Thursday, February 6, 2020

கொரோனாவை பார்த்து குலை நடுங்க வேண்டாம் - நம்புங்கள் - DO NOT FEAR ABOUT CORONA VIRUS




கொரோனாவை பார்த்து 

குலைநடுங்க 

வேண்டாம் நம்புங்கள்


DO NOT  FEAR ABOUT CORONAVIRUS  DISEASE 


கொரோனாவைரஸ்சால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டுகிறது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இதுவரை சுமார் 24 நாடுகளில் தனது பாதிப்பை தொடங்கியுள்ளது  இந்த கொரோனாவைரஸ். இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை  427 பேர் (05.02.2020 வரை) என்று கணக்குச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்

கொரோனாவைரஸ் நோய் மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்கும் நோய் என்கிறார்கள் நிபுணர்கள். நமக்கு வரும் சாதாரண ஜலதோஷம் கூட ஒரு வகையான கொரோனாவைரஸ்தான். கொரோனா என்பது ஒரு தனி வைரஸ் அல்ல. அது ஒரு குடும்பம். அதில் சிலவகை மிகவும் ஆபத்தானவை. உயிர்க்கொல்லி வகை வைரஸ். அந்த வகையை சேர்ந்ததுதான் இந்த 2019 நாவல் கொரோனா வைரஸ்நோய்.

ஹாங்காங் நாட்டில்இரண்டாவது நபர் பலி
SECOND DEATH IN HONKONGDUE TO CORONAVIRUS DISEASE 

கொரோனாவைரஸ் ஹாங்காங் நாட்டில் இரண்டாவதாக ஒரு நபரை பலி கொண்டுள்ளது.  ஏற்கனவே ஒருவர் ஹாங்காங் நாட்டில் றந்துள்ளார். இரண்டாவதாக  இறந்தவர்,  சென்ற மாதம் அதாவது டிசம்பர் (2019)மாதம் ஏதோ பணி நிமித்தமாக சீனாவின் உகான் நகருக்கு சென்று வந்துள்ளார். அவர் ஏற்கனவே சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட இவரின் வயது 39 மட்டுமே.  இவர்தான் இந்த நோய்க்கு இரண்டாவதாக பலி ஆகி உள்ளார்.





உணவுத் தட்டுப்பாடு
ஏற்படும் சூழலைத்தடுக்கசீன அரசு கடுமையாக
போராட வேண்டும்.


FOOD MATERIAL DISTRIBUTIONIS A CHALLENGE IN WUHAN CITY



இதுபோன்ற நெருக்கடி நிலைகளின்போது உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. உணவு தானியங்கள் அல்லது இதர உணவு பண்டங்களைப் பதுக்கி  செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது வாடிக்கைதான். இதுபோன்ற சமயங்களில் அரசு மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது போன்ற சூழல்களை தவிர்க்க சீன அரசு சுறுசுறுப்பாக தற்போது இயங்கி வருகிறது.


கொரோனாவுக்கு
சிகிச்சை அளிக்க
உகான் நகரில்
திடீர் மருத்துவமனைகள்.


WUHAN’S   MAKE SHIFT SHELTER
HOSPITALS TO TREAT
NOVEL CORONAVIRUS
CORONAVIRUS

இதுவரை 426 பேர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். 20,000 பேருக்கு மேல் வைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளது.  உகான் நகரில் இருக்கும் மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. 

திடீரென ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க சீன அரசு உகான் நகரில் பெரும் எண்ணிக்கையில்  ‘மேக் ஷிப்ட் ஷெல்டர் ஹாஸ்பிடல்ஸ்” (MAKE SHIFT SHELTER HOSPITALS) என்னும் திடீர் மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளார்கள் . ஏற்கனவே விளையாட்டு மைதானங்களில் உள்ள ஸ்டேடியங்களை எல்லாம் படுக்கை மற்றும் இதர சிகிச்சை தருவதற்கான வசதிகளுடன் கூடிய  மருத்துவமனைகளாக மாற்றிவிட்டார்கள்.

விளையாட்டு ஸ்டேடியங்கள்  மட்டுமின்றி பொருட்காட்சி மையங்களின் பெருங்கட்டிடங்கள் மற்றும் கலாச்சார மையக்கட்டிடங்கள் ஆகிவற்றைத் தொடர்ந்து திடீர் மருத்துவமனைகளாக மாற்றி வருகிறார்கள்.

திடீர் மருத்துவமனைகளில்
என்னென்ன சேவைகள்
நோயாளிகளுக்கு கிடைக்கும் ?


