கொரோனாவைரஸ் நோய்களை பரப்பும்வவ்வாலும்புனுகுப்பூனையும்
BATS AND CIVETS
VECTORS OF
CORONA VIRUSES
கொரோனா
வைரஸ் நோய்களை வவ்வால்கள், புனுகுப்பூனைகள், ஒட்டகங்கள், பாம்புகள் ஆகியவை மூலம் மனிதர்களுக்கு பரவுகின்றன
என்பதை நாம் அறிவோம். கோவிட் 19 வகை வைரஸ் நோயினால் இன்றுவரை ஏற்பட்ட உயிரிழப்பு விவரம் சீன அரசின் செய்திப்படி, சீனாவில் கரோனா
வைரஸ் நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1268 பேர். இது திங்கட்கிழமை 17 2 2020 வரையான விவரம். இதுவரை குரானா வைரஸ்சினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.
கோவி 19 வைரஸ்நோய் குறித்து
பொய்யான
தகவல்களை
வெளியிட
வேண்டாம்.
DO NOT SPREAD RUMOURS
ON CORONA VIRUSES
உலக சுகாதார
நிறுவனம் கோவி 19 வைர்ஸ்நோய் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும், இது குறித்து உலக நாடுகள் பீதியடைய வேண்டாம் என்றும், ஆனால் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
கோவி 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட பல நாட்டவர்களுக்காகவும்
சிகிச்சையும்
இதர உதவிகளும் அளித்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் சீன
அரசுக்கு உலக நாடுகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் 19
வைரஸ் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தி
நிறுவனங்களும் இதர மீடியாக்களும் பொறுப்பான செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் குடும்பத்தின்முக்கியமான
மூன்று வைரஸ் வகைகள்
THREE
PRIME VIRUSES
OF CORONA VIRUS FAMILY
கொரோனா வைரஸ் குடும்பத்தில்
ஏகப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. நமக்கு வரும் சாதரண ஜலதோஷம் கூட கொரோனாதான். இதில்
சில சாதுவானவை. சில தீவிரவாதிகள். சார்ஸ் கொரோனா, எம் இ ஆர் எஸ் கொரோனா, கோவிட் 19
கொரோன ஆகிய மூன்றும் தீவிரமானவை. இந்த மூன்றையும் உயிர்க்கொல்லி வகைகள் என்று சொல்ல்லாம்.
இவை அனைத்தும் ஜூனாடிக் நோய்கள் என்ற பிரிவில் அடங்கும். அப்படியென்றால் அவை மனிதர்கள் மற்றும் பிராணிகளை மாறிமாறி
தாக்கும் நோய்வகை என்று அர்த்தம்.
கொரோனா
வைரஸ்சை பரப்பும்
வவ்வால்கள்,
புனுகுப்பூனைகள்,
ஒட்டகம்
மற்றும் நல்லபாம்புகள்.
BATS,
CIVETS, CAMEL, COBRA ARE
SPREADING THE VIRUS DISEASES
சில
தீவிரவகை வைரஸ்கள் சார்ஸ் கொரோனா, எம் இ ஆர் எஸ் கொரோனா, கோவிட் 19 கொரோனா ஆகிய மூன்றும்,
வவ்வால்கள், புனுகுப்பூனைகள், ஒட்டகம் மற்றும் நல்லபாம்புகள் மூலம் பரவுகின்றன என்றும்
ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இந்த வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த
பிராணிகளின் உடலில் தங்கி இருக்கும். அதன் பின்னர் அவை மனிதர்களின் உடல்களுக்கு செல்லும்.
அங்கு இந்த நோய்களை உருவாக்கும். ஒரு மனித உடம்பிலிருந்து சுலபமாக இன்னொரு மனிதருக்கு
பரவும். நாம் நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்து உண்ண உணவும் இருக்க இடமும்
தருவது போலத்தான் இதுவும். ஆக இந்த வவ்வால்கள்,
புனுகுப்பூனைகள், ஒட்டகம் மற்றும் நல்லபாம்புகள் வைரஸ்களுக்கு விருந்தளிக்கும் உயிரின்ங்கள்
என்று சொல்ல்லாம்.
