ரபில்ட்டு பேன் பாம் அலங்கார அழகு மரம்
RUFFLED FAN PALM
BEST ORNAMENTAL TREE
A TREE OF PACIFIC ISLAND
வீட்டுத் தோட்டத்திலும், வீடுகளிலும் பொது இடங்களிலும் அழகு மரமாக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. தொட்டிகளிலும், பெட்டிகளிலும்கூட வெற்றிகரமாக வளர்க்கலாம்.
LICUALA
GRANDIS
தாவரவியல் பெயர்: லிகுவாலா கிரேண்டிஸ் (LICUALA GRANDIS) தாயகம்: வானாட்டு (VANAUTU ISLAND IN PACIFIC OCEAN)தாவரக் குடும்பப் பெயர்: அரிகேசி (ARICACEAE)
பொதுப்
பெயர்: RUFFLED PALM,
PALAS KIPAS, VANAUTH FAN PALM
தனிமரமாக வளரும், மூன்று மீட்டர் உயரம்
வரை வளரும் இதனை வட்ட வடிவமான இலைகளை உடையது எனச் சொன்னாலும், சட்டென்று பார்த்தால்
விசிறிபோலவே தெரியும்.
ஆனால், கலிபோர்னியா
விசிறிப்பனை, கேனரிஐலன்ட் விசிறிப்பனை என பனைகள் விசிறிப்பனை என
அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் ஒன்றுடன்
ஒன்று இனைந்து, பளபளப்பனை கரும்பச்சை, மற்றும் லேசான மஞ்சள் கலந்த பசுமை நிறத்திலும் இருக்கும். அழகுக்காக வளர்க்கப்படும்.
இளங்கோடை
பருவத்தில் இந்த மரங்கள் பூக்கத் தொடங்கும்.
இலைக் காம்புகள் நீளமாக மெல்லியதாக,
அடிக்காம்பில் முட்கள் இருக்கும். இதன் பழங்கள் கவர்ச்சிகரமான சிவப்பு நிறத்தின்
உருண்டையாக இருக்கும்.
இந்த
மரங்களை நல்ல சூரிய வெளிச்சத்திலும் வளரும்.
நிழலிலும் வளரும். ஆனால் வேகமான
காற்றடி இருக்கும் இடங்களில் வளர்க்கக் கூடாது.
வீட்டுத்
தோட்டத்திலும், வீடுகளிலும் பொது இடங்களிலும் அழகு மரமாக உலகம்
முழுவதும் வளர்க்கப்படுகிறது. தொட்டிகளிலும், பெட்டிகளிலும் கூட வெற்றிகரமாக வளர்க்கலாம்.
இதன்
விதைகளை விதைத்து புதிய கன்றுகளை உருவாக்கலாம். ஆனால் அவை முளைக்க தாமதமாகும். ஒரு
ஆண்டுகூட ஆகும்.
இந்த மரங்கள் மெல்ல வளரும். குறைவான தண்ணீர் ஊற்றினால் போதுமானது. பூக்கள்,
இருபாலினப் பூக்களாக வெள்ளை நிறத்தில் பூக்கும். பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறத்தில், பளபளப்பாக இருக்கும்.
தே.ஞானசூரிய பகவான்
போன்: +91 8526195370
Email: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment