Saturday, February 22, 2020

‘மெர்ஸ் கொரோனா வைரஸ்’ என்னும் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் - M E R S - MIDDLE EAST RESPIRATORY SYNDROME




மெர்ஸ் கொரோனா வைரஸ்’ என்னும் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம்


M E R S - MIDDLE EAST RESPIRATORY SYNDROME


மெர்ஸ் கொரோனா வைரஸ் 2019 ல் வந்திருக்கும் கோவிட் 19 வைரஸ் நோய்க்கு முன்னோடி. மெர்ஸ் கொரோனா என்றால் மிடில் ஈஸ்ட் பேசு ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் என்று அர்த்தம். கொரோனா என்பது ஒரு தனி வைரஸ் அல்ல. அது ஒரு வைரஸ் குடும்பம். அதாவது கொரோனா வைரஸ் குடும்பம்.  இதில் சிலவகை ஆபத்தில்லதவை. அதற்கு உதாரணம் நமக்கு வரும் சாதாரண ஜலதோஷம். இதில் தீவிரமானவை, ஆபத்தானவை என்று சொல்லக்கூடியவை மூன்று.  அவை சார்ஸ் கொரோனா வைரஸ்,  மெர்ஸ்கொரோனா வைரஸ்,  மற்றும் கோவிட் 19 வைரஸ் நோய். இந்த மூன்றாவது வகையான கோவிட் 19 தான் சீனாவின் உகான் நகரில் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கட்டுரையில் மெர்ஸ்கொரோனா வைரஸ் நோய்பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.


‘மெர்ஸ்’ கொரோனா வைரஸ் என்றால் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் 


MERS CORONA VIRUS MEANS MIDDLE EAST CORONA VIRUS DISEASE



மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் என்பதுதான் மெர்ஸ் அல்லது எம் இ ஆர் எஸ் (MERS) என்பதற்கு அர்த்தம். ஈரான், ஈராக், துருக்கி, சவுதி அரேபியா, மன், சிரியா, ஜோர்டான், யுனைட்ட் அராப் எமிரேட்ஸ், இஸ்ரேல், லெபானான், பாலஸ்தீனம், ஓமன், குவைத்,  கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளைத்தான், நாம் மத்திய கிழக்கு நாடுகள் என்றும், மிடில் ஈஸ்ட் என்றும் சொல்கிறோம். இந்த பகுதிக்கு உரிய நோய் என்று அர்த்தம்.

ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் என்றால் என்ன ?


A GROUP OF  RELATED SYMPTOMS OF A PARTICULAR DISEASE



ஒரு நோய் தொடர்பான பல்வேறு அறிகுறிகளை சிண்ற்றோம் என்கிறார்கள்.  இங்கு மூச்சு விடுதல் மற்றும் சுவாசம் தொடர்பான அறிகுறிகள்தான் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம். ஜலதோஷம் என்றால் கூட அதனுடைய தீவிரத்தன்மையைப் பொறுத்து பல அறிகுறிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக தும்மல், சளி, இருமல், தொண்டைப்புண், தலைவலி, காய்ச்சல் இப்படி பல விதமான அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஜலதோஷம் வைரஸ் நோய்தான். அதுவும் இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாளைக்கு தொல்லை கொடுக்கும். மருந்து சாப்பிட்டால் ஒரே வாரத்தில் சரியாகிவிடும், என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.


மெர்ஸ் கொரோனா வைரஸ் நோய் வந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் ?


SYMPTOMS OF M. E. R. S.  CORONAVIRUS – MIDDLE EAST RESPIRATORY SYNDROME VIRUS DISEASE



மெர்ஸ் கொரோனா வைரஸ் நோய் தாக்கினால் முக்கியமாக காய்ச்சல் வரும். வறட்டு இருமல் இருக்கும். ஷாட்பிரீத் என்று சொல்லப்படும் சிறு மூச்சு ஏற்படும். குமட்டல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஏற்படும். இவை தவிர உடல் வலி தொண்டை வலி தலைவலி ஆகியவை ஏற்படும். முக்கியமாக மூச்சு அல்லது சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இவை தவிர பசியிருக்காது. வேளாவேளைக்கு சாப்பிட முடியாது.


