Wednesday, February 12, 2020

இந்திய உணவு சரித்திரத்தில் இடம்பெற்ற பதப்படுத்தும் வியாபார நிறுவனங்கள் - PRIMARY INDUSTRIES OF FOOD HISTORY




PRIMARY

INDUSTRIES OF  

FOOD HISTORY

 

 

 

 

 

நெஸ்லே இந்தியா 

பார்லே இந்தியா

பிரிட்டானியா  

அமுல் 

கேட்பரி 

எம் டி ஆர்  புட்ஸ் 


புதிய கண்டுபிடிப்புகள் வரும்பொதெல்லாம் அவை உலகை தலைகுப்புற மாற்றி அமைக்கிறது. ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னால் மெசப்படோமியாவில் சக்கரத்தை கண்டுபிடித்தார்கள். அதுதான் தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. அதுதான் அதற்கு பின்னால் வந்த நீராவி எஞ்சின், பெட்ரோல், மின்சாரம், இரும்பு, அவற்றைத் தொடர்ந்து கம்ப்யூட்டர், இண்டெர்நெட், வெப்சைட், கிரிடிட் கார்ட், ஏ டி எம், மொபைல்போன், ஆன்லைன் மார்கெட்டிங் அத்தனையும் மக்களின் வாழ்க்கை முறையை தலைகுப்புற மாற்றிவருகிறது. உணவு உடை உறையுள் அத்தனையும் மாறிவிட்டன.


நெல்லை அறுத்து குத்திப்புடைத்து உமியும் தவிடும் நீக்கினால் அரிசி, அவித்தால் புழுங்கல், அப்படியே விட்டால் பச்சரிசி, பொரித்தால் பொரி, மசாலா சேர்த்தால் மசாலா பொரி, மாவரைத்து புளிக்கவைத்து பெரு வட்டமாய் சுட்டால் தோசை, பாத்திரக்குழியில் ஊற்றி சுட்டால் இட்டிலி, இப்படி நாம் சாப்பிடும் உணவும் பதப்படுத்தலுக்கு ஏற்றமாதிரி வடிவமும், வண்ணமும், சுவையும் மாறிவிட்டன. உணவும் பதப்படுத்துதல் மட்டுமே ஒரு பெருந்தொழிலாக மாறிவிட்டது.

இந்தியாவின் உணவு
பதப்படுத்தும் தொழில்களில்முக்கியமானவை 



இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில் முக்கியமானவை என ஐந்து தொழில்களை சொல்லலாம். அவை உணவு தானியங்கள் தொடர்பானவை, சர்க்கரை, உணவு எண்ணெய், குளிர்பான்ங்கள்,  மற்றும் பால் பொருட்கள்.
உணவு பதப்படுத்தும் தொழிலில் இரண்டாம் நிலையில் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை பால் பொருட்கள் தொடர்பானவை, பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்பானவை, கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் மீன் உணவுகள், உணவுப்பொருள் சில்லரை வியாபாரம் ஆகியவை.


வருங்காலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள் வர இருக்கின்றன என்பது தெரிகிறது. இந்த காலகட்டத்தில் ஏற்கனவே கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.


இந்த கட்டுரையில் 6 முக்கியமான நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவை நெஸ்லே இந்தியா, பார்லே இந்தியா, பிரிட்டானியா, அமுல், கேட்பரி மற்றும் எம் டி ஆர் புட்ஸ். 

1. நெஸ்லே இந்தியா ( NESTLE INDIA)

நெஸ்லே இந்தியா  ஸ்விஸர்லாந்து நாட்டின் மல்டி நேஷனல் கம்பெனி. உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனம். 2013ம் ஆண்டின் ஆய்வுப்படி உலகத்தில் 33 வது பெரிய பொது நிறுவனம்.


நெஸ்லே பிராண்டின் உற்பத்திப் பொருட்கள் (NESTLE BRAND PRODUCTS)



குழந்தைஉணவு,  மருத்துவ உணவு,  பாட்டில் வாட்டர்,  காலை உணவு பொருட்கள் (BREAKFAST CEREALS), காபி, தேநீர், மிட்டாய்கள் வகைகள் (CONFECTIONARY ITEMS), பால் பொருட்கள், உறைய வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் (FROZEN FOOD ITEMS)வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவு வகை (PET FOODS) மற்றும் நொறுக்குத்தீனி (SNACKS) வகைகள்  ஆகியவை முக்கியமான வியாபாரப் பொருட்கள்.


