Monday, February 10, 2020

உணவு பதப்படுத்தும் தொழில் இன்றைய இந்தியாவின் தேவை - FOOD PROCESSING INDUSTRIES - FOOD INDUSTRIES OUR IMMEDIATE NEED





உணவு பதப்படுத்தும் 
தொழில் 
இன்றைய இந்தியாவின் 
தேவை



 

FOOD
INDUSTRIES OUR
IMMEDIATE NEED 


சர்வதேச அளவிலான உணவு பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு 1.5 சதவீதம் மட்டுமே. இதனை வளர்த்தெடுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு சார்புடைய தொழில்கள் மூலம் கிடைத்த வருமானம் 140 ஆயிரம் கோடி ரூபாய்.

நாம் ஏன்
வேளாண்மை உற்பத்தியில்
கவனம் செலுத்த வேண்டும் ? 

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடிப்படையானது வேலைவாய்ப்பு.  100 மில்லியன் ரூபாய் முதலீடு செய்தால் விவசாயத் துறை மூலமாக 54 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். அதே அளவு பணத்தை நெசவுத் துறையில் முதலீடு செய்தால் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்க முடியும். காகிதம் உற்பத்தி துறை மூலமாக என்றால் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்க முடியும். அதனால் நமது வேலைவாய்ப்பு சமூக பொருளாதார மேம்பாடும் வளர வேண்டுமென்றால் வேளாண்மை சார்ந்த தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் உணவு
பதப்படுத்தும் தொழில்களில்முக்கியமானவை ஐந்து


இந்தியாவின் உணவு பதப்படுத்தும் தொழில் முக்கியமானவை என ஐந்து தொழில்களை சொல்லலாம். அவை உணவு தானியங்கள் தொடர்பானவை, சர்க்கரை, உணவு எண்ணெய், குளிர்பான்ங்கள்,  மற்றும் பால் பொருட்கள்.
உணவு பதப்படுத்தும் தொழிலில் இரண்டாம் நிலையில் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை பால் பொருட்கள் தொடர்பானவை, பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்பானவை, கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் மீன் உணவுகள், உணவுப்பொருள் சில்லரை வியாபாரம் ஆகியவை.

உணவு பதப்படுத்துதல்துறை
அமைச்சகம் வழங்கும் வாய்ப்புகள்



இந்தியாவில் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உணவு வியாபாரம் இதனை நிரூபித்து வருகிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் லாபம் கணிசமாக கூடிவருகிறது. உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் வியாபாரம் செய்வதற்கான முதலீடுகளை உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.


இது போன்ற தொழில் தொடங்குவதற்கான கூட்டு முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குதல்,  100 சதவீத ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் இவை தொடர்பான தொழில்களுக்கு அனுமதி வழங்குதல் போன்றவற்றை, இந்திய அரசின் இந்த உணவு பதப்படுத்தும் துறைக்கான அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.



உலகின் மிகப்பெரிய உணவு
மற்றும் மளிகை பொருள் சந்தை



உலகச் சந்தைகளில் மிகவும் முக்கியமானது இந்தியாவின் உணவு மற்றும் மளிகை பொருட்கள் சந்தை. இதில் இந்தியாவின் சந்தை உலகத்தில் ஆறாவது மிகப்பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கை விவசாய பொருட்களின்உற்பத்தி  2020 இல் மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த உணவு சந்தை மதிப்பில் உணவு பதப்படுத்தும் துறையில் மதிப்பு மட்டும் 32 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் இது ஐந்தாவது பெரிய தொழில் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இன்னொரு முக்கியமான செய்தி நாம் கவனிக்க வேண்டும். அதாவது இந்த ஆண்டு இந்தியாவில் இயற்கை விவசாயப் பொருட்களின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

இந்தியாவில்
வேகமாக வளரும்
உணவுப் பொருள்
விற்பனை வியாபாரம்


ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அயல் நாடுகளைப் போலவே இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வியாபாரம் இந்தியாவில் போணியாகுமா என்று சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் இப்படி ஆன்லைனில் வாங்குவதும் விற்பதும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. இது ஒவ்வொரு ஆண்டும் 150 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

உணவு பதப்படுத்தும்
தொழிலை மேம்படுத்துவதற்காக
இந்திய அரசு அளிக்கும் உதவிகள்


உணவு பதப்படுத்தும் தொழிலில் மேம்படுத்துவதற்கு என அரசு பல்வேறு வகைகளில் உதவுகிறது. உணவுப் பொருட்களை விற்பனை செவதில் புதிய அணுகு முறைகளை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 100 சதவீத அயல் நாட்டு முதலீடுகளை அனுமதிப்பது, புதிய பதப்படுத்தும் தொழில்கள் நிறுவுவதற்கான உதவிகளைச் செய்தல், உணவுப் பொருட்களின் தரப்பரிசோதனைகளுக்கான ஆய்வுக் கூடங்களை அமைக்க உதவுதல்,  உணவு பதப்படுத்துதல் தொடர்பான பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்த ஏற்பாடு செய்தல், அதற்கான பயிற்சி மையங்களை அமைத்தல் போன்றவற்றுக்கு உதவும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.


TO HAVE MORE INFORMATIONON RELATED TOPICS 1. மதிப்பு கூட்டுதல் மூலமாக தொழில் தொடங்குவதுதான் இன்றைய இந்தியாவின் முக்கிய தேவை - FOOD PROCESSING  INDUSTRIES - INDIA’S NEED OF THE HOUR – Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/food-processing-industries-indias-need.html

2. இந்திய உணவு சரித்திரத்தில்  இடம்பெற்ற  பதப்படுத்தும் வியாபார  நிறுவனங்கள்  - PRIMARY PROCESSING CUM  BUSINESS INDUSTRIES OF  INDIAN FOOD HISTORY Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/primary-processing-cum-business.html


3. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA /  Date of Posting: Feb 06th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html


4. இந்தியாவின் 5 பிரதானமான  உணவு பதப்படுத்தும்    நிறுவனங்கள்  - FIVE PROMINENT FOOD PROCESSING  INDUSTRIES IN INDIA/  Date of Posting: Feb 15th 2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/5-five-prominant-food-processing.html


5. MAIZE  BASED INDUSTRIES - மக்காச் சோளத்தில்  என்னென்ன  தொழில்கள் செய்யலாம் ? /  Date of Posting: Dec  29th 2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/12/agro-based-industry-maize.html

6. இந்தியாவின்  உணவு பதப்படுத்தும்  தொழில்கள் - பகுதி - 3  FOOD PROCESSING  INDUSTRIES OF INDIA -  PART -3  -  Date of Posting: 20.02.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/02/3-food-processing-industries-of-india.html


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...