இன்னும் சொல்லப்போனால் முக்கியமாக மெர்ஸ் கொரோனா வைரஸ் தாக்கினால் அது குறிப்பாக நுரையீரலை பாதிக்கும். இதனால் ஏற்படும் அறிகுறிகள் ப்ளூ காய்ச்சல் மாதிரி இருக்கும். மெர்ஸ் வைரஸ் தாக்கினால் பெரும்பாலும் அந்த நோயாளிகளை நிமோனியா தாக்குமாம். நிமோனியா இரண்டாம் கட்டத் தாக்குதலால் தொடருமாம்.


மெர்ஸ் கொரோனா வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டது சவுதி அரேபியாவில்தான்.


சவுதி அரேபியாவில் தான் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு இந்த மெர்ஸ் கொரோனா வைரஸ் வெளிப்பட்டது. 2015 ஆம் ஆண்டு கொரியாவில் 180 பேரை பாதித்தது. இதுவரை உலகம் முழுவதிலும் 20 நாடுகளில் இதன் தாக்கம் தென்பட்டது.


நூறுபேரை தாக்கினால் 34 பேரை கொன்று விடும் அபாய கரமானது இந்த மெர்ஸ் கொரோனா வைரஸ்.
மெர்ஸ் கொரோனா வைரஸ் நோய் தாக்கினால் 34 பேரை கொன்று விடும். கடுமையான நோய் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் இந்த நோய் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், புற்று நோயினால் பாதிக்கப் பட்டோர், மற்றும் நுரையீரல் நோயால் அவதிப்படுவோர், சீக்கிரமாக இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.



மெர்ஸ் கொரோனா வைரஸ் மனிதர்களை எப்படி தாக்குகிறது ?


HOW DO M E R S VIRUS IS TRANSMITTED TO PEOPLE ?



முக்கியமாக இந்த மெர்ஸ் வைரஸால் தாக்கப்பட்ட ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதன் பின்னர் மெர்ஸ் தாக்கியவர்களிடமிருந்து அடுத்தவ மனிதருக்குப் பரவுகிறது. மெர்ஸ் வைரஸ்சும் பிராணிகள் மற்றும் மனிதர்களைத் தாக்கும் ஒரு ஜூனாடிக்நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழ்க்கண்டவைதான் 
மெர்ஸ் கொரோனாவின் 
அறிகுறிகள்

       1.            காய்ச்சல்
       2.            இருமல்
       3.            தொண்டை புண்
       4.            வயிற்று வலி
       5.            வாந்தி
       6.            வயிற்றுப்போக்கு

மேலே குறிப்பிட்ட ஏழு அறிகுறிகள்தான் முக்கியமான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.  மெர்ஸ் கொரோனாவின் பாதிப்பு உள்ள இடங்களுக்குச் சென்று வந்தால் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இந்த வைரஸின் அறிகுறிகள், தொற்று ஏற்பட இரண்டு நாட்களில் தோன்றும். இந்த வைரஸ் பாதிப்பு 14 நாட்களுக்கு தொடரும்.


மெர்ஸ் கொரோனாவின் வைரஸ் தொற்றினைக் கண்டறிவது எப்படி ?


HOW TO CONFIRM THE MERS CORONA VIRUS ATTACK ?



 வைரஸின் தொற்று ஏற்பட்டு உள்ளதா என்று பரிசோதனைகளைக் கொண்டே கண்டறியமுடியும். மார்பு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனைகள், சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகள்,  நுரையீரலிலிருந்து வெளிப்படும் சளி மற்றும் இதர திரவங்கள் பரிசோதனை, ஆகியவற்றைக் கொண்டே மெர்ஸ் கொரோனாவின் தொற்றினை உறுதிப்படுத்த முடியும். தாக்குதல் குறித்த சந்தேகம் ஏற்படும்போது இந்த பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.


டுரோமெடரி ஒட்டகங்கள் மெர்ஸ் கொரோனாவின் வைரஸ் நோயை பரப்புகின்றன.


