Monday, February 10, 2020

ஈச்சைமரம் படுக்கையும் போதையும் தரும் அழகு மரம் - ICHCHAI MARAM - BEAUIFUL PALM WINE TREE


ORNAMENTAL TREES OF INDIA

அழகான இந்திய மரங்கள்



ஈச்சைமரம்   
படுக்க பாயும்
குடிக்க போதையும்  
தரும் 
அழகு மரம் 



ICHCHAI MARAM - 

BEAUIFUL
  
PALM WINE TREE


ஈச்சமரம்

INDIAN 

DATE PALM


தே.ஞானசூரிய பகவான்
போன்: +91-8526195370
Email: gsbahavan@gmail.com

தாவரவியல் பெயர்: பீனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ்(PHOENIX SYLVESTRIS)


தாவரக் குடும்பம் பெயர்: அரிகேசியே (ARECACEAE)தாயகம்: இந்தியா (INDIA)



கிராமங்களில் சிறுவர்களுக்கு இலவசமாக சேகரிக்கக் கிடைக்கும் பழவகைகளில் இதுவும் ஒன்று.  இதில் சிற்றீச்சன் என்று ஒரு வகை உண்டு.  பழங்கள் பறிக்க வசதியாய் மரங்களும் காய்களும் சிறுசாய் இருக்கும.;  இனிப்பும் சுவையும்  கொஞ்சம் கூடுதலாய் இருக்கும்.  இலை இணுக்குகளின் நுனியிலும் மட்டைகளின் அடிப்பகுதியலும் முட்கள் இருக்கும்.  மட்டை அடிப்பகுதி முட்கள் மஞ்சள் நிறத்தில் நீளமாய் வீச்சு வீச்சாய் இருக்கும்.


பனை மரத்துக்கு பானை
ஈச்ச மரத்துக்கு
பெரும்பானை


ஈச்சமரங்களில் சாறு இறக்குவதைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கும்.  எனக்கும் ஈச்சன் மரத்தில் சாறு இறக்கலாம் என்று தெரியாது. பனை மரங்களில் வடியும் சாறு மிகவும் குறைவாக இருக்கும்.  அதற்கு ற்ப பனையில் சிறிய மண்கலயங்களை கட்டி வைத்திருப்பார்கள்.  இதனை பல்லா என்பார்கள். பல்லா என்பது சிறுபானை. அதில் பாதி நிரம்பி இருந்தாலே பெரிய விவுயம்.  சில மரங்கள் அதிக சாறு வடிக்கும்.  சில  மிகவும்  குறைவாய் வடிக்கும்.  

ஆனால் ஈச்ச மரங்களில் வடியும் சாற்றினை சேகரிக்க குடங்களை கட்டி வைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  சில குடங்கள் முக்கால்வாசி கூட நிறைந்திருக்கும்.  பல்லாவைவிட குடங்கள் பல மடங்கு பெரியவை. 

ஈச்ச மரச்சாறு ரொம்ப இனிப்பாக இருக்கும்.  ஈச்சன் மற்றும் தென்னை மரங்களில் சாறு இறக்குவது பனைமரத்திலிருந்து வேறுபட்டது.


ஈச்ச மரங்களில் இறக்கும் சாற்றினை புளிக்கவைத்து கள் தயாரிப்பதும்  சாற்றினைக்; காய்ச்சி வெல்லம் தயாரிப்பதும் மேற்கு வங்காளத்திலும், பங்ளாதேஷிலும் சகஐமானது.  தமிழ்நாட்டின் இது அரிதானது. இங்கு கள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஈச்ச மரத்தை யாரும் சட்டை செய்வது கிடையாது. இங்கு அதிகமும் இல்லை. 


பீர் பிராந்தி ரம் ஜின் ஒயின் ஓட்காவுக்கு ஓக்கேஆனால் கள்ளுக்கு நோவா ??



மரங்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் தடை செய்யப்பட்டுள்ளது வருத்தத்துக்கு உரியது. தென்னை, பனை, ஈச்சன் ஆகிய மரங்களை அடிப்படையாகக்கொண்டு ஒரு சமூகமே இங்கு இருக்கிறது. உண்மயில் இது மரங்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


கிராமத்து மக்களின் படுக்கையும் தரை விரிப்பும்



நான் வசித்த கிராமங்களில், பொது நிலங்களில் நிறைய ஈச்ச மரங்கள்  தானாக வளர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில், ஈச்சம்பாய்களும் பனந்தடுக்குகளும் இருக்கும்.  படுக்க ஈச்சம் பாய்கள். உட்கார பனந்தடுக்குகள். ஈச்சம் பாய்கள் பெரியதாக இருக்கும். வீட்டு வாசலில் ஒரேஒரு ஈச்சன் பாயைப்போட்டு; ஐந்தாறு பேர்கள்கூட வசதியாக படுத்துக் கொள்ளுவோம். குறுக்காக படுத்தால் பத்துபேர்கூட படுக்கலாம். மழை வந்தால் சுருட்டிக்கொண்டு வீட்டுக்குள் ஓடுவோம். 


