Saturday, February 15, 2020

கோரோனா வைரஸ்சுக்கும் சீனாவின் உணவுபழக்கத்திற்கும் உள்ள தொடர்பு - COVID 19 SPREADS THROUGH FOOD HABITS











கோரோனா வைரஸ்சுக்கும் சீனாவின் உணவுபழக்கத்திற்கும் உள்ள தொடர்பு  - COVID 19 SPREADS THROUGH  FOOD HABITS 

கோவிட் 19 அல்லது கோரோனா வைரஸ் என்கிறதுஉலக சுகாதார நிறுவனம்





COVID 19 MEANS NEW CORONA VIRUS

 

கோவிட் 19 என்பதுஉலக சுகாதார நிறுவனம்வைத்திருக்கும்புதிய பெயர்


இதுவரை சீனாவில் கோவிட் 19 அல்லது கோரோனா வைரஸ்சுக்கு இறந்தோரின் எண்ணிக்கை மட்டும் 1115 பேர். சீனாவில் இந்த நோயினால் பாதிப்படைந்தோர் 44653 பேர். உலக நாடுகளில் சீனா உட்பட இதுவரை 24 நாடுகளில் கோவிட் 19  உயிர்கொல்லி வைரஸ்நோய் பரவி வருகிறது.

கோவிட் 19 என்பது
உலக சுகாதார நிறுவனம் வைத்திருக்கும் புதிய பெயர்


உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அட்கேனம் ஜெப்ரியேசஸ் (TEDROS ADHANOM GHEBREYESUS)இந்த வைரஸ்நோய்க்கு கோவிட் 19  என்னும் புதிய பெயரை அறிவித்துள்ளார். இனி உலகம் முழுவதும் கோவிட் 19  என்ற பெயரைத் தான் பயன்படுத்த வேண்டும். கோ(CO) என்பது கொரோனா என்பதையும், வி(VI) என்பது வைரஸ் என்பதையும்,  டி‘(D) என்பது டிசீஸ் (DISEASE) என்பதையும், 19’  என்பது அது முதன் முதலாக தாக்குதலை தொடங்கிய 2019 ஆண்டையும் குறிக்கும். தற்போது 24  நாடுகளில் கோவிட் 19  வைரஸ்நோய் பரவி வருகிறது.


கோவிட் – 19 பாதித்த
கர்ப்பிணி தாய்க்கு
பிறந்த குழந்தை COVID 19 AFFFECTEDPREGNANT MOTHERDELIVERS A CHILD



சீனாவின் உகான் மாநகரத்தில்தான் கோவிட் 19 நோய் தனது பாதிப்பை தொடங்கியது. அங்கு வாழும் ஒவ்வொரு நபரும் எந்த நிமிடமும் தனக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று பயந்தபடி இருக்கின்றனர். இந்த சூழலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கோவிட் 19 நோய் தொற்று ஏற்பட்டது. பிறக்க இருக்கும் அந்த குழந்தைக்கு கண்டிப்பாய் இந்த நோய் வந்து விடும் என்று பயந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கும் அந்த பயம் இருந்தது. சமீபத்தில் அந்த கர்ப்பிணித்தாய்க்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கொழுகொழுவென அழகாக இருந்தது.  டாக்டர்கள் அவசர அவசரமாக பரிசோதித்துப் பார்த்தார்கள். அந்த குழந்தை பூரண ஆரோக்கியமாக இருந்தது. ஆச்சரியப்படும் படியாக அந்த குழந்தைக்கு எவ்விதமான நோய் தொற்றும் ஏற்பட வில்லை. இந்த சம்பவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோரோனா வைரஸ்சுக்கும்
சீனாவின் உணவுபழக்கத்திற்கும்
உள்ள தொடர்பு 

COVID 19 SPREADAND ITS RELATIONSHIP WITH FOOD HABITS 

சீனாவின் உணவு பழக்கம் மிகவும் வித்தியாசமானது. அறுபதுகளில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டது இன்னும்கூட இந்தியாவுக்கு சொந்தமான ஏகப்பட்ட நிலப்பரப்பை சீனாவின் தன்வசம் வைத்துள்ளது. அந்த போர் மூண்ட சமயம் சீனாக்காரர்கள் உணவு பழக்கத்தை இந்தியர்கள் கேலி பேசுவது வழக்கம். பாம்பு தின்னும் சீனாக்காரர்கள் என்ற அடைமொழியுடன்தான் ழுதுவார்கள், பேசுவார்கள். 

