Monday, February 10, 2020

கொடூரமான கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான பங்கோலின்கள் - DREADFUL CORONA VS DOCILE PANGOLIN







கொடூரமான
கொரோனா வைரஸ்சை
பரப்பும்சாதுவான பங்கோலின்கள்


DREADFUL CORONA VS
DOCILE PANGOLIN



கொரோனா வைரஸ்சை பரப்புவதில் எறும்பு திண்ணி என்றழைக்கப்படும் பங்கோலி முக்கிய  பங்கு வகிக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


இவர் சர்வதேச அளவில் பிரபலமான வைரஸ் பற்றிய ஆய்வு நிபுணர். ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி பல்கலைக் கழகத்தில் வேலை பார்க்கிறார் எட்வேர்ட் ஹோம்ஸ் பங்கோலின் உடலில் இருக்கும் வைரஸ்சும் கொரோரான  வைரஸ்சும் ஒன்றுபோலவே அச்சாக உள்ளது என்று அறிவித்துள்ளார். அதனால் இப்போது கொரோனா வைரஸ்சின் ஆராய்ச்சி முழுக்க பங்கோலின் பக்கம் திரும்பியுள்ளது. அதனால் நாமும் பங்கோலின்பற்றி கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


பங்கோலின் ஒரு சாதுவான பிராணி


PANGOLIN - 

A DOCILE 

ANIMAL




எறும்பு தின்னி என்று அழைக்கப்படும் பங்கோலின் ஒரு சாதுவான பிராணி. அழிந்துவரும் பிராணி அல்லது அருகிவரும் பிராணி ஆகிவிட்டது எனலாம். மரங்கள் அடர்ந்த பகுதிகளில் சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு கிடந்த பங்குகளை இரண்டு அல்லது மூன்று சமயங்களில் நான் தமிழ்நாட்டிலேயே பார்த்திருக்கிறேன்.


பங்கோலின் என்பது பரவலாக யாருக்கும் தெரியாத பிராணி. ஆனால் உலகில் அதிகமாக வேட்டையாடி அழிக்கப்பட்ட பிராணி அதுதான் என்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இவை அழிந்து வரும் பிராணி என்று அறிவித்திருக்கிறார்கள்.


வவ்வால்கள் மற்றும் புனுகுப்பூனைகள்தான் (BATS & CIVETS)  இந்த கொரோனா வைரஸ்சை பரப்புகின்றன என்று இதற்கு முன்னால் தெரிவித்து இருந்தார்கள். இப்போது பங்கோலியும்  முக்கிய  வகிக்கிறது என்று அறிவித்துள்ளார்கள். இந்த பங்கோலின் பிராணிகளை பார்த்தால் செதில்கள் இருக்கும் பைன் மரத்தின் கோன்கள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இந்த பங்கோலின் என்னும் எறும்பு தின்னிக்கும் கொரோனா வைரஸ்சுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம்.


அடிப்படையில் இந்த வைரஸ் நோய் ஒரு சூனாடிக்நோய் என்று நான் முன்னர் எழுதிய கட்டுரையில் எழுதியிருந்தேன். அதாவது மனிதர்கள் மற்றும் பிராணிகளை தாக்கும் நோய்களில் இதுவும் ஒன்று என சொல்கிறார்கள். அப்படி பார்க்கும்போது இந்த வைரஸ் மனிதர்களின் உடலில் இந்த நோயை உண்டாக்கி அவர்களை மரணத்தில் தள்ளுகிறது.


ஒரு குறிப்பிட்ட கால அளவு இந்த வைரஸ் பங்கோலின் உடல்களில் வசிக்கின்றன. ஆனால் அந்த சமயத்தில் அவற்றை நோயினால் பாதிக்கிறதா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் அது பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறார்கள் மருத்துவர்கள்.


தாய்பால் சுரக்க ஆஸ்துமா மற்றும்புற்றுநோயை குணப்படுத்துகிறனபங்கோலின்கள்
 PANGOLIN ENHANCESMOTHERS MILKCANCER & ASTHMA



பங்கோலின் உடம்பின் மீது இருக்கும் செதில்கள் மருத்துவப் பயனுள்ளவை என்று காலங்காலமாக நம்புகிறார்கள். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நம்பிக்கை காணப்படுகிறது. இதன் செதில்களை தூளாக்கி பல்வேறு முறைகளில் அதனை பக்குவப்படுத்தி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.


பங்கோலின் இறைச்சி
மிகவும் ருசியானது.

PANGOLIN’S MEAT ISDELICIOUS



மற்ற இறைச்சிகளைவிட இதன்விலை அதிகம். ஒரு கிலோ பங்கோலின் இறைச்சியின் விலை 300 டாலர். இந்திய ரூபாயில் ஏறத்தாழ இரண்டாயிரம் ரூபாய். இறைச்சியை விட அதன் செதில்களின் விலை அதிகம். காரணம் அவை மருத்துவ பயன் மிக்கவை. ஒரு கிலோ பங்கோலின் செதில்களின் விலை 3 ஆயிரம் அமெரிக்க டாலர். உயிருடன் ஒரு பங்கோலின் வாங் 992 டாலர் வேண்டும்.



