சார்ஸ் வைரஸ்சை விட
நாவல் கொரோனா
தீவிரமானது
NOVEL CORONA
IS SEVERE
THAN SARS
கொரோனா வைரஸ் இன்று
CORONAVIRUS TODAY
PANGOLIN - VECTOR OF CORONA VIRUS |
சார்ஸ் வைரஸை விட
நாவல் கொரோனா
மிகவும் ஆபத்தானது
நாவல் கொரோனா வைரஸ்சால்
இதுவரை உலக அளவில் இதுவரை
உலக அளவில் இறந்தோரின்
எண்ணிக்கை 1016 ஆக உயர்ந்துள்ளது.
நாவல் கொரோனா வைரஸ்சால்
உலக அளவில் பாதிக்கப்பட்டோரின்
மொத்த
எண்ணிக்கை
46638 உயர்ந்துள்ளது.
நாவல் கொரோனாவால்
புதியதாக பாதிப்படைந்தோரின்
எண்ணிக்கை குறைந்து வருகிறது
என்று சீனாவின்
அதிகாரப்பூர்வ
செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
டைமன் பிரின்சஸ் குரூஸ் குருஸ் கப்பல் என்னும் சொகுசு பயணக்
கப்பல் ஜப்பான் நாட்டில் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணம் தொடங்கியபோது இதில் பயணம் செய்த அமெரிக்க பயணிகளின் எண்ணிக்கை 416 பேர். அதில் பல
நாடுகளைச் சேர்ந்தோரும் பயணிகளாக இருந்தனர். அவர்களில் ஆரம்பத்தில் 66 பேர் வைரஸ் தொற்று உடையவராக இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் மட்டும் 20 பேர் .
2002 மூன்றாம் ஆண்டுகளில் வந்த சார்ஸ் வைரஸ்சால் ஏற்பட்ட சாவு எண்ணிக்கை 774 பேர் மட்டுமே. ஆனால் இந்த நாவல் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் சாவு எண்ணிக்கை
ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் சார்ஸ் வைரஸ்சை விட இது தீவிரமானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இந்த கொடூரமான நாவல் கொரோனாவைரஸ் உகான் நகரில் இருந்து வெளியே தப்பி
விடக்கூடாது என்பதற்காக தன் கதவுகளை இறுகச் சாத்தி வைத்துள்ளது சீன அரசு.
காலியாக
கிடக்கும் சாலைகள், ஓசை இல்லாத மௌனமாக வாய் மூடி இருக்கும் பேக்டரிகள், கைகளை கட்டியபடியே அசைவற்று இருக்கும் தொழிலாளர்கள், தங்களுக்கு எப்போது
வேண்டுமானாலும் கொரோனா வரலாம் என்ற பயத்தில் விளிம்பில் இருக்கும் மக்கள், மரணத்தின்
வாசலில் காத்திருக்கும் பாதிப்படைதோர், தங்களின் இன்னு யிரை பணயம் வைத்து இந்த மக்களுக்காக பணி
செய்து கொண்டிருக்கும் அரசு மற்றும் அரசு அல்லாத பணியாளர்கள் என்று எப்போதும்
விழித்திருக்கிறது சீனாவின் உகான் நகரம்.
1 comment:
Very useful information.
Thank You for sharing.
Gati Packers And Movers Bangalore
Post a Comment