Monday, February 3, 2020

கொரோனாவைரஸ்சை ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் - CORONA VIRUS CONTROL IS POSSIBLE




WUHAN CITY OF CHINA
கொரோனாவைரஸ்சை
ஹோமியோபதி மற்றும்
யுனானி மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும்




CORONAVIRUS CONTROL IS POSSIBLE

MAKE SHIFT HOSPITALS IN WUHAN


உகான் (WUHAN) பெருநகரம் என்பது சீனாவின் சிகாகோ என்று சொல்லுகிறார்கள். ஹூபி  (HUBEI) என்ற மாநிலத்தின் தலைநகரம் இது. சீனாவின் மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் இதுவும் ஒன்று. உகான் நகரின் மொத்த மக்கள் தொகை 11 மில்லியன்.

சீனாவின் பாரம்பரியமிக்க யாங்க்ஸ்ட்சீ ஆறு (ZE YANGTZE RIVER) ஹான் என்னும் துணை ஆற்றுடன்  சங்கமமாகும் இடத்தில் உள்ளது உகான் நகரம். உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டது இந்த சீனாவின் உகான்  நகரில்தான்.  இதுவரை சீனாவில் மட்டும் 14 ஆயிரத்து  380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மொத்தம் 304 பேர் இறந்துள்ளார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இவர்கள் அனைவருமே சீனாவின் ஹூபி மாநிலத்தை சேர்ந்த உகான் நகரத்தினர்தான்.


இந்தியா  உட்பட  இதுவரை 23 நாடுகளில் இந்தப் ஒருவர் வைரஸ் பாதிப்பு தொடங்கியுள்ளது என்று புள்ளிவிவரம் சொல்கிறது இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் குருநாதன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



இப்போது ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் சேர்ந்த ஒரு நாள் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று பார்ப்போம். 


1. ஜப்பான் 20
2. தாய்லாந்து 19
3. சிங்கப்பூர் 18
4. சவுத் கொரியா 15
5.  டைவான் 10
6. மலேசியா 8
7. யூ எஸ் ஏ - 8
8. ஜெர்மனி  8
9. ஆஸ்திரேலியா   7
10. பிரான்ஸ் 6
11. வியட்நாம்  6
12. யுனைட்டட் அராப் எமிரேட்ஸ் 5
13. ரஷ்யா 2
14. இத்தாலி 2
15. பிரிட்டன் 2
16. இந்தியா 2
17. கம்போடியா   1
18. பின்லேண்ட் 1
19. பிலிப்பைன்ஸ் 1
20. நேபாளம் 1
21. ஸ்ரீலங்கா 1
22. ஸ்வீடன் 1
23. ஸ்பெயின் 1



சீனாவிற்கு வெளியே
முதல் மரணச்செய்தி
தந்திருக்கும் முதல் நாடு
பிலிப்பைன்ஸ்.



சீனாவிற்கு வெளியே முதல் மரணச்செய்தி தந்திருக்கும் முதல் நாடு பிலிப்பைன்ஸ். ஆனால், அவரும் 44 வயது சீனாக்காரர்தான். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பார் என்று சொல்லுகிறார்கள்.


புது டில்லிக்கு அருகில் மநேசர் என்ற இடத்தில் இந்திய ராணுவம் ஒரு சோதனைச் சாவடியை நிறுவியுள்ளது. சீனாவிலிருந்து வரும் இந்தியர்களை மருத்துவ சோதனை செய்வதற்காக இதனை நிறுவியுள்ளார்கள். அப்படி சீனாவிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.


சென்ற சனி ஞாயிறு இரண்டு நாட்களில் சீனாவிலிருந்து  647 இந்தியர்கள் விமானங்களில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் இந்த சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என தெரிகிறது.


இதுவரை இந்தியாவில் இரண்டு நபர்களில் ஒருவர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.


கொரோனாவைரஸ்சை
ஹோமியோபதி மற்றும்
யுனானி மருத்துவத்தின் மூலம்
கட்டுப்படுத்த முடியும்



இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வைரசை ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.