நெஸ்கேப், போலோ,  மில்கி பார்,  கிட்கேட், மேக்கி, ஆகியவை நெஸ்லேவின் பிரபலமான உற்பத்திப்பொருட்கள். இவை அனைத்தும் சுமார் 29 பிராண்டுகளில் விற்கப்படுகிறது.


எத்தனை பேக்டரிகள் எத்தனை நாடுகள் ?



இந்த பொருட்களை  447 பேக்டரிகள் உற்பத்தி செய்கின்றன. இந்த பேக்டரிகள் அனைத்தும் 189  நாடுகளில் பரவியுள்ளன. இந்த பேக்டரிகளில் 339000  பேர் உலகம் முழுவதும் வேலை பார்க்கிறார்கள்.


நெஸ்லேகம்பெனி எப்போது தொடங்கப்பட்டது ?



இரண்டு கம்பெனிகளை ஒன்றாக இணைத்து நெஸ்லே கம்பெனியை உறுவாக்கிநார்கள். அவற்றில் ஒன்று ஆங்க்லொ சுவிஸ் மில்க் கம்பெனி இது 1866 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்னொன்று பாரைன் லேக்டி ஹென்றி நெஸ்லே (FARINE LACTEE NESLE) என்னும் கம்பெனி. இதுவும் அதே போலவே அதே ஆண்டில், 1866 ஆம் ஆண்டு தொடங்கிய கம்பனி. அந்த கம்பெனியை நிறுவியவர் ஹென்றி நெஸ்லே. முதலாவது மற்றும் இரண்டாவது உலகப்போரின் போதுதான் இந்த கம்பெனி வேகமான வளர்ச்சி அடைந்தது. ஹென்றி நெஸ்லே என்பவர் ஒரு ஜெர்மன் நாட்டுக்காரர்.ந்த கம்பெனியின் பெயரை சுருக்கமாக நெஸ்லே என்று சொல்கிறார்கள். 


இந்த கம்பெனியின் பிரதானமான உற்பத்தி என்பது குழந்தை உணவு. ஒரு பறவை கூடு இரண்டு குஞ்சுப் பறவைகள் ஒரு தாய்க் குருவி என்பதுதான் இதன் லோகோ. அந்த பறவை கூடு என்பது ஒரு குடும்பம், இரண்டு குஞ்சுப் பறவைகள் என்பது குழந்தைகள், தாய்ப்பறவை பெற்றோரை குறிக்கிறது.

2. பார்லே புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (PARLE PRODUCTS PRIVATE LIMITED)


பார்லே அக்ரோ ஒரு இந்தியன் கம்பனி.  புரூட்டி, ஆப்பி, பெப்டி மற்றும் கொக்கோ கோலா ஆகியவை முக்கியமான விற்பனை பொருட்கள். இந்த கம்பெனி சவுகான் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு இந்த கம்பெனி மூன்றாக பிரிந்தது. அவை பார்லேபுரோடக்ட்ஸ்,  பார்லேஅக்ரோ, மற்றும் பார்லே பிஸ்லரி.

3. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (BRITTANIA INDUSTRIES LIMITED.)

இந்தியாவின் மிக முக்கியமான கம்பெனிகளில் பிரிட்டானியா கம்பெனியும் ஒன்று. இது தொடங்கி 126 ஆண்டுகள் ஆகிறது.  பிஸ்கட், பிரட், கேக் மற்றும் பால்பொருட்கள் பிரிட்டானியா கம்பெனியின் முக்கியமான வியாபாரப் பொருட்கள். மில்க்பிகிஸ்,  குட்டே,  நியூட்ரிசாய்ஸ்,  லிட்டில்ஹார்ஸ்,  ஜின்ஜாம்,  சீஸ் போன்றவை பிரிட்டானியா கம்பெனியின் பிரபலமான வியாபாரப் பொருட்கள். இந்த கம்பெனி தனது வியாபாரத்தை 1892 ஆம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கியது.  இந்த கம்பெனியின் முக்கிய பிராண்டுகள் பிரிட்டானியா மற்றும் டைகர் ஆகியவை.  பிரிட்டானியா 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறது. வாடியா குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ளது இந்த கம்பெனி. நஸ்லி வாடியா என்பவர் இதற்கு தலைமை வகிக்கிறார்.