கொரோனா
வைரஸ்களை பரப்பும்
லாடவடிவ
வவ்வால்கள்
CHINESE
RUFOUS
HORSESHOE
BATS ARE
TRANSMITTING
THE
CORONAVIRUS
DISEASES
லாடவடிவ
வவ்வால்களை ஆங்கிலத்தில் சைனீஸ் ரூபஸ் ஹார்ஸ் ஷூ பேட்ஸ் என்று சொல்லுகிறார்கள். இதன்
அறிவியல் பெயர் ரினோலோபஸ் சைனிகஸ். இந்த வவ்வால்கள் சைனா, இந்தியா, நேபாளம்
மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. எந்த வகையிலும்
முக்கியத்துவம் இல்லாத ஒரு வவ்வால் வகை இது. ஆனால் இந்த வைரஸால் மட்டுமே இந்த
வவ்வால் உலக அளவில் மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. உலகம்
முழுவதும் சுமார் ஆயிரத்து இருநூறு வகையான வகைகள் இருக்கின்றன. இந்த ரூப்பஸ் ஹார்ஸ்ஷூ பேட்ஸ் என்று சொல்லக்கூடிய வ்வால்கள்,
இந்த வைரஸ்களை எல்லாம் தனது உடலில் சேமித்து
வைக்கின்றன.
(www.en.wikipedia.org /
CHINESE RUFUS HORSE SHOE BAT)
இந்த வவ்வால்கள்
அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த வவ்வால்களின் மூக்கின்
இரு பக்கத்திலும் இரண்டு இலைகள் போன்ற பகுதி இருக்கும் அதற்கு கீழே ஒரு குதிரை
லாடம் போன்ற ஒரு பகுதியும் இருக்கும். அதை வைத்துதான் இதற்கு
‘ஹார்ஸ் ஷூ பேட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். நன்கு
வளர்ந்த ஒரு வவ்வால் 10 முதல் 12.5 கிராம் மட்டுமே இருக்கும்.
மார்பர்க் வைரஸ், நீப்பா வைரஸ், ஹென்டாஸ் வைரஸ்களின் சேமிப்பு கிடங்குள் இந்த வவ்வால்கள்.
CHINESE
RUFOUS HORSESHOE BATS ARE
THE NATURAL STORE HOUSES OF
MARBURG VIRUS, NIPAH VIRUS, &
HENDRAS VIRUS
இந்த வைரஸ்
நோய்களை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பரப்பியுள்ளன. இந்த வகை
வவ்வால்கள் தான் எபோலா வைரஸ் மற்றும் ரேபிஸ்வகை வைரஸ் ஆகியவற்றின் இயற்கையான சேமிப்பு கிடங்காக உள்ளது. இந்த நோய்களையும் இவைதான் மனிதர்களிடையே
பரப்புகின்றது.
வைரஸ்களை தாங்கும்
அதிக
சக்தி உடைய
வவ்வால்கள் RUFOUS
HORSESHOE BATS CAN
HOLD ANY AMOUNT OF
VIRUS LOAD
பொதுவாக நோய்களை
உண்டாக்கும் வைரஸ்கள் பல பிராணிகளின் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கியிருக்கும். அந்த
காலகட்டத்தில் அவற்றின் உடலில் சில பாதிப்புகள் அல்லது மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் வவ்வால்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எத்தனை விதமான
வைரஸ்கள் எவ்வளவு காலம் அவற்றின் உடலில் இருந்தாலும் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று
சொல்கிறார்கள். அப்படி ஏற்படுத்தினாலும் அவற்றை தாங்கும் சக்தி உடையவைகளாக இந்த வவ்வால் வகை இருக்கிறது.
கொரோனாவை
பரப்பும்
சீனாவின் சிவெட் என்னும்புனுகுப்பூனைகள்
THE CHINESE CIVETS
SPREADING
CORONA VIRUSES
சீன நாட்டில்
இருக்கும் சிவெட் என்று சொல்லக்கூடிய புனுகுப்பூனையும் இந்த கொரோனாவை
பரப்புகின்றன. சிவெட் என்பது ஆங்கில அல்லது பொதுப்பெயர். புனுகுப்பூனையைவிட புனுகு
மிகவும் பிரபலமானது. புனுகு மிகவும் விலை உயர்ந்த வசனைத் திரவியம். ஒரு கிராம் தங்கமும்
ஒரு கிராம் புனுகும் ஒரேவிலையாம்.
இந்த புனுகுப்பூனைகளும் இந்த கொரானா வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன என்று
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
புனுகுப்பூனை இறைச்சியை சீனர்கள் விரும்பி சாப்பிடுவதாக சொல்லுகிறார்கள். புனுகு என்பதும் ஜவ்வாது என்பதும் ஒன்றுதான். இந்த பூனையின் கழிவிலிருந்து
எடுப்பதுதான் புனுகு அல்லது ஜவ்வாது என்று நம்பப்படுகிறது. அனால் அதன் வாலில் ஒரு
பை இருக்கும். அதில் ஒரு வகையான தூள் இருக்கும். அதனை சேகரித்துதான் புனுகு என்று
விற்கிறார்கள்.
