மூங்கில் பனை
வீடுகளில் காற்றின் மாசு நீக்கும்
BUTTERFLY PALM POLLUTION
CONTROL INDOOR PLANT
பட்டர் பிளை மூங்கில் பனை
BUTTERFLY PALM TREE
CHRYSALIDO CARPUS LUTESCENS
தே.
ஞானசூரிய பகவான்,
போன்:
+ 91-8526195370
Email:
gsbahavan@gmail.com
தாவரவியல்
பெயர்: கிறைசாலிடோகார்ப்பஸ் லுட்டிசென்ஸ் ;(CHRYSALIDO CARPUS LUTESCENS)
தாவரக்
குடும்பம் பெயர்: அரிகேசி (ARICACEAE)
பொதுப்
பெயர்கள்: கோல்டன் கேன்பாம், அரிகா பாம்,
எல்கோ மரம், பட்டர் பினை பாம் ;(GOLDEN
CANE PALM, ARECA PALM, ELCO TREE, BUTTERFLY PALM)
தாயகம்:
மடகாஸ்கர் (MADAGASKAR)
பரவியிருக்கும்
இடங்கள்: அந்தமான், நிகோபார் தீவுகள், எல்சால்வடார், கியூபா, போர்டோ ரிகோ, கேனரி தீவுகள், மற்றும் தெற்கு புளோரிடா.
வெப்ப மண்டல, மற்றும் மித வெப்ப, மண்டலப் பகுதிகளில்
வளரும் அழகு குறுமரம். அது பத்துப் பன்னிரண்டு மீட்டர் உயரம் வரை வளரும். பல அடிமரத் தண்டுகள் (MULTIPLESTEMS). . உடையதாக வளரும். இதன் பட்டை இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளமாக
இருக்கும். பார்க்க மினி தென்னை மட்டை போல
தோற்றம் தரும்.
கோடைப் பருவத்தில் மஞ்சள் நிறமாகப் பூக்கும். மொத்தத்தில் இது
வீடுகளில் வளர்க்க ஏற்ற அழகு மரம் (INDOOR PLANT). பறவைகளுக்கு பழங்கள் தருவதில் இது ஒரு
வேடந்தாங்கல்.
காற்றின் தரத்தை மேம்படுத்தும் (ENHANCES THE QUALITY OF AIR)
இந்த மரத்தை வளர்ப்பதனால் அந்த இடத்தில்
இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும். நாசா
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் (NATIONAL
AERONAUTICS AND SPACE ADMINISTRATION) நடத்தப்பட்ட காற்று சுத்தப்படுத்தும் சோதனையில் இது நிரூபிக்கப்
பட்டுள்ளது. குறிப்பாக பென்சைன் மற்றும்
டொல்யூன் போன்ற நச்சு வாயுக்களை காற்றிலிருந்து வடிகட்டி சுத்தம் செய்கிறது.
நிபுணர்கள் பரிந்துரை செய்யும்மூன்று வகை தாவரங்கள்
“உங்கள் வீடுகளில் சுத்தமான காற்றுடன் வசிக்க
வேண்டும் என்றால், மூன்றுவகையான தாவரங்களை வளர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பரிந்துரை
செய்யும் மூன்று தாவரங்களில் ஒன்று நமது,
மூங்கில் பனை என்னும் பேம்பூபாம். இரண்டு மாமியார் நாக்கு (MOTHER IN LAW’S TONGUE) மற்றும் மணி பிளேண்ட் (MONEY
PLANT)
No comments:
Post a Comment