ஆர்சனிகம் ஆல்பம் 30 (ARSENICUM ALBUM 30) என்ற ஹோமியோபதி மருந்து இதனைக் கட்டுப்படுத்தும் என்று அறிவித்துள்ளது அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப் படாமல் இருக்க வெறும் வயிற்றில் காலை வேளையில் இந்த ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.


இந்த நோயின் தாக்குதல் இருக்கும் சூழல் நிலவினால் ஒரு மாதம் அல்லது 30 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.  
இன்புளூயன்சா மாதிரியான நோய்க்கும் இந்த சிகிச்சையை பின்பற்றலாம் என்கிறது இந்த ஆய்வு.


ஆயுஷ் அமைச்சகம்
கொரோனவைரஸ்
நோய்க்கு வராமல் தடுக்க
பல ஆலோசனகளையும்
தந்துள்ளது.



1. காற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை (AIR BORNE INFECTIONS) தவிர்க்க வேண்டும்.


2. சாப்பிடுவதற்கு முன் குறைந்தபட்சம் 20 செகண்டில் கைகளை சோப்பினால் சுத்தம் செய்யவேண்டும்.


3. சுத்தம் செய்யாத கைகளால் கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றை தொடவோ துடைக்கவோ கூடாது.


4. உடல் நலம் சரியில்லாதவர்களுடன் நெருக்கமாக தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்.


5 வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் பயணம் செய்யும் இடங்களுக்கு செல்லும்போது வாய் மூக்கு ஆகியவற்றை மாஸ்க் மூலம் மூடி இருக்க வேண்டும்.


6. இருமுவது, தும்முவது போன்ற சமயங்களில் மாஸ்க்கை பயன்படுத்துவது நல்லது. கொரோனாவைரஸ் தாக்குதல் இருக்கும் என சந்தேகப்பட்டால் உடனடியாக முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபெற வேண்டும்.


உகான்  நகரில்தான்உகான்வைரஸ்
தனது தாக்குதலை
தொடங்கிது



கடல் உணவு மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டில் தான் முதன் முதலாக உகான்  நகரில் தனது தாக்குதலை தொடங்கிது இந்த வைரஸ்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கோவா,  ஒரிசா,  டெல்லி ஆகிய இடங்களில் சந்தேகத்தின் பேரில் பலர் மருத்துவமனைகளில் கண்காணிப்பு சிகிச்சையில் உள்ளனர்.


கரோனாவைரஸ்
நோயின்
முக்கிய
அறிகுறிகள்.



காய்ச்சல், இருமல், சிறுமூச்சு, அதாவது ஷார்ட்னஸ் ஆஃப் பிரீத் (SHORTNESS OF BREATH) மற்றும் மூச்சுத் திணறல் (BREATHING DIFFICULTIES) ஆகியவை இந்த நோயின் முக்கியமான அறிகுறிகள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


TO GET INFORMATION
ON RELTED  TOPICS

1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார் -  CORONA VIRUS -  VACCINE IS READY  FOR CONTROL /30.01.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html

2. உலகை மிரட்டும்  2019 புதிய கொரோனா   வைரஸ் - 2019 NEW CORONA   VIRUS / 01.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2019-2019-new-corona-virus.html

3. கொரோனா வைரஸ்  தாக்குதல் அறிகுறிகள் - SYMPTOMS OF  CORONA VIRUS /02.02.2020 /


4. கொரோனாவை பார்த்து குலை நடுங்க  வேண்டாம்  - நம்புங்கள் -  DO NOT FEAR ABOUT  CORONAVIRUS  /05.02.2020 /  https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html

5. கொடூரமான  கொரோனா வைரஸ்சை பரப்பும் சாதுவான  பங்கோலின்கள்  -   KILLER VIRUS CORONA'S  DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html

6. கொரோனா வைரஸ்  இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html



தே. ஞானசூரிய பகவான்
போன்: + 8526195370, 
Email: gsbahavan@gmail.com


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...