உலகிலேயேபுனுகு பூனை
காப்பியின்
விலை
அதிகம்
CIVET’S
COFFEEIS
COSTLIEST ONE
IN
THE WORLD
இந்த பூனைகள் சாம்பல் நிறத்தில் கறுப்பு நிற புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் காணப்படுகின்றன. இந்த புனுகு பூனையின் கழிவில் தயாராகும் காப்பி பற்றிய ஆச்சரியமான ஒரு செய்தி உள்ளது.
அதாவது இந்தோனேசியாவில் உள்ள ஒருவகையான புனுகுப்பூனைகள் இருக்கின்றன.
இவை பெரும்பாலும் காப்பி தோட்டங்களில்தான் வசிக்கின்றன. இவை காப்பி பழங்களைத்தான்
சாப்பிடும். அப்படி சாப்பிட்டுவிட்டு வெளியேற்றும் கழிவில்
இருக்கும் கொட்டைகளை கவனமாக சேகரிக்கிறார்கள். சேகரித்த அந்த
காப்பி கொட்டைகளை சுத்தம் செய்கிறார்கள். சுத்தம் செய்த
அந்த காப்பி கொட்டைகளை அரைத்து காப்பி தூள் தயாரிக்கிறார்கள். அந்த காப்பித்தூளில் காப்பி தயாரிக்கிறார்கள். இந்த காப்பிக்கு அப்படி ஒரு சுவையாம்.
காப்பி
என்றால் நரசுஸ் என்பது மாதிரி இந்தோனேசியாவில், காப்பி என்றால் புனுகுப்பூனைகாப்பி
என்கிறார்களாம்.
இந்த
புனுகுக்காப்பியின் விலை என்ன தெரியுமா ? ஒரு கப் காபியின் விலை வெறும்
5,000 ரூபாய்தானாம். அநேகமாய் உலகத்திலேயே விலைஅதிகமான
காப்பி இதுவாகத்தான் இருக்கும்.
ஜவ்வாதும்புனுகும் ஒன்றா
வேறு வேறா ?
JAVVADHU AND PUNUGU
ARE THEY SAME OR DIFFERENT ?
போனகம்
ஜவ்வாதும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். சிலர் வேறு வேறு என்கிறார்கள். புனுகு என்பது
பிசின் போல இருக்கும். ஆனால் ஜவ்வாது
என்பது போல ஒரு பவுடர். தூள்போல இருக்குமாம். இரண்டும் விற்பனையாகிறது கடையில் வாங்கலாம் என்று சொல்கிறார்கள்.
நன்கு வளர்ந்த புனுகுப்
பூனையின் உடல் எடை 10 முதல் 12 கிலோ வரை இருக்கும்.புனுகுப் பூனையின் அறிவியல் பெயர் விவெர்ரா சிவெட்டினா (VEVERRA CIVETTINA)
வாசகர்களே
உங்களுக்கு
இரண்டு
கேள்விகள்.
1. Whether you have tasted the Civets’ Coffee of Indonesia ? Will you please write your experience and the taste of it ?2. Do you know Punugu and Javvadhu are one and the same or different ?(Write to my Email: gsbahavan@gmail.com)
TO GET MORE ON RELTED TOPICS
1. கொரோனா வைரஸ்சுக்கு தடுப்பூசி தயார்
- CORONA VIRUS - VACCINE IS READY FOR CONTROL /30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/corona-virus-vaccine-is-ready-for.html
2. உலகை மிரட்டும் 2019 புதிய
கொரோனா வைரஸ் - 2019 NEW CORONA VIRUS / 01.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/2019-2019-new-corona-virus.html
3. கொரோனா வைரஸ் தாக்குதல்
அறிகுறிகள் - SYMPTOMS OF CORONA VIRUS /02.02.2020 /
4. கொரோனாவைரஸ்சை ஹோமியோபதி
மற்றும் யுனானி மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் - CORONAVIRUS COULD BE CONTROLLED BY HOMEOPATHY & UNANI MEDICINES /03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/coronavirus-could-be-controlled-by.html
5. கொரோனாவை பார்த்து குலை நடுங்க
வேண்டாம் - நம்புங்கள் - DO NOT FEAR ABOUT CORONAVIRUS /05.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/do-not-fear-about-coronavirus.html
6. கொடூரமான கொரோனா வைரஸ்சை
பரப்பும் சாதுவான பங்கோலின்கள் - KILLER VIRUS CORONA'S DOCILE VECTOR PANGOLIN / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/docile-pangolin-may-be-vector-to.html
7. கொரோனா வைரஸ் இன்று - CORONA VIRUS TODAY / 10.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/corona-virus-today.html
No comments:
Post a Comment