SERVICES GIVEN BY THE
MAKE SHIFT SHELTERHOSPITALS


இந்த திடீர் மருத்துவமனைகளில் ஆரம்ப கட்ட பாதிப்புடைய நோயாளிகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். தொடக்ககால சிகிச்சைகள் மற்றும் ஆரம்பநிலை மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை இங்கு ளிக்கப்படும். இதன் மூலம் ழக்கமான மருத்துவமனைகளில் ஏற்படும் நெரிசல்கள், மற்றும் இதர பரிசோதனை, சிகிச்சை ட்டுப்பாடுகளை கட்டுக்குள்  கொண்டு வந்திருக்கிறார்கள்.

திடீர் மருத்துவ மனையாக
மாற்றப்பட்டுள்ள
உகான் லிவிங்க் ரூம் (WUHAN LIVING ROOM – A CULTURAL
COMPLEX IS MADE AS MAKE SHIFT
SHELTER HOSPITAL)


உதாரணமாக லிவிங் ரூம் என்னும் சர்வதேச மாநாடுகள் நடத்தும் பெருங்கட்டிடம் ஒன்று திடீர் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.தில் மட்டும் 3,500 படுக்கை வசதிகளை செய்து உள்ளார்கள். 

தமிழ்நாட்டிற்கு  சென்னை மாதிரி ஹூபி மாநிலத்திற்கு உகான் நகரம். ஒரு மாநில தலைநகருக்கு உரிய எல்லா வசதிகளையும் கொண்டது உகான் நகரம். சீனாவில் உள்ள மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களில் ஒன்று உகான் நகரம். 

உகான் நகரில் ஏற்கனவே அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட 46 மருத்துவமனைகளும் 61 சிகிச்சை மையங்களும் அங்கு உள்ளன. வற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திடீர் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை சமாளிக்க வேண்டும்.

இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 426 பேர் நோய்த்தொற்று ஏற்பட்டோர் தோராயமாக 20 ஆயிரம் பேர். ஆனால் உகான் பெரும்நகரில் இறந்தோர் மட்டும் 313 பேர் நோய் பாதிப்பு ஏற்பட்டோர் 6380 பேர்.

சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். உகான் நகரில் தனது தாக்குதலை தொடங்கியுள்ள இந்த கொரோனாவைரஸ் நோய்  பிற பகுதிகளில் பரவி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது சீன அரசு. இந்த நிலையில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மேக் ஷிப்ட் ஷெல்டர் ஹாஸ்பிடல் என்ற மருத்துவமனைகளை புயல் வேகத்தில் அமைத்து வருகிறார்கள்.


கொரோனாவை பார்த்துகுலை நடுங்க வேண்டாம் நம்புங்கள்



DO NOT FEAR ABOUT CORONAVIRUS



வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்து சீனஅரசு வெளியிடும் புள்ளி விவரங்கள் மிகவும் குறைவானவை என்று சில பத்திரிக்கைகள் எழுதுகின்றன.


உகான் நகரத்துக்குள் போக்குவரத்து முழுமையாக  தடை செய்யப்பட்டுள்ளது இங்கு வசிப்பவர்கள் 11 மில்லியன் பேர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமம் நிலவுகிறது.


சென்ற வாரம் சனிக்கிழமை அன்று உகான் நகரில் 49 பேர் குணம் அடைந்து உள்ளார்கள் 45 பேர்தான் மரணமடைந்தார்கள். அடுத்த நாள் 80 பேர் குணமடைந்துள்ளார்கள். 59 பேர் மட்டுமே  இறந்திருக்கிறார்கள், என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.


ஆகவே 2002 ஆம் ஆண்டில் தாக்கிய எஸ் ஆர் எஸ் வைரசை விட கடுமை குறைந்த வைரஸ் இது என்று சொல்கிறார்கள். பயப்பட அவசியம் இல்லை என்று நம்பிக்கையாக  சொல்லுகிறார்கள்.


TO GET INFORMATION
ON RELTED  TOPICS

1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார் -  CORONA VIRUS -  VACCINE IS READY  FOR CONTROL /30.01.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html

2. உலகை மிரட்டும்  2019 புதிய கொரோனா   வைரஸ் - 2019 NEW CORONA   VIRUS / 01.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2019-2019-new-corona-virus.html

3. கொரோனா வைரஸ்  தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF  CORONA VIRUS /02.02.2020 /

4. கொரோனாவைரஸ்சை  ஹோமியோபதி மற்றும்  யுனானி மருத்துவத்தின் மூலம்  கட்டுப்படுத்த முடியும்  -   CORONAVIRUS COULD BE   CONTROLLED BY  HOMEOPATHY & UNANI  MEDICINES /03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/coronavirus-could-be-controlled-by.html

5. கொடூரமான  கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான  பங்கோலின்கள்  -   KILLER VIRUS CORONA'S  DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html

6. கொரோனா வைரஸ்  இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html





No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...