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் இதுதான்.  அதாவது ஃபேஷனுக்கு பெயர் போனது ஐரோப்பா. வாழ்க்கை வசதிக்கு பெயர் போனது அமெரிக்கா. அதுபோல உணவுக்கு பெயர்போனது சீனா என்று சொல்லுவார்கள். மேற்கத்திய நாடுகளில் சாப்பிடும் உணவு பண்டங்களில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்பார்கள் சீனாக்காரர்கள் உணவின் குணம் மணம் சுவை,  நிறம் ஆகியவற்றைத்தான் முக்கியமாக கவனிப்பார்கள்.  சீனாக்காரர்கள்  நாக்குக்கு அடிமையானவர்கள்.




சீனாவில் சாப்பிடுவது
என்பது ஒரு
மகிழ்ச்சியான செயல் HAVING FOODIS A CELEBRATIONIN CHINA




சீனாவில் சாப்பிடுவது என்பது மகிழ்ச்சியான ஒரு செயல். சீனாவின் உணவு பழக்கம் பற்றி சொல்லும்போது அது தான் கோவிட் 19 வருவதற்கு காரணமாக இருந்தது என்று கூட சிலர் சொல்லுகிறார்கள். கோவிட் 19 நோய் வந்த பின்னால் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக வாட்அப்’ல் நிறைய சீநாக்காரர்களின்  உணவுப் பழக்க வழக்கம் குறித்து நிறைய வீடியோ துணுக்குகள் சுற்றிவருகின்றன. அவற்றில் எல்லாம் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற வித்தியாசமின்றி சமைக்காத கடல் உணவுகளை சாப்பிடுவதாக அவை இருந்தன அவற்றில் நான் விளக்கமாக எழுத விரும்பவில்லை அதனால் இரண்டு முறை நான் சீனர்கள் நடத்த ஓட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன் ஒரு முறை மலேசிய நாட்டின் இரண்டாவது முறை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆனால் அங்கெல்லாம் சமைக்காத நான் வெஜிடேரியன் வகையறாக்களை  காட்டி பயமுறுத்தவில்லை.



சீனர்கள் பொதுவாக பிராணிகள் அனைத்தையும் அவற்றின் அனைத்து உடல் பாகங்களையும் சாப்பிடுவார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால் சமைத்துத் தான் சமைத்து சாப்பிடுவார்கள். அவர்கள் வறுத்தும் சுட்டும் அவித்தும் ஊறுகாய் போல தயாரித்தும் பக்குவப்படுத்தித்தான் சாப்பிடுவார்கள். ஆனால் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இப்படி சமைக்காமல் சாப்பிடும் வழக்கமும் இருப்பதாக தெரிகிறது.


கோவிட் 19 - பிராணிகள் மற்றும்
மனிதர்களையும் தாக்கும்சூனாட்டிக் வைரஸ் நோய்கள் COVID 19 IS AZOONATIC VIRUSDISEASE