கோரையில் முடைந்த பாய்கள் ஒன்றிரண்டுதான் இருக்கும்.  அதுவும் வசதியானவர்களின் வீடுகளில்தான் இருக்கும்.  கல்யாணம், காரியம்  போன்ற விசேஷங்களில் மட்டும் கோரைப் பாயை வெளியே எடுப்பார்கள்.
சமீப காலமாய் ஈச்சமரங்களை அழகு மரமாக நகாப்புறங்களில் நடுகிறார்கள்.  அதிலும் குறிப்பாக நட்சத்திர ஹோட்டல் முகப்புகளில் ஈச்ச மரங்களை நடுவதில் குறியாக உள்ளார்கள். பழங்கள் வேண்டாம், ஈச்சங்கள் வேண்டாம் மரங்கள் போதும் என்கிறார்கள்.


இதற்காக என்றே சிங்கப்பூரில் சீனாக்காரர் ஒருத்தர் ஒரு கம்பெனி வைத்திருந்தார்.  அவருடைய முக்கியமான வேலையே, இந்தியாவிலிருந்து ஈச்ச மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து கப்பல் மூலம் ஏற்றுமதி செய்து பெரிய ஹோட்டல்களில் விற்பனை செய்வதுதான். ஒரு சென்னை நண்பர் அந்த காரியத்திற்கு உதவியாக இருந்தார். நான் சொல்வது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால்.
கன்றுகளை நட்டு மரமாக வளர்க்கும் காலம் மாறிவிட்டது.  எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அதன் வேர்களுக்கும் மரத்திற்கும் சிறிய சிராய்ப்பு கூட வராமல் அப்படியே பிடுங்கி எடுத்து குழியும் எடுத்து ஆடாமல் அசையாமல் நடுவதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன.


1. ஈச்சமரத்தின் பல மொழிப் பெயர்கள் - EECHAMARAM - VERNACULAR NAMES IN DIFFERENT LANGUAGES


1.1.தமிழ்: ஈந்துபனை, காட்டீஞ்சு, ஈச்சம் (EENTHIU PANAI, KAATEENJU, ECHAM)1.2. பொதுப்பெயர்கள்: ஒயில்ட் டேட் பாம், டேட் சுகர் பாம், இண்டியன் ஒயில்ட் டேட், இண்டியன் ஒயின் பாம், சில்வர் டேட் பாம், சுகர் டேட் பாம், சுகர் பாம் (WILD DATE PALM, DATE SUGAR PALM, INDIAN WILD DATE, INDIAN WINE PALM, SILVER DATE PALM, SUGAR DATE PALM, SUGAR PALM)1.3. இந்தி: காஜுர், சேந்தி (KAJUR, SENTHI)1.4. மணிப்புரி: தாங்டுப் (THANGDUP)1.5. மராத்தி: காரிக், கர்ஜுர்;, கர்ரி, ஷிண்டா, ஷிண்டி (KHARIK, KARJUR, KARJARI, SHINDA, SHINDI)1.6.மலையாளம்: காட்டீந்தா, காட்டீந்தல், நிலன்தெண்ட் (KATTEENTHA, KATEENTHAL, NILANTHEND)1.5. தெலுங்கு: ஈட்டா (EETA)1.6. கன்னடா: ஈச்சாலு, கர்ஐரா (EECHALU, KARJARA)1.7. பெங்காலி: கர்ஐரா, கெரா (KARJARA, KEJARA)1.8. ஒரியா: கோர்ர்ரி (KORJARI)1.9. கொங்கணி: கதுர் (KAJADHUR)1.10. உருது: காஐர் (KAJAR)1.11. அசாமிஸ்: காரி (KAJARI
1.12. குஐராத்: கரி (KAJARI
 1.13. சமஸ் கிருதம்: கர்ஐர், கர்ஐரி (KARJAR, KARJARI)
  1.14.நேப்பாளி: கண்டேலா, டாடி (KANDELA, DADI)



பழங்கள்  குலை குலையாய் காய்க்கும் 



பல விதங்களில் பேரீச்சை மரத்திற்கு நெருக்கமான உறவுடைய மரம் 4 முதல் 8 மீட்டர் உயரமும் 40 செ.மீ. விட்டமும் உள்ள மரமாக வளரும்.  இலைகளையுடைய மட்டைகள் சராசரியாக 3 மீட்டர் நீளத்திற்கு தரையை நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும்.  வறண்ட நிலப்பகுதிகளில், தானாக வளர்ந்திருக்கும்.  

ஒற்றை விதையுடைய இதன் பழங்கள் குலை குலையாக காய்க்கும்.  பழங்கள் ஆழ்ந்த ஊதா மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.  பழங்களின் தசைப்பகுதி அதிகம் இல்லாமல் தோலாக இருக்கும்.  அரைத்த மஞ்சள் நிறப்பிஞ்சு காய்கள் துவர்ப்பாக இருக்கும்.


தாயகம்: இந்தியா, பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா, நேப்பாளம், பூட்டான், மியான்மர், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது இந்த ஈச்சமரம்.


