Sunday, February 9, 2020

நெட்டிலிங்கம் - சாலையோர அழகு மரம் - NETTILINGAM - TO BEAUTIFY THE ROADWAYS



ORNAMENTAL TREES OF INDIA

அழகான இந்திய மரங்கள்




நெட்டிலிங்கம் -

சாலையோர 

அழகு மரம்


                                 
NETTILINGAM -
TO BEAUTIFY
THE ROADWAYS

                             

தே . ஞானசூரிய பகவான்
போன்: +91 8526195370
Email: gsbahavan@gmail.com

ஓவ்வொரு மரமும் ஒவ்வொரு வகையில் வித்தியாசப்படும். அந்த வகையில் வடிவத்தால் வித்தியாசமானது இந்த நெட்டிலிங்கம் மரம். சிலர் இளைத்துப்போன கோபுரம் மாதிரி இருக்கு என்பார்கள்;. சிலர் இதனை ஒட்டடைக் குச்சியில் சொருகிய ஒல்லிப் பிரமிடு என்பார்கள்;. எனக்கு மட்டும்; நான் அரை நிஜார் வயசில் வாங்கித் தின்ற குச்சிஐஸ்தான் ஞாபகத்தில் வரும்.

இது அசோக மரம் அல்லநெட்டிலிங்கம் மரம்


TREE ASHOKA IS
DIFFERENT FROMNETTILINGAM


யாரைக் கேட்டாலும் இந்த மரத்தை அசோக மரம் என்றே சொல்வார்கள். இந்த மரத்தடியில் அதிக நிழல்கூட இருக்காதே.. அசோக வனத்தில் எப்படி சீதை அத்தனை வருஷம் சிறை இருந்தாள்..? என்று ஒரு தடவை என் அம்மாவிடம் கேட்க அவர் சொன்னார் கதைக்கு கால் கிடையாது.. அதை அவ்ளோ நுணுக்கமா பார்க்கக் கூடாதுஎன்றார். நானும் இதை அசோக மரம் என்றே சொல்லி வந்தேன். ஆனால் இதுபற்றி ஆய்வு செய்த பின்னால்தான் தெரிந்தது இதன் பெயர் நெட்டிலிங்கம் என்று.

மேற்கத்திய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும்தான் இதுபோன்ற வடிவத்தில் மரங்கள் இருக்கும். இதையும் வெகுநாள்வரை வெளிநாட்டு மரம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இது உண்மையிலேயே இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு சொந்தமான மரம்.


இதன் தாவரவியல் பெயர்
பாலியால்தியா
லாங்கிபோலியா
 BOTANICAL NAME:
POLYALTHIA
LONGIFOLIA



இதன் கிளைகள் மெல்லிய கொடிகள்போல தென்படும். மரத்தோடு மரம் ஒட்டியதுபோல கீழே தொங்கும். அதனால்தான் இந்த மரம் குச்சிஐஸ் தோற்றம் தருகிறது. எப்போதும் ஜீரோ சைஸ்தான் பீரோ சைஸ் வராது. இந்த மரம் மார்ச் ஏப்ரல் மாதங்களில்பூக்கும். வெளிர் பச்சை நிறத்தில் நட்சத்திர வடிவில் அழகான  இதன்பூக்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான் மரங்களில் பார்க்கலாம்;. அதற்குமேல் அவை மரங்களில் தங்காது.

இலைகள் உதிராமல் எப்போதும் பசுமையாக இருக்கும். இதன் தாவரவியல் பெயர் பாலியால்தியா லாங்கிபோலியா. பலவிதமான நோய்களைக் குணப்படுத்தும் என்று சொல்லும் கிரேக்க வார்த்தைதான் பாலியால்தியா. இதன் இலைகள் நீளமானவை என்று சொல்லத்தான் லாங்கிபோலியா. அகலம் குறைவான இதன் இலைகளின் ஓரம் நெளிநெளியான வளைவுகளுடன் பச்சை நிறத்தில் பளபளக்கும்.

வெள்ளைக்காரர்கள்தான்
இந்த மரத்திற்கு
சிவப்புக் கம்பளம்
விரித்தார்கள். 
 NETTILINGAM TREE   WAS GIVENRED CARPET
BY BRITISH PEOPLE



இந்த மரம் பிரிட்டீஷ் இந்தியாவில்தான் பிரபலமானது. சொல்லப் போனால் இந்தியாவில் வெள்ளைக்காரர்கள்தான் இந்த மரத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்தார்கள். அதற்கு காரணம் இல்லாமலில்லை. அவர்களுடைய தேசம்ஒரு தீவு. தண்ணீரால் சூழ்ந்தது. நீர்வழிதான் அவர்களுக்குப் பிரதான போக்குவரத்து. அன்று அவர்களின் முக்கிய தேவையாக இருந்தது சிறிய பெரிய படகுகளும் கப்பலகளும்தான். அதற்கு கொடிக்கம்பங்கள் செய்ய தோதாக இருந்தது இந்த நெட்டிலிங்கம். இருந்த மரங்களை வெட்டினார்கள். இல்லாததற்கு புதிதாக நட்டார்கள். நெட்டிலிங்க மரத்தின் எண்ணிக்கை பிரிட்டீஷ் இந்தியாவில் நெட்டுக்குத்தாக வளர்ந்தது.

