUTY  OF MEXICO  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html
34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும்  தென்அமெரிக்க மரம் -  YELLOW BELLS - BEAUTIFUL TREE   – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html
35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க  அடையாளம்  SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html
36. ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html
37. ராயல் பாய்ன்சியனா  -   சிவப்பழகு     மடகாஸ்கர் மரம்                                                         ROYAL POINCIANA -  RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html




1333333333333333333333333333333333333333313



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...