துப்பாக்கிதுளைக்காதபங்கோலின்செதில்கள்


 PANGOLIN’S  

SCALES CAN BE

A BULLET PROOF




இவற்றின் செதில்கள் அபூர்வமானவை. அதன் பாதுகாப்புக் கவசமே அவைதான். தன் செதில்கள் கடினமானவை. அதே சமயம் மிகவும் கூர்மையானவை. தனக்கு ஆபத்து வந்தால் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது ஆமைகள் போல பங்கோலின் தனது செதில்களுக்குள் பந்து போல சுருண்டு கொள்ளும் அதன் எதிரிகள் எதுவும் அவற்றை ஒன்றும் செய்துவிடமுடியாது ஆபத்து தன்னை விட்டு நீங்கும் வரை அவை ந்து போலவே சுருண்டு கிடக்கும். ஆனால் வேட்டைக்காரர்கள் இதனை சுலபமாக வேட்டையாடலாம். காரணம் அதனால் வேகமாக ஓட முடியாது. அது கடித்து விடும் என்று யாரும் பயப்படவும் வேண்டாம். காரணம் டிப்பதற்கு அதற்கு ற்கள் கிடையாது. இன்னொரு முக்கியமான செய்தி. பங்கோலின் செதில்களை பொறுப்பாக பயன்படுத்த முடியும் என்கிறார்கள் அந்த அளவிற்கு அதன் செதில்கள் கடினமானது.


வித்தியாசமான கால்கள்நகங்கள் மற்றும் நாக்கு 

DIFFERENT LEGS,

NAILS AND TONGUES



இந்த சாதுவான பிராணியின் உணவு என்ன தெரியுமா ? எறும்புகள் கரையான்கள் மற்றும் இதர பூச்சிகள் புழுக்களையும் சாப்பிடும். இதன் கால்கள் மிகவும் சிறியவை. உடலுக்கு ஏற்றபடி என்றால் இன்னு பெரியதாக இருக்க வேண்டும். ஆனால் கால்கள் சிறியதாக இருக்கும். அவற்றின் ங்கள் நீளமாக கூர்மையாக வளைந்து இருக்கும்.  தனது  கூர்மையான நகங்களால் எறும்பு மற்றும் கரையான் புற்றுகளை ஆழமாகத் தோண்ட முடியும். இன்னொரு ஆச்சரியமான விஷயத்தை சொல்லவேண்டும். இதன் நாக்கு மிகவும் நீளமானவை.  அதிகபட்சமாக 16 அங்குலம் வரை நீண்டிருக்கும். மண்புற்றுக்களில் அல்லது மரப் பொந்துகளின் ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை எறும்புகள் மற்றும் கரையான்களை துழாவிப்பிடிக்க நீளமான நாக்கு இதற்கு உதவியாக உள்ளது.


மரக்கிளைகளைகால்களால் மட்டுமல்லவாலாலும் பிடித்துக்கொள்ளும் 

PANGOLINS HAVE

PREHENSILE TAILS



பங்கோலின்கள் தங்கள் வால்களைக்கொண்டு கிளைகளை பிடித்துக் கொள்ளும். வசதி உடையன. மரங்களின் கிளைகளை பிடித்துக்கொள்ளவும் அதிலிருந்து தொங்கவும் அல்லது மரங்களில் ஏறுவதற்கும் உதவியாகவும் இருக்கும் வால்களுக்கு பெயர் பிரிகென்சைல் டெய்ல் (PREHENSILE TAIL)  லத்தீன் மொழியில் பிரிகென்சல் என்றால் பிடித்துக்கொள்ள உதவும் என்று அர்த்தம்.

பங்கோலின்களும் தங்கள் வால்களைக்கொண்டு கிளைகள் மற்றும் இதரப் பொருட்களையும் பிடித்துக் கொண்டு தொங்க முடியும். சில குரங்கு வகைகளில் இதனை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். இது போன்ற வால் வசதி உடைய பிராணிகள் அதிகமாக தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்க காடுகளிலும் இருக்கின்றன.

பங்கோலின்களை
வேட்டையாட தடைவிதித்திருக்கிறது சீனஅரசு 

HUNTING OF 

PANGOLIN IS

PROHIBITED 

IN CHINA


ஆனாலும் தடையை மீறி பங்கோலின்களை வேட்டையாடப்படுகின்றன பங்கோலின் உடலின் செதில்கள் அவற்றின் ரத்தம் மற்றும் இதன் உடல் உறுப்புகள் பலவும் பல வகையான மருத்துவம் செய்ய சீனா, வியட்நாம் நேபாளம் ஆகிய நாடுகள் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இந்த பங்கோலின் மருந்துகள் புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை பலவிதமான நோய்களை குணப்படுத்துகின்றன என்று சொல்லுகிறார்கள். இந்த பங்கோலின் கள் எப்படி இந்த வைரஸை பரப்புகின்றன என்பதற்கான ஆய்வுகள் பல நாடுகளிலும் நடந்து வருகின்றன. இது பற்றிய முழுமையான விவரங்கள் இனி தான் நமக்கு தெரியும்.

LINKS FOR FURTHER INFORMATION


1. கொரோனாவை பார்த்து குலை நடுங்க  வேண்டாம்  - நம்புங்கள் -  DO NOT FEAR ABOUT  CORONAVIRUS  /05.02.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html


2. கொரோனா வைரஸ்  தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF  CORONA VIRUS /02.02.2020 /
 https://vivasayapanchangam.blogspot.com/2020/02/symptoms-of-corona-virus.html





No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...