எச்ஐவி வைரஸ், சார்ஸ் வைரஸ், எபோலா வைரஸ் (HIV VIRUS, SARS VIRUS, EBOLA VIRUS) எல்லாமே ஏதாவது ஒரு பிராணிகளின் மூலமாகவே மனிதர்களுக்கு பரவுவுகின்றன. கோவிட் 19 வைரஸ் கூட உகான் நகரத்தின் உணவு சந்தையில்தான் வெளிப்பட்டது. இதுவரை கூட உண்மையாக எந்தப் பிராணியின் மூலம் மனிதர்களுக்கு பரவியது என்றுகூட ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. 2013ம் ஆண்டு வெளிப்பட்ட சார்ஸ் வைரஸ் ஒருவகை வவ்வால்கள் (HORSESHOE BATS) மூலம் பரவியதாக டி என் ஆ (D N A)பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கூட உறுதி செய்யப்படாத ஆய்வு ஒன்று எறும்புதின்னி எனும் பங்கோலின் கோவிட் 19 வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். தற்போது இந்த கொரோனா வைரஸ்சை வவ்வால் மற்றும் சிவட்(CIVET) என்னும்  புனுகுப்பூனை மற்றும் பங்கோலின்கள் (PANGOLINS) இந்த வைரஸை பரப்புகின்றன என்று சொல்கிறார்கள்  ஆராய்ச்சியாளர்கள். பங்கோலின் வாங்குவது விற்பது என்பது சீன அரசினால் தடை செய்யப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமான முறையில் பங்கோலின்கள் விற்பனை செய்யப்படுகின்றது என்று சொல்லுகிறார்கள். இதுபோல நோய்க்கிருமிகள் பிராணிகளையும் மனிதர்களையும் மாறி மாறி தாக்குவது புதிதல்ல. இது போன்ற நோய்களை ஜூனாட்டிக் நோய்கள் என்கிறார்கள்.


கோவிட் 19 மாதிரிதான்நம்ம ஊர் மாடுகளுக்கு வரும்குறட்டை நோய் ALIKE COVID 19SNORING DISEASE INCATTLE IS ZOONATICIN NATURE



உதாரணமாக நம் நாட்டில் மாடுகளை தாக்கும் கொடிய நோய் இந்த வகையை சேர்ந்ததுதான். இந்த நோயின் ஆங்கிலப்பெயர் சிஸ்டோசோமா நேசேல் (SCHISTOSOMA NASALE). இந்த நோய்க்கிருமிகள் கொஞ்ச நாட்களில் மாடுகளின் உடலில் இருக்கும். கொஞ்ச காலம் நீர் நிலைகளில் இருக்கும் நத்தைகளில் (POND SNAILS) இருக்கும். மீதமுள்ள நாட்களில் மனிதர்களை உடம்பில் இருக்கும். அப்போது அந்த கிருமிகள் மனிதர்களின் உடலில் கடுமையான ஊரல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.  ஊரல் அரிப்பு என்றால் சாதாரணமானதல்ல. ரத்தம் வரும்வரை அவர்கள் சொறிய வேண்டும். அதற்குப் பிறகுதான் அந்த அரிப்பு தணியும். மற்றபடி ஆபத்தான எந்த பாதிப்பையும் இந்த கிருமிகள் ஏற்படுத்தாது. ஆனால் மாடுகளில் மூக்கு துவாரங்களில் சிறுசிறு கட்டிகள் ஏற்பட்டு அவை காயங்களாக மாறி சுவாசிக்க சிரமப்படுத்தும். சிரமப்பட்டு சுவாசிக்கும்போது குறட்டை விடுவது போல சப்தம் எழும். அதனால்தான் இதற்கு குறட்டை நோய் என்று பெயர்.


