Sunday, February 23, 2020

வேர்க்கடலை சாப்பிடுங்கள் - இருதயநோய் வராது - GROUNDNUT IS A SAFE-NUT FOR THE HEART



வேர்க்கடலை
சாப்பிடுங்கள் -
இருதயநோய் வராது



GROUNDNUT IS A

SAFE-NUT

FOR THE HEART


வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வராது. காரணம் அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் 18.2 சதம் இருக்கிறது. இந்த ஒமேகா கொழுப்பு அமிலங்கள் தான் இதற்கு காரணமாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் சில டாக்டர்கள் சொல்ல நானே கேள்விப்பட்டிருக்கிறேன் இதய நோய் இருப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிட கூடாது என்று. ஆனால் அது உண்மை அல்ல என இப்போது தெரிகிறது.

ஆமாம் அது என்ன
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் ?


WHAT IS OMEGA FATTY ACIDS  ?


கொஞ்சம் சைன்ஸ் தெரிஞ்சுக்கலாம். அது என்ன ஒமேகா கொழுப்பு அமிலங்கள் ? வால்நட் மாதிரி என்றால் ரொம்ப காஸ்ட்லியான கொட்டைகளில்தான் இந்த மாதிரி ஒமேகா சமாச்சாரங்கள் அதிகம் இருக்கும் என்பார்கள்.  குறிப்பாக வால்நட்ஸ், அல்மாண்ட்ஸ் ஆகியவை கொலஸ்ட்ராலை குறைக்கும். அதனால்  இந்த டிரைநட்ஸ் என்னும் கொட்டை வகைகளை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.  ஆனால் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை இவற்றில் கலோரி கொஞ்சம் அதிகம்.




ஒமேகா கொழுப்பு
அமிலங்கள் மீன் உணவில்
அதிகம் இருக்கும்
 OMEGA FATTY ACIDS

ARE RICH IN FISH



ஒமேகா 3  எனும் கொழுப்பு அமிலங்கள், பொதுவாக மீன்களில் அதிகம் இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள் நல்லது செய்யும் என்கிறார்கள். தப்பு தாளங்கள் போடும் இதயத்தை (IRREGULAR HEART RHYMS) சரி செய்யும் என்றும் சொல்கிறார்கள்.

டிரைநட்ஸ் வகைகளில்
சேருமா வேர்கடலை ?
 WHETHER GROUNDNUT

COMES UNDER DRYNUTS ?


அல்மாண்ட்ஸ், மகடாமியா கொட்டைகள் எல்லாமே இதயத்திற்கு ஆரோக்கியமானவை. வேர்கடலை இந்த கொட்டைகள் வகையறாவில் சேராதது. ஆனால் வேர்கடலையும் இந்த கொட்டைகளுக்கு சமமாக இதயத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடியது.  ஆனால் இத்துடன் உப்பு, சர்க்கரை மற்றும் சாக்லேட் சேர்க்காமல் சாப்பிடும் வரை இவை எல்லாமே ஆரோக்கியமானதுதான் என்கிறார்கள். ஆனால் சுவைக்காக உப்போ,  சர்க்கரையோ சேர்க்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் வேர்க்கடலையை வறுத்து சாப்பிடும் போது அதில் கிட்டத்தட்ட 21 சதம் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவும்
சீனாவும் அதிக வேர்கடலையைஉற்பத்தி செய்யும் நாடுகள்.
 INDIA AND CHINA -TOP COUNTRIESPRODUCING MOREGROUNDNUT



இன்று உலகத்திலேயே அதிகமாக வேர்க்கடலையை உற்பத்தி செய்யும் அல்லது பயிர் செய்யும் நாடுகள் என்ற வரிசையில் சீனாவும் இந்தியாவும் இடம் பெறுகின்றன. சீனாவும் இந்தியாவும் சேர்ந்து 60 சத நிலக்கடலையை உற்பத்தி செய்கிறது. 52 சதவீத நிலக்கடலை பயிர் பரப்பை வைத்துள்ளது. அதாவது சர்வதேச அளவில் 60 சத வேர்க்கடலையை சீனாவும் இந்தியாவும் சேர்ந்து உற்பத்தி செய்கின்றன. அதேபோல சர்வதேச அளவில் 52 சதவீத நிலப்பரப்பில் நிலக்கடலையை சாகுபடி செய்துள்ளது இந்தியாவும் சீனாவும். ஆனால் நிலக்கடலையின் தாயகம் மற்றும் தாய்வீடு தென்அமெரிக்கா. தென் அமெரிக்காவை சொந்த ஊராகக் கொண்ட வேர்கடலை தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வந்து, அங்கிருந்து அதனை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் அறிமுகம் செய்தார்கள்.  

