வாங்க உணவு சார்புடைய தொழில்
தொடங்கலாம்
LET US START
A FOOD BUSINESS
மதிப்பு
கூட்டும்
தொழில்
தொடங்குவதுதான்
இன்றைய
இந்தியாவின்
முக்கிய
தேவை
FOOD PROCESSING INDUSTRIES -INDIA’S
NEED OF THE HOUR
சர்வதேச அளவிலான
உணவு பொருள் தொடர்பான வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு 1.5 சதவீதம் மட்டுமே. இதனை
வளர்த்தெடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று சொல்லுகிறார்கள் பொருளாதார
நிபுணர்கள். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் உணவு சார்ந்த
தொழில்களில் மூலம் கிடைத்த வருமானம் ரூபாய் 140 ஆயிரம் கோடி.
நாம் ஏன்
வேளாண்மை
உற்பத்தியில்
கவனம் செலுத்த
வேண்டும் ?
WHY WE NEED TO GIVE PRIORITY TO
AGRICULTURE ?
ஒரு நாட்டின்
பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையானது வேலைவாய்ப்பு .100 மில்லியன் ரூபாய் முதலீடு செய்தால்
விவசாயத் துறையின் மூலமாக 54000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு தர முடியும். அதே அளவு
பணத்தை நெசவுத் துறையில் முதலீடு செய்தால் 48000 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க முடியும். பேப்பர்
உற்பத்தி தொழிலில் முதலீடு
செய்தால் 25000 பேருக்கு
மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்க முடியும்.
அதனால் நமது
வேலைவாய்ப்பும் சமூக பொருளாதார மேம்பாடும் வளர வேண்டுமென்றால் வேளாண்மை சார்ந்த
தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த துறையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் உணவு உத்தரவாதத்திற்கும்
உதவ முடியும். இன்னொன்று இனி வரும் காலத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான
உணவை உற்பத்தி செய்யவும் முடியும்.
உணவுப்
பொருட்களை
பதப்படுத்தும்இந்தியாவின்
ஐம்பெருந்
தொழில்கள்
FIVE GREAT
AGRO FOOD PROCESSING
INDUSTRIES OF INDIA
இந்தியாவின்
உணவு பதப்படுத்தும் தொழிலில் முக்கியமானவை என ஐந்து தொழில் பிரிவுகளை சொல்லலாம். அவை உணவு
தானியங்கள் தொடர்பானவை, சர்க்கரை சம்மந்தமான
தொழில், உணவு எண்ணெய்த் தொழில் மதுபானத் தொழில் மற்றும் பால் பொருட்கள்.
உணவு
பதப்படுத்தும் தொழிலின் இரண்டாம் நிலையில் முக்கியமானவைகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம். அவை பால் பொருட்கள் தொழில்,
பழங்கள் மற்றும் காய்கறிகளில் தொடர்பான தொழில், கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி
பதப்படுத்துதல் தொழில், மீன் உணவு தொழில், உணவுப்பொருள் சில்லரை வியாபாரம் ஆகியவை. இவற்றை மேம்படுத்த உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு மிகப் பெரிய
எதிர்காலம் காத்திருக்கிறது என்று கருத்து தெரிவிக்கிறார்கள் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள்.
உலக அளவில்
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உணவு வியாபாரம் இதனை நிரூபித்து வருகிறது. இவற்றின் மூலம்
கிடைக்கும் வருமானம் மற்றும் லாபம் கணிசமாக கூடிவருகிறது. உணவு
பதப்படுத்தும் தொழில் துறையில் வியாபாரம் செய்வதற்கான முதலீடுகளை உணவு
பதப்படுத்தல் துறை அமைச்சகம் பெருமளவு
ஊக்குவித்து வருகிறது
இது போன்ற
தொழில் தொடங்குவதற்கான கூட்டு முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்க அனுமதி வழங்குதல், 100 சதவிகித ஏற்றுமதி நிறுவனங்கள் தொடங்குதல், போன்றவற்றை இந்திய அரசின் இந்த உணவு பதப்படுத்தும் துறைக்கான
அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.