ஈச்சமரங்கள், வறட்சியைத் தாங்கும்.  பரவலான மண்வகைகளில் வளரும். கூடுதலான சூரிய வெளிச்சம் தேவைப்படும்.  மரத்தின் தலைப் பகுதியில் சராசரியாக 100 மட்டைகளாவது விரிந்திருக்கும்.  வெளிர் சந்தன நிறமாய் இளம் கோடையில் பூக்கும்.  விதைகளை சேகரித்த பின்னர் பழத்தசையை நீக்கிவி;ட வேண்டும்.  லேசான அமிலத்தன்மை முதல் லேசான காரத்தன்மை உடைய மண்ணில் வளரும்.  மார்ச் முதல் மே வரை பூக்கும்.  செப்டெம்பர் அக்டோபரில் பழங்கள் பழுக்கும்.


இந்தியாவில் ஈச்சமரங்கள் இல்லாத இடமே இல்லை.  ஐம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேஷ், சிக்கிம், அருணாச்சலப் பிரதேஷ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உள்ளன, ஈச்சமரங்கள்.


தமிழில் கள் மற்ற மொழிகளில் பாம் ஒயின்



தென்னை, பனை, ஈச்சன் ஆகிய மரங்களிலிருந்து கிடைக்கும் மதுபானத்திற்கு தமிழில் வழங்கும் பொதுவான பெயர் கள்ளு’.  இதற்கு உலகம் முழுக்க வழங்கும் பொதுவான பெயர் ஆங்கிலத்தில் பாம் ஒயின் (PALM WINE).  உலகின் பல்வேறு பாகங்களின் இதனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள் என்று பார்க்கலாம். 

1.            கேமரூன் - மட்டங்கோ (MATTANGO)
2.            நைஐPரியா - எழு (EZHU)
3.            காங்கோ என்சாம்பா (ENSAMBA)
4.            அங்கோலா மஞ்செனுவா (MANJENUA)
5.            கானா என்சபுபுவோ (ENSABUBUVO)
6.            மியான்மர் - டான் யாய் (DANYAY)
7.            இந்தோனேசியா ரூ மலேசியா டுவாக் (RU MALAYSIA DUVAK)
8.            கேன்யா எம்நாசி (EMNASI)
9.            மத்திய அமெரிக்கா வினே டி கோயல் (VINO DE GOYAL)
10.          பிலிப்பைன்ஸ் ஃ மெக்கிகோ ரூ போர்னியோ - டூபா (MEKIKO RU BORNEO)
11.          தமிழ், மலையாளம் - கள்ளு (KALLU)
12.          வட இந்தியா டாடி (DADI)
13.          ஸ்ரீலங்கா தால் ரா, இதுல் ரா, போல் ரா (DAL RA, ITHUL RA, POL RA)



பனம்பூவை சீவுவதன் மூலம் பனம் சாற்றினை வடியச் செய்வார்கள்.  புதிதாய் இறக்கப்படும் சாறு இனிப்பாக சுவையாக இருக்கும்.  சாறு சேகரித்த இரண்டு மணி நேரத்தில் புளித்து கள்ளாக மாறிவடும். ஒரு நாள் முழுக்க புளிக்க அனுமதித்தால் கூடுதலான புளிப்புடன் அமிலச் சுவையுடன் இருக்கும்.  கள்ளில் 4 சதம் ஆல்கஹால் இருக்கும்.  லேசான போதை இருக்கும்.


பீர் ஒயின் பிராந்தியில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கும் ?



இதுபோன்ற மரங்களிலிருந்து இறக்கும் கள்ளை டிஸ்டிலேவுன் மூலம், அராக், சாராயம், ஜின், மற்றும் நாட்டு விஸ்கி போன்றவைகளும் தயாரிக்கலாம். அவற்றில் எல்லாம் ஆல்கஹால் அதிகம் இருக்கும். கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்.

கள் - 8.1 சதம்பீர் -  4 – 6 சதம்
ஒயின் 11.6 சதம்பிராந்தி – 35 – 60 சதம்ரம் - 40 – 80 சதம்வோட்கா – 40 – 95 சதம்சாராயம் 40 முதல் 63 சதம்


பீனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ்என்பது ஈச்ச மரத்தின் தாவரவியல் பெயர்.  கிரேக்க, நாட்டில் பியூனிக்ஸ் என்பது ஒரு காவியப் பறவை (LEGENDRY BIRD). பியூனிக்ஸ் பறவை வயது  முதிர்ந்ததும் பற்றி எரிந்து சாம்பலாகிவிடும்.  அந்த சாம்பலில் இளம் பியூனிக்ஸ் பறவை ஒன்று எழுந்து வரும்.  கிரேக்க கலாச்சாரத்தின் படி பியுனிக்ஸ் பறவைஇறவாமையின் அடையாளம் அது.  அதன் பெயரை ஈச்சமரத்தின் தாவரவியல் பெயராக வைத்ததற்கு காரணம் நிச்சயம் இருக்கும்! அது என்ன ? அழிவில்லா மரம்.

888888888888888888888888888888888


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...