வேர்கடலைஒருஆரோக்கியமானஉணவு.
 GROUNDNUT 

A HEALTHY

FOOD


வேர்கடலையில் உள்ள சத்துக்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அது பற்றிய உண்மையான செய்திகளை கேள்விப்படும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் இதுவரையில் நமக்கு சொல்லப்பட்டது எல்லாமே அதற்கு எதிரான செய்திகள். வேர்கடலை அதிகமாக சாப்பிட்டால் அது அதில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் இதய நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.  அப்படியே  சாப்பிட்டாலும்  குறைவாக சாப்பிடவேண்டும் என்று பல மருத்துவர்களை எனக்கு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. வேர்கடலையில் தயார் செய்யக்கூடிய வேர்க்கடலை பட்டர்,  வேர்க்கடலை எண்ணெய், வேர்கடலை ஆகியவற்றை சாப்பிடுவது உண்மையிலேயே இருதயத்திற்கு ஆரோக்கியமானது.

நிலக்கடலையை
சாப்பிடுவதன் மூலம்சத்து பற்றாக்குறையைசரிசெய்யலாம் GROUNDNUT CAN

DRIVE AWAY

MALNUTRITION

PROBLEMS


உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி சர்வதேச அளவில் 30 சதவீத மக்கள், மால் நியூட்ரிஷன் (MAL NUTRITION)என்று சொல்லக்கூடிய சத்து பற்றாக்குறை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நாடுகளில் நிலக்கடலையை சாப்பிடுவதன் மூலமாக  மால் நியூட்ரிஷன் என்று சொல்லக்கூடிய சத்துப் பற்றாக்குறையை தவிர்க்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ன்னொரு காரணம் வேர்க்கடலை மிகவும் மலிவானது. அதிக அளவு புரதச்சத்தும்,  அமினோ அமிலங்களும்,  கார்போஹைட்ரேட்டும் அதிகமான அளவு இருக்கிறது.


அதேபோல் பொதுவாக ஆரோக்கியமான கொழுப்புச்சத்து அல்லது ஆபத்தில்லாத கொழுப்புச் சத்து, ஆலிவ் எண்ணெயில் தான் இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஆனால் அதே போன்ற ஆபத்து இல்லாத ஆரோக்கியமான கொழுப்பு சத்து வேர்க்கடலையிலும் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.


குறிப்பாக ப வகைகளில் அதிகமான அளவு ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. உதாரணம், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி,  ப்ளாக்பெர்ரி, ஆப்பிள் ஆகிய பழங்கள், மற்றும் கேரட்,  பீட்ரூட் ஆகிய காய்கறிகள். ஏறத்தாழ அவற்றிற்கு சமமாக அல்லது அவற்றைவிட அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வேர்கடலையில் இருக்கிறது. ன்னும் சொல்லப்போனால் இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கடலையை வறுத்துச் சாப்பிடும் போது கிட்டத்தட்ட 22 சதவீதம் அதிகரிப்பதாக தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால் வேர்க்கடலையை தற்போது ஆரோக்கியமான உணவு என்ற பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

டிரைநட்ஸ் எனும்
கொட்டைகளைசாப்பிடலாம் DRYNUTS WILL NOTINCREASE THE
BODY WEIGHT


சிலர் என்று சொல்லக்கூடிய டிரைநட்ஸ் எனும் கொட்டைகளை சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அதே சமயத்தில் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் செய்த ஒரு ஆராய்ச்சியில் அப்படி உடல் எடை அதிகரிக்காது என்கிறார்கள். அதாவது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே டிரைநட்ஸ் சாப்பிட்டால் கூட உடல் எடை கூடுவதில்லை. கொட்டைகள் சாப்பிடாதவர்களுக்கு உடல் எடை ஏறுவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள்.