4. கேட்பரி - மான்டெலெஸ் இந்தியா
புட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (MONDELEZ INDIA PRIVATE LIMITED (CADBURY)


கேட்பரி ஒரு மல்டி நேஷனல் கம்பெனி என்பது இதன் பழைய பெயர்.  து லண்டன் நகரில் ஆக்ஸ்பிரிட்ஜ் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு . உலகம் முழுவதும் கேட்பரி ஒரு பெரிய சந்தையை வைத்திருக்கிறது. இந்தியா, அயர்லாந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இதற்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. உலகின் சாக்லெட் கம்பெனிகளில் 70 சதவீத வியாபாரத்தை தனது கையில் வைத்துள்ளது. கேட்பரி டைரிமில்க்,  டைரி சில்க் மில்க்,  போன்வில்லி, ஃபைஸ்டார், ஓரியோ, எக்கிளாஸ், ஜெம்ஸ் ஆகியவை இந்த நிறுவனத்தின் பிரபலமான பிராண்lடுகள். இந்த கம்பெனியை பிர்மிங்காம் என்ற இடத்தில் ஜான் கேட்பரி என்பவர் 1874 ஆம் ஆண்டு தொடங்கினார். இப்போது இதன் பெயர் மான்டெலெஸ் இந்தியா புட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

5. அமுல் (AMUL - ANAND 

MILK UNION LIMITED)


அமுல் என்பது ஒரு இந்திய கம்பெனி இந்த கம்பெனி 1948 ஆம் ஆண்டில் குஜராத்தில் தொடங்கப்பட்டது இந்தியாவின் உணவு சந்தையை அரசு ஆளுகின்றது இந்த கம்பெனி. 3.6 மில்லியன் பால் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான கம்பெனி இது என்னும் பெருமைக்கு உரியது. இதனோடு ஒப்பிடும்படியான கம்பெனி உலகத்தில் வேறு எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல உலகத்திலேயே அதிகமான பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமும் இதுதான். பால், பட்டர், ஐஸ்கிரீம்,  ஆகியவை அமுல் கம்பெனியின் மற்றும் முக்கியமான உற்பத்திப்பொருட்கள்.

ஒரு விவசாயி ஏழையாய் இருந்தால் அந்த நாடும் ஏழையாக இருக்கும் இது ஒரு போலிஷ் மொழியின் பழமொழி.  இந்த பழமொழிகள் இணங்க வல்லபாய் பட்டேல், திரிபுவன்தாஸ், டாக்டர் வர்கீஸ் குரியன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கம்பெனி இது.  இது உலகத்தின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமல் என்பது ஒரு வியாபாரம் செய்யும் நிறுவனம் அல்ல விவசாய மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் அளித்த ஒரு இயக்கம். விவசாய மக்களின் தைரியம், கனவு, மற்றும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையின் அடையாளம் அது. வெறும் வார்த்தை அல்ல அமுல்.

6. எம் டி ஆர் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் (M T R FOODS PRIVATE LIMITED)


இது பெங்களூரில் 1974 ஆம் ஆண்டு எம் டி ஆர் ரெஸ்டாரன்ட் ன்று தொடங்கப்பட்டது. உடனடியாக வாங்கி சாப்பிடும் ரெடிமேட் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதில் எம் டி ஆர் பிரபலமான கம்பெனி. ரெடி டு ஈட் கரிஸ், ரெடி டு ஈட் கிரேவிஸ், உறைய வைத்த உணவு வகைகள், ஐஸ்கிரீம்கள், இன்ஸ்டண்ட் மிக்சஸ், ஸ்பைசஸ், ஊறுகாய்வகைகள்,  பழங்கள்,  அப்பளங்கள்,  பால்பொருட்களில்,  தயாரித் குளிர்பானங்கள்,  ஆகியவை எம் டி ஆரின் முக்கிய உணவு வகைகள். இந்த நிறுவனம் 1924 ஆம் ஆண்டு யஞ்ஞ நாராயண மய்யா என்பவரால் மாவள்ளி டிஃபன் ரூம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.


TO HAVE MORE INFORMATION
ON RELATED TOPICS

1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html


3. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html

4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA/  Date of Posting: Feb 15th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html


5. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html


6. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி - 3  FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA -  PART -3  -  Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...