Thursday, February 6, 2020

மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய மரம் - MONKEY PUZZLE - SOUTH AMERICAN BEAUTY



மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய   மரம்

MONKEY PUZZLE - 

TREE OF

SOUTH AMERICA




குரங்குகள் ஏற பயப்படும் மங்கி பஸ்சில் ட்ரீ





MONKEY 

PUZZLE 

SOUTH AMERICAN 

BEAUTY


ARAUCARIA  ARAUCANA

மரம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் நம்ம ஊர் நெட்டிலிங்கம் மரம் மாதிரி கூம்பு வடிவத்தில் இருக்கும். வளர்ந்த மரங்கள் வித்தியாசமான மடக்கிய குடை மாதிரி இருக்கும். அதன் இலை கிளை எல்லாவற்றிலும் ஏகப்பட்ட முள் இருக்கும்.

மங்கி பஸ்சில் ட்ரீ
(MONKEY PUZZLE TREE)

 யோவ் பாண்டிய மன்னா நீ என்ன பெரிய ஆளா ? நான் தமிழ் படிச்சவன்.. எந்த ராஜாவும் என்னை வேணாம்னு சொல்ல மாட்டான் தெரியுமா ?  குரங்கை வேணாம்னு சொல்லும் மரம் ஏதாச்சும் இருக்கா ? ” இப்படி ஒரு பாட்டை எழுதினார் கம்பர் பெருமான்.

இதோ அந்தப் பாட்டு.

மன்னவனும் நீயோ வளநாடும்உன்னதோ ?
உன்னை அறிந்தோ தமிழைஓதினேன் ? என்னைவிரைந்தேற்றுக் கொள்ளாதவேந்துண்டோ ? வுண்டோகுரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ?”



லண்டன் கியூ கார்டன்’ல்
நான் பார்த்த
மங்கிபஸ்சில் மரம்



குரங்குகள் பயப்படும் இந்தப் பாட்டுக்கு பதில் சொல்ற மாதிரி ஒரு மரத்தைப் பார்த்தேன் நான், லண்டன் கியூ கார்டன்ல் (KEW GARDEN). அந்த மரத்தின் பெயர் மங்கிபஸ்சில் மரம்’ (MONKEY PUZZLE TREE). அதாவது குரங்கு ஏற பயப்படும் மரம். அல்லது குரங்கால் ஏறமுடியாத மரம். அல்லது குரங்கை ஏற அனுமதிக்காத மரம். இந்த மரத்திற்குப் பக்கத்தில் ஒரு சின்ன பெயர்ப் பலகையில் எழுதி இருந்தது மங்கி பஸ்சில் ட்ரீ’.


தாவரவியல் பெயர்: அரகேரியா அரவ்கானா (ARAUCARIA  ARAUCANA)
குடும்பப் பெயர்: ஆரவ்கேரியேசி (ARAUCARIACEAE)


எரிமலைக் குழம்பில்கூடஎரியாத மங்கிபஸ்சில்  மரம்


மங்கிபஸ்சில்  மரத்தின் பட்டைகள் நெருப்பில கூட எரியாது; எரிமலைக் குழம்பு வழிந்தோடும் வழியில் இருந்தால் கூட இந்த மரங்கள் சாகாது. நெருப்பைக் கூட சட்டைபண்ணாத மரம். ஆச்சரியம் தரும் செய்தி. உலகில் நெருப்பை சமாளிக்கும் சக்தி படைத்த வேறு மரம் இருப்பதாகத் தெரியவில்லை.


மரம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் நம்ம ஊர் நெட்டிலிங்கம் மரம் மாதிரி கூம்பு வடிவத்தில் இருக்கும். வளர்ந்த மரங்கள் வித்தியாசமான மடக்கிய குடை மாதிரி இருக்கும். அதன் இலை கிளை எல்லாவற்றிலும் ஏகப்பட்ட முள் இருக்கும்.

சைல் நாட்டின் தேசிய மரம்



மரங்கள் வஞ்சனை இல்லாமல் வளரும். 100 முதல் 130 அடி உயரம் வரை வளரும்.  3 முதல் 5 அடி குறுக்களவு வளரும். இதன் தாயகம், தென் அமெரிக்காவின் ஆண்டஸ் மலைப் பகுதி, மேற்கு அர்ஜெண்டினா, மற்றும் மத்திய, தெற்கு சைல் நாடு. சைல் நாட்டின் தேசிய மரம் என்பது ஒரு முக்கிய செய்தி.. பனை மரம்போல ஆண் பெண் மரங்கள் இதில் தனித்தனி. மரங்களில் விதைகள் உருவாக 6 பெண்மரத்திற்கு ஒரு ஆண் மரம் அவசியம் வேண்டும். இந்த மரங்களின் வயது 1000 ஆண்டுகள்.