உலகச் சந்தைகளில் மிக முக்கியமானது, இந்தியாவின்
உணவு மற்றும் மளிகை பொருட்கள் சந்தை. இது
உலகின் ஆறாவது மிகப்பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை விவசாயப்
பொருட்களின்
உற்பத்திமூன்று மடங்கு
அதிகரிக்கும்
ORGANIC
FOOD MARKET OFINDIA
WILL INCREASE THRICE IN
FUTURE
இந்தியாவின்
மொத்த உணவுச் சந்தை மதிப்பில் உணவு பதப்படுத்தும் துறையின் மதிப்பு மட்டும் 32% என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின்
மிகப்பெரிய தொழில்களில் இது ஐந்தாவது பெரிய தொழில் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு
முக்கியமான செய்தியை நாம் கவனிக்க வேண்டும். அதாவது இந்த ஆண்டு (2020) இயற்கை விவசாயப் பொருட்களின் உற்பத்தி
33 மடங்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.
இந்தியாவில்
வேகமாக வளரும்
உணவு பொருள்
விற்பனை
வியாபாரம்
FAST GROWING
FOOD BUSINESSIN INDIA
ஆன்லைனில்
உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வழக்கம் அயல் நாடுகளைப் போலவே
இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வியாபாரம் இந்தியாவில் போனியாகாது என்று சொல்லுவார்கள் நிறைய பேர் அப்படி சொல்லி வருகிறார்கள்.
ஆனால் இப்படி
ஆன்லைனில் விற்பனை செய்வதும் வாங்குவதும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மறைக்கவும்
முடியாது. இது ஒவ்வொரு ஆண்டும் 150
சதவீதம் அதிகரித்து வருகிறது என்று சொல்கிறது
ஒரு புள்ளிவிவரம்.
உணவு
பதப்படுத்தும்
தொழிலை மேம்படுத்துவதில்இந்திய அரசு
அளிக்கும் உதவிகள்
FOOD
PROCESSING INDUSTRIESRECEIVE
SUPPORTS FROM
GOVT.
OF INDIA
உணவு
பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்துவதற்கான அரசு பல்வேறு வகைகளில் உதவுகிறது. உணவு பொருட்களை விற்பனை செய்வதில் புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. நூறு
சதவீத அயல்நாட்டு முதலீடுகளை அனுமதித்தல், புதிய பதப்படுத்தும் தொழில்கள் நிறுவுவதற்கான உதவிகளைச் செய்தல், உணவுப்
பொருட்களின் தரம்ப்பரிசோதனைக்கான ஆய்வுக்கூடங்களை அமைக்க உதவுதல், உணவு
பதப்படுத்துதல் தொடர்பான பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு ஆகியவற்றை நடத்த
உரிய ஏற்பாடுகளைச் செய்தல், அதற்கான பயிற்சி மையங்களை அமைத்தல் போன்றவற்றிற்கு அரசு உதவும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
TO HAVE MORE INFORMATIONREAD THE FOLLOWING
1. உணவு பதப்படுத்தும் தொழில் இன்றைய இந்தியாவின் தேவை - FOOD PROCESSING INDUSTRIES - IMMEDIATE NEED FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html
2. இந்திய உணவு சரித்திரத்தில் இடம்பெற்ற
பதப்படுத்தும் வியாபார
நிறுவனங்கள் - PRIMARY
PROCESSING CUM BUSINESS INDUSTRIES
OF INDIAN FOOD HISTORY Date of Posting: Feb
06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html
3. இந்தியாவின் 5 பிரதானமான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்
- FIVE PROMINENT FOOD
PROCESSING INDUSTRIES IN INDIA / Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html
4. இந்தியாவின் 5 பிரதானமான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்
- FIVE PROMINENT FOOD
PROCESSING INDUSTRIES IN INDIA/ Date of Posting: Feb 15th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html
5. MAIZE BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில் என்னென்ன தொழில்கள் செய்யலாம் ? / Date of Posting: Dec 29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html
6. இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் - பகுதி - 3 FOOD PROCESSING INDUSTRIES OF INDIA - PART -3
- Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html
No comments:
Post a Comment