சீட்டுகிழிச்சான்
கொட்டை என்றால்
தெரியுமா ?
 FIRST RAINFED CROPSAVED THE FARMERSFROM INDEBTEDNESS



இந்தியாவில் வேர்க்கடலையை அறிமுகம் ஆன பொழுது குறிப்பாக தமிழ்நாட்டில் தென் ஆற்காடு மற்றும் வடஆற்காடு மாவட்டத்தில் அதிகமான அளவில் வேர்க்கடலை என்னும் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. அதனால் வடாற்காடு மாவட்டத்தை  வேர்க்கடலை மாவட்டம் என்ற சொன்னார்கள். தென்தமிழ் நாட்டில் வேர்கடலைக்கு சீட்டுகிழிச்சான்கொட்டை என்றும் ஒரு பெயர் இருந்த்து.

நிலக்கடலை அறிமுகமான பின்னால்தான் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்தார்கள். அதற்கு அடையாளமாக பிராமசரி நோட்டு எனும் கடன் பத்திரத்தை வாங்கி கிழித்து போட்டார்கள். அந்த கடன் பத்திரத்தை கடன்சீட்டு என்றும் சொல்லுவார்கள். அந்த கடன்சீட்டை கிழிக்க வாய்ப்பு தந்த வேர்கடலையை  சீட்டு கிழிச்சான் கொட்டை என்று சொன்னார்கள். மானாவாரியில் முதன்முதலாக நல்ல லாபம் தந்த பயிர் இந்த வேர்கடலை.


வேர்கடலையில்
கொடிவகை கொத்து வகை
என இரண்டு வகை உண்டு TWO MAJOR GROUNDNUTSSPREADING TYPES &
BUNCH TYPE 

விவசாயிகள் தமிழ்நாட்டில் வேர்கடலை என்றால்  குறிப்பாக இரண்டு ரகங்களை சொல்லுவார்கள். ஒன்று  கொடிரம் இன்னொன்று கொத்து ரகம். ஆரம்ப காலங்களில் கொடிரகம்தான் எல்லா இடங்களிலும் கொடிகட்டி பறந்தது. அதற்குப் பிறகுதான் கொத்துக்கடலை அறிமுகம் ஆனது.  அப்படி முதன்முதலாக அறிமிகம் ஆன கொத்து ரகம் திண்டிவனம் இரண்டு. அதனை சுருக்கமாக டி எம் வி 2 (T M V 2)  என்பார்கள்.

கொடி கடலையை அறுவடை செய்வது கடினம். பறிக்கும் கொடியுடன் எல்லா காய்களும் வராது. நிலத்தையும் கொத்தி  அதில் நின்றுபோன கடலையை சேகரிக்க வேண்டும். கொத்து கடலை என்றால் என்றால் வயலில் தண்ணீர் பாய்ச்சி கொடிகளை பிடுங்கினால் அத்தனை காய்களும் கொத்தாக வந்துவிடும். பிறகு கொடிகளில் இருக்கும் காய்களை பறித்து எடுக்க வேண்டும்.

சமீப காலமாக அந்த அறுவடை மிகவும் சுலபமாகி விட்டது. அதைச்செய்ய சிறுசிறு எந்திரங்கள் வந்துவிட்டன. அதை வைத்து பிடுங்கிய செடிகளிலிருந்து காய்களை சுலபமாக பறிக்கிறார்கள்.


திண்டிவனம் நகரில்
வேர்க்கடலைஆராய்ச்சி நிலையம் OILSEED EXPERIMENT

STATION IN TINDIVANAM DEVELOPED

TMV   GROUNDNUT VARITIES


தமிழ்நாட்டில் வேர்க்கடலை பற்றிய ஆய்வு செய்வதற்கென்று ஒரு ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. அந்த திண்டிவனம் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடித்தவைதான்  டி.எம்.வி என்ற பெயருடைய நிலக்கடலை ரகங்கள் எல்லாம். இந்த ஆராய்ச்சி நிலயத்தில் கண்டுபிடித்ததுதான் டி எம் வி 10 என்ற ரகம். இதனை பத்தாம் நம்பர் கடலை என்பார்கள். இந்தியாவில் உள்ள நிலக்கடலை ரகங்களில் அதிக எண்ணை சத்து உள்ள ரகம் இதுதான்.