ரயில் பாதைகள் போட, இரும்பு நிலக்கரி சுரங்கங்கள், பேப்பர் பீங்கான் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முரட்டு மரத்தேவைகளை பூர்த்தி செய்ய பயன்பட்டன. மெல்ல மெல்ல தச்சுக் கலைஞர்கள் இதனை இதர வேலைகளுக்கும் திறமையாகப் பயன்படுத்தினர்.


இலைகள், கற்றாழை போல முரட்டுத்தனமானவை; முக்கோண வடிவில் இருக்கும். இவை உதிர 24 ஆண்டுகள் ஆகும்,



இந்த மரங்கள், வடிகால் வசதி கொண்ட மண், அமிலத்தன்மை உள்ள மண், சாம்பல் மிகுந்த எரிமலைப் பகுதிகளிலும் நன்கு வளரும். பரவலாக எல்லா மண் வகைகளிலும் வளரும்.


மரக்கொட்டைகளை ஒரு வகையான எலிகள் சாப்பிட்டுவிட்டு விதைகளை கழிவுடன் வெளித்தள்ளுகிறது. பெரும்பாலாக புதிய மரங்கள் இப்படித்தான் முளைக்கின்றன. அப்ரோத்ரிக்ஸ் லாங்கிபிலிஸ் (Abrothrix longipilis)  என்னும் இவை நீளமான மயிர்கொண்ட எலிகள்.

இவை  இந்த மரத்தின் விதைகளை பூமிக்குள் புதைத்து சேமித்தும்; வைக்கின்றன. எலிகள் ஏப்பம் விட்டது போக மீதியுள்ள விதைகள் தப்பித்து முளைத்து மரமாகின்றன. அர்ஜெண்ட்டினா மற்றும் சைல் தேசத்தின் பழங்குடி மக்களுக்கு இந்த மரக் கொட்டைகள் வேர்கடலை மாதிரி விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முதிர்ந்த கனிகள் தானாக உதிரும்; அதனால் அறுவடை செய்வது சுலபம். வளர்ந்த மரங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும்.


பழங்குடி மக்கள் பானம் தயாரிக்கிறார்கள்


அராவ்கேனியன்என்ற பெயருடைய பழங்குடி மக்கள் அதிகம் இந்த மரத்துடன் தொடர்புடையவர்கள். இதன் விதைகளைப் பொடித்து அதிலிருந்து முடேஎன்னும் பானம் தயார் செய்து அருந்துகிறார்கள். அதைக் கொஞ்சம் குடித்தால்தான் அவர்களுக்கு மூட் செட்ஆகுமாம். எதையும் செய்ய. விதைகளை சாப்பிட்டது போக மீதியை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.


தோட்டங்களில் அழகு மரமாக வளர்க்கலாம். 



இந்த மரங்களை தோட்டங்களில் அழகு மரமாக வளர்க்கலாம். குளிர்ச்சியான மற்றும் அதிக மழை பெறும் இடங்களில் இந்த மரம் சொகுசாக வளரும். மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, கனடா, நியுஸ்லேண்ட், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த மரம் காணப்படுகின்றன.


உருளை வடிவ மூக்கு கொண்ட ஒருவகை கிளிகளுக்கு (Slender billed parakeets)  அடைக்கலம் தரும் மரம் இது.


குளிர்ப் பிரதேசமாக இருந்தால் குரங்கு வராமல் தடுக்க இந்த மரங்களில் வேலி அமைக்கலாம். சிங்கம் வராமல் தடுக்கக் கூட ஆப்ரிக்காவில் மரம் இருக்கிறது என்கிறார்கள்.


இந்த மரத்தில் ஏற முடியவில்லை என சைல் நாட்டில் குரங்குகள் வருத்தப்படுவதில்லை, காரணம் அங்கு குரங்குகளே கிடையாதாம்.

நமக்கு அறிமுகமான கிறிஸ்மஸ் மரம் கூட பைன் மரம்தான். இதற்கு கூக் பைன் (COOK PINE) என்று பெயர். காரணம் இது தெற்கு ஆஸ்திரேலியாவின் கூக் தீவைச் சேர்ந்த மரம்.  இதுவம் ஆரவ்கேரியேசி குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அதில் முள் எல்லாம் கிடையாது. குரங்குகள் சுலபமாக ஏறும்.

தமிழ் நாட்டில்கூட பல தனியார் தோட்டங்களிலும் உதகமண்டலத்தில் உள்ள கவர்னர் மாளிகையிலும்கூட இந்த மரங்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.




TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html
555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...