இந்த நோயுடன் பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்கிறேன் கேளுங்கள். 1990 வாக்கில் நடந்த சம்பவம் இது. நான் அப்போது மதுரை ரேடியோ ஸ்டேஷனில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான நிகழ்ச்சி ஒலிபரப்புக்கு பொறுப்பு அதிகாரியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மாடுகளை, பெயர் தெரியாத நோய் தாக்கி இருப்பதாக தகவல் எங்களுக்கு வந்தது. அதனை அடுத்து அதுபற்றி ஆய்வு செய்து நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க நான் அங்கு போயிருந்தேன். அந்த கிராமத்தில் இருந்த மாடுகள் அத்தனையும் மூச்சு விடக்கூட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தன. அவள் மூச்சு விடும் போது குறட்டை வருவது மாதிரி சத்தம் வந்தது. அந்த ஊர்க்காரர்களின் உடம்பு முழுக்க சொறிந்து சொறிந்து ரத்த காயங்களாக காணப்பட்டன. அந்த ஊரில் ஒரே ஒரு குளம் அதில்தான் மாடுகள் குளிக்கும் மனிதர்களும் குளிப்பார்கள். அப்படி அவர்கள் குளித்துவிட்டு கரையேறியதும்  உடல் முழுக்க அரிப்பு ஏற்படும். ரத்தம் வரும்வரை சொறியவேண்டும்.  அப்படி ஒரு அரிப்பு ஏற்படுமாம் அந்த கிராமத்தில் அத்தனை மாடுகளும் இந்த நோயினால் அதாவது குறட்டை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தன.


 நல்லவேளையாக நான் அங்கு செல்லும்போது ஒரு கால்நடை பராமரிப்பு துறையின் அல்லது அனுபவம் பெற்ற வெட்டெரினரி டாக்டர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தேன். அவர்தான் சொன்னார் எனக்கு அந்த நோயின் பெயர் நேசல் சிஸ்டிசோமியாசிஸ் என்று. இந்த கிருமிகள் குளத்து நத்தைகளில் கொஞ்சகாலம் வளரும். அதன்பின்னர் மாடுகள் குளத்தில் தண்ணீர் குடிக்க, குளிக்க இறங்கும்போது அவற்றின் மூக்கின் வழியாக அவற்றின் உடலில் புகும். பின்னர் குறட்டை நோயை உருவாக்கும். மனிதர்கள் அந்த குளத்தில் குளிக்க இறங்கும்போது அவர்களுடைய உடலில் புகுந்து  அரிப்பு நோயை ஏற்படுத்தும்.  அத்தனை விவரங்களையும் ஒலிப்பதிவு செய்து  ரேடியோவில் ஒலிபரப்பினோம். இதுவும் ஒரு ஜூனாடிக் நோய்தான். அதன்பின்னர் அந்த ஊர் ஜனங்களும் ஆடு மாடுகளுக்கும் குளிக்க குடிக்க என்று தனித்தனி குளங்களை வெட்டித்தர நாங்கள் ஏற்பாடு செய்தோம். மாவட்ட நிர்வாகம் அதற்கு ஒத்தாசையாக இருந்தது.


ஆனால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுதான் நம்மஊர் குறட்டை நோயும் கோவிட் 19 ம் ஒரேவகைதான். ஆனால் குறட்டை மாதிரி கோவிட் 19 வைரஸ் நோய் சாதுவான நோய் அல்ல. குறட்டை ஒரு மகா சாது.  


TO GET MORE INFORMATION ON RELATED  TOPICS


1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார் -  CORONA VIRUS -  VACCINE IS READY  FOR CONTROL /30.01.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html

2. உலகை மிரட்டும்  2019 புதிய கொரோனா   வைரஸ் - 2019 NEW CORONA   VIRUS / 01.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2019-2019-new-corona-virus.html

3. கொரோனா வைரஸ்  தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF  CORONA VIRUS /02.02.2020 /

4. கொரோனாவைரஸ்சை  ஹோமியோபதி மற்றும்  யுனானி மருத்துவத்தின் மூலம்  கட்டுப்படுத்த முடியும்  -   CORONAVIRUS COULD BE   CONTROLLED BY  HOMEOPATHY & UNANI  MEDICINES /03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/coronavirus-could-be-controlled-by.html

5. கொரோனாவை பார்த்து குலை நடுங்க  வேண்டாம்  - நம்புங்கள் -  DO NOT FEAR ABOUT  CORONAVIRUS  /05.02.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html

6. கொடூரமான  கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான  பங்கோலின்கள்  -   KILLER VIRUS CORONA'S  DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html

7. கொரோனா வைரஸ்  இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...