வேர்கடலையில்
ஏற்றுமதிக்கான
வியாபார வகைகள்


GROUNDNUTEXPORTVARITIES


சர்வதேச அளவில் நிலக்கடலையில் மிகப் பெரிய கடலை மணியை உடையது விர்ஜீனியா நிலக்கடலை (VIRGINIA GROUNDNUT) ரகங்கள். அந்த விர்ஜீனியா ரகங்களை ரோஸ்டட் கிரவுண்ட்நட் (ROASTED GROUNDNUT)என்று விற்பனை செய்கிறார்கள். அவற்றை வறுத்து உப்பு இட்டு அல்லது வேறு சாக்லெட் சேர்த்தும்கூட அதனை விற்பனை செய்கிறார்கள்.

வேலன்ஷியா நிலக்கடலை (VALENCIA GROUNDNUT)என்ற என்று ஒரு ரகத்தை சொல்லுகிறார்கள். அந்த ரக கடலை மிகவும் சிறியதாக இருக்கும். மிகவும் சுவையாகவும் இருக்கும். பெரும்பாலும் இவற்றை வறுத்த கடலையாக விற்பனை செய்கிறார்கள். அதே போல அறுவடை செய்தவுடன் உடனடியாக பச்சையாக சாப்பிடுவதற்கு இது மிகவும் சிறப்பாக இருக்கும்.


இந்தியாவில் வியாபார ரீதியில் இரண்டு வகையான நிலக்கடலை வகைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்று நடுத்தரமான அளவு பருப்புகளை உடையது. இரண்டாவது மிகவும் சிறிய பருப்புகளை உடையது. இந்த நடுத்தரஅளவு உள்ள நிலக்கடலையை பாம்பே போல்ட்(BOMBAY BOLD) என்று சொல்லுகிறார்கள். இதில் ஒரு அவுன்சு டையில் 50 முதல் 55 பருப்புகள் அல்லது மணிகள் இருக்கும். இன்னொன்று சிறிய வகை இந்த சிறிய வகையை ஜாவா டைப் (JAVA TYPE) என்று சொல்கிறார்கள். இது ஒரு அவுன்ஸ் எடையில் 70 முதல் 80 பருப்புகள் வரை இருக்கும்.


இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய வேர்கடையை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று பார்க்கலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கடலையை நாம் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்கிறோம். அதில் 80 சதவீத நிலக்கடலையை நாம் எண்ணெய் எடுப்பதற்காக பயன்படுத்துகிறோம். 12 சதத்தை விதைக்காக பயன்படுத்துகிறோம்.இரண்டு சதத்தை  நாம் ஏற்றுமதி செய்கிறோம். 92 மீதம்உள்ள ஆறு சதத்தை சாப்பிடுவதற்காக  பயன்படுத்துகிறோம்.

நிறைவுறை


நிலக்கடலை புரதச்சத்து நிறைந்தது. இதிலுள்ள கொழுப்பு சத்து பாதுகாப்பானது. நிலக்கடலை எண்ணெய், நிலக்கடலை பட்டர், இதர வடிவங்களில் நிலக்கடலை சாப்பிடுவதால் இருதய நோய் வராது. உடல் எடை கூடாது. சத்து பற்றாக்குறை நோயை போக்கக்கூடியது. இப்படிப்பட்ட நிலக்கடலயை உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்வதில் இரண்டாவது நாடாக உள்ளது. ஆக நிலக்கடலையில் மதிப்பு கூட்டும் தொழில்கள் தொடங்கவும், ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது.  


FOR FURTHER READING

ON RELATED TOPICS


1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. உணவு பதப்படுத்தும்  தொழில் இன்றைய இந்தியாவின்  தேவை - FOOD PROCESSING  INDUSTRIES -  IMMEDIATE NEED  FOR INDIA – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-immediate.html

3. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html


4. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி 2 - FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA - PART – 2 /  Date of Posting: Feb 12th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2-food-processing-industries-of-india.html

5. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html

6. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி - 3  FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA -  PART -3  -  Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html


தே.ஞானசூரிய பகவான், போன்: +91-8526195370, Email: gsbahavan@gmail.com











No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...