வெப்பமண்டலப் பகுதிகளில் உலகம் முழுவதிலும் இந்த மரத்தை பல நாடுகளில் வளர்க்கிறார்கள். அவை இந்தோனேஷியாவின் ஜக்கர்தா,ரிபியன் தீவுகள் மற்றும்
    

நெட்டிலிங்கம்மரத்தின் பலமொழிப்பெயர்கள்: 

NETTILINGAMVERNACULARNAMES


1.1. தமிழ்ப் பெயர் :  நெட்டிலிங்கம்இ வான்சூலம் (NETTILINGAM) 1.2. இந்தி: அசோக் (ASHOK) 1.3. மராத்தி: தேவதாரு (DEVATHARU) 1.4. மலையாளம்: ஹேமாபுஷ்பம் (HEMAPUSHPAM) 1.5. தெலுங்கு: தேவதாரு (DEVATHARU)இ 1.6. அசாமிஸ்: அம்பாய் (AMBAI) 1.7. கன்னடா: அப்பினா (APPINA)இ 1.8. சமஸ்கிருதம்: புத்ரஜீவா (PUTRAJIVA) 1.9. கொங்கணி: அசோக் (ASHOK)இ 1.10. பொதுப்பெயர்: இந்தியன் மேஸ்ட் ட்ரீஇ அசோக்இ பால்ஸ் அசோக்இ புத்தா ட்ரீஇ இந்தியன் பிர் ட்ரீ (INDIAN MAST TREE, ASHOK, FALSE ASHOK, BUDDA TREE, INDIAN FIR TREE )இ   1.11. தாவரவியல் பெயர்: பாலியால்தியா லாங்கிபோலியா (POLIYALTHIA LONGIFOLIA) 1.12. தாவரக்குடும்பம் பெயர் :  அனோனேசி (ANNONACEAE)

ரத்த அழுத்தம்
மற்றும் சக்கரை நோயைக்கட்டுப்படுத்தும் NETTILINGAM CONTROLSBLOOD PRESSURE
AND DIABETES




நெட்டிலிங்கம் ஒரு மூலிகை மரமும்கூட. பல நோய்களை கட்டுப்படுத்தும். அவைஇ காய்ச்சல்இ தோல் நோய்கள்இ ரத்த அழுத்தம்இ ஹெல்மின்தியாசிஸ்இ பெப்ரிபியூஜ்இ சக்கரைநோய்இ பூசணநோய்கள் மற்றும் பாக்டீரியல் நோய்கள். 

டெய்ல்ட் ஜெய் (TAILED JAI)இ கைட் ஸ்வாலோ டெய்ல் (KITE SWALLOW) என்னும் பட்டாம்பூச்சிகளின் இளம்புழுக்களுக்கு இதன் இலைகள் பிரதான உணவாகிறது. மாவிலை தோரணம் கட்டுவதுபோல பல நாடுகளில் முக்கிய விழாக்களில் தோரணமாக அலங்கரிப்பவை நெட்டிலிங்கம் இலைகள்தான். பாடும் குயில்களுக்கும் (ASIAN KOELS)இ பழம் தின்னும் வவ்வால்களுக்கும் (FRUIT EATING BIRDS) பிடித்தமான விருந்து இதன் பழங்கள்.
இதன் விதைகள்இ 50 முதல் 70 சதம் வரை முளைக்கும். ஒரு கிலோ எடையில் 1800 முதல் 2000 விதைகள் வரை இருக்கும்.

பிரிட்டீஷ் கப்பல்களில்
கொடிக்கம்பமான
நெட்டிலிங்கம் NETTILINGAM WEREUSED AS FLAG MAST TREEIN BRITISH SHIPS


ஒரு காலத்தில் பிரிட்டீஷ் கப்பல்களில் கொடிக்கம்பமான நெட்டிலிங்கம் மரங்கள்இ இன்று தீக்குச்சிகள்இ பென்சில்கள் மற்றும் பெட்டிகள் தயார்செய்யஇ  பட்டையிலிருந்து வலுவான நார்க்கயிறு தயாரிக்கஇ காகிதம் செய்யும் மரக்கூழ் தயாரிக்கஇ பீப்பாய்கள்இ பெட்டிகள்இ கட்டுமான சட்டங்கள்இ வேளாண் கருவிகள்; ஆகியவற்றை செய்ய உதவுகின்றன.

வழக்கமாக பிரிட்டீஷ் கப்பல்களில் மெடிட்ரேனியன் சைப்ரஸ் (MEDITARANEAN CYPRESS) என்னும் மரங்களைப் கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தார்கள். நெட்டிலிங்கம் 30 அடி வளரும் என்றால் இந்த மரங்கள் 35 மீட்டர் உயரம் வளரும். இதற்கு டிராமா ட்ரீ (DRAMA TREE) என்று பெயரும் உண்டு. காரணம் லேசாகக் காற்று வீசினால்கூட இந்த சைப்ரஸ்மரம் டான்ஸ் ஆடுமாம்.

வேகமாக காற்று வீசும்போது நம்ம ஊர் நெட்டிலிங்கம்கூட நல்லா வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடும் !

888888888888888888888888888888888888888888


No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...