DROMEDARY CAMELS CARRY AND  SPREAD MARS CORONA VIRUS DISEASE



கேமலஸ் டுரோமெடரியஸ் (CAMELUS DROMEDARIUS) என்னும் ஒட்டகங்கள் இந்த வைரஸ் நோய் இந்த வைரஸ் கிருமிகளை தங்கள் உடலில் சேமித்து வைத்துள்ளன. இந்த வகை ஒட்டகங்கள்தான் இந்த நோயை மனிதர்களிடம் பரப்புகின்றன. இதனை சோமாலி ஒட்டகம் என்றும் சொல்லுகிறார்கள். ஒட்டகங்களில் சில ஒற்றைத் திமிலுடன் இருக்கும். சில ஒட்டகங்களுக்கு இரட்டைத்திமில்  இருக்கும். ஒற்றைத் திமில் ஒட்டகங்களை டுரோமெடேரியஸ் ஓட்டங்கள் என்பார்கள். இரட்டைத் திமில் கொண்டவைகளை  பாக்டீரியன் ஒட்டகங்கள் என்பார்கள். ஆனால் உலகில் இருக்கும் மொத்த ஒட்டகங்களில் 96%  டுரோமெடேரியஸ் வகை ஓட்டங்கள்தான்.  இரட்டைத் திமில் கொண்ட ஒட்டகங்களில் இரண்டு வகை உண்டு. இவற்றின் அறிவியல் பெயர்கள், கெமீலியஸ் பேக்டிரியானஸ் மற்றும் கெமீலியஸ் ஃபெரஸ் (CAMELUS BACTERIANUS, CAMELUS FERUS ). இவற்றை அருகிவரும் அல்லது அழிந்து வரும் இனம் என்று சொல்லுகிறார்கள். இவை தெற்கு சீனா மற்றும் மங்கோலியா ஆகிய இடங்களில் இருக்கின்றன. பேக்டிரியா என்பது புராதன பெர்சியாவை குறிக்கும். இன்றைய ஈரான் தான் புராதன பெர்சியா என்பது.

நிறைவுரை


இதுவரை அறிமுகமாகியிருக்கும் மூன்று வகையான உயிர்கொல்லி வைரஸ்களில்,  மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி வைரஸ் என்பது ஒட்டகங்கள் அதிகம் காணப்படும் நாடுகளில் பரவும் வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த எம் இ ஆர் எஸ் கொரோனா வைரஸ் டுரோமெடரி எனும் ஓட்டக வகையினால்  பரப்பப்படுகிறது.  இது பிராணிகள் மற்றும் மனிதர்களைத் தாக்கும் வைரஸ் கையாக இருப்பதால் ஒட்டகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து விலகி இருப்பது அவசியம். சந்தேகப்படும்படியான நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சோதனைகளும் சிகிச்சையும் பெற வேண்டியது அவசியம்.


FOR FURTHER READING 

ON RELATED  TOPICS


1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார் -  CORONA VIRUS -  VACCINE IS READY  FOR CONTROL /30.01.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html

2. உலகை மிரட்டும்  2019 புதிய கொரோனா   வைரஸ் - 2019 NEW CORONA   VIRUS / 01.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2019-2019-new-corona-virus.html

3. கொரோனா வைரஸ்  தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF  CORONA VIRUS /02.02.2020 /

4. கொரோனாவைரஸ்சை  ஹோமியோபதி மற்றும்  யுனானி மருத்துவத்தின் மூலம்  கட்டுப்படுத்த முடியும்  -   CORONAVIRUS COULD BE   CONTROLLED BY  HOMEOPATHY & UNANI  MEDICINES /03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/coronavirus-could-be-controlled-by.html

5. கொரோனாவை பார்த்து குலை நடுங்க  வேண்டாம்  - நம்புங்கள் -  DO NOT FEAR ABOUT  CORONAVIRUS  /05.02.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html

6. கொடூரமான  கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான  பங்கோலின்கள்  -   KILLER VIRUS CORONA'S  DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html

7. கொரோனா வைரஸ்  இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html









No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...